பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Saturday, December 19, 2009
கண்டுபிடிச்சிட்டாங்கய்யா !கண்டுபிடிச்சிட்டாங்க
கசப்பா யாராவது ஏதாவது குடுக்க வந்தாங்கன்னா, காத தூரம் ஓடி போயிருவோம். இதுக்கெல்லாம் யார் காரணம்னு யோசிச்சு பார்த்தா, நம்ம குட்டி பிள்ளையா இருக்றப்போ சங்கில வச்சு இஞ்சிய வாயில ஊத்திட்டு, அப்றமா கொஞ்சோண்டு சீனிய வாய்ல அள்ளி போடுவாங்களே, அந்த பார்டிஸ் தான், சாரி பாட்டிஸ் தான். ஆனா, கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் இந்த நாடுகள்லல்லாம் கசப்பா இருக்கிற காய்கறிகள எல்லாம், கொஞ்சோண்டு உப்பு, ஆலிவ் எண்ணெய் இதெல்லாம் சேர்த்து சமைச்சு சாப்டுறதனால கசப்பாவே இருக்காதாம். அவங்க என்ன சொல்றாங்கன்னா, கசப்பா இருக்கிற காய்கள்ல 'பைட்டோ நியூட்ரியன்ஸ்' நெறய இருக்குதாம். அதனால, நெறய பாகற்காய சாப்டா இதய நோய் எட்டி கூட பார்க்காதாம். அப்றம் இன்னொரு விஷயம், இதுவரைக்கும் இளநரை ஏன் வருது அப்டின்னு குப்புற படுத்துட்டு எத்தனை நாள் யோசிச்சிருப்பீங்க, இதுக்கும் கசப்பு சுவை தான் காரணம் அப்டின்னு இப்போ ஒரு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க. அதாவது நம்ம முடியோட வேர்க்கால்களோட அடியில கசப்பு சுவை இருக்குதாம். அந்த கசப்பு சுவை குறையறதனால தான் முடி நரைக்க ஆரம்பிக்குதாம். கண்டுபிடிச்சிட்டாங்கய்யா !கண்டுபிடிச்சிட்டாங்க
Thursday, December 17, 2009
கனவு காணுங்கள்...கலாம் சொன்னது
இன்னைக்கு காலைல பஸ்ல உலக நாயகன் கமல் நடிச்ச காக்கி சட்டை படத்தை பூம் டிவில போட்டாங்க. இப்போ புதுசா தமிழ் நாடு அரசு பஸ்கள்ல நெட்வொர்க் மூலமா பூம் டிவி ஒடுறதனால ஒரே நேரத்தில எல்லா கே.டி.சி. பஸ்கள்ல ஒரே படம் தான் ஓடும். அதனால், நம்ம எல்லா ஊர்லயுமே கே.டி.சி. பஸ்கள்ல காக்கி சட்டை படம் தான் ஒடியிருக்கும். இந்த படத்தில கமலோட பெரிய கனவு போலீஸ் ஆகனும் அப்டிங்கிறது தான். அதனால, அம்பிகா கமல் போலீஸ் ஆகனும்கிறதுக்காக, கமல் போலீஸ் ஆறதுக்கு முன்னாலயே கமலுக்கு போலீஸ் ட்ரெஸ் தைச்சு கொடுக்றதிலிருந்து, கமல் போலீஸ் ட்ரெஸ்ல ஓவியமா வரைஞ்சு வைக்கிற வரை, கமலோட கனவு நெஜமாக்கிறதில ரொம்பவே உதவி செய்ற மாதிரி காட்சிகள்லாம் வரும். நம்ம ஊர்லல்லாம் பார்த்தீங்கன்னா, நெறய போட்டி தேர்வுகள்ல தேர்ச்சி பெற்று, பெரிய வேலைக்கு போற பெண்கள் எல்லாருமே என்னோட இந்த கனவு நெறைவேறுறதுக்கு என்னோட கணவன் தான் காரணம்னு சொல்வாங்க. அதே மாதிரி வாழ்க்கையில எப்டியாவது கார் வாங்கனும்னு கணவனுக்கு ஆசையா இருந்தா, மனைவி எப்டியாவது நகையை அடகு வைச்சாவது கணவனோட கனவை நிறைவேத்திருவாங்க. இப்போ அமெரிக்கால என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா, இந்த மாதிரி கணவனோட கனவை மனைவி நிஜமாக்கினாலும், மனைவியோட கனவை கணவன் நிஜமாக்கினாலும், கணவன், மனைவி இடையே அன்பு கூடுவதோடு. வாழ்க்கைத்தரமும் உயரும் அப்டின்னு கண்டுபிடிச்சிருக்காங்க. ஒ.கே. அப்றம் என்ன வேலை, பார்டனரோட கனவு என்னது அப்டின்னு கேட்டுட்டு தான் மறுவேலை !
Wednesday, December 16, 2009
பெண்களுக்கு வேலையா? வீடா? எது பெட்டர்?
எல்லாருக்குமே வேலைக்கு போகாம வீட்டுக்கு சம்பளம் வந்தா நல்லா இருக்கும்ல. நெறய பேர் வெளில சும்மா உழைச்சாதான் உடம்புக்கு நல்லதுன்னு கதை விட்டாலும், சம்பளம் வீட்டுக்கு வந்தா எல்லாருக்குமே சும்மா இருக்கனும்னு தான் ஆசையா இருக்கும். இங்கிலாந்தில கிட்டத்தட்ட 1500 ஆண்கள்ட உங்களுக்கு எப்டிப்பட்ட மனைவிய பிடிக்கும் அப்டின்னு கேட்டதுக்கு , நெறய பேர் என்ன சொல்லிருக்காங்கன்ன, வேலைக்கு போகாமல் வீட்லயே இருந்து சமைச்சு போட்டு, குடும்பத்தை கவனிக்கிற பெண்ணை தான் பிடிக்கும் அப்டின்னு சொன்னாங்களாம். ஒ.கே. இங்கிலாந்து விஷயம்லாம் இருக்கட்டும். நீங்க என்ன சொல்றீங்க? வேலைக்கு போற பெண்கள ஆண்களுக்கு பிடிக்குமா? வீட்ல இருக்கிற பெண்களை பிடிக்குமா? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன் !
Labels:
ஆண்களுக்கு,
இங்கிலாந்து,
சம்பளம்,
பெண்ணை
Tuesday, December 15, 2009
முன்னோர(குரங்குகளை) நம்ம மறக்கவே கூடாது ....
2 சிம்பன்ஸி குரங்குகள் சண்டை போடறப்போ என்ன பண்ணும்னா, சண்டை முடிஞ்ச உடனே, அந்த 2 குரங்குகளும் முத்தம் குடுத்து, கட்டியணைச்சிக்குமாம். அவங்களாவே, இதுக்கு ஒரு அர்த்தம் வச்சிருக்காங்களாம். சண்டை முடிஞ்சிட்டு, இனிமேல் நம்ம நண்பர்களா இருப்போம் அப்டின்னு அதுங்க 2ம் புரிஞ்சுக்குமாம். ஒ.கே. கணவனும் மனைவியும் சண்டை போடாதீங்க அப்டின்னு நான் சொன்னாலும் கூட நீங்க அப்பப்போ சண்டை போடத்தான் செய்வீங்க. ஒ.கே. பரவால்ல. சண்டை முடிஞ்ச உடனே, நீங்களும் இந்த சிம்பன்ஸி குரங்கு மேட்டர ஃஃபாலோ பண்ணுங்கப்பா. நேரா மேட்டருக்கு வராம இப்டி இதுக்குல்லாம் போய் இந்த சிம்பன்ஸி மேட்டர்லாம் வேணுமா அப்டின்னா, என்ன தான் இருந்தாலும் நம்மளோட முன்னோர(குரங்குகளை) நம்ம மறக்கவே கூடாது அப்டிங்கிறதில நான் ரொம்ப உறுதியா இருக்கேன். ரொம்ப ரொம்ப ஓவரா இருக்குல்ல. ஒகே கூல் கூல்
ஹனிமூன்ங்கிற வார்த்தை எப்டி வந்துச்சு அப்டின்னு யோசிச்சு பார்த்தீங்களா?
எல்லாருமே திருமணம் முடிஞ்ச உடனே, அவசர அவசரமா ஹனிமூனுக்கு போயிருவாங்க. யாராவது ஒருத்தராவது இந்த ஹனிமூன்ங்கிற வார்த்தை எப்டி வந்துச்சு அப்டின்னு யோசிச்சு பார்த்தீங்களா? ஆனால், நான் இதைப் பற்றி மக்களுக்கு எப்படியாவது சொல்லியே ஆகனும் அப்டின்ற நல்ல நோக்கத்தில கண்டுபிடிச்சிட்டேன். இந்த ஹனிமூன் அப்டிங்ற வார்த்தை எப்டி வந்துச்சுன்னா, டியூட்டன் அப்டிங்ற இன மக்கள் என்ன பண்ணுவாங்கன்னா, கல்யாணத்துக்கு அப்றமா, கணவனும், மனைவியும் சேர்ந்து ஒரே கிண்ணத்தில் ஒன்னா தேன குடிப்பாங்களாம். இது ஒரு நாள், 2 நாள்னா கூட பரவால்ல. ஒரு மாசம் வரை, கணவனும், மனைவியும் சேர்ந்து தேன் குடிப்பாங்களாம். ஆங்கிலேயர்கள்லாம் இந்த விஷயத்த பார்த்துட்டு 'ஹனி மந்த்' அப்டின்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அப்றம் அது ஹனிமூன் அப்டிங்கிற வார்த்தை ஆகி விட்டது. தீபாவளி கொண்டாடுறப்போ பட்டி மன்றத்தில இருந்து ஆரம்பிச்சு எல்லா செய்தித்தாள்கள்லயும் நரகாசுரனை கொன்றதால தான் தீபாவளி கொண்டாடறாங்கன்னு பப்ளிசிட்டி பண்ற நம்ம ஆளுங்க, ஹனிமூன்ங்கிற வார்த்தை எப்டி வந்துச்சு அப்டின்னு பப்ளிசிட்டி பண்ணாததனால நம்ம ஆளுங்க ஹனிமூனுக்கு அர்த்தம் தெரியாமலேயே ஹனிமூன் போறாங்களே ! இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது?
Monday, December 14, 2009
என்ன முடிவு எடுக்க போறீங்க?
இன்னைலருந்து நான் ஒரு முடிவுக்கு வந்துருக்கேன். எப்போ பார்த்தாலும் சிரிச்சிகிட்டே இருக்கனும், அப்றமா புருவங்கள உயர்த்திதான் யாரன்னாலும் பார்க்கனும் அப்டின்னு, நெனச்சிருக்கேன். இதனால என்ன ஆகப்போகுதுன்னு எனக்கு தெரியல. தெருவில போறவங்கள்லாம் யார் பெத்த பிள்ளையோ, இப்படி சிரிச்சிகிட்டே போகுது அப்டின்னு நெனைக்க போறாங்கன்னு நெனைக்றேன். விஷயம் என்னன்னா, ஆண்களை பெண்கள் பார்க்கிறப்போ, ஆண்கள் கோபமா இருக்கிறவங்க மாதிரியே பெண்களுக்கு தெரியுமாம். ஆனால், பெண்களை பார்க்கிறப்போ அவங்க சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுமாம். ஏன்னு தெரியுமா? ஸ்மைலீஸ்ங்ற பொம்மை படங்களை பார்த்திருப்பீங்க. நம்மளோட செல்போன்ல மெசெஜ் அடிக்றப்போ இன்செர்ட் ஸ்மைலீஸ் அப்டிங்ற ஆப்ஷன குடுக்கிறப்போ நெறய ஸ்மைலீஸ் படங்கள் வரும். அதில் கோபமா இருக்றப்போ ஒரு ஸ்மைலீய அனுப்புவோம்ல, அந்த ஸ்மைலீல பார்த்தீங்கன்னா, அதோட புருவங்கள் கீழே சுருக்கி இருக்கிற மாதிரி இருக்கும் & உதடுகள் இறுக்கமா வச்சிருக்கிற மாதிரி இருக்கும். இறுக்கமான உதடுகள், கீழ் நோக்கி சுருக்கி இருக்கிற புருவங்கள் இது தான் நம்ம கோபமா இருக்கோம்னு மத்தவங்களுக்கு சொல்ற அறிகுறிகள். ஆண்கள் பெரும்பாலும் முகத்தை இப்படித்தான் வச்சிருக்காங்களாம். பெண்கள் இதுக்கு நேர்மாறாக சிரிக்கிற மாதிரி உதடுகளும், கொஞ்சம் புருவத்தை உயர்த்தியும் வச்சிருக்கிற மாதிரியும் இருக்குமாம். அதனால பெண்கள பார்க்கிறப்போ softஆ இருக்கிற மாதிரி இருப்பாங்களாம். ஒ.கே. மேட்டர் தெரிஞ்சிட்டில்ல. இனிமேல், நம்ம எல்லோருமே, எல்லோருக்குமே சாதுவா தெரியனும்னா, புருவத்தை உயர்த்தி வச்சிகோங்க, உதடுகளை டைட்டா வச்சிக்காம், கொஞ்சம் தளர்வா வச்சிகோங்க
Friday, December 11, 2009
ப்ளேபாய்ஸ்ட உஷாரா இருந்துகோங்கப்பா !
ஆண்கள்லாம் இந்த மேட்டர மிஸ் பண்ணீராதீங்க. உடனே உங்க கையில் 2வது & 4வது விரலை பாருங்க. விரல்களோட அளவை வச்சு ஒரு ஆணோட குணத்தை சொல்லிரலாம் அப்டின்னு லேட்டஸ்ட் ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது. ஆணோட விரல்கள்ல, 4ஆவது விரல் 2வது விரலை விட பெரிசா இருந்துச்சுன்னா ஆள் சரியான ப்ளே பாயாம். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் நெறய இருந்துச்சுன்னா, 2வது விரலை விட 4ஆவது விரல் கொஞ்சம் நீளமா வளருமாம். 4ஆவது விரல் பெரிசா இருக்ற ஆண்கள், பெண்கள் விஷயத்தில கொஞ்சம் அப்டி இப்டித்தான் இருப்பாங்க அப்டின்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. ஒகே. இந்த ப்ளேபாய்ஸ் எப்டிபட்டவங்க அப்டின்னா, முதல்ல வழிஞ்சுட்டு வந்து பேச மாட்டாங்க. முதல் சந்திப்பில கண்டுக்காம ரொம்ப அமைதியா இருப்பாங்க. ஆஹா, இவ்ளோ நல்லவரான்னு நம்ம நெனைப்போம். நம்ம மனசில நல்ல அபிப்ராயம் வந்த உடனே, ஈசியா பேசி மடக்கிருவாங்க. முதல்ல பாக்கிறப்போ மொபைல் நம்பர் கேப்பாங்க. அப்றம் மெசெஜ் வரும். அப்றம் அந்த மெசெஜ்ல ஹனி, பேபி, ஸ்வீட்டி, டியர் அப்டின்னு மெதுவா மெதுவா செல்லமான வார்த்தைகள் வரும். அப்றமா எங்கே மீட் பண்ணலாம்னு கேப்பாங்க. நெஜமான காதலா இருக்காது. pick up., drop, escape...பெண்கள் ப்ளேபாய்ஸ்ட உஷாரா இருந்துகோங்கப்பா !
Labels:
ஆண்கள்லாம்,
டியர்,
டெஸ்டோஸ்டீரோன்,
பேபி,
ப்ளேபாய்ஸ்,
ஸ்வீட்டி,
ஹனி
ஒன்னு கூட நடக்க மாட்டேங்குதே? என்ன பண்றது?
சில விஷயங்கள் நடப்பது ரொம்ப அபூர்வமாக இருக்கும். சான்ஸே இல்ல அப்டின்னு சொல்லலாம். அடிதடி இல்லாமல் வரிசையா குழாயடில தண்ணீ பிடிக்ற காட்சி, ரேஷன் கடையில அமைதியா க்யூவில நின்னு பொருட்கள் வாங்கிற காட்சி & இன்க்ரிமேன்ட் ஆனவுடன் உன் சம்பளம் எவ்வளவு என்ற கேட்காமல் இருக்கும் சக ஊழியர்கள், பக்கத்து வீட்டில் மாணவர்கள் படிக்கும் போது வானொலியின் ஒலி அளவை குறைத்து வைத்து கேட்பது, நம்ம வீட்டு குப்பையை பக்கத்து வீட்டு வாசலில் அதிகாலையிலேயே போட்டுட்டு கமுக்கமா இல்லாத நல்லவங்க, கடைகள்ல பாலித்தின் பாக்கெட்டுக்கு பதிலா பேப்பர் பையில் போட்டு கொடுக்கும் கடைக்காரங்க, இப்படி சொல்லிகிட்டே போகலாம். இந்த மாதிரி நம்ம ஊர்ல அபூர்வமா நடக்கனும்னு நெறய விஷயங்கள் ஆசைப்படறோம். ஆனால் இதில ஒன்னு கூட நடக்க மாட்டேங்குதே? என்ன பண்றது?
Labels:
குழாயடில,
க்யூவில,
சக ஊழியர்கள்,
வானொலியின்
இடுப்பால எவ்ளோ கடுப்பு?
இடுப்போட அளவு கூடிகிட்டே போச்சுன்னா, நம்மளோட வாழ்நாள் குறைஞ்சிகிட்டே போகும்னு ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்காங்களாம். என்னடா இது தெனமும் இப்படி ஏதாவது ஒன்ன கண்டுபிடிச்சிகிட்டே இருப்பாங்களா தெரியல. லண்டன்ல இருக்கிற மருத்துவர்கள்லாம் சேர்ந்து உடம்பு பருமன் ஆனால் என்னென்ன பாதிப்புக்கள் இருக்கும்னு ஆராய்ச்சி பண்ணிணாங்களாம். இடுப்போட அளவு 88செ.மீ அதாவது 35 இஞ்சுக்கு அதிகமா இருந்தால் ஆயுள்காலம் ரொம்ப குறைவுன்னும், இஞ்சி இடுப்பழகியா இருந்தா, ரொம்ப வருஷம் உயிரோட இருக்கலாம்னும் கண்டுபிடிச்சிருக்காங்களாம். ஏன்னா, கல்லீரலுக்கு ரொம்ப ரொம்ப பக்கத்தில இருக்கிறது இடுப்பு பகுதி தான். அதனால தான், இடுப்புல இருக்கிற கொழுப்பு சத்தால கல்லீரலுக்கு பாதிப்பு வரலாம். அதனால் தான் ஆயுள் குறையிற ஆபத்துன்னு சொல்றாங்க. இடுப்பால எவ்ளோ கடுப்பு?
Labels:
ஆயுள்,
ஆராய்ச்சி,
இடுப்போட,
உடம்பு பருமன்,
கல்லீரலுக்கு,
கொழுப்பு
Thursday, December 10, 2009
தலைக்கு பின்னால ஒளிவட்டம் இருக்குதா?
தெய்வீக தன்மை இருக்கிற மனிதர்களை சுத்தி, ஒளிவட்டத்த எல்லாருமே பாத்திருப்போம். அதே மாதிரி நம்ம உடம்பை சுத்தியும் ஒரு ஒளிவட்டம் இருந்துகிட்டே இருக்கும். கொஞ்சம் சுத்தி சுத்தி பாருங்க ! உங்களை சுத்தி ஒளிவட்டம் தெரியலாம். ஆனால், அந்த ஒளிவட்டத்த பார்க்கிற சக்தி நம்மளுக்கு இல்லீயாம். அந்த ஒளிவட்டத்த 'kryllionphotography''ங்கிற வித்தியாசமான கேமிராவ வச்சு படம் பிடிச்சிருக்காங்களாம். அந்த ஒளிவட்டத்தோட கலர் மற்றும் அதோட ஷக்தி மாறிகிட்டே இருக்குமாம். நம்ம உடம்பில ஏதாவது நோய் வந்துச்சுன்னா, இந்த ஒளிவட்டத்தோட கலர் மாறிருமாம். எனக்கு கூட தலைக்கு பின்னால ஒளிவட்டம் தெரியுதுன்னு நெறய பேர் சொல்றாங்க. ஆனா, இனிமேல் அதை பார்க்கிறதுக்கு முயற்சி பண்ணனும் !
Labels:
kryllionphotography,
ஒளிவட்டம்,
கலர்,
கேமிரா
உடம்பு எடை கூடிகிட்டே போகுதுன்னே கவலைபட்டுகிட்டே இருக்கீங்களா?
என்னன்னே தெரியல? சாப்டாம இருந்தாலும் கூட உடம்பு எடை கூடிகிட்டே போகுதுன்னே கவலைபட்டுகிட்டே இருக்கீங்களா? கவலையேபடாதீங்க. சூயிங்கம் சாப்டா போதும், உடல் எடை குறைஞ்சிரும்னு அமெரிக்கால இருக்கிற லிவர்பூல் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சில்லாம் பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க. அவங்க ஆராய்ச்சி பண்றதுக்காக, 60 பேர தொடர்ந்து 4 நாட்கள் உட்படுத்தியிருந்தாங்களாம். இவங்களுக்குல்லாம் சூயிங்கம் கொடுத்து பார்த்தப்போ, அவங்களால் சாயங்காலம் சாப்பிட முடியலியாம். இதனால, அடுத்த 4 நாட்கள்ல அவங்களோட உடம்பு எடை சரசரன்னு குறைஞ்சிடுச்சாம். இதனால, சகலமானவங்களுக்கும், இவங்க என்ன அறிவிச்சிருக்காங்கன்னா, தொடர்ந்து நொறுக்கு தீனி சாப்டுறவங்க சூயிங்கம் சாப்டா வெயிட்ட ஈசியா குறைக்கலாம்...
Wednesday, December 9, 2009
அழகா இருக்கனும்னா வீட்டு வேலை!
உலகத்திலேயே நார்வே மற்றும் ஸ்வீடன் நாட்டுலல்லாம் ஆண்கள் அழகாக இருக்காங்களாம். இது எப்படி சாத்தியம் அப்டின்னு பாக்கிறப்போ என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா, அந்த நாட்டிலெல்லாம் பெண்கள் வீட்ல வேலை செய்ய மாட்டாங்களாம். ஆண்கள் தான் வேலை செய்றாங்களாம். வீட்ல சமையல் பண்றது, பாத்திரம் கழுவுறது இதெல்லாம் கௌரவ குறைச்சல் கிடையாது அப்டின்னு அந்த நாட்டுக்காரங்க சொல்றாங்க. அழகா இருக்கனும்னா வீட்டு வேலை செய்யனுமாம்? ஐயோ ஐயோ ஒரே காமெடிதான் போங்க !
Tuesday, December 8, 2009
நோ நோ டென்ஷன் !
ஒரு சின்ன விஷயத்துக்கு கூட, பல்லை நற நறன்னு கடிச்சு டென்ஷன் ஆகிறீங்களா? எந்த பிரச்சினையையும் சமாளிக்க தெரியாம அடிக்கடி கத்துறீங்களா? சாப்பாட்டில உப்பு குறைவா இருந்தா எரிச்சல் எரிச்சலா வருதா? எல்லா கேள்விகளுக்கும் ஆமாம்பா ஆமா அப்டின்னு சொல்றீங்கன்னு வச்சிக்கோங்களேன், 'ஹார்ட் அட்டாக்'ல மாட்டுற அபாயம் இருக்கு அப்டின்னு டாக்டர்ஸ்லாம் சொல்றாங்க. கோபப்படுறவங்களுக்கு 'அட்ரீனல் சுரப்பி' ரொம்ப வேலை செய்றதனால, இதயத்தில பிரச்சினை வந்துருமாம். போக்குவரத்து நெரிசல்ல மாட்டுறப்போ எரிச்சல்படுறது, அடிக்கடி உச் உச்னு சொல்றது, ஆட்டோ கட்டணம் நெறய கேக்கிறப்போ கடுப்பாறது, மனைவிட்ட சண்டை போடறப்ப கண் சிவக்கிறது, ஆபீஸ்ல பாஸ் ஏதாவது சொல்லிட்டா புலம்பறது இந்த மாதிரில்லாம் பண்ணனும் போல வந்துச்சுன்னாலும், மாத்திகோங்க, உங்களை நீங்க மாத்திகோங்க. அவனை மாத்த சொல், நான் மாத்துறேன் அப்டின்னாலும் தயவுசெய்து நாயகன் பட டயலாக் மாதிரி பேச ட்ரை பண்ணாதீங்க. டென்ஷன் வராம பாத்துகிட்டா இதயத்துக்கும் நல்லது. இதயத்தில் இருக்கிறவங்களுக்கும் நல்லது.
தக்காளி காயா இல்லாட்டா பழமா?
தக்காளி காயா இல்லாட்டா பழமா? நெறய பேர் இதே மாதிரி யோசிச்சிருப்போம். நம்ம அமெரிக்காகாரங்களுக்கும் இதே சந்தேகம் வந்திருக்கு. சந்தேகத்த தீர்க்காமல் நாங்க தூங்க மாட்டோம் அப்டின்னு ஒரு தீர்க்கமான முடிவோட, நீதிமன்றத்தில தக்காளி மேல ஒரு வழக்கு போட்டுட்டாங்களாம். தக்காளிக்கு கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைய முடியுமா என்ன? கடைசில 1893ஆவது வருஷம், அமெரிக்க உச்ச நீதி மன்றம் தக்காளி ஒரு காய்தான் அப்டின்னு தீர்ப்பை குடுத்துட்டாங்களாம்பா.இதிலிருந்து என்ன சொல்ல வர்றேன்னா, தக்காளி பழமான்னு இனிமேல் நம்ம யாருக்கும் சந்தேகமே வரக்கூடாது
Wednesday, December 2, 2009
நல்ல வேளை, நம்ம நாட்டில இப்டில்லாம் இல்ல, அப்பாடா.....
நம்ம ஊர்லல்லாம், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டிகிட்டு போனால் தான் ட்ராபிக் போலீஸ் பிடிச்சுக்குவாங்க. ஆனால், க்ரீஸ் நாட்டில் ட்ராபிக் போலீஸ் லைசென்ஸ் இல்லாட்டா கூட விட்ருவாங்க. ஆனால், குளிக்காமல் யாராவது கார் ஒட்டிகிட்டு போனால் அவ்ளோதான், செமயா மாட்டிக்குவாங்க. க்ரீஸ் நாட்டில் சுத்தத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. யாராவது 'நேராயிட்டு, சாயங்காலம் வந்து குளிச்சிக்கலாம்'னு போனால் செம மாட்டுதான். இந்த மாதிரி குளிக்காமல் போறப்போ 'கப்பு' அடிச்சாலோ இல்லாட்டா அயர்ன் பண்ணாமல் கசங்கின ட்ரெஸ் போட்டுகிட்டு போனாலோ அவ்ளோதான், அவங்களோட லைசென்ஸ ட்ராபிக் போலீஸ் பிடுங்கிகிட்டு போயிருவாங்களாம். அப்றமா, நீதிமன்றத்தில் ஃஃபைன்லாம் கட்டிதான் லைசென்ஸ வாங்கனுமாம். இது என்னடா அநியாயமா இருக்கு. குளிக்கிற விஷயத்தில் கூட சுதந்திரம் இல்லீயே அப்டின்னு குமுறிகிட்டு இருக்காங்களாம். நல்ல வேளை, நம்ம நாட்டில இப்டில்லாம் இல்ல, அப்பாடா.....
Tuesday, December 1, 2009
கமல் சினிமாவில் நாயகன் மட்டும் அல்ல.. நிஜமான நாயகன் (நிஜ ஹீரோ).......
இன்று உலக எய்ட்ஸ் தினம். எச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பெற்றால்தான் பிள்ளையா? என்ற ஒரு மாத கால பிரசார இயக்கத்தை `பாபுலேஷன் சர்வீசஸ் இன்டர்நேஷனல் என்ற அரசு சார்பற்ற அமைப்பும், ஹலோ எப்.எம். நிறுவனமும் இணைந்து இன்று தொடங்குகின்றன.
இந்த ஒரு மாத காலத்தில், ஹலோ எப்.எம்.மில், எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயின் தீமைகளைப் பற்றி நேயர்களுக்கு எடுத்துரைக்கப்படும். அத்துடன், எச்.ஐ.வி-எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போல கருதி, உதவ முன்வருமாறு பிரசாரம் செய்யப்படும்.
ஒரு குழந்தைக்கு ரூ.750 நன்கொடை அளிக்குமாறு நேயர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். நேயர்கள் அளிக்கும் ரூ.750 நன்கொடையை வைத்து, அந்த குழந்தையின் பெயரில் சுகாதார காப்பீடு எடுக்கப்படும். இது அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு பயன்படும்.
இந்த பிரசார இயக்கத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி- எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.. இன்றைக்கு காலை ஹலோ எப்.எம்.மில் கமலஹாசன் அவர்களுடன் நேர்முகம் ஒலிபரப்பாகியது. அதில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு இல்லம் அமைத்து செயல்படுத்தி வரும் ஒருவருடன் கமல் பேசியது ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது. அந்த நிறுவனர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பைக்கில் வைத்து வெளி இடங்களுக்கு அழைத்து போவதாகவும், தனது தந்தை போல உணர்வு அந்த குழந்தைகளுக்கு ஏற்படுவதற்காக அவ்வாறு செய்வதாகவும் கூறினார்.. உடனே கமலும் அப்படி ஏதாவது குழந்தைகளை வெளியில் கூட்டிட்டுபோகும் வேலை இருந்தால் எனக்கும் சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்று சொன்னார். ஏற்கெனவே எனக்கு கமலை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் போது தேவர் மகன் படம் வெளிவந்தது. கமலின் ஆளுயர கட் அவுட்சை என் அறையின் சுவர்களில் ஒட்டி வைத்திருக்கும் அளவுக்கு கமலை எனக்கு பிடிக்கும். என் தம்பி ரஜினி ரசிகன். அதனால், எனக்கும் என் தம்பிக்கும் கமல், ரஜினி பெயரை சொல்லி ரொம்ப அடிபிடு சண்டை நடக்கும். கமல் செய்யும் சமூக சேவை எனக்கு கமலஹாசன் மேல் இன்னும் இன்னும் மதிப்பை கூட்டியுள்ளது.
இந்த ஒரு மாத காலத்தில், ஹலோ எப்.எம்.மில், எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயின் தீமைகளைப் பற்றி நேயர்களுக்கு எடுத்துரைக்கப்படும். அத்துடன், எச்.ஐ.வி-எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போல கருதி, உதவ முன்வருமாறு பிரசாரம் செய்யப்படும்.
ஒரு குழந்தைக்கு ரூ.750 நன்கொடை அளிக்குமாறு நேயர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். நேயர்கள் அளிக்கும் ரூ.750 நன்கொடையை வைத்து, அந்த குழந்தையின் பெயரில் சுகாதார காப்பீடு எடுக்கப்படும். இது அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு பயன்படும்.
இந்த பிரசார இயக்கத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி- எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.. இன்றைக்கு காலை ஹலோ எப்.எம்.மில் கமலஹாசன் அவர்களுடன் நேர்முகம் ஒலிபரப்பாகியது. அதில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு இல்லம் அமைத்து செயல்படுத்தி வரும் ஒருவருடன் கமல் பேசியது ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது. அந்த நிறுவனர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பைக்கில் வைத்து வெளி இடங்களுக்கு அழைத்து போவதாகவும், தனது தந்தை போல உணர்வு அந்த குழந்தைகளுக்கு ஏற்படுவதற்காக அவ்வாறு செய்வதாகவும் கூறினார்.. உடனே கமலும் அப்படி ஏதாவது குழந்தைகளை வெளியில் கூட்டிட்டுபோகும் வேலை இருந்தால் எனக்கும் சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்று சொன்னார். ஏற்கெனவே எனக்கு கமலை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் போது தேவர் மகன் படம் வெளிவந்தது. கமலின் ஆளுயர கட் அவுட்சை என் அறையின் சுவர்களில் ஒட்டி வைத்திருக்கும் அளவுக்கு கமலை எனக்கு பிடிக்கும். என் தம்பி ரஜினி ரசிகன். அதனால், எனக்கும் என் தம்பிக்கும் கமல், ரஜினி பெயரை சொல்லி ரொம்ப அடிபிடு சண்டை நடக்கும். கமல் செய்யும் சமூக சேவை எனக்கு கமலஹாசன் மேல் இன்னும் இன்னும் மதிப்பை கூட்டியுள்ளது.
Thursday, November 26, 2009
பீன்ஸை முளைக்கப் போட்டால் குழந்தையோட தலை வருதாம்....
நம்ம பாட புத்தகத்தில் பிதாகோரஸ் தேற்றம் கஷ்டப்பட்டு படிச்சிருப்போம். இந்த பிதாகோரஸ் கணித மேதை மட்டும் இல்லை. பெரிய தத்துவ மேதையும் கூட. இவர் எதிக்ஸ் ஆப் டயட் என்ற புத்தகத்தில் சாப்ட கூடியவை, சாப்டக் கூடாதவை அப்டின்னு சாப்பாடு பற்றி ஒரு பெரிய பட்டியலே போட்ருக்கார். அந்த புத்தகத்தில் போட்டிருந்த ஒரு விஷயம், கிரேக்க நாட்டில உள்ளவங்க பீன்ஸ் காயை சாப்பிடவே மாட்டாங்களாம். இதுக்கு என்ன காரணம் அப்டின்னா, பீன்ஸை முளைக்கப் போட்டால், அதை வெளியே எடுத்து பார்க்கிறப்போ, ஒரு குழந்தையோட தலை மாதிரி, அந்த முளைச்சிருக்கிற செடில தளிர் இருக்குமாம்.. அதனால், ஒரு கருவையே சாப்டற மாதிரி, அதனால பீன்ஸ சாப்டக்கூடாது அப்டின்னுல்லாம். அந்த புத்தகத்தில போட்ருந்துச்சாம். அதனால் அந்த காலத்தில் கிரேக்கர்கள் பீன்ஸ சாப்டவே மாட்டாங்களாம். சின்ன பிள்ளைத்தனமா இருக்குல்ல..
Labels:
சின்ன பிள்ளைத்தனமா,
பிதாகோரஸ்,
பீன்ஸ் காயை
Monday, November 23, 2009
மாமியார் பெண் ஹிட்லரா?
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலேன்னு நம்ம சொல்றோம். ஆனால் உப்பு இல்லாமல் தான் சாப்பாட்டை சாப்பிடனும் அப்டின்னு யாராவது ரொம்ப ஸ்ட்ரிக்டா சொன்னால் எப்படி இருக்கும்? ஆனால் இந்த மாதிரி உப்பு இல்லாமல் நம்ம ஆளுங்க சாப்பிட்டிருக்காங்க. வேத காலத்து புத்தகங்களில் இந்த விஷயம் இருக்கிறது. கல்யாணம் ஆன உடனே அந்த இளம் தம்பதியர் முதல் 3 நாட்களுக்கு உப்பு போடாமல் தான் சாப்பிடனும் என்ற கட்டுப்பாடும், விதவை பெண்கள் இந்த மாதிரி உப்பு போடாத சாப்பாடு தான் சாப்பிடனும் என்ற வழக்கமும் வேத காலத்தில் இருந்திருக்கிறது. என்ன கொடுமைடா இது ! சரி இன்றைக்கு மாமியார் தினம். மாமியார் அப்டின்னு சொன்னாலே பூச்சாண்டின்னு நினைக்கிற மாதிரி தொலைக்காட்சி சீரியல்கள் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தி விட்டன. மாமியார்களை பெண் ஹிட்லராகவே நெறய பேர் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னை பொறுத்த வரை என்னோட மாமியார் எனக்கு ஒரு நல்ல வரம் என்று சொல்லலாம். மருமகளின்/மருமகனின் மனதில் மாமியார் இடம்பிடிக்க ஏதுவாக இருந்த அந்த முதல் தருணம் தான் மாமியாருடனான உறவை மேம்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். அதனால, அந்த முதல் தருணத்தை இனிமையானதாக ஏற்படுத்தினால் வாழ்க்கையிலே பாதி பிரச்சினை சால்வ்ட்.
Friday, November 20, 2009
திருமணத்திற்கு பின் தேவையா?
இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் கல்யாணம் ஆனாலும் பரவாயில்ல, கல்யாணம் ஆகாட்டாலும் பரவாயில்ல. காதல் பத்திக்குது. முந்தி காலத்திலெல்லாம் பார்த்தோம்னா, ராஜாக்கள் படை எடுத்துட்டு வர்றப்போ நாட்டில ரொம்ப அழகாக இருக்கிற பெண்களை கவர்ந்துகிட்டு போய், அந்தபுரத்தோட எண்ணிக்கையை கூட்றதையே ஒரு வேலையா வச்சிருந்திருக்காங்க. இதுல கூட ஒரு நாட்டு ராஜாவுக்கும், இன்னொரு நாட்டு ராஜாவுக்கும் நீயா? நானான்னு போட்டி போடுவாங்களாம். ஆனாலும் அந்த காலத்து ராஜாக்கள் செய்றது தப்பா இருந்தாலும், ஒரு விஷயத்தில மட்டும் ரொம்ப பெர்ஃபெக்டா இருந்திருக்காங்க. அதாவது கல்யாணம் ஆன பொன்னுங்கள் திரும்பி கூட பார்க்க மாட்டாங்களாம். அதனால் பெண்ணுக்கு கல்யாணம் ஆகி விட்டால் தாலி போட்ருப்பாங்களாம். இதை பார்த்து ராஜாக்கள் உஷாராக இருப்பாங்களாம். கல்யாணம் ஆகாவிட்டால் நவனாலி அப்டின்னு ஒரு சரடை 7 வயதிலில் இருந்தே பெண்கள் கழுத்தில் அணிந்திருப்பாங்களாம். கல்யாணத்தப்போ தான் இந்த நவனாலியை கழட்டி விட்டு தாலி அணிந்து கொள்வார்களாம். அதுவும் இந்த பழக்கம் கார்காத்தார் சமூகத்தில் இன்றும் புழக்கத்தில் உள்ளது என்பதை இன்று என்னுடைய நிகழ்ச்சியில் ஒரு அழைப்பாளர் கூறினார். இந்த மாதிரி ஒரு அடையாளம் இன்றும் தேவைப்படுகிறது சமூகத்தின் வக்கிர கண்களில் இருந்து தப்பிக்க. மாடர்ன் சமுதாயத்தில் நம்மளும் மாடர்னாக இருப்போமே என்று தாலி இல்லாமல் தமிழ் நாட்டில் உலவ முடியவில்லை. இது தான் நிதர்சனம். கல்யாணம் ஆச்சு, கல்யாணம் ஆகலை அப்டின்னு எதுவுமே இப்போல்லாம் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. மனம் போன போக்கில் நடக்கும், மனசாட்சியே இல்லாமல் தடம் மாறும் திருமணம் ஆனவர்களை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வெறுப்பாக இருக்கிறது. என்றைக்கோ மண்ணுக்கு போகப் போகும் உடலுக்காக குடும்பம், மனைவி, குழந்தைகளை எப்படி ஆண்கள் மறந்து போகிறார்கள்?
மாற்றான் மனை கவர்தல் என்ற விஷயத்தை நெறய சங்ககால நூல்களில் பாத்திருக்கோம். இந்த விஷயத்தில் 18 சதவீதம் ஆண்களும், 11 சதவீதம் பெண்களும் கல்யாணம் ஆன பிறகும் இன்னொரு துணையை தேடறாங்க அப்டின்னு ஒரு ஆய்வறிக்கையில சொல்லியிருக்காங்க. இந்த சூழ்நிலைக்கு காரணம் நம்ம மனசு தான். தனி மனித ஒழுக்கம் கண்டிப்பா நம்ம எல்லாருக்குமே வேணும் - கல்யாணம் ஆன பிறகும், கல்யாணம் ஆவதற்கு முன்பும். ஒரு பெண்ணிடமோ, ஒரு ஆணிடமோ பேசுறப்போ எப்போ லேசா நம்ம மனசில ஒரு ஆசை துளிர் விட ஆரம்பிக்குதோ, அவங்க என்ன நெனச்சாலும் பரவாயில்ல. நம்மளுக்கு திருமணம் ஆயிருச்சுன்னா, அந்த உறவை நம்ம அப்டியே நிறுத்திக்கிறது மூலமா, நம்ம இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வராமல் பார்த்துக்கலாம். நம்மளுக்கு நம்ம தான் வேலி போடனும். இதையெல்லாம் உணராமல் ஏன் திருமணம் ஆன பெண்கள்/ஆண்கள் தடம் மாறுகிறார்கள்?இந்த தடுமாற்றத்துக்கு யார் காரணம்/எது காரணம்? உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, November 11, 2009
நாடுகளுக்கு இடைல சாப்பாட்டுக்காக சண்டை..
வீடுகள்ல உப்பு இல்லை, காரம் இல்லைன்னு ஒரு குழம்புக்காக கணவனும், மனைவியும் சண்டை போடுவாங்க. ஆனா சிக்கன் டிக்கா அப்டின்னு ஒரு ரெசிபிக்காக இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே பெரிய சண்டையே வந்துடுச்சாம். நாடுகளுக்கு இடைல எல்லைக்காக சண்டை வரும். ஆனால், சாப்பாட்டுக்காக சண்டை வருமா என்ன? அப்டி என்ன சண்டை அப்டின்னா, இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் எப்டி சண்டை வந்துச்சுன்னா, சிக்கன் டிக்கா இந்திய உணவு கிடையாது. இது பிரிட்டனோட பாரம்பரிய உணவு அப்டின்னு பிரிட்டன்காரங்க நம்ம இந்தியா கூட சண்டை போடறாங்க. ஆனா நம்ம இந்தியாவில் இருக்கிற ஒரு தலைமை செப் இத பத்தி சொல்றப்போ, சிக்கன் டிக்கா முகலாயர்களோட பாரம்பரிய உணவு. முகலாயர்கள் இந்தியாவில ஆட்சி செஞ்சப்போ தான் , சிக்கன் டிக்கா மசாலாவ கண்டுபிடிச்சாங்க அப்டின்னு இந்தியா சார்பில சொல்லிகிட்டு இருக்காங்க.இன்னும் இதுக்கு முடிவு வரலை....
Labels:
இந்தியா,
குழம்பு,
சண்டை,
சிக்கன் டிக்கா,
பிரிட்டனோட
ஜெர்மனியின் செந்தேன் அழகே
ஜெர்மனியின் செந்தேன் அழகேன்ற பாட்டு கேட்டிருக்கோம். ஆனால் ஜெர்மனில இருக்கிறவங்களோட சாப்பாடு விஷயம் பத்தி இதுவரை தெரியாதுல்ல. ஜெர்மானியர்கள் சாப்பாட்டை தங்கத்தை விட மேலா பாதுகாக்கிறாங்களாம். நம்மள மாதிரி ஜெர்மன் நாட்டில இருக்கிறவங்களோட மத்யான சாப்பாடும் ஹெவியா இருக்குமாம். காலைல ப்ரெட்ட பட்டர், ஜாம் இல்லாட்டா சீஸ் வச்சு சாப்டுட்டு போயிருவாங்களாம். இரவு நேரமும் ரொட்டிய சாப்டுட்டு தூங்க போயிருவாங்க. ஆனா மத்யானம் சாப்பாடுன்னு பார்த்தா கறிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து சாப்பிடுவாங்களாம். ஆனா, அவங்ககிட்ட ஒரு சூப்பர்பான பழக்கம் என்னன்னா, மத்யான சாப்பாட்ட கரெக்டா 12 மணியில இருந்து 1 மணிக்குள்ளே சாப்டுருவாங்களாம். அவங்க சாப்பாடு விஷயத்தில் இந்த மாதிரி அழகா டைம் மெயின்டெயின் பண்றத நம்ம அவங்ககிட்ட இருந்து கத்துகிடலாமே !
Tuesday, November 10, 2009
திங்கள் கிழமை இனி மேல் சிக் தினம் !
மழைல்லாம் விட்டு வெயில் அடிக்க ஆரம்பிச்சாலே, ஐயோ லீவே கிடைக்க மாட்டேங்குன்னு நெறய பேருக்கு கவலையா இருக்கும். ஆனால், லண்டன்ல என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா, உலக அளவில திங்கள் கிழமை தான் நெறய பேர் லீவு எடுக்கிறாங்கன்னு சொல்றாங்க. ஏன்னா திங்கள்கிழமைதான் நெறய பேருக்கு உடம்பு சரியில்லாம போகுதாம். ஆனா, இதில இன்னொரு விஷயம் என்னன்னா, சிலர் வார இறுதில ரெண்டு நாள் லீவு எடுத்துட்டு, அந்த லீவு காணாமல், எக்ஸ்ட்ராவா திங்கள்கிழமையையும் சும்மா சும்மா லீவு எடுக்கிறாங்களாம். ஆனா, இந்த திங்கள்கிழமை லீவுக்கு பெரும்பாலோனோர் சொல்ற காரணம் பேக் பெயின் தானாம். இதுல்லாம் நம்மளுக்கு ஒர்க் அவுட் ஆகாது. ஏன்னா, திங்கள் கிழமை லீவு எடுத்தா இந்தியாவில் நெறய அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை லீவையும் கணக்கில எடுத்திருவாங்க !
ரொம்ப நல்லவங்களா இருக்காங்கள்ல ?
தயிர் சாதத்திற்கு ஊறுகாய்தான் பெஸ்ட் காம்பினேஷன். ஆனா, இந்த மாசம்லாம் நம்ம ஊறுகாய பத்தி நெனச்சு கூட பார்க்க முடியாது. ஏன்னா, நம்ம ரமணன் சார் டிவில மழை வரலாம்னு சொல்றதனால மொட்டை மாடில்லாம் ஊறுகாய் இல்லாமல் தவிச்சுகிட்டு இருக்கு. இந்த ஊறுகாய் இவ்ளோ சூப்பர்பான காம்பினேஷனா இருந்தாலும் நம்ம என்னைக்காவது ஊறுகாய்க்குன்னு ஒரு திருவிழா கூட இது வரை கொண்டாடினதில்லை. ஆனால், ரஷ்ய நாட்டுக்காரங்களுக்கு ஊறுகாய்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால, ஊறுகாய்த் திருவிழான்னு ஒரு திருவிழாவை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடறாங்களாம்பா. ரொம்ப நல்லவங்களா இருக்காங்கள்ல ?
காய்கறிகளை பார்த்து கூட பயப்படறாங்க !
எனக்கு வர வர ரொம்ப பயமா இருக்கு.பேய்+பயம் ஊறுகாய்தெனாலி படத்தில் கமல் சொல்ற மாதிரி எல்லாம் சிவமயம்னு சொல்வாங்க. ஆனா, எனக்கு எல்லாமே பயமயமா இருக்கு. ஏன்னா மழை நேரத்தில ரோட்டில நடக்க பயம், ரோட்ட கண்கொண்டு பாக்க பயம். அதுவும் வண்ணாரப்பேட்டை தெருவையும், தூத்துக்குடி கான்வென்ட் ரோட்டயும் மழை நேரத்தில நெனச்சா, அலுவலகத்திற்கு வர்றதுக்கு ரொம்ப பயம்மா இருக்கு. எனக்கு பரவாயில்லப்பா. பிரிட்டன்ல இப்போ நெறய பேருக்கு காய்கறிகள பாக்றதுக்கே ரொம்ப பயமா இருக்காம். இந்த மாதிரி காய்கறிகளை பார்த்து பயப்படற நோயை, லச்சனோ போபியா அப்டின்னு சொல்றாங்க. இது அங்கே மட்டும் இல்ல. நம்மள்லயும் நெறய பேருக்கு கத்திரிக்காய் மாதிரி சில காய்கறிகள் பார்த்தா வெறுப்பா இருக்கும். அந்த காய பேருக்கு திரும்பிக் கூட பார்க்க மாட்டோம். இந்த மாதிரி காய்கறிகளை பார்த்தா வெறுப்பா இருந்தாலும், அது லச்சனோ போபியா அப்டின்னு சொல்றாங்க......
Monday, November 9, 2009
யாராவது திட்ட ஆரம்பிச்சா நோ டென்ஷன்
வீட்டில் மனைவி திட்டினாலும் சரி, கணவன் திட்டினாலும் சரி, இனிமேல் யாரும் டென்ஷன் ஆக தேவை இல்லை. யாராவது உங்களைத் திட்ட ஆரம்பிச்சா, உங்க பக்கத்திலே எங்கேயாவது புல் இருக்கான்னு பாருங்க. பிரச்சினை சால்வ்ட். டென்ஷனுக்கும் பச்சை புல்லுக்கும் என்ன சம்பந்தம் அப்டின்னா, இதெல்லாம் நான் சொல்லலை. ஆராய்ச்சியாளர்கள் இதை பத்தி என்ன சொல்லியிருக்காங்கன்னா, பச்சை புல்லை பிய்த்து பிய்த்து தூர போட்டால், நம்ம மனசில இருக்கிற டென்ஷன், ஸ்ட்ரெஸ் எல்லாமே ஓடி போயிரும்னு கண்டுபிடிச்சிருக்காங்க. இதுக்கு என்ன காரணம் அப்டின்னா நம்ம புல்லை பிய்ச்சு போடறப்போ, அந்த பச்சை புல்லில் இருந்து வர்ற வாசம், நம்மளோட மூளைல உள்ள ஹிப்போகேம்பஸ் அப்டிங்ற பகுதியை நேரடியாக அட்டாக் பண்ணுமாம். இந்த பகுதி தான் நம்மளுக்கு அழுகை, சிரிப்பு இந்த மாதிரி உணர்ச்சிகளை தர்ற பகுதி. அதனால், நம்ம டென்ஷன் ஓடியே போயிருமாம். அப்போ மாடுல்லாம் டென்ஷனை குறைக்கிறதுக்காகத் தான் புல்லை சாப்பிடுதா அப்டின்னுல்லாம் யோசிக்காதீங்க ! மாடும் நம்மள மாதிரி 4 காசு சம்பாதிச்சா ரெஸ்டாரண்டில உக்காந்து சாப்டுகிட்டு இருக்கும். இப்போ ஒசியா புல் கிடைக்கிறதனால தான் மாடு புல்லை சாப்பிடுது.என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு !
Wednesday, November 4, 2009
தந்தூரி சிக்கன் இந்தியாவுக்கு வந்தது இப்படித்தானுங்கோ !
இந்தியா, பாகிஸ்தான் அப்டின்னு இந்தியா ரெண்டா பிரியறதுக்கு முன்னால பெஷாவர்ல குந்தன் லால் குஜ்ரால் என்பவர் மோடி மஹல் எனும் ரெஸ்டாரண்டை நடத்திகிட்டு இருந்தார். அவருக்கு புதுசு புதுசா சமையல்ல ஏதாவது முயற்சிக்கனும்னு ஆசையா இருக்குமாம். அந்த மாதிரி அவர் ஒரு நாள் முயற்சி பண்ணியது தான் தந்தூரி சிக்கன். ஒரு நாள் ஜவஹர்லால் நேரு அங்கே தந்தூரி சிக்கனை சாப்பிட்டிருக்கார். அவருக்கு அந்த ருசி ரொம்ப பிடிச்சி போய் , அவர் என்ன பண்ணியிருக்கார்னா, அதுக்கப்பறமா இந்தியாவில் நடந்த, அவர் தலைமை வகிக்கும் அலுவலக கூட்டங்களில், அங்கு நடக்கும் விருந்துகளில் தந்தூரி சிக்கனை ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது இந்தியாவிற்கு பிரதமரை சந்திக்க வந்திருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, ரிச்சர்ட் நிக்சன் , அவர்களுக்கும் தந்தூரி சிக்கன் பிடித்துப்போய் அவர்கள் தந்தூரி சிக்கனை அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தினர். தந்தூரி சிக்கன் வந்தது இப்படித்தானுங்கோ !
Tuesday, November 3, 2009
இனிமேல் கவலைப்படாதே சகோதரான்னுல்லாம் பாடாதீங்க !
இன்னைக்கு காலைல மழை வந்துச்சுல்ல. இந்த மழை ரொம்ப ரொம்ப ஒவரா பெய்ஞ்சு, பெரிய வெள்ளம்லாம் வந்து, அப்றம் நம்ம எப்படி அலுவல்கத்திற்கு போறது அப்டின்னு யாராவது யோசிச்சிருக்கீங்களா? இந்த மாதிரி நம்ம எதிர்மறையாக சிந்திப்பது ரொம்ப நல்லது அப்டின்னு ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிச்சிருக்காங்க. ஒரு அலுவலகத்தில் சந்தோஷமாக இருக்கிறவங்க, கவலைப்படறவங்க 2 பேர் கையில் ஒரு வேலையை கொடுத்தால், இந்த கவலைப்படறவங்க தான் வேலையை தப்பு இல்லாமல் செய்வாங்களாம். இந்த மாதிரி நீங்க கொடுத்த வேலையை கரெக்டாக செய்பவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்க விரும்புறீங்க? அவர்களை எப்படி எப்படியெல்லாம் கௌரவிக்கலாம்?
Monday, November 2, 2009
பெயரிலுமா ஆண்கள் ராஜ்ஜியம் :
பெயரில் என்ன இருக்கிறது அப்டின்னு நம்ம எல்லாருமே சொல்றது தான். ஆனால் இந்த வாரம் அமெரிக்காவில் க்லெம்சன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் என்ன சொல்றாங்கன்னா, பெண்களுக்கு ஆண்களோட பேர் வச்சா, அந்த பெண்கள் பெரிய வக்கீலாகவோ, நீதிபதியாகவோ வருவாங்க அப்டின்னு கண்டுபிடிச்சிருக்காங்க. சவுத் கரோலினாவில் முதல் வக்கீல் ஒரு பெண் தான். அது மாதிரி, நெறைய பெண் வக்கீல்கள், அவர்களது பெயரின் பாதி ஆண்களுடைய பெயரை கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்களாம். அதனால் அமெரிக்காவில் க்லெம்சன் பல்கலைக்கழகம் பெண்களுக்கு ஆண்களோட பேர் வச்சா, பெண்கள் பெரிய வக்கீலாகவோ, நீதிபதியாகவோ வருவாங்க அப்டின்னு சொல்றாங்க. இது பற்றி உங்களின் கருத்துக்கள் என்ன?
Friday, October 30, 2009
இனிமேல் எப்படி சாப்பிடறது? ரூம் போட்டு யோசிங்கப்பா ......
எந்த ஹோட்டலுக்குப் போனாலும் சாப்பாடு வைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னாலேயே ஒரு தட்டும், முள்கரண்டி, கத்தி, ஸ்பூன் இதெல்லாம் கொண்டு வச்சிட்டு போயிடுவாங்க. நமக்கு செம பசியாக இருக்கும். ஆனா சாப்பாடு அரை மணி நேரத்திற்கு அப்றமா தான் மெதுவாக வரும். அதுவரை, இந்த கரண்டியதான் நம்ம பாத்துகிட்டே இருக்கனும். இந்த கரண்டிய முதல்ல கண்டுபிடிச்சவங்க யார்னு பாத்தீங்கன்னா கிரேக்க நாட்டுக்காரங்க தான் ! அந்த காலத்திலெல்லாம் கடல்ல கிடைக்கிற சங்கை எடுத்து, அதை கூட ஸ்பூனா பயன்படுத்தியிருக்காங்களாம். ஆனா, நம்ம் கரண்டிய வச்சு சாப்பிட்டால் வயிறு நிறைந்த மாதிரியே இருக்காது. இது எதுக்குன்னு பாத்தீங்கன்னா, சாப்பாட்டை பிசைந்து கை நிறைய எடுத்து சாப்பிட்டால் தான் சாப்பாடு செமிக்கும் அப்டின்னு நெதர்லாந்து மருத்துவர்கள் சொல்றாங்க. அதே மாதிரி கையால சாப்பிடறதனால விரல்கள்லாம் மென்மையாக இருக்குமாம். அப்றமா விரலுக்கு நல்ல வளைஞ்சு கொடுக்கும் தன்மையும் கிடைக்குமாம். இனிமேல் எப்படி சாப்பிடறது? ரூம் போட்டு யோசிங்கப்பா ......
Labels:
கிரேக்க நாட்டுக்காரங்க,
ஸ்பூன்,
ஹோட்டலுக்குப்
ஊதா நிறத்தில் இவ்ளோ விஷயங்களா?
ஊதா ஊதா ஊதாப்பூ இந்த பாட்டு செமயான பாட்டுல்ல. அதே மாதிரி ஊதா நிறத்தில் உடைகள் போட்டுக் கொள்வது இதயத்திற்கு ரொம்ப நல்லதாம். இதய துடிப்பு வேகமாக இருக்கு, குறைப்பதற்கு என்ன பண்ண வேண்டும் அப்டின்னு கேக்றவங்க ஊதா நிறத்தில் உடை போட்டால்,பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். ஊதா நிறத்தால் இதய நோயாளிகளுக்கு இதயதுடிப்பு சரியான அளவில் துடிக்குமாம். அதே மாதிரி இரவு படுக்கையறையில் ஊதா நிறத்தில் பல்ப் போட்டால் மனசு ரொம்ப அமைதியாக இருக்குமாம். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் கூடனும்னு நம்ம எவ்ளவோ முயற்சிகள்லாம் எடுத்திருப்போம். ஆனால் , ஒரே ஒரு ஊதா நிற பல்ப் இத்தனை வேலையையும் செய்கிறதாம். அதே மாதிரி இந்த ஊதா நிற பல்ப் இருக்கும் அறையில் தூங்கினால் நல்ல தூக்கம் வருமாம். இனி மேல் தூக்க மாத்திரைக்கு ஆப்பு தானா?
Tuesday, October 27, 2009
சாம்பார் என்ற பெயர் சாம்பாருக்கு எப்படி வந்தது?
சாம்பார் என்ற பெயர் சாம்பாருக்கு எப்படி வந்தது?
நெறய வீடுகளில் தினமும் சாம்பார் வச்சே கொல்லுவாங்க. நெஜமாவே சாம்பாருக்கு பேர் வந்ததுக்கு காரணம் சாம்பாஜி எனும் ஒருத்தர். சாம்பாஜிக்கும், சாம்பாருக்கும் என்ன சம்பந்தம் அப்டின்னா,மராட்டிய அரசர் சத்ரபதி சிவாஜியின் மகன் தான் சாம்பாஜி. மராட்டியர்கள் அம்டி அப்டின்ற குழம்பை தான் முதல்ல சாப்டுகிட்டு இருந்தாங்க. புளிக்கு பதிலாக கோக்கும் அப்டின்ற ஒரு பழத்தை பயன்படுத்தினாங்க. அப்றமா, அந்த கோக்கும் கிடைக்காமல் ரொம்ப தட்டுப்பாடாக ஆனதால் , புளியை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. புளியை கரைச்சு, துவரம்பருப்பு, காய்கறி இதெல்லாம் போட்டு குழம்பு வச்சாங்க. இந்த குழம்பை அரசவைக்கு விருந்தாளியாக வந்த சாம்பாஜிக்கு முதல்ல குடுத்தாங்க. சாம்பாஜி முதலில் சாப்பிட்டதால் சாம்பாருக்கு சாம்பார் அப்டின்னு பெயர் வந்தது.
Saturday, August 1, 2009
இனிப்பு பண்டங்களுக்கு போடாதீங்க தடா:
இனிப்பு பண்டங்களுக்கு போடாதீங்க தடா:
குழந்தைங்களுக்கு இனிப்பு பண்டங்களை தர்றதுக்கு தடா போடற பெற்றோரா நீங்க? குழந்தைங்களுக்கு இனிப்பு பண்டங்களை கொடுத்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று ப்ரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.5 வயதில் இருந்து 10 வயது வரை உள்ள குழ்ந்தைகளுக்கு பெரியவர்களை விட 2 மடங்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறதாம். குளுக்கோஸ் உட்கொள்ளும் குழ்ந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதனால, இனிமேல் இனிப்பு பண்டங்களுக்கு போடாதீங்க தடா !
குழந்தைங்களுக்கு இனிப்பு பண்டங்களை தர்றதுக்கு தடா போடற பெற்றோரா நீங்க? குழந்தைங்களுக்கு இனிப்பு பண்டங்களை கொடுத்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று ப்ரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.5 வயதில் இருந்து 10 வயது வரை உள்ள குழ்ந்தைகளுக்கு பெரியவர்களை விட 2 மடங்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறதாம். குளுக்கோஸ் உட்கொள்ளும் குழ்ந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதனால, இனிமேல் இனிப்பு பண்டங்களுக்கு போடாதீங்க தடா !
தோல் பள பள என்று இருக்க வேண்டுமா?
தோல் பள பள என்று இருக்க வேண்டுமா?
உங்கள் தோல் மட்டும் சொரசொர என்று இருக்கிறது. ஸாஃப்ட் ஆக இல்லையே என்று ஃபீல் பண்றீங்களா? நாம் சாப்பாட்டை சமைத்து சாப்பிடுவதால், சாப்பாட்டில் இருக்கிற 'ஃப்லோரின்' சத்து போய் விடுகிறது. அதனால் என்ன பண்ணுங்க, பச்சை காய்கறி, பழங்கள்,ஆட்டுப்பால், வெண்ணெய் இதெல்லாம் சாப்பாட்டில் நிறைய சேர்த்து கொண்டால் தோல் பள பள என்று இருக்கும்.
உங்கள் தோல் மட்டும் சொரசொர என்று இருக்கிறது. ஸாஃப்ட் ஆக இல்லையே என்று ஃபீல் பண்றீங்களா? நாம் சாப்பாட்டை சமைத்து சாப்பிடுவதால், சாப்பாட்டில் இருக்கிற 'ஃப்லோரின்' சத்து போய் விடுகிறது. அதனால் என்ன பண்ணுங்க, பச்சை காய்கறி, பழங்கள்,ஆட்டுப்பால், வெண்ணெய் இதெல்லாம் சாப்பாட்டில் நிறைய சேர்த்து கொண்டால் தோல் பள பள என்று இருக்கும்.
அறிவாளியாக உதவும் மீன் :
ஹெல்த் டிப்ஸ் :
அறிவாளியாக உதவும் மீன் :
ஒரு பெரிய அறிவாளி ஆக வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே இருக்கும். அந்த ஆசையில் வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு, அது, இது என்று வெண்டைக்காய் நம்ம கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகி கொண்டு இருந்தது. இப்பொழுது ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா,15 வயதுக்கு மேல் இருப்பவர்கள் நிறைய மீன் சாப்பிட்டால் அறிவு வளரும் என்று கண்டுபிடிச்சிருக்காங்க. அறிவாளி ஆகனும்னு நினைப்பவர்கள் இனிமேல் மீனை மிஸ் பண்ணிராதீங்க!
அறிவாளியாக உதவும் மீன் :
ஒரு பெரிய அறிவாளி ஆக வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே இருக்கும். அந்த ஆசையில் வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு, அது, இது என்று வெண்டைக்காய் நம்ம கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகி கொண்டு இருந்தது. இப்பொழுது ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா,15 வயதுக்கு மேல் இருப்பவர்கள் நிறைய மீன் சாப்பிட்டால் அறிவு வளரும் என்று கண்டுபிடிச்சிருக்காங்க. அறிவாளி ஆகனும்னு நினைப்பவர்கள் இனிமேல் மீனை மிஸ் பண்ணிராதீங்க!
Subscribe to:
Posts (Atom)