மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்களில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் " சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" பாடல் கம்போசிங் செய்ய அவர் எடுத்த நேரம் மிக மிக குறைவு.. அனால் சில பாடல்கள் கம்போஸ் செய்ய ஐந்து மாதங்கள் வரை ஆகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Saturday, August 19, 2017
பாடலும் கதையும்
16 வயதினிலே படத்தில் வரும் "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா" - இந்த பாடலை பாட வேண்டிய பாட்டு தான். ஆனால் அவருக்கு அந்நேரத்தில் தொண்டை கட்டிக்கொண்டதால், அந்த பாடலை பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த பாடல் கிடைக்காமல் இருந்திருந்தால், என்னுடைய முன்னேற்றம் இன்னும் தாமதப்பட்டிருக்கும் என மலேசியா வாசுதேவன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
இளமையான சருமம் - பின்பற்ற வேண்டியவை
இருபத்தைந்து வயதிற்கு பின், தோலில் கொலாஜன் குறைய ஆரம்பிக்கும். அதனால் தோலை பாதுகாக்கும் உணவுகளான கொய்யா, பப்பாளி, நெல்லிக்காய், வெங்காயம், எலுமிச்சை என விட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை மறக்காமல் சேர்க்க வேண்டும். சர்க்கரை வள்ளி கிழங்கு, பீட்ருட் தினமும் எடுத்து கொள்ள வேண்டும். அடர் நிறங்கள் அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்து கொள்வது அவசியம், செலினியம் அதிகமுள்ள மஷ்ரூம், துத்த நாகம் அதிகமுள்ள பச்சை கீரைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் ஐந்து எண்ணிக்கையுள்ள பாதாம், முந்திரி, வால்நட் எடுத்து கொள்ள வேண்டும். விட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து பெற வேண்டும். குறணிந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சோப் வாங்கும் போது, PH லெவல் பார்த்து சமநிலையில் உள்ள சோப் வாங்க வேண்டும். தினமும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். மனதை ரிலாக்ஸ்ட்டாக வைத்து கொள்ள வேண்டும். இதை எல்லாம் சரியாக பின்பற்றினால் ஸ்கின் அழகாக இளமையாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)