சின்ன பிள்ளையா இருக்கிறப்போ நம்மள்லாம் ராக்கெட் விட்டு விட்டு விளையாடி இருக்கோம். ஆனால், நெஜமாவே ராக்கெட் தொழில்நுட்பத்தை இந்தியாவில செயல்படுத்தி காட்டிய டாக்டர். அப்துல் கலாம் அவர்கள்கிட்ட இந்த ராக்கெட் மேல அவருக்கு எப்போ ஆசை வந்துச்சுன்னு கேட்டதுக்கு, அவர் பள்ளியில படிக்கிறப்போ பறவைகளோட இயக்கம் பத்தி பாடம் நடத்தின டீச்சர் இருக்காங்கள்ல, அவங்க வந்து பறவைகள் சரணாலயத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு போய் பறவைகளைல்லாம் கண்கூடா காட்டி அதோட இயக்கம் பத்தில்லாம் விளக்கினாராம். அதையெல்லாம் பாக்கிறதுக்கும், கேக்கிறதுக்கும் அப்டி ஒரு பிரமிப்பா இருந்துச்சாம். அதில இருந்து ஒரு விமானியாகனும் அப்டிங்கிற ஆசை எனக்கு வந்துச்சு அப்டின்னு சொல்லி இருக்காராம் கலாம். இந்த மாதிரி நேரடி அனுபவங்கள் தான், ஒரு மாணவனை நல்ல நிலைக்கு உயர்த்தும். ஆனா நிஜமாவே இந்த மாதிரி தனியார் பள்ளிகள்ல, ஆசிரியர்கள்லாம் மாணவர்களுக்கு இப்டி வழிகாட்டுகிறாங்களா? ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் மாணவர்களை ஊக்குவிச்சா நல்லா இருக்கும். இந்த ஒரு புண்ணியமான வேலையை உண்மையா செய்வாங்களா நம்ம ஊர் ஆசிரியர்கள்?