Monday, July 22, 2013

படித்ததில் ரசித்தது :-



வழுக்கையை மறைத்த அரசர்:-

ஜூலியஸ் சீசர் கிமு 44ஆம் ஆண்டில் மார்ச் 15ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.  அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள், அவர் தலை வழுக்கையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்  இந்த வழுக்கை இரகசியத்தை தம் இறுதிக்காலம் வரை 'விக்'கின் உதவியால் மறைத்து வைத்திருந்தார் சீசர் !

திருமணம் பற்றீ சிந்திக்காத விஞஞானி !
உலகத்தை மாற்றிய முதல் நூறு மனிதர்களுள் இரண்டாவது மனிதராய் இடம் பெற்றவர் ஸர்  ஐசக் நியுட்டன் தான். நியூட்டன் இறக்கும்வரை அறிவியல் ஆராய்ச்சியிலேயே இருந்ததால் செக்ஸ் பற்றிய உணர்வே இவருக்கு எழவில்லையாம். அதைப்பற்றி சிந்திக்கவும் நேரமில்லாததால் நியூட்டன் திருமணம் செய்து கொள்ளவில்லை .

இந்த டிப்ஸ் நல்லா இருக்கு:-

தேளின் மீது சாராயத்தை ஊற்றினால் தேளுக்கு வெறி ஏற்பட்டு அந்த வெறியில் தன்னை தானே கொட்டிக்கொண்டு இறந்து விடும். 

டிபன் (TIFFEN) என்ற வார்த்தையை முதன்முதலாக இங்கிலாந்தின் வடபகுதியில் உள்ள மக்கள் ஒரு கொச்சை சொல்லாக பயன்படுத்தி வந்தனர்  அதன் பொருள் கொஞ்சமாவது மது அருந்துங்கள் என்பதாகும்.  இந்தியாவில் எளிய சிற்றுண்டிக்கு டிபன் என்று சொல்கிறோம்.