Friday, October 30, 2009

இனிமேல் எப்படி சாப்பிடறது? ரூம் போட்டு யோசிங்கப்பா ......


எந்த ஹோட்டலுக்குப் போனாலும் சாப்பாடு வைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னாலேயே ஒரு தட்டும், முள்கரண்டி, கத்தி, ஸ்பூன் இதெல்லாம் கொண்டு வச்சிட்டு போயிடுவாங்க. நமக்கு செம பசியாக இருக்கும். ஆனா சாப்பாடு அரை மணி நேரத்திற்கு அப்றமா தான் மெதுவாக வரும். அதுவரை, இந்த கரண்டியதான் நம்ம பாத்துகிட்டே இருக்கனும். இந்த கரண்டிய முதல்ல கண்டுபிடிச்சவங்க யார்னு பாத்தீங்கன்னா கிரேக்க நாட்டுக்காரங்க தான் ! அந்த காலத்திலெல்லாம் கடல்ல கிடைக்கிற சங்கை எடுத்து, அதை கூட ஸ்பூனா பயன்படுத்தியிருக்காங்களாம். ஆனா, நம்ம் கரண்டிய வச்சு சாப்பிட்டால் வயிறு நிறைந்த மாதிரியே இருக்காது. இது எதுக்குன்னு பாத்தீங்கன்னா, சாப்பாட்டை பிசைந்து கை நிறைய எடுத்து சாப்பிட்டால் தான் சாப்பாடு செமிக்கும் அப்டின்னு நெதர்லாந்து மருத்துவர்கள் சொல்றாங்க. அதே மாதிரி கையால சாப்பிடறதனால விரல்கள்லாம் மென்மையாக இருக்குமாம். அப்றமா விரலுக்கு நல்ல வளைஞ்சு கொடுக்கும் தன்மையும் கிடைக்குமாம். இனிமேல் எப்படி சாப்பிடறது? ரூம் போட்டு யோசிங்கப்பா ......

ஊதா நிற‌த்தில் இவ்ளோ விஷ‌ய‌ங்க‌ளா‍?




ஊதா ஊதா ஊதாப்பூ ‍ இந்த‌ பாட்டு செம‌யான‌ பாட்டுல்ல‌. அதே மாதிரி ஊதா நிற‌த்தில் உடைக‌ள் போட்டுக் கொள்வ‌து இத‌ய‌த்திற்கு ரொம்ப‌ ந‌ல்ல‌தாம். இத‌ய‌ துடிப்பு வேக‌மாக‌ இருக்கு, குறைப்ப‌த‌ற்கு என்ன‌ ப‌ண்ண‌ வேண்டும் அப்டின்னு கேக்ற‌வ‌ங்க‌‌ ஊதா நிற‌த்தில் உடை போட்டால்,பிர‌ச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட‌லாம். ஊதா நிற‌த்தால் இத‌ய‌ நோயாளிக‌ளுக்கு இத‌ய‌துடிப்பு ச‌ரியான‌ அளவில் துடிக்குமாம். அதே மாதிரி இர‌வு ப‌டுக்கைய‌றையில் ஊதா நிற‌த்தில் ப‌ல்ப் போட்டால் ம‌ன‌சு ரொம்ப‌ அமைதியாக‌ இருக்குமாம். ர‌த்த‌த்தில் சிவ‌ப்பு அணுக்கள் கூட‌னும்னு ந‌ம்ம‌ எவ்ளவோ முய‌ற்சிக‌ள்லாம் எடுத்திருப்போம். ஆனால் , ஒரே ஒரு ஊதா நிற‌ ப‌ல்ப் இத்த‌னை வேலையையும் செய்கிற‌தாம். அதே மாதிரி இந்த ஊதா நிற‌ ப‌ல்ப் இருக்கும் அறையில் தூங்கினால் ந‌ல்ல‌ தூக்க‌ம் வ‌ருமாம். இனி மேல் தூக்க‌ மாத்திரைக்கு ஆப்பு தானா?