Sunday, October 1, 2017

டிப்ஸ் டிப்ஸ்

டிப்ஸ் டிப்ஸ்

காரக்குழம்பில் காரம் அதிகமாகி விட்டதா ?
வறுத்த வேர்க்கடலை பருப்பை பொடி செய்து , கார குழம்பில் கலந்து விட்டால் காரம் குறைந்து சுவையான குழம்பாகி விடும்.

தவாவில் பிசுக்கு போகவில்லையா ?
சூடான தயிர் அல்லது சூடான மோரை தவாவில் ஊற்றி, ஆறியபின் தேய்த்து கழுவ, தவா பளபளவென இருக்கும்.

ஆரஞ்சு டீ வேண்டுமா ?
டீ தயாரித்ததும் அதில் ஓரிரு ஆரஞ்சு பழ சுளைகளை போட்டால் டீ மணமும் சுவையும் கொள்ளை கொள்ளும்.

ஜீரணத்தை தூண்டும் சப்பாத்தி:-
கோதுமை மாவில் சப்பாத்தி செய்யும் போது, நாலு கரண்டி மோருடன், சிறிது மிளகு, சீராக பொடிகளை சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும்.

ரவையை மாத்துங்க :-
அரிசி, உப்புமா, பிடிகொழுக்கட்டை செய்யும் போது, அரிசி ரவைக்கு பதிலாக கோதுமை ரவையை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து உபயோகித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாகும்.

அரைத்த மாவு தோசை :-
அரைத்த மாவு தோசை செய்யும் போது அதில் சிறிது மோர்விட்டு மாவை கரைப்பது வழக்கம். மோர் இல்லாத சமயத்தில் எலுமிச்சை சாறை விட்டு சுவை சேர்க்கலாம். அதுவும் இல்லாத சமயத்தில் தக்காளியையும், பச்சை மிளகாயையும் சுவைக்கேற்ப அரைத்து விட்டு மாவை கரைத்தால் அலாதி ருசி.

சாத கட்லட் :-
வெஜிடபிள் கட்லட் செய்யும் போது கைப்பிடி அளவு சாதத்தை நன்கு மசித்து சேர்த்து கட்லட் செய்தால், கட்லட் மிருதுவாக இருப்பதோடு அளவும் கூடுதலாக இருக்கும்.

இன்ஸ்டன்ட் சூப் :-
காய்கறிகளை வேக வைத்த நீரை கொட்டி விடாமல் மிளகு, சீரக பொடிகளுடன் அரை டீஸ்பூன் வெண்ணெய், தேவையான உப்பு சேர்ந்தால் சூப்பரான சூப் ரெடி ..

பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துவிட்டு, கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு பதினைந்து நிமிடம் மூடி வைத்தால் பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவும் செய்யாது. ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் இருக்கும்.

வெங்காயம் நறுக்கிய அரிவாள்மனை அல்லது கத்தியில் ஒரு வெற்றிலையை எடுத்து கசக்கி தேய்த்தால் வாடை போய் விடும்.

பனங்கிழங்கு கிடைக்கும் போது, சுவையான சத்து கஞ்சி மாவு தயார் செய்து வைத்து கொள்ளலாம். குச்சி கிழங்கை தோல் நீக்கி, வில்லைகளாக்கி உலர்த்தி சிறிது ஏலக்காய் சேர்த்து மிக்சியில் பவுடராக்கி கொள்ளவும். அந்த மாவில் கஞ்சி தயாரித்து பால் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான, சுவையான மணமான கஞ்சி இது.

பீட்ரூட் தோல்களை கனகாம்பரம் பூச்செடிக்கு உரமாக போட்டால், பூக்கள் ஊதா நிறம் கலந்த சிவப்புடன் அழகாக பூக்கும்.

Saturday, August 19, 2017

பாடலும் கதையும் - சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்களில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் " சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" பாடல் கம்போசிங் செய்ய அவர் எடுத்த நேரம் மிக மிக குறைவு.. அனால் சில பாடல்கள் கம்போஸ் செய்ய ஐந்து மாதங்கள் வரை ஆகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

பாடலும் கதையும்

16 வயதினிலே படத்தில் வரும் "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா" - இந்த பாடலை பாட வேண்டிய பாட்டு தான். ஆனால் அவருக்கு அந்நேரத்தில் தொண்டை கட்டிக்கொண்டதால், அந்த பாடலை பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த பாடல் கிடைக்காமல் இருந்திருந்தால், என்னுடைய முன்னேற்றம் இன்னும் தாமதப்பட்டிருக்கும் என மலேசியா வாசுதேவன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.இளமையான சருமம் - பின்பற்ற வேண்டியவை

இருபத்தைந்து வயதிற்கு பின், தோலில் கொலாஜன் குறைய ஆரம்பிக்கும். அதனால் தோலை  பாதுகாக்கும் உணவுகளான கொய்யா, பப்பாளி, நெல்லிக்காய், வெங்காயம், எலுமிச்சை என விட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை மறக்காமல் சேர்க்க வேண்டும். சர்க்கரை வள்ளி கிழங்கு, பீட்ருட் தினமும் எடுத்து கொள்ள வேண்டும். அடர் நிறங்கள் அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்து கொள்வது அவசியம், செலினியம் அதிகமுள்ள மஷ்ரூம், துத்த நாகம் அதிகமுள்ள பச்சை கீரைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் ஐந்து எண்ணிக்கையுள்ள பாதாம், முந்திரி, வால்நட் எடுத்து கொள்ள வேண்டும். விட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து பெற வேண்டும். குறணிந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சோப் வாங்கும் போது, PH லெவல் பார்த்து சமநிலையில் உள்ள சோப் வாங்க வேண்டும். தினமும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உறங்க   செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். மனதை ரிலாக்ஸ்ட்டாக வைத்து கொள்ள வேண்டும். இதை எல்லாம் சரியாக பின்பற்றினால் ஸ்கின் அழகாக இளமையாக இருக்கும்.

Tuesday, August 15, 2017

தினம் ஒரு நெல்லிக்காய்

புளிப்பு சுவைகளிலேயே மிகவும் நன்மையை தருவது நெல்லிக்காய் தான் என பண்டை கால ஆயுர்வேத நிபுணர் சுஸ்ருதர் சொல்லியிருக்கார். ஒரு பெரிய நெல்லிக்காயை சாப்பிடுவது 20 ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதற்கு சமம் என சொல்லுவார்கள். பார்வை மங்கல், கண் அயர்ச்சியை போக்கும் ஷக்தி நெல்லிக்காய்க்கு இருக்கிறது.  ஒரு நெல்லிக்காயும், சம அளவிலான தங்கத்தையும் ஒப்பிட்டால், தங்கத்தை விட நெல்லிக்காய் தான் அதிக பலன் தரக்கூடியது என வட மொழிப்பாடல் ஒன்று கூறுகிறது. நமது உடல் பலவீனம் அடைய காரணம் என்ன என்று பார்த்தால், பழைய செல்களும், திசுக்களும் அழிந்து, புதுப்புது செல்களும், திசுக்களும் உருவாவது தான் காரணம். தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலின் செல்களும், திசுக்களும் அழிந்து போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இது ஒரு காயகல்ப மருந்து போன்றது. நமது வட மொழி நூல்கள் நெல்லிக்காயை சர்வ உத்தம பழம், அதாவது பழங்களில் எல்லாம் சிறந்த பழம் என கூறுகிறது. அதனால் நெல்லிக்காய தினம் உணவில் ஜாம், ஊறுகாய், ஜூஸ் என ஏதாவது ஒரு வடிவத்தில் எடுத்து கொள்ளலாமே !

Saturday, January 7, 2017

புதிர்கள்

புதிர்கள்
இன்றைய புதிர்
சிகப்பு, வெள்ளை, நீல நிற  கார்கள் திருட்டு போகுது. போலீசார் அருண், வருண், கார்த்திக்  மூன்று  பேரை சந்தேகப்பட்டு கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.
அருண் வருண் ரெட் கலர் காரை திருடினார்னு சொல்றான்.
கார்த்திக் வருண் வெள்ளை கலர் காரை திருடினார்னு சொல்றான்
வருணிடம் கேட்டால், நான் வெள்ளை கலர் காரையும் திருடலை, சிகப்பு கலர் காரையும் திருடலைன்னு சொல்றான்.
போலீசார் சிகப்பு கலர் காரை திருடினவர் உண்மையை ஒத்துக்கிட்டான்னு சொல்லி மூன்று போரையும் அரெஸ்ட் பண்றங்க. இந்த ஒரு தகவலை வைத்து கொண்டு யார் யார் எந்தெந்த காரை திருடினாங்கன்னு கண்டுபிடிக்க முடியுமா ?

Sunday, October 16, 2016

நேராக உட்கார்வது அவசியம் !!!!நாம் சரியான முறையில் உட்கார்வது அவசியம். நீங்கள் எவ்வாறு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா ? நீங்கள் ஆபிஸ் சேரில் எவ்வாறு உட்கார்ந்து எழுதுகிறீர்கள் , டைனிங் டேபிளில் எவ்வாறு காய்கறி வெட்டுகிறீர்கள் , பேருந்துக்கு உட்கார்ந்து இருக்கும் போது எவ்வாறு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கவனித்தது உண்டா ?

எப்போதும் சரியான முறையில் உட்கார்வது என்பது உடல் நலத்திற்கு நல்லது. வளைந்து உட்கார்வது உடம்பிற்கு ஸ்ட்ரெஸ்ஸையும், அசதியையும் கொடுக்கும். இதனால் உடம்பில் சில அங்கங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

நல்ல நிலையில் உட்கார்வது எலும்புகளுக்கும், தசைகளுக்கும் நல்லது. உடலுறுப்புகளை இந்த சிறிய முயற்சியினால் நன்றாக வைத்திருக்க முடிகிறது.

பெரிய பெரிய ஓட்டல்களில் தலைப்பாகை அணிந்துள்ள வாட்சுமேன் நேராக நின்று கொண்டு கதவை திறப்பதை நீங்கள் ஓட்டலுக்கு செல்லும் போது பார்த்து இருப்பீர்கள். அவர் உடலை வளைத்துக் கொள்ளாமல் மணிக்கணக்காக நிற்கிறார். அதனால் அவர் சோர்வு அடைவதில்லை.

நல்ல முறையில் உட்கார்ந்திருப்பது மன அழுத்ததையும் ஏற்படுத்தாது. பெரும்பாலானோர் இவ்வாறு நல்ல முறையில் உட்கார்வதற்கு சோம்பல் படுவார்கள்.

ஒரு சர்வேயின்படி '75% மக்கள் சரியான முறையில் உட்கார்வதில்லை ' என தெரிய வந்துள்ளது. நவீன எந்திர உலகில் ரோலிங் சேர், குஷன் இருக்கைகள் உள்ள தியேட்டர்கள் என நாம் நல்ல நிலையில் உட்கார்வதே இல்லை. அனால் ஒழுங்கான முறையில் உட்காராமல் இருப்பதால், நமது முதுகுத்தண்டின் அமைப்பு பாதிக்கப்படும். இது கால் மூட்டுக்களை பாதிக்கும். ஆர்த்ரைட்டிஸ், முதுகுவலி போன்றவை ஏற்படலாம்.

ஒரு நீண்ட கண்ணாடியில், நீங்கள் உட்கார்ந்து இருக்கும் முறையை பார்க்கவும். பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையும் தெரிந்து கொள்ளவும். முதுகுப்பகுதியம், கழுத்தும் நேராக இருக்கும்படி, தலையை நிமிர்த்தி உட்காரவோ.

எனவே இனி நீங்களும் நேராக அமர பழகி கொள்ளவும்.

- - க்ருஹ ஷோபா ஜூன் 2015 இதழில் இருந்து