வீட்டில் மனைவி திட்டினாலும் சரி, கணவன் திட்டினாலும் சரி, இனிமேல் யாரும் டென்ஷன் ஆக தேவை இல்லை. யாராவது உங்களைத் திட்ட ஆரம்பிச்சா, உங்க பக்கத்திலே எங்கேயாவது புல் இருக்கான்னு பாருங்க. பிரச்சினை சால்வ்ட். டென்ஷனுக்கும் பச்சை புல்லுக்கும் என்ன சம்பந்தம் அப்டின்னா, இதெல்லாம் நான் சொல்லலை. ஆராய்ச்சியாளர்கள் இதை பத்தி என்ன சொல்லியிருக்காங்கன்னா, பச்சை புல்லை பிய்த்து பிய்த்து தூர போட்டால், நம்ம மனசில இருக்கிற டென்ஷன், ஸ்ட்ரெஸ் எல்லாமே ஓடி போயிரும்னு கண்டுபிடிச்சிருக்காங்க. இதுக்கு என்ன காரணம் அப்டின்னா நம்ம புல்லை பிய்ச்சு போடறப்போ, அந்த பச்சை புல்லில் இருந்து வர்ற வாசம், நம்மளோட மூளைல உள்ள ஹிப்போகேம்பஸ் அப்டிங்ற பகுதியை நேரடியாக அட்டாக் பண்ணுமாம். இந்த பகுதி தான் நம்மளுக்கு அழுகை, சிரிப்பு இந்த மாதிரி உணர்ச்சிகளை தர்ற பகுதி. அதனால், நம்ம டென்ஷன் ஓடியே போயிருமாம். அப்போ மாடுல்லாம் டென்ஷனை குறைக்கிறதுக்காகத் தான் புல்லை சாப்பிடுதா அப்டின்னுல்லாம் யோசிக்காதீங்க ! மாடும் நம்மள மாதிரி 4 காசு சம்பாதிச்சா ரெஸ்டாரண்டில உக்காந்து சாப்டுகிட்டு இருக்கும். இப்போ ஒசியா புல் கிடைக்கிறதனால தான் மாடு புல்லை சாப்பிடுது.என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு !
அப்போ எப்பவும் ஒரு புல்லுக் கட்டோட திரியணுமா :(.
ReplyDeleteவிநோதமான தகவல். மிக்க நன்று :).
டென்ஷன் போக புல்லை தேடி தேடி இன்னும் டென்ஷன் ஆயிட்டா?இப்பவே எனக்கு புல் வேணும்.ரொம்ப டென்ஷனா இருக்குங்க...
ReplyDeleteஉபயோகமான நல்ல பதிவு!!! அருமையாக உள்ளது.
POONGUNDRAN2010.BLOGSPOT.COM
நன்றி பூங்குன்றன்
ReplyDeleteநன்றி சுடுதண்ணி
ஆனால் நான் ஏற்கென்வே இந்த மாதிரி முயற்சி பண்ணி பாத்திருக்கேன். நெஜமாவே டென்ஷன் குறையுது