பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Tuesday, November 10, 2009
காய்கறிகளை பார்த்து கூட பயப்படறாங்க !
எனக்கு வர வர ரொம்ப பயமா இருக்கு.பேய்+பயம் ஊறுகாய்தெனாலி படத்தில் கமல் சொல்ற மாதிரி எல்லாம் சிவமயம்னு சொல்வாங்க. ஆனா, எனக்கு எல்லாமே பயமயமா இருக்கு. ஏன்னா மழை நேரத்தில ரோட்டில நடக்க பயம், ரோட்ட கண்கொண்டு பாக்க பயம். அதுவும் வண்ணாரப்பேட்டை தெருவையும், தூத்துக்குடி கான்வென்ட் ரோட்டயும் மழை நேரத்தில நெனச்சா, அலுவலகத்திற்கு வர்றதுக்கு ரொம்ப பயம்மா இருக்கு. எனக்கு பரவாயில்லப்பா. பிரிட்டன்ல இப்போ நெறய பேருக்கு காய்கறிகள பாக்றதுக்கே ரொம்ப பயமா இருக்காம். இந்த மாதிரி காய்கறிகளை பார்த்து பயப்படற நோயை, லச்சனோ போபியா அப்டின்னு சொல்றாங்க. இது அங்கே மட்டும் இல்ல. நம்மள்லயும் நெறய பேருக்கு கத்திரிக்காய் மாதிரி சில காய்கறிகள் பார்த்தா வெறுப்பா இருக்கும். அந்த காய பேருக்கு திரும்பிக் கூட பார்க்க மாட்டோம். இந்த மாதிரி காய்கறிகளை பார்த்தா வெறுப்பா இருந்தாலும், அது லச்சனோ போபியா அப்டின்னு சொல்றாங்க......
Subscribe to:
Post Comments (Atom)
கல்யாணி , உரத்தால் காய்கறிகள்ல கூட ஆபத்துன்னு சொல்றதால் எனக்கும் காய்கறி பழங்கள் மேல பயம் வந்திருக்கு கழுவு கழுவுன்னு கழுவறோமே..இதுவும் அதே போபியா தானா?
ReplyDeleteகாய்கறிகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பயமென்றாலும் அது லச்சனோ போபியா தான். இருந்தாலும் காய்கறிகளை நீங்கள் ஒரு தடவைக்கு 3 தடவை கழுவி விட்டு பயன்படுத்தினால் இந்த போபியாவில் மாட்டாமல் எஸ்கேப் ஆயிரலாமே !
ReplyDeleteகாய்கறி;பழங்களில் நஞ்சு உண்டோ இல்லையோ?? இப்படியே எல்லாவற்றிலும் ஆபத்து இருக்குமோ என சந்தேகத்துடன் வெருளுவது பெரிய ஆபத்து.
ReplyDeleteஇந்த அச்ச உணர்வே உங்களை ஊனமாக்கிவிடும்.
பாம்பு கடித்து சாகிறவர்களை விட பாம்பு கடித்தால் சாவோம் எனும் அச்சத்தால் சாவோரே அதிகம்
என மருத்துவர்களும்;மனோதத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள்.
அவதானம் அளவாக இருக்கட்டும்.
நன்றி யோகன்.
ReplyDelete