Monday, March 16, 2015

சாக்லேட்


குழந்தைப்பருவத்தில் இருந்தே சாக்லேட்னா அவ்ளோத்துக்கு பிடிக்கும். அதுவும் வெளிநாட்டில் இருந்து யாராவது சாக்லேட் வாங்கிட்டு வந்தாங்கன்னா என்னவோ அந்த டேஸ்ட் ரொம்ப பிடிக்கும். ஆனால் நம்ம ஊரில் இம்போர்ட்டட்  சாக்லேட் வாங்கினால் ரொம்ப காஸ்ட்லியாக இருக்கிறதே என தோன்றும். ஊட்டியில் ஹோம் மேட் சாக்லேட் ரொம்ப பேமஸ்னு சொல்வாங்க. ஊட்டி போறவங்க கண்டிப்பா ஹோம் மேட் சாக்லேட் வாங்காமல் ஊருக்கு கிளம்ப மாட்டாங்க.. அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சிக்காக சாதனைப்பெண்கள் இன்டர்வியூ செய்யும் போது, சாக்லேட் பிசினஸ், ஹோம் பேக்கரி வைத்திருக்கிறேன் என்று சொல்றப்போ எப்படியாவது இதுவும் நம்ம பண்றோம் அப்டின்னு அடிக்கடி யோசித்திருக்கிறேன். சரி வீட்டில் சாக்லேட் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.  என்னுடைய முதல் முயற்சியே சக்சஸ் .. சாக்லேட் வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருள்கள்:-

பட்டர்  - 1/4 டம்ளர்
சீனி    -  1  டம்ளர்
தண்ணீர்  -  1/2 டம்ளர்
கோகோ பவுடர்  - 5 டேபிள்ஸ்பூன்
மில்க் பவுடர்  - 1 1/4 டம்ளர்

செய்முறை :-


கோகோ பவுடரையும், மில்க் பவுடரையும் நன்றாக கலந்து கொள்ளவும்


தண்ணீரில் சீனி சேர்த்து ஒற்றை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்
இறக்குவதற்கு முன்னர் பட்டரை சீனிப்பாகில் சேர்த்து சிம்மில் வைத்து பொங்கிய உடன் இறக்கவும்

கோகோ பவுடர், மில்க் பவுடர் கலவையை எடுத்து, இந்த சீனிப்பாகில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மிக்ஸ் செய்து வைக்கவும்.. இந்த மிக்ஸ்ஐ பட்டர் தடவிய ஒரு தட்டில் ஊற்றி ஒரு 15 நிமிடம் ப்ரிட்ஜ்ல் வைக்கவும். 

வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சரில் ஒரு 15 நிமிடங்கள் வரை வைத்து எடுத்து பின், குக்கீஸ் கட்டர் வைத்து விரும்பிய வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.

கடைகளில் குக்கீஸ் கட்டர் 8 shapes ஒரு boxல் இருக்கும். வெறும் 20 ருபாய் தான். Heart shape, round shape, flower shape  என 8 வடிவங்களில் கிடைக்கும். இந்த குக்கீஸ் கட்டர் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். வாங்கி வைத்துக்கொண்டால் சாக்லேட் செய்ய வசதியாக இருக்கும்,.சாக்லேட் ரெடி.. விரும்பினால் ஏதாவது சாக்லேட் பேப்பரில் சுற்றி அழகாக மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.