Monday, July 22, 2013

படித்ததில் ரசித்தது :-



வழுக்கையை மறைத்த அரசர்:-

ஜூலியஸ் சீசர் கிமு 44ஆம் ஆண்டில் மார்ச் 15ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.  அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள், அவர் தலை வழுக்கையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்  இந்த வழுக்கை இரகசியத்தை தம் இறுதிக்காலம் வரை 'விக்'கின் உதவியால் மறைத்து வைத்திருந்தார் சீசர் !

திருமணம் பற்றீ சிந்திக்காத விஞஞானி !
உலகத்தை மாற்றிய முதல் நூறு மனிதர்களுள் இரண்டாவது மனிதராய் இடம் பெற்றவர் ஸர்  ஐசக் நியுட்டன் தான். நியூட்டன் இறக்கும்வரை அறிவியல் ஆராய்ச்சியிலேயே இருந்ததால் செக்ஸ் பற்றிய உணர்வே இவருக்கு எழவில்லையாம். அதைப்பற்றி சிந்திக்கவும் நேரமில்லாததால் நியூட்டன் திருமணம் செய்து கொள்ளவில்லை .

இந்த டிப்ஸ் நல்லா இருக்கு:-

தேளின் மீது சாராயத்தை ஊற்றினால் தேளுக்கு வெறி ஏற்பட்டு அந்த வெறியில் தன்னை தானே கொட்டிக்கொண்டு இறந்து விடும். 

டிபன் (TIFFEN) என்ற வார்த்தையை முதன்முதலாக இங்கிலாந்தின் வடபகுதியில் உள்ள மக்கள் ஒரு கொச்சை சொல்லாக பயன்படுத்தி வந்தனர்  அதன் பொருள் கொஞ்சமாவது மது அருந்துங்கள் என்பதாகும்.  இந்தியாவில் எளிய சிற்றுண்டிக்கு டிபன் என்று சொல்கிறோம்.  

Thursday, July 18, 2013

Facebook Thathuvams:-

Facebook Thathuvam:-

நமக்கு வர்ற wife வெள்ளையா இருக்காளாங்றது முக்கியம் இல்ல மச்சி
அவ தொல்லையா  இருக்கக்கூடாது. அது தான் முக்கியம்...

Wednesday, July 17, 2013

Twitter interesting comments:-

Twitter interesting comments:- 


1)  'கறந்த பாலை விட சுத்தமானவன் இந்த நாஞ்சில் சம்பத் '
அடுத்து 'அமலாபாலை விட அழகானவன் ' னு  கூட சொல்வாரு 

2) எதிர் நீச்சல்ங்ற  வார்த்தையே இந்த தலைமுறைக்கு புரியாது எந்த ஆற்றில் தண்ணீ ஓடுது 

3) பின்னாடி நடக்கிறதை எல்லாம் முன்னாடியே காட்டுற திறமை, எனக்கு தெரிஞ்சு வண்டி side mirror க்கு மட்டும் தான் உண்டு 

4) கணவனின் நெற்றியை தவிர வீட்டின் எல்லா இடங்களிலும் ஒட்டி வைக்கப்படுகின்றன ஸ்டிக்கர் பொட்டுகள் 


படித்ததில் ரசித்தது :-

12.6.13 ஆனந்த விகடனில் பட்டிமன்ற ராஜா சொல்லியது :-

"ஒரு முறை உறவுக்கார பெண்கள் சிலருடன் ஒரு விஷேசத்துக்கு  போயிருந்தேன் தீடிர்னு அங்கே வந்த ஒருத்தர் 'சார் .. இந்த நாலு பேர்ல யாரு சார் உங்க wife?
னு  கேட்டுட்டார் ..அந்த சகோதரிகளும் நானும் ரொம்ப சங்கடப்பட்டு போயிட்டோம் . அட என்னை விடுங்க . ஆனா அந்த பெண்களின் மனசு என்ன பாடு பட்டிருக்கும் ? பொது இடங்கள்ல மத்தவங்களிடம் குறிப்பா, பெண்களிடம் எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு நம்மள்ல பலபேருக்கு தெரியறதே இல்ல." 

நானும் பல சமயங்களில் இது பற்றி  feel பண்ணி இருக்கிறேன் எப்பவுமே ஒரு நபரை பற்றீ முழு விவரமும் தெரியாத பட்சத்தில் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறே  இல்லை இந்த மாதிரி நம்மிடம் நேரடியாக வேறு ஏதாவது கேட்டு சங்கோஜப்பட வைப்பதை தவிர்க்கலாமே ....... 

Wednesday, July 10, 2013

மங்கையர் மலர் - ஜூலை 2013(புத்தகத்தில் படித்ததில் பிடித்தது)

டேபிள்  மேனர்ஸ்
சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எக்ஸ்சிக்யூட்டிவ் செஃப்பாக பணிபுரியும் பட்டெல் சொல்லித்தரும் சில டேபிள மேனர்ஸ்
*எந்த பெரிய ஹோட்டலுக்கு போனாலும் டேபிளை முன்கூட்டியே ரிசர்வ் செய்து விட்டு போகவும
*ஏதாவது வித்தியாசமான ஸ்பெஷல் உணவை ஆர்டர் செய்வதாக இருந்தால் அது அன்றைக்கு கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளவும்
*சாப்பிடும் மேஜையின் மீது முழங்கைகளை ஊன்றகூடாது.
ஸ்பூன், ஃபோர்க், தம்ளர்களை உருட்டி விளையாடக்கூடாது
*டவலை தொடையின் மீது விரித்து கொள்ளலாம். அல்லது காலரில் 'டக்' செய்து கொள்ளலாம்.
*நாம் சாப்பிடும் சப்தமும் பேசும் ஒலியும் அடுத்த டேபிளுக்கு கேட்காத வண்ணம் நாகரிகமாக இருக்க வேண்டும்
ஸ்பூன்களை 'X' வடிவில் வைத்தால் 'சாப்பிட்டு முடிச்சாச்சு ' என்று அர்த்தம்
*ஃபிங்கர் பௌல் என்ற பெயரில் தரப்படும் வெந்நீர் குவளை, விரல் நுனிகளை நாசூக்காக நனைக்க மட்டுமே, கை முழுக்க தேய்த்து கழுவ நீங்கள் குழாயை தான் பயன்படுத்தனும்.
*பில்லில் 10% டிப்ஸ் வைப்பது நார்மலான விஷயம். சில பேர் சம்பந்தப்பட்ட செஃப்பை அழைத்து பாராட்டித்தருவதும் உண்டு.