Thursday, November 26, 2009

பீன்ஸை முளைக்க‌ப் போட்டால் குழந்தையோட த‌லை வ‌ருதாம்....


ந‌ம்ம‌ பாட‌ புத்த‌க‌த்தில் பிதாகோர‌ஸ் தேற்ற‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌டிச்சிருப்போம். இந்த‌ பிதாகோர‌ஸ் க‌ணித‌ மேதை ம‌ட்டும் இல்லை. பெரிய‌ த‌த்துவ‌ மேதையும் கூட. இவ‌ர் எதிக்ஸ் ஆப் ட‌ய‌ட் என்ற‌ புத்த‌க‌த்தில் சாப்ட‌ கூடிய‌வை, சாப்ட‌க் கூடாத‌வை அப்டின்னு சாப்பாடு ப‌ற்றி ஒரு பெரிய‌ ப‌ட்டிய‌லே போட்ருக்கார். அந்த‌ புத்த‌க‌த்தில் போட்டிருந்த‌ ஒரு விஷ‌ய‌ம், கிரேக்க நாட்டில உள்ள‌வ‌ங்க‌ பீன்ஸ் காயை சாப்பிட‌வே மாட்டாங்க‌ளாம். இதுக்கு என்ன‌ கார‌ண‌ம் அப்டின்னா, பீன்ஸை முளைக்க‌ப் போட்டால், அதை வெளியே எடுத்து பார்க்கிற‌ப்போ, ஒரு குழந்தையோட த‌லை மாதிரி, அந்த முளைச்சிருக்கிற‌ செடில‌ த‌ளிர் இருக்குமாம்.. அதனால், ஒரு க‌ருவையே சாப்ட‌ற‌ மாதிரி, அத‌னால பீன்ஸ‌ சாப்ட‌க்கூடாது அப்டின்னுல்லாம். அந்த‌ புத்த‌க‌த்தில‌ போட்ருந்துச்சாம். அத‌னால் அந்த கால‌த்தில் கிரேக்க‌ர்க‌ள் பீன்ஸ‌ சாப்ட‌வே மாட்டாங்க‌ளாம். சின்ன‌ பிள்ளைத்த‌ன‌மா இருக்குல்ல‌..

Monday, November 23, 2009

மாமியார் பெண் ஹிட்ல‌ரா?


உப்பு இல்லாத‌ ப‌ண்ட‌ம் குப்பையிலேன்னு ந‌ம்ம‌ சொல்றோம். ஆனால் உப்பு இல்லாமல் தான் சாப்பாட்டை சாப்பிட‌னும் அப்டின்னு யாராவ‌து ரொம்ப‌ ஸ்ட்ரிக்டா சொன்னால் எப்ப‌டி இருக்கும்? ஆனால் இந்த‌ மாதிரி உப்பு இல்லாம‌ல் ந‌ம்ம‌ ஆளுங்க‌ சாப்பிட்டிருக்காங்க‌. வேத‌ கால‌த்து புத்த‌க‌ங்க‌ளில் இந்த‌ விஷ‌ய‌ம் இருக்கிற‌து. க‌ல்யாண‌ம் ஆன‌ உட‌னே அந்த‌ இள‌ம் த‌ம்ப‌திய‌ர் முத‌ல் 3 நாட்க‌ளுக்கு உப்பு போடாம‌ல் தான் சாப்பிட‌னும் என்ற‌ க‌ட்டுப்பாடும், வித‌வை பெண்க‌ள் இந்த‌ மாதிரி உப்பு போடாத‌ சாப்பாடு தான் சாப்பிட‌னும் என்ற‌ வ‌ழ‌க்க‌மும் வேத‌ கால‌த்தில் இருந்திருக்கிற‌து. என்ன‌ கொடுமைடா இது ! ச‌ரி இன்றைக்கு மாமியார் தின‌ம். மாமியார் அப்டின்னு சொன்னாலே பூச்சாண்டின்னு நினைக்கிற‌ மாதிரி தொலைக்காட்சி சீரிய‌ல்க‌ள் ஒரு மாய‌ பிம்ப‌த்தை ஏற்ப‌டுத்தி விட்ட‌ன‌. மாமியார்க‌ளை பெண் ஹிட்ல‌ராக‌வே நெற‌ய‌ பேர் நினைக்க‌ ஆர‌ம்பிச்சிட்டாங்க‌. என்னை பொறுத்த‌ வ‌ரை என்னோட‌ மாமியார் என‌க்கு ஒரு ந‌ல்ல‌ வ‌ர‌ம் என்று சொல்ல‌லாம். ம‌ரும‌க‌ளின்/ம‌ரும‌க‌னின் ம‌ன‌தில் மாமியார் இட‌ம்பிடிக்க‌ ஏதுவாக‌ இருந்த‌ அந்த‌ முத‌ல் த‌ருண‌ம் ‍‍‍தான் மாமியாருட‌னான உற‌வை மேம்ப‌டுத்தும் என்று நான் நினைக்கிறேன். அத‌னால, அந்த‌ முத‌ல் த‌ருண‌த்தை இனிமையான‌தாக‌ ஏற்ப‌டுத்தினால் வாழ்க்கையிலே பாதி பிர‌ச்சினை சால்வ்ட்.

Friday, November 20, 2009

திரும‌ண‌த்திற்கு பின் தேவையா?


இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் க‌ல்யாண‌ம் ஆனாலும் ப‌ர‌வாயில்ல‌, க‌ல்யாண‌ம் ஆகாட்டாலும் ப‌ர‌வாயில்ல. காத‌ல் ப‌த்திக்குது. முந்தி கால‌த்திலெல்லாம் பார்த்தோம்னா, ராஜாக்க‌ள் ப‌டை எடுத்துட்டு வ‌ர்ற‌ப்போ நாட்டில‌ ரொம்ப‌ அழ‌காக‌ இருக்கிற‌ பெண்க‌ளை க‌வ‌ர்ந்துகிட்டு போய், அந்த‌புர‌த்தோட‌ எண்ணிக்கையை கூட்ற‌தையே ஒரு வேலையா வ‌ச்சிருந்திருக்காங்க‌. இதுல‌ கூட‌ ஒரு நாட்டு ராஜாவுக்கும், இன்னொரு நாட்டு ராஜாவுக்கும் நீயா? நானான்னு போட்டி போடுவாங்க‌ளாம். ஆனாலும் அந்த‌ கால‌த்து ராஜாக்கள் செய்ற‌து த‌ப்பா இருந்தாலும், ஒரு விஷ‌ய‌த்தில‌ ம‌ட்டும் ரொம்ப‌ பெர்ஃபெக்டா இருந்திருக்காங்க‌. அதாவ‌து க‌ல்யாண‌ம் ஆன‌ பொன்னுங்க‌ள் திரும்பி கூட‌ பார்க்க‌ மாட்டாங்களாம். அத‌னால் பெண்ணுக்கு க‌ல்யாண‌ம் ஆகி விட்டால் தாலி போட்ருப்பாங்க‌ளாம். இதை பார்த்து ராஜாக்க‌ள் உஷாராக‌ இருப்பாங்க‌ளாம். க‌ல்யாண‌ம் ஆகாவிட்டால் ந‌வ‌னாலி அப்டின்னு ஒரு ச‌ர‌டை 7 வ‌ய‌திலில் இருந்தே பெண்க‌ள் க‌ழுத்தில் அணிந்திருப்பாங்க‌ளாம். க‌ல்யாண‌த்த‌ப்போ தான் இந்த‌ ந‌வ‌னாலியை கழ‌ட்டி விட்டு தாலி அணிந்து கொள்வார்க‌ளாம். அதுவும் இந்த‌ ப‌ழ‌க்கம் கார்காத்தார் ச‌மூக‌த்தில் இன்றும் புழ‌க்க‌த்தில் உள்ள‌து என்ப‌தை இன்று என்னுடைய‌ நிக‌ழ்ச்சியில் ஒரு அழைப்பாள‌ர் கூறினார். இந்த‌ மாதிரி ஒரு அடையாள‌ம் இன்றும் தேவைப்ப‌டுகிற‌து ச‌மூக‌த்தின் வ‌க்கிர‌ க‌ண்க‌ளில் இருந்து த‌ப்பிக்க‌. மாட‌ர்ன் ச‌முதாய‌த்தில் ந‌ம்ம‌ளும் மாட‌ர்னாக‌ இருப்போமே என்று தாலி இல்லாம‌ல் த‌மிழ் நாட்டில் உல‌வ‌ முடிய‌வில்லை. இது தான் நித‌ர்ச‌ன‌ம். க‌ல்யாண‌ம் ஆச்சு, க‌ல்யாண‌ம் ஆக‌லை அப்டின்னு எதுவுமே இப்போல்லாம் க‌ண்டுக்க‌ மாட்டேங்கிறாங்க‌. ம‌ன‌ம் போன‌ போக்கில் ந‌ட‌க்கும், ம‌ன‌சாட்சியே இல்லாம‌ல் த‌ட‌ம் மாறும் திரும‌ண‌ம் ஆன‌வர்க‌ளை பார்க்கும் போது ம‌னசுக்கு ரொம்ப‌ க‌ஷ்ட‌மாக‌ இருக்கிற‌து. வெறுப்பாக‌ இருக்கிற‌து. என்றைக்கோ ம‌ண்ணுக்கு போக‌ப் போகும் உடலுக்காக‌ குடும்ப‌ம், ம‌னைவி, குழந்தைக‌ளை எப்ப‌டி ஆண்க‌ள் ம‌ற‌ந்து போகிறார்க‌ள்?
மாற்றான் ம‌னை க‌வ‌ர்த‌ல் என்ற‌ விஷ‌ய‌த்தை நெற‌ய‌ ச‌ங்ககால‌ நூல்க‌ளில் பாத்திருக்கோம். இந்த‌ விஷ‌ய‌த்தில் 18 ச‌தவீத‌ம் ஆண்க‌ளும், 11 ச‌த‌வீத‌ம் பெண்க‌ளும் க‌ல்யாண‌ம் ஆன‌ பிற‌கும் இன்னொரு துணையை தேட‌றாங்க‌ அப்டின்னு ஒரு ஆய்வ‌றிக்கையில‌ சொல்லியிருக்காங்க‌. இந்த‌ சூழ்நிலைக்கு கார‌ண‌ம் ந‌ம்ம‌ ம‌ன‌சு தான். த‌னி ம‌னித‌ ஒழுக்க‌ம் க‌ண்டிப்பா ந‌ம்ம‌ எல்லாருக்குமே வேணும் ‍- க‌ல்யாண‌ம் ஆன‌ பிற‌கும், க‌ல்யாண‌ம் ஆவ‌த‌ற்கு முன்பும். ஒரு பெண்ணிட‌மோ, ஒரு ஆணிட‌மோ பேசுற‌ப்போ எப்போ லேசா ந‌ம்ம‌ ம‌ன‌சில‌ ஒரு ஆசை துளிர் விட‌ ஆர‌ம்பிக்குதோ, அவ‌ங்க‌ என்ன‌ நெனச்சாலும் ‍‍‍ப‌ர‌வாயில்ல‌. ந‌ம்ம‌ளுக்கு திரும‌ண‌ம் ஆயிருச்சுன்னா, அந்த‌ உற‌வை ந‌ம்ம‌ அப்டியே நிறுத்திக்கிற‌து மூல‌மா, ந‌ம்ம‌ இந்த‌ மாதிரி ஒரு சூழ்நிலை வ‌ராம‌ல் பார்த்துக்க‌லாம். ந‌ம்ம‌ளுக்கு ந‌ம்ம‌ தான் வேலி போட‌னும். இதையெல்லாம் உண‌ராம‌ல் ஏன் திரும‌ண‌ம் ஆன பெண்க‌ள்/ஆண்க‌ள் த‌ட‌ம் மாறுகிறார்க‌ள்?இந்த‌ த‌டுமாற்ற‌த்துக்கு யார் கார‌ண‌ம்/எது கார‌ண‌ம்? உங்க‌ள் கருத்துக்க‌ளை இங்கே ப‌திவு செய்யுங்க‌ள்

Wednesday, November 11, 2009

நாடுக‌ளுக்கு இடைல‌ சாப்பாட்டுக்காக‌ ச‌ண்டை..


வீடுக‌ள்ல‌ உப்பு இல்லை, கார‌ம் இல்லைன்னு ஒரு குழ‌ம்புக்காக‌ க‌ண‌வ‌னும், ம‌னைவியும் ச‌ண்டை போடுவாங்க‌. ஆனா சிக்க‌ன் டிக்கா அப்டின்னு ஒரு ரெசிபிக்காக‌ இந்தியாவுக்கும், பிரிட்ட‌னுக்கும் இடையே பெரிய‌ ச‌ண்டையே வ‌ந்துடுச்சாம். நாடுக‌ளுக்கு இடைல‌ எல்லைக்காக‌ ச‌ண்டை வ‌ரும். ஆனால், சாப்பாட்டுக்காக‌ ச‌ண்டை வ‌ருமா என்ன‌? அப்டி என்ன‌ ச‌ண்டை அப்டின்னா, இந்தியாவுக்கும், பிரிட்ட‌னுக்கும் எப்டி ச‌ண்டை வ‌ந்துச்சுன்னா, சிக்க‌ன் டிக்கா இந்திய‌ உண‌வு கிடையாது. இது பிரிட்ட‌னோட‌ பார‌ம்ப‌ரிய‌ உண‌வு அப்டின்னு பிரிட்ட‌ன்கார‌ங்க‌ ந‌ம்ம‌ இந்தியா கூட‌ ச‌ண்டை போட‌றாங்க‌. ஆனா ந‌ம்ம‌ இந்தியாவில் இருக்கிற‌ ஒரு த‌லைமை செப் இத‌ ப‌த்தி சொல்ற‌ப்போ, சிக்க‌ன் டிக்கா முக‌லாய‌ர்க‌ளோட‌ பார‌ம்ப‌ரிய‌ உண‌வு. முக‌லாய‌ர்க‌ள் இந்தியாவில‌ ஆட்சி செஞ்ச‌ப்போ தான் , சிக்க‌ன் டிக்கா ம‌சாலாவ‌ க‌ண்டுபிடிச்சாங்க அப்டின்னு இந்தியா சார்பில‌ சொல்லிகிட்டு இருக்காங்க‌.இன்னும் இதுக்கு முடிவு வ‌ர‌லை....

ஜெர்ம‌னியின் செந்தேன் அழகே


ஜெர்ம‌னியின் செந்தேன் அழகேன்ற‌ பாட்டு கேட்டிருக்கோம். ஆனால் ஜெர்ம‌னில இருக்கிற‌வ‌ங்க‌ளோட‌ சாப்பாடு விஷ‌ய‌ம் ப‌த்தி இதுவ‌ரை தெரியாதுல்ல‌. ஜெர்மானிய‌ர்க‌ள் சாப்பாட்டை த‌ங்க‌த்தை விட‌ மேலா பாதுகாக்கிறாங்க‌ளாம். ந‌ம்ம‌ள மாதிரி ஜெர்ம‌ன் நாட்டில‌ இருக்கிற‌வ‌ங்க‌ளோட‌ ம‌த்யான‌ சாப்பாடும் ஹெவியா இருக்குமாம். காலைல‌ ப்ரெட்ட‌ ப‌ட்ட‌ர், ஜாம் இல்லாட்டா சீஸ் வ‌ச்சு சாப்டுட்டு போயிருவாங்க‌ளாம். இர‌வு நேர‌மும் ரொட்டிய‌ சாப்டுட்டு தூங்க‌ போயிருவாங்க‌. ஆனா ம‌த்யான‌ம் சாப்பாடுன்னு பார்த்தா க‌றிய‌ வெங்காய‌ம், கேர‌ட், முட்டைக்கோஸ் சேர்த்து சாப்பிடுவாங்க‌ளாம். ஆனா, அவ‌ங்க‌கிட்ட‌ ஒரு சூப்ப‌ர்பான‌ ப‌ழக்க‌ம் என்ன‌ன்னா, மத்யான‌ சாப்பாட்ட‌ க‌ரெக்டா 12 ம‌ணியில‌ இருந்து 1 ம‌ணிக்குள்ளே சாப்டுருவாங்க‌ளாம். அவ‌ங்க‌ சாப்பாடு விஷ‌ய‌த்தில் இந்த‌ மாதிரி அழகா டைம் மெயின்டெயின் ப‌ண்ற‌த‌ ந‌ம்ம‌ அவ‌ங்க‌கிட்ட‌ இருந்து க‌த்துகிட‌லாமே !

Tuesday, November 10, 2009

திங்க‌ள் கிழ‌மை இனி மேல் சிக் தின‌ம் !


மழைல்லாம் விட்டு வெயில் அடிக்க‌ ஆர‌ம்பிச்சாலே, ஐயோ லீவே கிடைக்க‌ மாட்டேங்குன்னு நெறய‌ பேருக்கு க‌வ‌லையா இருக்கும். ஆனால், ல‌ண்ட‌ன்ல‌ என்ன க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌ன்னா, உல‌க‌ அளவில‌ திங்க‌ள் கிழமை தான் நெற‌ய‌ பேர் லீவு எடுக்கிறாங்க‌ன்னு சொல்றாங்க‌. ஏன்னா திங்க‌ள்கிழ‌மைதான் நெறய‌ பேருக்கு உட‌ம்பு ச‌ரியில்லாம போகுதாம். ஆனா, இதில‌ இன்னொரு விஷ‌ய‌ம் என்ன‌ன்னா, சில‌ர் வார‌ இறுதில‌ ரெண்டு நாள் லீவு எடுத்துட்டு, அந்த‌ லீவு காணாம‌ல், எக்ஸ்ட்ராவா திங்க‌ள்கிழ‌மையையும் சும்மா சும்மா லீவு எடுக்கிறாங்க‌ளாம். ஆனா, இந்த‌ திங்க‌ள்கிழ‌மை லீவுக்கு பெரும்பாலோனோர் சொல்ற‌ கார‌ண‌ம் பேக் பெயின் தானாம். இதுல்லாம் நம்ம‌ளுக்கு ஒர்க் அவுட் ஆகாது. ஏன்னா, திங்க‌ள் கிழ‌மை லீவு எடுத்தா இந்தியாவில் நெற‌ய‌ அலுவ‌லக‌ங்க‌ளில் ஞாயிற்றுக்கிழ‌மை லீவையும் க‌ண‌க்கில‌ எடுத்திருவாங்க‌ !

ரொம்ப ந‌ல்ல‌வ‌ங்க‌ளா இருக்காங்க‌ள்ல ?


த‌யிர் சாத‌த்திற்கு ஊறுகாய்தான் பெஸ்ட் காம்பினேஷ‌ன். ஆனா, இந்த‌ மாச‌ம்லாம் ந‌ம்ம‌ ஊறுகாய‌ ப‌த்தி நெனச்சு கூட‌ பார்க்க‌ முடியாது. ஏன்னா, ந‌ம்ம‌ ர‌ம‌ண‌ன் சார் டிவில‌ ம‌ழை வ‌ர‌லாம்னு சொல்ற‌த‌னால‌ மொட்டை மாடில்லாம் ஊறுகாய் இல்லாம‌ல் த‌விச்சுகிட்டு இருக்கு. இந்த‌ ஊறுகாய் இவ்ளோ சூப்ப‌ர்பான‌ காம்பினேஷ‌னா இருந்தாலும் ந‌ம்ம‌ என்னைக்காவ‌து ஊறுகாய்க்குன்னு ஒரு திருவிழா கூட‌ இது வ‌ரை கொண்டாடின‌தில்லை. ஆனால், ர‌ஷ்ய‌ நாட்டுக்கார‌ங்க‌ளுக்கு ஊறுகாய்னா ரொம்ப‌ பிடிக்குமாம். அத‌னால, ஊறுகாய்த் திருவிழான்னு ஒரு திருவிழாவை ஒவ்வொரு வ‌ருட‌மும் அக்டோப‌ர் மாத‌ம் கொண்டாட‌றாங்க‌ளாம்பா. ரொம்ப ந‌ல்ல‌வ‌ங்க‌ளா இருக்காங்க‌ள்ல ?

காய்க‌றிக‌ளை பார்த்து கூட‌ ப‌ய‌ப்ப‌ட‌றாங்க‌ !


என‌க்கு வ‌ர‌ வ‌ர‌ ரொம்ப‌ ப‌ய‌மா இருக்கு.பேய்+ப‌ய‌ம் ஊறுகாய்தெனாலி ப‌ட‌த்தில் க‌ம‌ல் சொல்ற‌ மாதிரி எல்லாம் சிவ‌ம‌ய‌ம்னு சொல்வாங்க‌. ஆனா, என‌க்கு எல்லாமே ப‌ய‌ம‌ய‌மா இருக்கு. ஏன்னா ம‌ழை நேர‌த்தில‌ ரோட்டில‌ ந‌ட‌க்க‌ ப‌ய‌ம், ரோட்ட‌ க‌ண்கொண்டு பாக்க‌ ப‌ய‌ம். அதுவும் வண்ணார‌ப்பேட்டை தெருவையும், தூத்துக்குடி கான்வென்ட் ரோட்ட‌யும் ம‌ழை நேர‌த்தில‌ நெனச்சா, அலுவ‌ல‌க‌த்திற்கு வ‌ர்ற‌துக்கு ரொம்ப‌ ப‌ய‌ம்மா இருக்கு. என‌க்கு ப‌ர‌வாயில்ல‌ப்பா. பிரிட்ட‌ன்ல‌ இப்போ நெற‌ய‌ பேருக்கு காய்க‌றிக‌ள‌ பாக்ற‌துக்கே ரொம்ப‌ ப‌ய‌மா இருக்காம். இந்த‌ மாதிரி காய்க‌றிக‌ளை பார்த்து ப‌ய‌ப்ப‌ட‌ற‌ நோயை, ல‌ச்சனோ போபியா அப்டின்னு சொல்றாங்க‌. இது அங்கே மட்டும் இல்ல‌. ந‌ம்ம‌ள்ல‌யும் நெற‌ய‌ பேருக்கு க‌த்திரிக்காய் மாதிரி சில‌ காய்க‌றிக‌ள் பார்த்தா வெறுப்பா இருக்கும். அந்த‌ காய‌ பேருக்கு திரும்பிக் கூட‌ பார்க்க‌ மாட்டோம். இந்த‌ மாதிரி காய்க‌றிக‌ளை பார்த்தா வெறுப்பா இருந்தாலும், அது ல‌ச்சனோ போபியா அப்டின்னு சொல்றாங்க‌......

Monday, November 9, 2009

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன்


வீட்டில் ம‌னைவி திட்டினாலும் ச‌ரி, க‌ண‌வ‌ன் திட்டினாலும் ச‌ரி, இனிமேல் யாரும் டென்ஷ‌ன் ஆக‌ தேவை இல்லை. யாராவ‌து உங்க‌ளைத் திட்ட‌ ஆர‌ம்பிச்சா, உங்க‌ ப‌க்க‌த்திலே எங்கேயாவ‌து புல் இருக்கான்னு பாருங்க‌. பிர‌ச்சினை சால்வ்ட். டென்ஷ‌னுக்கும் ப‌ச்சை புல்லுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் அப்டின்னா, இதெல்லாம் நான் சொல்ல‌லை. ஆராய்ச்சியாள‌ர்க‌ள் இதை ப‌த்தி என்ன‌ சொல்லியிருக்காங்க‌ன்னா, ப‌ச்சை புல்லை பிய்த்து பிய்த்து தூர‌ போட்டால், ந‌ம்ம‌ ம‌ன‌சில இருக்கிற‌ டென்ஷ‌ன், ஸ்ட்ரெஸ் எல்லாமே ஓடி போயிரும்னு க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. இதுக்கு என்ன‌ கார‌ண‌ம் அப்டின்னா ந‌ம்ம‌ புல்லை பிய்ச்சு போட‌ற‌ப்போ, அந்த‌ ப‌ச்சை புல்லில் இருந்து வ‌ர்ற‌ வாச‌ம், ந‌ம்ம‌ளோட‌ மூளைல‌ உள்ள‌ ஹிப்போகேம்ப‌ஸ் அப்டிங்ற‌ ப‌குதியை நேர‌டியாக‌ அட்டாக் ப‌ண்ணுமாம். இந்த‌ ப‌குதி தான் ந‌ம்ம‌ளுக்கு அழுகை, சிரிப்பு இந்த‌ மாதிரி உண‌ர்ச்சிக‌ளை த‌ர்ற‌ ப‌குதி. அத‌னால், ந‌ம்ம‌ டென்ஷ‌ன் ஓடியே போயிருமாம். அப்போ மாடுல்லாம் டென்ஷ‌னை குறைக்கிற‌துக்காக‌த் தான் புல்லை சாப்பிடுதா அப்டின்னுல்லாம் யோசிக்காதீங்க‌ ! மாடும் ந‌ம்ம‌ள மாதிரி 4 காசு ச‌ம்பாதிச்சா ரெஸ்டார‌ண்டில‌ உக்காந்து சாப்டுகிட்டு இருக்கும். இப்போ ஒசியா புல் கிடைக்கிற‌தனால‌ தான் மாடு புல்லை சாப்பிடுது.என்ன‌ ஒரு அரிய‌ க‌ண்டுபிடிப்பு !

Wednesday, November 4, 2009

த‌ந்தூரி சிக்க‌ன் இந்தியாவுக்கு வ‌ந்த‌து இப்ப‌டித்தானுங்கோ !


இந்தியா, பாகிஸ்தான் அப்டின்னு இந்தியா ரெண்டா பிரிய‌ற‌துக்கு முன்னால‌ பெஷாவ‌ர்ல‌ குந்த‌ன் லால் குஜ்ரால் என்ப‌வ‌ர் மோடி ம‌ஹ‌ல் எனும் ரெஸ்டார‌ண்டை ந‌ட‌த்திகிட்டு இருந்தார். அவ‌ருக்கு புதுசு புதுசா ச‌மைய‌ல்ல‌ ஏதாவ‌து முய‌ற்சிக்க‌னும்னு ஆசையா இருக்குமாம். அந்த‌ மாதிரி அவ‌ர் ஒரு நாள் முய‌ற்சி ப‌ண்ணிய‌து தான் த‌ந்தூரி சிக்க‌ன். ஒரு நாள் ஜ‌வ‌ஹ‌ர்லால் நேரு அங்கே த‌ந்தூரி சிக்க‌னை சாப்பிட்டிருக்கார். அவ‌ருக்கு அந்த‌ ருசி ரொம்ப‌ பிடிச்சி போய் , அவ‌ர் என்ன‌ ப‌ண்ணியிருக்கார்னா, அதுக்க‌ப்ப‌ற‌மா இந்தியாவில் ந‌ட‌ந்த‌, அவ‌ர் த‌லைமை வ‌கிக்கும் அலுவ‌ல‌க‌ கூட்டங்க‌ளில், அங்கு ந‌ட‌க்கும் விருந்துக‌ளில் தந்தூரி சிக்க‌னை ஆர்ட‌ர் செய்திருக்கிறார். அப்போது இந்தியாவிற்கு பிர‌த‌மரை ச‌ந்திக்க‌ வ‌ந்திருந்த‌ அப்போதைய‌ அமெரிக்க‌ அதிப‌ர் ஜான் கென்ன‌டி, ரிச்ச‌ர்ட் நிக்ச‌ன் ‍, அவ‌ர்க‌ளுக்கும் த‌ந்தூரி சிக்க‌ன் பிடித்துப்போய் அவ‌ர்க‌ள் த‌ந்தூரி சிக்க‌னை அமெரிக்காவிற்கு அறிமுக‌ப்ப‌டுத்தின‌ர். த‌ந்தூரி சிக்க‌ன் வ‌ந்த‌து இப்ப‌டித்தானுங்கோ !

Tuesday, November 3, 2009

இனிமேல் க‌வ‌லைப்ப‌டாதே ச‌கோத‌ரான்னுல்லாம் பாடாதீங்க‌ !


இன்னைக்கு காலைல ம‌ழை வ‌ந்துச்சுல்ல. இந்த‌ ம‌ழை ரொம்ப‌ ரொம்ப‌ ஒவ‌ரா பெய்ஞ்சு, பெரிய‌ வெள்ள‌ம்லாம் வ‌ந்து, அப்ற‌ம் ந‌ம்ம‌ எப்ப‌டி அலுவ‌ல்க‌த்திற்கு போற‌து அப்டின்னு யாராவ‌து யோசிச்சிருக்கீங்க‌ளா? இந்த‌ மாதிரி ந‌ம்ம‌ எதிர்ம‌றையாக‌ சிந்திப்ப‌து ரொம்ப‌ ந‌ல்ல‌து அப்டின்னு ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி செய்து க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. ஒரு அலுவ‌ல‌க‌த்தில் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கிற‌வ‌ங்க‌, க‌வ‌லைப்ப‌ட‌ற‌வ‌ங்க‌ 2 பேர் கையில் ஒரு வேலையை கொடுத்தால், இந்த‌ க‌வ‌லைப்ப‌ட‌ற‌வ‌ங்க‌ தான் வேலையை த‌ப்பு இல்லாம‌ல் செய்வாங்க‌ளாம். இந்த‌ மாதிரி நீங்க‌ கொடுத்த‌ வேலையை க‌ரெக்டாக‌ செய்ப‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ ப‌ட்ட‌ம் கொடுக்க‌ விரும்புறீங்க‌? அவ‌ர்க‌ளை எப்ப‌டி எப்ப‌டியெல்லாம் கௌர‌விக்க‌லாம்?

Monday, November 2, 2009

பெய‌ரிலுமா ஆண்க‌ள் ராஜ்ஜிய‌ம் :



பெய‌ரில் என்ன‌ இருக்கிற‌து அப்டின்னு ந‌ம்ம‌ எல்லாருமே சொல்ற‌து தான். ஆனால் இந்த‌ வார‌ம் அமெரிக்காவில் க்லெம்ச‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் ந‌ட‌த்திய‌ ஆய்வில் என்ன‌ சொல்றாங்க‌ன்னா, பெண்க‌ளுக்கு ஆண்க‌ளோட‌ பேர் வ‌ச்சா, அந்த‌ பெண்க‌ள் பெரிய‌ வ‌க்கீலாக‌வோ, நீதிப‌தியாக‌வோ வ‌ருவாங்க‌ அப்டின்னு க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. ச‌வுத் க‌ரோலினாவில் முத‌ல் வ‌க்கீல் ஒரு பெண் தான். அது மாதிரி, நெறைய‌ பெண் வ‌க்கீல்க‌ள், அவ‌ர்க‌ள‌து பெய‌ரின் பாதி ஆண்க‌ளுடைய‌ பெய‌ரை கொண்டிருக்கிற‌து என்று சொல்கிறார்க‌ளாம். அத‌னால் அமெரிக்காவில் க்லெம்ச‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் பெண்க‌ளுக்கு ஆண்க‌ளோட‌ பேர் வ‌ச்சா, பெண்க‌ள் பெரிய‌ வ‌க்கீலாக‌வோ, நீதிப‌தியாக‌வோ வ‌ருவாங்க‌ அப்டின்னு சொல்றாங்க‌. இது ப‌ற்றி உங்களின் க‌ருத்துக்க‌ள் என்ன‌?