Thursday, December 16, 2010

கொஞ்சம் மூளையை கசக்குங்க

ரொம்ப‌ நாள் க‌ழிச்சு ப்ளாக்கில‌ எழுத‌றேன். புதிர் போட‌லாம்னு ஒரு ஆசை. தெரிஞ்ச‌வ‌ங்க‌ ப‌தில் க‌மென்ட் அடிங்கோ....

1.ஒரு அம்மா மோர் வியாபார‌ம் செஞ்சிகிட்டு இருக்காங்க‌. அவ‌ங்க‌ 3 ரூபாய்க்கு மோர் வாங்கி, அதை 2 ரூபாய்க்கு விற்று ல‌ட்சாதிப‌தி ஆயிர்றாங்க‌.
ஆனால் இன்னொரு அம்மா 3 ரூபாய்க்கு மோர் வாங்கி, அதை 4 ரூபாய்க்கு விற்றும் அவங்க‌ளால‌ குடும்ப‌ செல‌வுக்கு கூட‌ ச‌ரியா ச‌ம்பாதிக்க‌ முடிய‌லை. ஏன் இப்டில்லாம் ந‌ட‌க்குது?

2.என் ஃப்ர‌ண்டுக்கு பிடிக்காத‌ ப‌ச்சைக‌ல‌ர் ச‌ட்டை
என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு...
என‌க்கு பிடிச்ச‌ சிக‌ப்பு க‌ல‌ர் ச‌ட்டை
என் ஃப்ர‌ண்டுக்கு பிடிக்க‌லை. ஏன்?

Saturday, July 10, 2010

ஹெல்மெட் போட்டால் 50 ரூபாய்.....


நீங்க‌ வண்டி ஓட்டிகிட்டு போற‌ப்போ, ஒழுங்கா ஹெல்மெட் போட்டுகிட்டு போறீங்க‌ளா? நீங்க‌ ம‌ட்டும் திண்டுக்க‌ல்லில் இருந்தீங்க‌ன்னு வ‌ச்சிகோங்க‌ளேன், அழ‌கா உங்க‌ கையில் ஐம்ப‌து ரூபாய் கிடைச்சிருக்கும். ஏன்னா, திண்டுக்க‌ல் எஸ்.பி. முத்துசாமி ஹெல்மேட் போட்டுகிட்டு போற‌வ‌ங்க‌ளுக்கு, அவ‌ரோட‌ சொந்த‌ செல‌வில‌ ஐம்ப‌து ரூபாய் ப‌ரிசா கொடுக்கிறாராம். இத‌னால‌ அங்கே ஹெல்மெட் போட‌ற‌வ‌ங்க‌ எண்ணிக்கை கூடிடுச்சாம். எப்டில்லாம் ந‌ம்ம‌ ம‌க்க‌ளை வ‌ழிக்கு கொண்டு வ‌ர‌ வேண்டியிருக்கு,எல்லாம் நேர‌ம் தான். பைசான்னா ஆன்னு வாய‌த்திற‌க்கிறாங்க‌ள்ல‌. ஆனால், முத்துசாமிக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம். ந‌ல்ல‌ ம‌னுச‌ன் தான். ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள்லாம் ப‌ண்றார்ல‌. ஆனா ஒரு சாமி, 2 சாமி, 3 சாமி, 4 சாமி, 5 சாமி, 6 சாமி, இந்த‌ முத்துசாமி எஸ்.பி. மாதிரி காவ‌ல்துறை அதிகாரிக‌ள் இப்ப‌டி வ‌ழில‌ கொண்டு போனால், ம‌க்க‌ள் எல்லாத்தையுமே ச‌ரியா ப‌ண்ணுவாங்க‌ளோ? ஒட்டு போட‌ற‌துக்கு கையில‌ துட்டு, ஹெல்மெட் போட‌ற‌துக்கு துட்டு. இன்னும் எது எதுக்குல்லாம் துட்டு குடுத்தா ஒழுங்கா வேலை ந‌ட‌க்கும்னு தெரிய‌லீயே.. ச‌ரி 4 பேருக்கு ந‌ல்ல‌து ந‌ட‌க்கும்னா எதுவுமே த‌ப்பு இல்ல‌..

Sunday, May 16, 2010

குழந்தைக‌ளோட‌ ச‌ந்தோஷ‌த்தில‌ 10% கோவிந்தா, கோவிந்தா..


சில‌ வீடுக‌ள்ல‌ அப்பா,அம்மா 2 பேரும் ரொம்ப‌ உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்டு ப‌திலுக்கு ப‌தில் பேசிகிட்டே இருப்பாங்க‌. இப்போல்லாம் இது எந்த‌ ரேஞ்சுக்கு வ‌ந்துட்டு அப்டின்னா, போடா, போடி அப்டின்னு க‌ந்தசாமி ப‌ட‌பாட்டில‌ வ‌ர்ற‌ மாதிரி வாயில் வ‌ந்த‌தெல்லாம் மாத்தி மாத்தி திட்டிக்கிறாங்க‌. இது எல்லாத்த‌யும், யார் பெத்த‌ பிள்ளையோங்கிற‌ மாதிரி பாவ‌ம் போல‌ பிள்ளைங்க‌ உக்காந்து பார்த்துக்கிட்டே இருப்பாங்க‌. இப்போ நெற‌ய‌ வீடுக‌ள்ல‌ "அப்பா, அம்மாகிட்டே பேசுங்க‌","அம்மா, அப்பாகிட்டே பேசுங்க‌" ..இப்டில்லாம் சொல்லி பெற்றோரை ச‌மாதான‌ப்ப‌டுத்தி வைக்கிறாங்க‌ ப‌ச‌ங்க‌. ஆஹா, ந‌ம்ம‌ பிள்ளை ந‌ல்லா பொறுப்பா இருக்கிறானே/இருக்கிறாளே அப்டின்னு இப்போ தோணுனாலும், பெற்றோர் ச‌ண்டை போட‌ற‌த‌னால‌, குழந்தைக‌ளோட‌ ச‌ந்தோஷ‌த்தில‌ 10% குறையுதுன்னு சொல்றாங்க‌. அதனால‌, உங்க‌ ச‌ண்டைக்காக‌ உங்க‌ குழந்தைக‌ளை ச‌மாதானப்புறாவாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தாதீங்க‌ மக்க‌ளே !

Saturday, May 15, 2010

த‌மிழ‌க‌த்தில‌ இனிமேல் க‌ருத்தோ க‌ருத்து:


நேற்று நடிகை குஷ்பூ தி.மு.க‌. க‌ட்சியில் சேர்ந்து, அப்ப‌ப்பா, அதுக்கு கூட‌ ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் குஷ்பூவுட‌ன் ஒரு சிற‌ப்பு பேட்டி. அதுவும் திரும்ப‌ திரும்ப‌ போட்டு ந‌ம்ம‌ள கொடுமைப்ப‌டுத்த‌றாங்க‌. குஷ்பூ இந்த‌ முடிவு எடுத்த‌தில் த‌மிழ் நாட்டு மக்க‌ளுக்கு என்ன‌ ந‌ல்ல‌து ந‌டக்க‌ப்போகுதுன்னு நினைச்சாலே காமெடியா இருக்கு. அந்த‌ பேட்டியில் த‌மிழ்நாடு என‌க்கு நெற‌ய‌ செஞ்சிருக்கு. அதனால‌, நான் த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஏதாவ‌து ப‌ண்ண‌னும் அப்டின்னுல்லாம் சின்ன‌பிள்ளைத்த‌ன‌மா குஷ்பூ பேசுற‌தையெல்லாம் கேட்ப‌த‌ற்கு சிரிப்பா இருந்த‌து. நாலு பேருக்கு ந‌ல்ல‌து ந‌ட‌க்க‌னும்னா எதுவுமே த‌ப்பு இல்ல‌ன்னு நாய‌க‌ன் பட‌ பாணியில் அர‌சிய‌லுக்கு வ‌ந்திருக்காங்க‌ அம்ம‌ணி. ஏன் த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஏதாவ‌து ப‌ண்ண‌னும்னா, ந‌டிக‌ர் சூர்யா மாதிரி அர‌சிய‌லுக்கு வ‌ராம‌லேயே ந‌ல்ல‌து ப‌ண்ண‌லாம்ல...ச‌ரி குஷ்பூ அர‌சிய‌லுக்கு வ‌ந்து அப்ப‌டி என்ன‌ ந‌ல்ல‌து ப‌ண்ண‌ போறாங்க‌? ந‌ல்லா தான் பிழைக்கிறாங்க‌. அப்போ இனிமேல் சீக்கிர‌மே ஜெயா டிவி ஜாக்பாட்டுக்கு குட்பை சொல்லிட்டு,
கலைஞர் டிவியில் அம்ம‌ணியை பார்க்க‌லாம்...

Friday, May 14, 2010

க‌ல‌க‌ல‌ன்னு வ‌ளைய‌ல் போட்டு க‌ல‌க்கிறீங்க‌ளா?


என்னைய‌ பொறுத்த‌ வ‌ரை வ‌ளைய‌ல் போட‌ற‌த‌ விட‌ பிரேஸ்லெட் போட‌ற‌து தான் என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும். ஆனால், சில‌ர் கையில் நெற‌ய‌ க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ள் ட்ரெஸ்ஸுக்கு மேட்சா போட்ருப்பாங்க‌. இந்த‌ வ‌ளைய‌ல் போட‌ற‌தில‌ கூட‌ ஒரு விஷய‌ம் இருக்கு, வ‌ளைய‌ல் போட‌ற‌த‌னால‌, அந்த‌ பெண்ணோட‌ க‌ண‌வ‌ருக்கு அதிர்ஷ்ட‌மும், பாதுகாப்பும் தேடி வ‌ருமாம். ஒரு பெண்ணோட‌ க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ள் உடைஞ்சுச்சுன்னா, அந்த‌ பெண்ணோட‌ க‌ண‌வ‌ருக்கு ஏதோ ஆப‌த்துன்னு சொல்றாங்க‌. இத‌த்தான், எக்க‌ச்ச‌க்க‌ ப‌ட‌ங்க‌ள்ல‌ காமிக்க‌றாங்க‌ளே, அத‌னால‌ ந‌ல்லா தெரியும்...

க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ளை யாருக்காவ‌து ப‌ரிசு குடுக்கிற‌ப்போ, அதிலயும் ஏக‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம் இருக்காம். Green and white க‌ல‌ர் வ‌ளைய‌ல்க‌ளை புதுசா காலேஜ் போற‌ பெண்க‌ளுக்கு வாங்கி ப‌ரிசா குடுக்க‌லாமாம். ஏன்னா, க‌ல‌ர் ந‌ல்லா அதிர்ஷ்ட‌த்தை குடுக்குமாம். அப்ற‌மா, நேர்முக‌த்தேர்வுக்கு போற‌வ‌ங்க‌ளுக்கும் Green and orange colour வ‌ளைய‌ல்க‌ள் வாங்கி குடுங்க‌. ஏன்னா, Orange is for success.
ஆனால், ஒரே ஒரு விஷய‌ம், இப்போல்லாம் எல்லாருமே கை நெற‌ய‌ க‌ண்ணாடி வ‌ளைய‌ல் போட‌ற‌த‌னால‌, யாரு பிள்ளைத்தாச்சி, யாரு பிள்ளைப்பூச்சின்னு தெரிய‌ மாட்டேங்குப்பா. இது தெரியாம‌ல், Busல‌ல்லாம், பிள்ளைத்தாச்சின்னு த‌ப்பா நினைச்சு எந்திரிச்சு இட‌ம் குடுக்க‌ வேண்டியிருக்குல்ல.

Tuesday, May 4, 2010

அடிக்க‌டி ஒரே ப‌ழ‌க்க‌த்துக்கு நீங்க‌ அடிக்டா?


என்கிட்ட‌ இருக்கிற‌ ஒரே கெட்ட‌ ப‌ழ‌க்க‌மா? ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌மானுல்லாம் தெரிய‌ல‌. எப்போ பார்த்தாலும் கை சுத்த‌மா இருக்க‌னும் அப்டின்னு கைக‌ளை க‌ழுவிகிட்டே இருக்கிற‌துதான் அந்த‌ ப‌ழ‌க்க‌ம். இதே மாதிரி சில‌ருக்கு அடிக்கடி ஏதாவ‌து ஒன்றை செய்ற‌ ப‌ழ‌க்க‌ம் இருந்துச்சுன்னா அதில‌ ஒரு மேட்ட‌ர் இருக்கு. ஹிந்தி ந‌டிக‌ர் ஷாருக் கான் கிட்ட‌ ஒரு ப‌ழ‌க்க‌ம் இருக்குதாம். ட்ரெஸ்ஸுக்கு மேட்சா அவ‌ர் நினைக்கிற‌ சாக்ஸ் கிடைக்காட்டா, தேடி எடுத்துட்டு தான் வெளியே போவாராம், ஃப்ளைட்ட‌ மிஸ் பண்ணினால் கூட‌ க‌வ‌லைப்ப‌ட‌ மாட்டாராம். இந்த‌ மாதிரி சில‌ர் ஏற்கென‌வே வீட்டை பூட்டியிருப்பாங்க‌, ஆனால், வீட்டை ச‌ரியா பூட்ட‌லைன்னு நினைத்து திரும்ப‌ வ‌ந்து பூட்டை செக் ப‌ண்ணுவாங்க‌. இதுக்குல்லாம் என்ன‌ கார‌ண‌ம்னு சைக்கால‌ஜிஸ்ட்கிட்ட‌ கேட்டால், செய்ற‌ வேலைய‌ ஒழுங்கா செஞ்சு முடிக்காம‌ல் இருக்கிற‌த‌னால‌, அப்ற‌மா அடுத்த‌ வேலை செய்ற‌ப்போ அதே ஞாப‌க‌ம் வ‌ரும் அப்டின்னு சொல்றாங்க‌. இது கூட‌ Obsessive Compulsive trait அப்டிங்கிற‌ ஒரு ம‌ன‌ ந‌ல‌ பாதிப்புதானாம். அத‌னால‌, இன்னைல‌ருந்து ஒரு த‌ட‌வை எந்த‌ வேலை செஞ்சாலும், அப்ப‌வே அப்பவே அதை ஒழுங்கா Complete ப‌ண்ணிட்டு fullstop வ‌ச்சிர‌லாம்.O.K?

Monday, May 3, 2010

ஆராய்ச்சிக‌ள் சொன்ன‌ விஷய‌ங்க‌ள் - II ‍:*எல்லாரும் 8 ம‌ணி நேர‌ம் தூங்கினா ந‌ல்ல‌துன்னு சொல்வாங்க‌. 100 வ‌ய‌சுக்கு மேல‌ உள்ளவ‌ங்க‌கிட்ட‌ ச‌ர்வே ப‌ண்ணிய‌தில், அவ‌ங்க‌ 10 ம‌ணி நேர‌ம் தூங்குவ‌தாக‌ சொல்லியிருக்காங்க‌. 100 வ‌ய‌சுக்கு மேல‌ வாழ்னும்னா, தினமும் இர‌வு 10 ம‌ணி நேர‌ம் தூங்க‌னும் அப்டின்னு ல‌ண்ட‌ன்ல‌ ஒரு ப‌ல்க‌லைக்க‌ழக‌ ஆய்வு சொல்லுது.அப்போ வேலைக்கு போக‌ வேண்டாமா?

*இனிமேல் க‌ல்லீர‌ல்ல‌ பிர‌ச்சினை இருந்துச்சுன்னா, திக்கா இருக்கிற‌ சாக்லேட் சாப்டுங்க‌ன்னு எழுதி குடுக்க‌ போறாங்க‌. என்ன‌, டார்க் சாக்லேட்ஸ் சாப்டா க‌ல்லீர‌ல் பிர‌ச்சினை போயே போயிருமாம் ‍‍
இதுவும் நானா சொல்ல‌லை. ஒரு ஆராய்ச்சி சொல்லுதுப்பா !

*உடம்பை குறைக்க‌னும்னு நெனைக்கிற‌வ‌ங்க‌ ந‌ல்லா குற‌ட்டை விட்டு தூங்குங்க‌. ஏன்னா குற‌ட்டை விடற‌த‌னால‌, நெறய‌ க‌லோரிக‌ள் குறையுதாம். பின்குறிப்பு: ஒல்லியா இருக்கிற‌வ‌ங்க‌ குற‌ட்டை விட்டால் நான் பொறுப்பு கிடையாது.

*முடி அட‌ர்த்தியா வ‌ள‌ர‌னும்னு ஆசையா இருந்தால் ஜோஜோபா ப‌ழத்தில் இருந்து எடுக்கிற‌ எண்ணெய்ல‌ கிடைக்கிற‌ ஷாம்பூக்க‌ளை போட்டு, முடியை ந‌ல்லா ம‌சாஜ் செஞ்சா, கூந்தல் அட‌ர்த்தியாகும்.

Sunday, May 2, 2010

ஆராய்ச்சிக‌ள் சொன்ன‌ விஷய‌ங்க‌ள்:


ஒரே ப‌ட‌ப‌ட‌ன்னு வ‌ருதா? உங்க‌ளுக்கு உய‌ர் ர‌த்த‌ அழுத்த‌ம் இருந்தா, தென‌மும் க்ரேப்ஸ் சாப்டுட்டு பாருங்க‌ அப்டின்னு அமெரிக்க‌ ஆராய்ச்சி ஒன்னு சொல்லுது.
*எதுக்கெடுத்தாலும் ரொம்ப‌ ரொம்ப‌ டென்ஷ‌ன் ஆகிறீங்க‌ளா? இந்த‌ மாதிரி ம‌ன‌ அழுத்த‌ம் தான் ம‌ன‌ நோய்க்கு கார‌ண‌ம் அப்டின்னு ஒரு ஆய்வு சொல்லுது. அத‌னால், டென்ஷ‌ன் ஆச்சுன்னா பாட்டு கேளுங்க‌ப்பா.
*கிரேக்க‌ நாட்டுல‌ உள்ள‌வ‌ங்க‌ளுக்கு அவ்ளோ அறிவாம். அவ‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் இது சாத்திய‌ம் அப்டின்னு பார்த்தா, அவ‌ங்க‌ சாப்பாட்டில‌ நெற‌ய‌ ஆலிவ் ஆயில் சேர்த்துக்கிறாங்க‌ளாம். நெற‌ய‌ ப‌ழங்க‌ள், காய்க‌ள், மீன் இத‌யெல்லாம் ந‌ம்ம‌ளை விட‌ அதிக‌மா சாப்பிட‌றாங்க‌ளாம். அத‌னால‌ பெரிய‌ அறிவாளியா இருக்க‌னும்னா, கிரேக்க‌ர்க‌ள் மாதிரி சாப்பிட‌னுமாம்.
*எத்த‌னை பேர் தென‌மும் ஒரு க‌ப் பால் குடிக்கிறீங்க‌ன்னு தெரியல். ஆனால், விட்ட‌மின் டி க்கு இத‌ய நோய், ட‌ய‌ப‌ட்டீஸ், உய‌ர் ர‌த்த‌ அழுத்த‌ம், கேன்ச‌ர் இதெல்லாம் வ‌ராம‌ த‌டுக்கிற‌ ஷ‌க்தி இருக்கிற‌த‌னால், கூட‌ ஒரு க‌ப் பால் குடிச்சா ந‌ல்ல‌துன்னு க‌லிபோர்னியா ஆய்வுக் க‌ழக‌ம் சொல்லுது...

Friday, April 30, 2010

சுறா பார்க்க‌ போற‌வ‌ங்க‌ காதில‌ பூவா?


தமிழ்ல‌ இருக்கிற‌ சான்ஸை எல்லாம் விட்டுட்டு ஹிந்தி ப‌டங்க‌ள்ல‌ ந‌டிக்க‌ப் போன‌ அசினுக்கு அங்கே நெற‌ய‌ ஹிந்தி ந‌டிக‌ர்க‌ள் அசினோட‌ விய‌ர்வை ரொம்ப‌ ஸ்மெல் அடிக்குது. அத‌னால அசின் கூட‌ ந‌டிக்க‌ மா‌ட்டேன் அப்டின்னு சொன்ன‌தா பேச்சு அடி ப‌ட்டுச்சு.இருந்தாலும் அசினுக்கு இவ்ளோ சிக்கல் வ‌ர‌க்கூடாது. . போன‌ வார‌ம் ந‌டிகை அசின் காவ‌ல்கார‌ன் ப‌ட‌ சூட்டிங்க்ல‌ இருந்த‌ப்போ ஒரு க‌தை ந‌ட‌ந்திருக்கு. ஹீரோ விஜ‌ய்ட்ட‌ போய் என‌க்கு ரொம்ப‌ போர் அடிக்கு. ஏதாவ‌து பார்ட்டி வைக்க‌லாமான்னு கேட்டிருக்காங்க‌ அம்ம‌ணி. உட‌னே அவ‌ரும் ஒகேன்னு சொல்லியிருக்கார். ஆனா பார்ட்டிக்கு வ‌ர்ற‌ எல்லாரும் ஒரு காதில பூ வச்சிட்டு வ‌ர‌னும் அப்டின்னு ரூல் போட்டிருக்காங்க‌ அசின். அதிலயும் ஆண்க‌ள் இட‌து காதில‌யும், பெண்க‌ள் வ‌ல‌து காதில‌யும் பூவை வ‌ச்சிட்டு வ‌ர‌னும் அப்டின்னு அடுத்த‌ ரூல் வேற‌. ஆனால், கூத்து என்ன‌ன்னா பார்ட்டிக்கு வ‌ந்த‌ அத்த‌னை பேரும் காதில‌ பூ வ‌ச்சிக்கிட்டு வ‌ந்தாங்க‌ளாம். (நடிக‌ர் விஜ‌யும் தான்). செத்து செத்து விளையாடுற‌ மாதிரி அசின் காதில‌ பூ வ‌ச்சி வ‌ச்சி விளையாண்டு இருக்காங்க‌. இந்த‌ பார்ட்டியில‌ எவ்ளோ விஷ‌ய‌ம் இருந்தாலும் எல்லா மீடியாக்க‌ளும் இப்போ அத‌யெல்லாம் ப‌த்தி பேசாம‌, இந்த‌ பூ விளையாட்ட‌ ப‌த்தி தான் பேச‌றாங்க‌ளாம். பொய் சொல்ற‌துக்கு காதில‌ பூ வைக்கிற‌துன்னு எந்த‌ அர்த்த‌த்தில‌ யார் சொல்லிட்டு போன‌துன்னு தெரிய‌ல. அடுத்த‌வ‌ங்க‌ காதில‌ பூ வைக்கிற‌த‌ பொய் சொல்ற‌துன்னு சொல்றோம். அப்போ அடுத்த‌வ‌ங்க‌ த‌லையில‌ பூ வைக்கிற‌த‌ என்ன‌ன்னு சொல்ற‌து? ஆனால் சன் பிக்ச‌ர்சூக்கு அடிமையாகி விட்ட‌ விஜ‌ய் ப‌ட‌ங்க‌ளும் ர‌சிக‌ர்க‌ள் காதுல‌ பூ வைக்க‌ தானே செய்யுது.
பின் குறிப்பு: சுறா பட‌ம் பார்க்க‌ போற‌வ‌ங்க‌ காதில‌ பூ வைத்துக் கொண்டு போக‌வும்.....

Sunday, April 25, 2010

நொந்து நொறுங்கி உள்ள‌ தாமிர‌ப‌ர‌ணி பால‌த்தின் கோல‌ம்:

சென்ற‌ வார‌ம் அலுவ‌ல‌க‌ம் போய்விட்டு வ‌ர்ற‌ப்போ, சாய‌ங்கால‌ம் சீக்கிர‌மே கிள‌ம்பியும், வ‌ல்ல‌நாடு தாமிர‌ப‌ர‌ணி பால‌ம் ப‌க்க‌த்தில் ஏற்ப‌ட்ட‌ டிராபிக் ஜாமால் பாலம் பக்க‌மே ஒரு ம‌ணி நேர‌ம் பேருந்து நின்ற‌து. வீட்டிற்கு போக‌ ஒரு ம‌ணி நேர‌ம் தாம‌த‌ம் ஆனால் பர‌வாயில்லை. வீட்டிற்கு உயிரோடு போவோமா என்ற‌ கேள்வியே எல்லாருடைய‌ ம‌ன‌திலும் இருந்த‌து. இந்த‌ போக்கு இன்று நேற்று அல்ல‌. க‌ட‌ந்த ஒரு வ‌ருட‌மாக‌வே ப‌ய‌ணிக‌ளை ரொம்ப‌ பாதித்து வ‌ருகிற‌து. தூத்துக்குடியிலிருந்து நெல்லை நோக்கி வ‌ந்த‌ ம‌ண‌ல் ஏற்றி வ‌ந்த‌ ஒரு லாரியும், தூத்துக்குடி நோக்கி நாங்க‌ள் சென்று கொண்டிருந்த பேருந்தும் ந‌டு பால‌த்தில் சிக்கி கொண்ட‌ன‌. இந்த‌ தாமிர‌ப‌ர‌ணி பால‌ம் மிக‌ குறுகலான‌ பால‌ம். ஒரு பேருந்து ம‌ட்டுமே ஒரு நேர‌த்தில் போக‌ முடியும். எதிர் ப‌க்க‌த்தில் இருந்து எந்த‌ வாக‌ன‌மும் வ‌ர‌ முடியாது.அத‌னால், எதிர்ப‌க்க‌த்திலிருந்து வ‌ரும் வாக‌ன‌ங்க‌ள் ஒரு 2 நிமிட‌ங்க‌ள் பொறுத்தால், பிர‌ச்சினை இல்லாம‌ல் டிராபிக் க்ளிய‌ர் ஆகி விடும். ஆனால் பொறுமைய‌ற்ற‌ ஓட்டுன‌ர்க‌ளால் லாரியும் மூவ் ப‌ண்ண‌ முடியாது. பேருந்தையும் ஒரு இன்ச் கூட‌ ந‌க‌ர்த்த‌ முடியாது. அப்ப‌டி ஒரு நிலைமை. பேருந்தின் வாச‌லும்,ஏற்கென‌வே உடைந்து மிக‌ மோச‌மாக‌ உள்ள‌ பால‌த்தின் கைப்பிடிச்சுவ‌ரும் உர‌சிக்கொண்டு இருந்த‌து. பேருந்தை ந‌க‌ர்த்த‌ முடியாத‌ நிலையில் ப‌ய‌ணிக‌ளாவ‌து இற‌ங்கி ந‌ட‌ந்து போக‌லாமென்றால்,பேருந்தின் ஒரே ஒரு வாச‌லும் இப்ப‌டி சிக்க‌லில் மாட்டிக்கொண்ட‌து. ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் வ‌ந்து போட்டோ, வீடியோ என்று எடுத்து த‌ள்ளினர். 1/2 ம‌ணி நேர‌ம் க‌ழித்து போலீஸ் வ‌ந்து ஓட்டுன‌ர்களுக்கு இடையிலான‌ சண்டையை தீர்த்து வைத்து பின்ன‌ர் பேருந்து கிள‌ம்பிய‌ பிற‌கு தான் உயிரே வ‌ந்த‌து. 'என‌க்கென்ன‌, அப்டி ஒரு இடி இடிச்சு ப‌ஸ்ஸை த‌ள்ளி விட்டா அவ்ளோ தான்‍‍'‍‍‍....இது லாரியின் ஓட்டுன‌ர் சொன்ன‌ வார்த்தைக‌ள் ,ஒவ்வொரு நேர‌மும் பால‌த்தை க‌ட‌க்கும் போது நினைத்தாலே பயமாக‌ இருக்கிற‌து.சும்மா முக்குக்கு ஒரு சிக்னல்ல‌ நிக்க‌ விட‌ற‌ டிராபிக் போலீஸை இந்த‌ ஆபத்தான‌ பால‌த்தில‌ நிற்க‌ விட‌லாம்ல‌. முக்கிய‌மான் வி.ஐ.பி(அர‌சியல்வாதி) வ‌ந்தால்தான் இங்கே டிராபிக் போலீஸை நிற்க‌ விடுவாங்க‌ளாம். அப்போ ந‌ம்ம‌ உயிர் என்ன‌ செல்லாக்காசா? பேருந்து பால‌த்தின் கீழ் உள்ள‌ ஆற்றில் க‌விழ்ந்து விழுந்த பிறகு ஐயோ அம்மானு எடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை இப்போவே எடுத்தா நெற‌ய‌ உயிர்க‌ள் காப்பாற்ற‌ படுமே?

Tuesday, March 30, 2010

விண்வெளிக்கு போற‌தும், புல்வெளிக்கு போற‌தும் இவ‌ங்க‌ கையில‌தான்....


சின்ன பிள்ளையா இருக்கிற‌ப்போ ந‌ம்ம‌ள்லாம் ராக்கெட் விட்டு விட்டு விளையாடி இருக்கோம். ஆனால், நெஜ‌மாவே ராக்கெட் தொழில்நுட்ப‌த்தை இந்தியாவில‌ செய‌ல்ப‌டுத்தி காட்டிய‌ டாக்ட‌ர். அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ள்கிட்ட‌ இந்த‌ ராக்கெட் மேல‌ அவ‌ருக்கு எப்போ ஆசை வ‌ந்துச்சுன்னு கேட்ட‌துக்கு, அவ‌ர் ப‌ள்ளியில‌ ப‌டிக்கிற‌ப்போ ப‌ற‌வைக‌ளோட‌ இய‌க்க‌ம் ப‌த்தி பாட‌ம் ந‌ட‌த்தின‌ டீச்ச‌ர் இருக்காங்க‌ள்ல‌, அவ‌ங்க‌ வ‌ந்து ப‌ற‌வைகள் ச‌ர‌ணால‌ய‌த்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு போய் ப‌ற‌வைக‌ளைல்லாம் க‌ண்கூடா காட்டி அதோட‌ இய‌க்க‌ம் ப‌த்தில்லாம் விள‌க்கினாராம். அதையெல்லாம் பாக்கிற‌துக்கும், கேக்கிற‌துக்கும் அப்டி ஒரு பிர‌மிப்பா இருந்துச்சாம். அதில‌ இருந்து ஒரு விமானியாக‌னும் அப்டிங்கிற‌ ஆசை என‌க்கு வ‌ந்துச்சு அப்டின்னு சொல்லி இருக்காராம் க‌லாம். இந்த‌ மாதிரி நேர‌டி அனுப‌வ‌ங்க‌ள் தான், ஒரு மாண‌வ‌னை ந‌ல்ல‌ நிலைக்கு உய‌ர்த்தும். ஆனா நிஜ‌மாவே இந்த மாதிரி த‌னியார் ப‌ள்ளிக‌ள்ல‌, ஆசிரிய‌ர்க‌ள்லாம் மாண‌வ‌ர்க‌ளுக்கு இப்டி வ‌ழிகாட்டுகிறாங்க‌ளா? ஆசிரிய‌ர்க‌ள் யாராக‌ இருந்தாலும் மாண‌வ‌ர்க‌ளை ஊக்குவிச்சா ந‌ல்லா இருக்கும். இந்த‌ ஒரு புண்ணிய‌மான வேலையை உண்மையா செய்வாங்க‌ளா ந‌ம்ம‌ ஊர் ஆசிரிய‌ர்க‌ள்?

Monday, March 29, 2010

ஊறுகாய‌ மிதிக்காட்டா கூட‌ அட்லீஸ்ட் ம‌திக்க‌லாமே!


இன்னிக்கு ஊறுகாய் தின‌ம். அத‌னால‌ இன்னைக்கு ஒரு நாளாவ‌து சாப்பாட்டில‌ ஊறுகாய‌ சேர்த்துகோங்க‌ப்பா.. நான் இன்னைக்கு த‌யிர் சாத‌த்துக்கு ஊறுகாய் வ‌ச்சி தான் சாப்பிட்டேன். அத‌னால‌ ஊறுகாய‌ ப‌த்தி கொஞ்ச‌ம் அங்கே இங்கே த‌க‌வ‌ல்க‌ளை தேடினேன்பா. ஊறுகாய‌ ப‌த்தி பைபிள்ல‌ 2 இட‌த்தில‌ குடுத்திருக்காங்க‌ளாம். அரிஸ்டாட்டில் ஊறுகாயோட‌ ப‌ல‌ன் ப‌த்தி ரொம்ப புக‌ழ்ந்திருக்கார். ஜூலிய‌ஸ் சீச‌ர், அவ‌ரோட‌ ப‌டை வீர‌ர்க‌ளுக்கு ஊறுகாய‌ சாப்பிட்டால், ரொம்ப‌ எனர்ஜிட்டிக்கா இருப்பாங்க‌ங்கிற‌துக்காக‌. அந்த‌ கால‌த்தில‌ க‌ப்ப‌லோட்டிக‌ள் ஸ்க‌ர்வி நோய த‌டுக்கிற‌துக்காக‌ ஊறுகாய‌ சாப்பிடுவாங்க‌ளாம். ஜார்ஜ் வாஷிங்ட‌னுக்கு ஊறுகாய்னா ரொம்ப‌ பிடிக்குமாம். இன்னிக்கு நைட்டாவ‌து ஊறுகாய‌ சாப்பிட்டிருங்க‌. இல்லாட்டா ஊறுகாய ந‌ம்ம‌ அவ‌ம‌திச்ச‌ மாதிரி ஆயிரும்.....

Friday, March 12, 2010

பிச்சைக்கார‌ங்க‌ நிலை எப்போ மாறும் த‌மிழ்நாட்டில்?


ந‌மீதா வீட்டு நாய்குட்டி பேர் ப்ரூஸ். இந்த‌ நாய்குட்டி ஒரு நாள் சாப்பிடாட்டா கூட‌ ந‌மீதா ஒரே டென்ஷ‌ன் ஆயிருவாங்க‌ளாம். நாய் தாய் மாதிரி(அவ‌ங்க‌ளுக்கு)ஒபாமா வீட்டு நாய்குட்டி பேர் போ. அவ‌ர் நாய்குட்டிய‌ போ அப்டின்னு கூப்டா நாய் போகுமா வ‌ருமா? இந்த‌ மாதிரி ச‌ந்தேக‌ங்க‌ள் இருந்தாலும் 2 நாளைக்கு முன்னால‌ நாங்க‌ எங்க‌ அலுவ‌ல‌க‌த்துக்கு ப‌க்க‌த்தில‌ இருக்கிற‌ அர‌ச‌ன் பேக்க‌ரிக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட‌ ஃப்ர‌ண்ட்ஸா சேர்ந்து போனோம். அப்போ 1 பெண் ரொம்ப‌ திட‌காத்திர‌மா இருந்தாள். அம்மா பிச்சை போடுங்க‌ம்மா அப்டின்னு கேட்டுகிட்டு எங்க‌ளை விடாம‌ல் துர‌த்தி கொண்டு வந்தாள். உட‌னே த‌ம‌ய‌ந்தி ' நல்லாயிருக்கேல்ல‌, உழைச்சு சாப்பிடு அப்டின்னு சொன்ன‌ உட‌னே அவ‌ள் போய் விட்டாள். நாங்க‌ திரும்பி வ‌ர்றப்போ இன்னொரு பெண் எங்க‌ளை விடாம‌ல் ஒட்டி ஒட்டி , எங்க‌ளை தொட்டு தொட்டு பிச்சை கேட்டாள். அவ‌ங்க‌ளோட‌ டெக்னிக் என்ன‌ன்னா இந்த‌ மாதிரி ப்ர‌ண்ட்ஸ் கூட‌ ந‌ம்ம‌ போகும் போது கேட்டால் ந‌ம்ம‌ளுக்கு அது ஒரு ப்ரெஸ்டிஜ் மேட்ட‌ர் ..எப்டியாவ‌து ரூபாய் குடுத்திருவோம்னு நினைக்கிறாங்க‌. அதனால், நான் உட‌னே அந்த‌ பிச்சை கேட்டு கொண்டிருந்த‌ பெண்ணிடம் 'ஒரு ரெண்டு ரூபாய் இருந்தா தாம்மா.. என் கையில பைசா இல்லைன்னு சொன்ன‌ உட‌னே அந்த‌ பெண் ப‌ற‌ந்தே போய் விட்டாள். என்ன‌ தான் பிச்சைக்கார‌ங்க‌ள் ஒழிக்க‌னும்னு அர‌சாங்க‌ம் சொன்னாலும் இன்னும் ஒரு ந‌ட‌வடிக்கை எடுத்த‌ பாடில்லை. சில‌ பிச்சைக்கார‌ங்க‌ நான் ஏறுற‌ பேருந்து கிட்ட‌ நின்னு தாய் நீ நல்லா இருப்பே அப்டின்னு சொல்லி பிச்சை கேப்பாங்க‌. ந‌ம்ம‌ குடுக்காட்டா நீ ந‌ல்லா இருக்க‌மாட்டேன்னு ந‌ம்ம‌ பேருந்தில‌ ஏறின‌ பிற‌கு வ‌ந்து சொல்லிட்டு போவாங்க‌. இந்த‌ க‌ல்ச்ச‌ர் ந‌ம்ம‌ நாட்டில‌ எப்போ ஒழியும்?

இவ‌ர் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ர்....


என்ன‌டா அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமா க‌ல‌ர் ஆயிட்டார் அப்டின்னு யாரும் ஆச்சரிய‌ப்ப‌ட‌ வேண்டாம். அவ‌ர் சிவாஜி ப‌ட‌த்தில‌ சூப்ப‌ர் ஸ்டார் ர‌ஜினியோ‌ட டெக்னிக்க‌ ஃபாலோ பண்ணிருப்பாரோ... அதெல்லாம் இல்ல‌. இது ஒரு கிராபிக்ஸ் ப‌ட‌ம் என‌க்கு எங்கேயோ இணைய‌த்தில் கிடைத்த‌து. பிடிச்சிருந்துச்சு. என்னோட‌ வ‌லைத்த‌ள‌த்தில் போட்டுட்டேன். போன‌ வார‌ம் ஒபாமா என்ன‌ ப‌ண்ணிருக்கார், அவ‌ரோட‌ ம‌னைவி மிச்செல் ஒபாமாவுக்கு தெரியாம ஒரு டின்ன‌ருக்கு போய் அங்கே ஆசை ஆசையா சிக்க‌ன் ஃப்ரை, ப‌ர்க‌ர், பிஸ்ஸா, இப்டில்லாம் ஜாலியா சாப்பிட்டுகிட்டு இருந்திருக்கார். அப்போ பார்த்து ஒரு போட்டோகிராப‌ர் அவ‌ரை போட்டோ பிடிச்சிட்டார். உட‌னே ஒபாமா இந்த‌ விஷய‌ம் என் ம‌னைவிக்கு தெரிஞ்சிர‌க்கூடாதுன்னு போட்டோகிராப‌ர்கிட்ட‌ கேட்டுகிட்டாராம். ஆனால் அது இந்தியா வ‌ரை தெரிஞ்சுட்டு.ஒபாமாவுக்கு மெடிக்க‌ல் செக் அப் ப‌ண்ணினப்போ அவ‌ருக்கு கொல‌ஸ்ட்ரால் நெறய‌ இருக்கு. அத‌னால‌ இந்த‌ மாதிரி உணவுக‌ள்லாம் சாப்பிட‌க்கூடாதுன்னு டாக்ட‌ர் அட்வைஸ் குடுத்திருக்கார். அத‌னால் மிச்செல் இந்த மாதிரில்லாம் சாப்பிட்டக்கூடாதுன்னு ரொம்ப‌ ஸ்ட்ரிக்டா சொல்லி அனுப்பி இருக்காங்க‌. பாவ‌ம் ம‌னுஷ‌ன் வீட்ல‌ ம‌னைவிட்ட‌ என்ன‌ திட்டுல்லாம் வாங்கினாரோ தெரியல். இருந்தாலும் இவ‌ர் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ர். ஏன்னா ம‌னைவிக்கு ப‌ய‌ப்ப‌டுறார்ல‌....

இந்தியாவில‌ சூயிங் க‌ம்ம‌ த‌டை செஞ்சிர‌லாமா?

ஐயோ ! பாவ‌ங்க‌ ந‌ய‌ன்தாரா, இன்னும் கொஞ்ச‌ம் வ‌ருஷ‌த்துக்க‌ப்ப‌ற‌ம் ந‌ய‌ன்தாராவோட‌ நெல‌மையை நெனைச்சு பார்த்தா, என்னால‌ அழுகைய‌ க‌ன்ட்ரோல் ப‌ண்ண‌ முடிய‌ல‌. ஏன்னா, எப்போ பார்த்தாலும், எந்த‌ சினி விழாவுக்கு வ‌ந்தாலும் சூயிங் க‌ம்ம‌ ச‌வைச்சிகிட்டே இருக்காங்க‌. இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, இந்த‌ சூயிங் க‌ம்ம‌ தின‌மும் சாப்பிட்டா, வாய‌ சுத்தி சுருக்க‌ம் சுருக்க‌மா வ‌ந்து சீக்கிர‌மே பாட்டி, தாத்தா மாதிரி ஆயிருவாங்க‌ அப்டின்னு அமெரிக்கால‌ டாக்ட‌ர்ஸ் & தோல் நிபுண‌ர்க‌ள்லாம் சொல்றாங்க‌. அத‌னால‌ இந்த‌ மாதிரி சூயிங் க‌ம்ம‌ போட்டு ச‌வைக்கிற‌வங்க‌ள்லாம் ஜாக்கிர‌தையா இருந்துகோங்க‌. ஒன்னு செய்ய‌லாமா, இந்தியாவில‌ சூயிங் க‌ம்ம‌ த‌டை செஞ்சிர‌லாமா?

Monday, March 8, 2010

உளுந்த‌ம்ப‌ருப்பை கொஞ்ச‌மா சேர்த்துகோங்க‌!

இட்லி இதை சாப்பிடாம‌ல் ஒரு நாள் இருக்க‌ முடியுமா? முடியாதுப்பா.. முடியாது. 4 இட்லி சாப்டாம‌ல் காலைல‌ ஆபீஸூக்கு வ‌ந்தேன்னு வ‌ச்சிக்கோங்க‌ளேன், என்ன‌டா இது 1 கிலோ எடை குறைஞ்சிருமே அப்டின்னு ரொம்ப க‌வ‌லையா இருக்கும். இந்த‌ இட்லிக்கு போட‌ற‌ உளுந்த‌ம்ப‌ருப்ப‌ எதுக்கெல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்த‌றாங்க‌ன்னா, ந‌ம்ம‌ள்லாம் த‌லைய‌ திருஷ்டி சுத்தி போட‌னும்னா மிள‌காய் வ‌த்த‌ல், பூச‌ணிக்காய் இத‌த்தான் போடுவோம். ஆனால், குஜ‌ராத்ல‌ என்ன‌ ப‌ண்றாங்க‌ன்னா, தீபாவ‌ளி முடிஞ்ச‌ உட‌னே அடுத்த‌ நாள் முத‌ல் வேலையா உளுந்த‌ வ‌டை செஞ்சு அதை சாய‌ங்கால‌ம் நாற்ச‌ந்தி எறிஞ்சுட்டு திரும்பி பார்க்காம‌ல் வ‌ந்திருவாங்க‌ளாம். அப்ற‌ம் இன்னொரு விஷய‌ம், இந்த‌ உளுந்த‌ம்ப‌ருப்பை சாப்பாட்டில‌ நெற‌ய‌ சேர்த்தாலும் காது செவிடா போயிருமாம். அத‌னால‌, உளுந்த‌ம்ப‌ருப்பை கொஞ்ச‌மா சேர்த்துகோங்க‌ !

த்ரெட்டிங்கா நோ நோ.....

பெண்க‌ளுக்கு இப்போ லேட்ட‌ஸ்ட் ட்ரெண்டு என்ன‌ தெரியுமா? கொஞ்ச‌ நாளைக்கு முன்னால‌ தான் நான் சொன்னேன்‍ ‍ த்ரெட்டிங் ப‌ண்ற‌த‌னால‌ க‌ர்ப்ப‌பை பாதிக்க‌ப்ப‌டும் அப்டின்னு. இது யார் காதில‌ விழுந்துச்சோ தெரிய‌ல‌, பிரிட்டிஷ் ந‌டிகை, மாட‌ல் எம்மா வாட்ச‌ன் என்ன‌ ப‌ண்ணிருக்காங்க‌ன்னா, க‌ண் புருவ‌த்தை அட‌ர்த்தியா வ‌ச்சிக்கிற‌து தான் இப்போ ஃபேஷ‌ன் அப்டின்னு சொல்லிகிட்டு க‌ண்புருவ‌த்தை அட‌ர்த்தியா வ‌ள‌ர்த்துகிட்டு இருக்காங்க‌ளாம். இப்டி ந‌ம்ம‌ ஊர் பெண்க‌ளும் புருவ‌த்தை அட‌ர்த்தியா வ‌ள‌ர்க்க‌ ஆர‌ம்பிச்சிருவாங்க‌ன்னு நினைக்கிறேன். ஒரு பெரிய மாட‌ல் & ந‌டிகை இப்டி சொன்ன‌ பிற‌கு, ந‌ம்ம‌ளும் க‌ண் புருவ‌த்தை ப்ள‌க் ப‌ண்ணாட்டா என்ன‌?

Saturday, February 27, 2010

என் உச்சி மண்டையில சுர்ருங்குது....


என் உச்சி மண்டையில சுர்ருங்குது......

ஹாங்... ஹாங் மத்தியானம் சுள்னு அடிக்கிற இந்த வெயில்ல வேட்டைக்காரன் பட பாட்டெல்லாம் ஏன் பாட‌த்தோனுதுன்னா ம‌ண்டை காயிற‌ அள‌வுக்கு ஒரு ச‌ந்தேக‌ம் வ‌ந்துட்டு. நான் சும்மா இருந்தாலும், என்னைய‌ சும்மா இருக்க‌ விட‌ மாட்டேங்க‌ப்பா. ஏன்னா, ல‌ண்ட‌ன்ல‌ நெற‌ய‌ கேள்விக‌ள்கிட்ட‌த்த‌ட்ட‌ 1 கோடியே 51 ல‌ட்ச‌த்து 21 ஆயிர‌த்து 731 கேள்விக‌ள் கேட்ட‌தில‌ பெண்க‌ள் ஆண்க‌ளை விட‌ நெறய‌ ச‌ரியான ப‌தில்க‌ளை எழுதி இருந்தாங்க‌ளாம். அத‌னால‌ என்ன‌ ஆச்சுன்னா, ல‌ண்ட‌ன் ஆராய்ச்சியாள‌ர்க‌ள் ஆண்க‌ளை விட‌ பெண்க‌ள் தான் புத்திசாலிக‌ள் அப்டின்னு முடிவா சொல்லிட்டாங்க‌ளாம். என்னைய‌ பொறுத்த‌ வ‌ரை நான் என்ன‌ சொல்ற‌து. பெண்க‌ள் தான் புத்திசாலிக‌ள் அப்டின்னு சொன்னா பெண்ணிய‌வாதி அப்டின்னு ஒரு வார்த்தைய‌ வ‌ச்சு என்னைய கூப்டுருவீங்க‌. அத‌னால‌, இப்போ நீங்க‌ என்ன‌ சொல்ல‌ போறீங்க‌? உங்க‌ளை பொறுத்த‌ வ‌ரை புத்திசாலிக‌ள் யார்?(ஆண்க‌ளா/பெண்க‌ளா)

Monday, February 22, 2010

பெண்க‌ள் மாறிட்டாங்க‌ளாம்.........


காலையில‌ ப‌ஸ் ஏறுற‌துக்குள்ளே அவ்ளோ கூட்ட‌ம். அதுவும் இப்போல்லாம் பெண்க‌ள் தான் கூட்ட‌ம் கூட்ட‌மா வ‌ர்றாங்க‌. ஆனா, இப்போ நெற‌ய‌ மாட‌ர்ன் பெண்க‌ள் வீடு, குடும்ப‌ம் இப்டி வீட்டுக்குள் தான் இருக்க‌ விரும்ப‌றாங்க‌ அப்டின்னு ல‌ண்ட‌ன்ல‌ ஒரு ஆராய்ச்சி சொல்லுது. ஆண்க‌ள் தான் வீட்டுக்காக‌ ச‌ம்பாதிச்சு போட‌னும், ந‌ம்ம‌ வீட்ட‌ ந‌ல்ல‌ ப‌டியா பார்த்துக்கலாம் அப்டின்ற‌ ப‌ழைய‌ கலாச்சார‌த்துக்கு மாறிக்கிட்டு வ‌ர்றாங்க‌ இப்போ இருக்கிற‌ பெண்க‌ள் அப்டின்னு ச‌ர்வே சொல்லுது. ச‌ர்வே சொல்ற‌து இருக்க‌ட்டும். என்னைய‌ பொறுத்த‌ வ‌ரை தூத்துக்குடில‌ இருந்து க‌ஷட‌ப்ப‌ட்டு 2 ம‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌ம் செய்து, திரும்ப‌ ஜ‌ங்ஷ‌னுக்கு ப‌ஸ் பிடிச்சு சாய‌ங்கால‌மும் இதே மாதிரி 2 1/2 ம‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌த்தில் வீணாய் போகுது. இதில பஸ்ல‌ சீட் ல‌ன்ச் பேக்கை போட்டு கூட்ட‌த்துக்குள் ஏறி சீட் பிடிக்கிற‌ப்போ ஏதோ செவ்வாய் கிர‌க‌த்துக்குள்ளே வெற்றிக‌ர‌மா போய் கொடிய‌ நாட்டின‌ மாதிரி ஒரு ஃபீலீங். இவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வேலைக்கு போற‌ப்போ சில‌ நேர‌ங்க‌ள்ல‌ ந‌வீன‌ பெண்க‌ள் இந்த‌ க‌ஷ்ட‌ங்க‌ள்லாம் தேவையா அப்டின்னு நெனைப்பாங்க‌ன்னு நான் நினைக்கிறேன். என்னைய‌ பொறுத்த‌ வ‌ரை நான் என்ன‌ நினைக்கிறேன்னா, ரிஸ்க் எடுக்கிற‌தெல்லாம் எனக்கு ர‌ஸ்க் சாப்பிட‌ற‌ மாதிரி..(அவ்.....)

Sunday, February 21, 2010

சென்ட் அடிக்கிறீங்களா? த‌லைமுடி அவ்ளோதான் போங்க‌ !


பெண்க‌ளோட கூந்த‌லுக்கு இய‌ற்கையான ம‌ண‌ம் உண்டா இல்லீயா அப்டின்னு பாண்டிய‌ ம‌ன்னன் ஆராய்ச்சி ப‌ண்ணினார், இப்போ இவருக்கு போட்டியா அமெரிக்காகார‌ங்க‌ ஆராய்ச்சி செஞ்சு என்ன‌ சொல்றாங்க‌ன்னா, பெண்க‌ளோட‌ உட‌ம்பில‌ ஏற்கென‌வே ஒரு ம‌ண‌ம் இருக்கு. அதனால‌, சென்ட்லாம் அடிக்க‌னும்னு தேவை இல்லைன்னு சொல்றாங்க‌. இதே மாதிரி நான் கேள்விப்ப‌ட்ட‌ ஒரு விஷ‌ய‌ம், ரொம்ப‌ பாடி ஸ்ப்ரே, சென்ட், டிய‌டோர‌ன்ட்லாம் அடிச்சா த‌லைல‌ முடி உதிரும் அப்டின்னு டாக்ட‌ர்ஸ் சொல்ற‌த‌ கேட்டிருக்கேன். அத‌னால‌யே நான் மேக்சிம‌ம் சென்ட தொட‌ மாட்டேன். அப்போ நீங்க‌ என்ன‌ ப‌ண்ண‌லாம்? சென்ட் அடிக்காம இருக்க‌ முடியாத‌ ஆளுன்னு வ‌ச்சிக்கோங்க‌ளேன், சென்ட் அடிக்கலாம், ஆனா பாதி பாட்டில‌ அப்டி அடிச்சிகிட்டே இருக்காதீங்க‌. கொஞ்ச‌மா அடிச்சிகோங்க‌ அப்டின்னு அக்க‌றையோட‌ சொல்ற‌து யார் யார் யார்? சாட்சாத் நான் தான்.

Thursday, February 18, 2010

இனிமேல் உல‌க‌த்திலேயே பாட்டிக‌ள் அப்டின்ற‌ வார்த்தை இருக்க‌ கூடாது!சொல்லிபுட்டேன்....

சிவ‌ப்பு க‌ல‌ர் ஒயின்ல‌ ஒரு பெரிய‌ விஷ‌ய‌ம் இருக்காம்பா. அதாவ‌து ந‌ம்ம‌ முக‌த்தில‌, கை, கால்ல‌ இருக்கிற‌ சுருக்க‌ம்லாம் போக‌னும்னா 100 பாட்டில் ஒயின் ந‌ம்ம‌ளுக்கு தேவையாம். அதனால‌, ஒரு பாட்டிய‌ ஒரு இள‌ம் பெண்ணாக்க‌னும்னா, ஒரு பாட்டிய‌ கூப்டுகிட்டு, 100 பாட்டில் ஒயினையும் எடுத்துக்கிட்டு வ‌ந்தீங்க‌ன்னா, பாட்டிய‌ ர‌ம்பா மாதிரி ஆக்கிர‌லாம். அதுக்கு நான் கேர‌ண்டி. இந்த‌ ஒயினை தின‌மும் உட‌ம்பில‌ சுருக்க‌ம் இருக்கிற‌ இட‌த்தில‌ போட்டுகிட்டே வ‌ந்தால், சுருக்க‌ம்லாம் போயிருமாம். ச‌ரி. இதுக்கு என்ன‌ கார‌ண‌ம்னு பார்த்தீங்க‌ன்னா, ஒயின்ல‌ இருக்கிற‌ ரெஸ்வெர‌ட்ரால் ந‌ம்ம‌ தோல்ல‌ இருக்கிற‌ கெட்ட‌ செல்லையெல்லாம் கொன்னு இள‌மை ஆக்கிருமாம். இது ஒரு ஆராய்ச்சி சொல்ற‌ விஷ‌ய‌ம். உங்க‌ வீட்டில‌ யாராவ‌து பாட்டி இருக்காங்க‌ளா? என்கிட்ட‌ கூப்டுகிட்டு வாங்க‌. நான் ஆராய்ச்சி ப‌ண்ணி இது உண்மையா இல்லையான்னு பார்க்க‌னும். இது வாலிப வ‌ய‌சு அப்டின்னு நீங்க‌ தாராள‌மா நீங்க‌ சொல்லிக்க‌லாம்.

Friday, February 12, 2010

ரொமான்ஸ் டிப்ஸ் !


இன்னிக்கு ரொமான்ஸ் டிப்ஸ் ப‌குதியில‌ ஒபாமா ப‌த்தி தான் பார்க்க‌ப்போறோம். ஒபாமா ப‌த்தி ந‌ம்ம‌ பேசப்போறோம்னு சொன்ன‌ உட‌னே ஓபாமாவுக்கும் ஒசாமாவுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்னுல்லாம் யாரும் யோசிச்சிராதீங்க‌. இன்னொரு விஷ‌ய‌ம்பா, ஒசாமா அவ‌ரோட‌ தாடிய‌ மெயின்டெயின் ப‌ண்ண‌ முடியாம‌ல் இப்போ தாடிய‌ வெட்டிட்டாராம். இது தான் லேட்ட‌ஸ்ட் நியூஸ். ஓ.கே. ஒபாமாகிட்ட‌ ஒரு சீக்ரெட் ஃபார்முலா இருக்கு. அது என்ன‌ அப்டின்னா அவ‌ர் எப்ப‌வுமே ரொம்ப‌ அமைதியா பேசுவார். அது தான் அவ‌ர்கிட்ட‌ உள்ள‌ ப்ள‌ஸ் பாயின்ட். இந்த‌ மாதிரி மெதுவா பேச‌ற‌துதான் பெண்க‌ளுக்கும் பிடிக்கும். , ஆண்க‌ளே முய‌ற்சி ப‌ண்ணி பாருங்க‌ !

Thursday, February 11, 2010

யார் சீக்கிர‌ம் வெளியே கெள‌ம்பிறாங்க‌ ?


காலைல‌ ஆபீஸ்ல‌ கெள‌ம்பிற‌வ‌ங்க‌கிட்ட‌ கேட்டா அப்பாடி கெள‌ம்பிற‌துக்குள்ளே போதும் போதும்னு ஆயிருதுன்னு சொல்லுவாங்க‌. வெளியில‌ கெள‌ம்பிற‌துக்கு எடுத்துக்குற‌ நேர‌த்த ப‌த்தி ஆராய்ச்சி ப‌ண்ணி ஆராய்ச்சியாள‌ர்க‌ள் என்ன‌ சொல்லியிருக்காங்க‌ன்னா, பெண்க‌ள‌ விட‌ ஆண்க‌ளுக்குதான் கெள‌ம்பிற‌துக்கு ரொம்ப‌ நேர‌மாகும் அப்டின்னு சொல்றாங்க‌. எங்கேயாவ‌து வெளியே கெள‌ம்பிற‌ப்போ ஆண்க‌ள் ஷேவிங், ஹேர் ஸ்டைலிங், ட்ரெஸ‌ தேர்ந்தெடுக்கிற‌து இதில‌ல்லாம் கிட்ட‌த்த‌ட்ட‌ 83 நிமிஷ‌ம் செல‌வ‌ழிக்கிறாங்க‌ளாம். ஆனா, பெண்க‌ள் 79 நிமிஷ‌ம் தான் செல‌வ‌ழிக்கிறாங்க‌ளாம். ஆனால் இத‌ சொன்னா யாருமே ந‌ம்ப‌ மாட்டேங்கிறாங்க‌. ஏய் ! நீ கேளேன் ! ஏய் ! நீ கேளேன் ! ஏய் ! நீ கேளேன் ! இப்டின்னு காமெடிய‌ன் ச‌ந்தான‌ம் மாதிரி திரும்ப‌ திரும்ப‌ சொல்லிகிட்டு இருக்கேன். யாராவ‌து ந‌ம்பினா உங்க‌ள் திருச்செந்தூருக்கு கூப்டுட்டு போய் மொட்டைய‌டிக்கிற‌தா வேண்டியிருக்கேன். யாராவ‌து ந‌ம்புங்க‌ப்பா !
யார் சீக்கிர‌ம் வெளியே கெள‌ம்பிறாங்க‌ ? சால‌ம‌ன் பாப்பையா ஐயா நீங்க‌ளாவ‌து தீர்ப்பு சொல்லுங்க‌ய்யா !

Wednesday, February 10, 2010

மூளை வ‌ள‌ர்ற‌துக்கு சூப்ப‌ர் ஐடியா !


இந்தியாவில‌ நம்ப‌ர் 1 அம்பானி
குருமால‌ டேஸ்ட் குடுக்ற‌து ப‌ட்டாணி
ஆனால், ப‌ட்டாணி குருமாவுக்கு ம‌ட்டும் டேஸ்டுக்கு இல்ல‌. ந‌ம்ம‌ மூளைக்கு நெற‌ய‌ ஊட்ட‌த்த‌யும் குடுக்குதாம். அப்ற‌ம் ம‌ட்ட‌ன்ல‌ இருக்கிற‌ அள‌வு புரோட்டீன் ப‌ட்டாணில‌ இருக்குதாம். ஆனா, அந்த‌ ப‌ட்டாணிய‌ ந‌ம்ம‌ இத்துனுன்டு கூட‌ ம‌திக்க‌ மாட்டேங்கிறோம் ம‌க்க‌ளே ! நான் நென‌க்கிறேன், இந்த‌ பீச்ல‌ல்லாம் வ‌ர்ற‌ காத‌ல‌ர்க‌ளுக்கு மூளை வ‌ள‌ர‌னும்னு தான் ப‌ட்டாணி சுண்ட‌ல் விக்றாங்க‌ன்னு நெனைக்கிறேன். ஒ.கே. எது எப்ப‌டியோ க‌ல்யாணி மாதிரி மூளை பெரிசா வ‌ள‌ர‌னும்னா, அடிக்க‌டி உங்க‌ வீட்ல‌ எல்லார‌யும் ப‌ட்டாணிய‌ சேர்த்துக்க‌ சொல்லுங்க‌ !

Bore அடிக்கா?மாட்டிங்கிட்டீங்க‌ போங்க‌ !

என‌க்கெல்லாம் நெற‌ய‌ நேர‌ம் bore அடிக்கும். ஆனால், நேத்து இந்த‌ விஷ‌ய‌த்தை கேள்விப‌ட்ட‌தில‌ இருந்து bore அடிக்காம‌ இருக்கிற‌துக்கு என்ன‌ ப‌ண்ண‌லாம்னு யோசிச்சிகிட்டே இருக்கேன். விஷ‌ய‌ம் என்ன‌ன்னா, boredom actually ம‌‌னுஷ‌னையே கொல்ல‌ கூடிய‌து அப்டின்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. வாழ்க்கையில‌ ந‌ம்ம‌ நெனைக்கிற‌ அள‌வுக்கு ச‌ந்தோஷ‌ம் இல்லாட்டாதான் smoking, drinking இந்த‌ மாதிரி கெட்ட‌ ப‌ழக்க‌ங்க‌ள் வ‌ந்து, அப்ற‌ம் அத‌னாலே வாழ்நாள் கொற‌ய‌ ஆர‌ம்பிச்சிருமாம். அடிக்க‌டி bore அடிக்கிற‌ப்போ எதுவுமே செய்யாம இருந்தால் இத‌ய‌ நோய்லாம் வ‌ரும்னு சொல்றாங்க‌. அத‌னால் போரடிக்காம‌ பாத்துகோங்க‌

அம்மாடியோவ் ! இவ்ளோ இருக்கா !


நெற‌ய‌ வீடுக‌ள்ல‌ இந்த‌ அம்மா, அப்பா ப‌ச‌ங்க‌ள் ரொம்ப‌ க‌ஷ்ட‌ப‌டுத்துவாங்க‌. 'எப்போடா ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வ‌ருவாங்க‌ன்னு பார்ப்பாங்க‌. வ‌ந்த‌ உட‌னே ட‌மால்னு வீட்டு க‌த‌வ‌ சாத்தி, ச‌தா 'ப‌டி ப‌டி'ன்னு குழந்தைக‌ளை டென்ஷ‌ன் ஆக்கிட்டு இருப்பாங்க‌. இப்போ ஒரு ஆராய்ச்சில‌ என்ன‌ க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌ன்ன‌, வீட்டுக்குள்ளேயே வீடியோ கேம், க‌ம்ப்யூட்ட‌ர், ஹோம் ஒர்க் அப்டின்னு இருக்கிற‌ குழந்தைக‌ளுக்கு மையோப்பியாங்ற‌ க‌ண் நோய் வ‌ர்ற‌துக்கான‌ வாய்ப்பு இருக்கு. ஆனா, இத‌ சில‌ ப‌ல‌ வ‌ருஷ‌ங்க‌ளுக்கு முன்னால‌ எங்க‌ அம்மா அப்பாட்ட‌ யாராவ‌து சொல்லியிருந்தா ந‌ல்லா இருக்கும். என்னா ப‌ண்ற‌து. Too Late ! ஆனால், சுத்துப‌ட்டில‌ இருக்கிற‌ தாய்மார்க‌ளே ! நீங்க‌ எல்லாரும் இத‌ தாராள‌மா follow ப‌ண்ண‌லாமே !

Tuesday, February 9, 2010

ஃபேஷ‌ன் டுடே ....


பெண்களானாலும் சரி , ஆண்களானாலும் சரி விரல்கள்ல போடுற மோதிரத்திலேயே நம்ம கொஞ்சம் ஃபேன்ஸியா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம். பெண்கள்னா 4 விர‌ல்க‌ள்ல‌யும் Black Metal மோதிரம் போடலாம். முதல்ல இந்த மோதிரம் போடற பழக்கம் எப்டி வந்துச்சுன்னா நம்மல்லாம் calculator ல கணக்கு போடறோம். ஆனா, எகிப்துகாரங்க பழங்காலத்தில என்ன பண்ணினாங்கன்னா, கையில எல்லா விரல்கள்லயும் போட்ருக்கிற மோதிரங்கள ஒன்னு கூட ஒன்ன Link பண்ணி மோதிரங்கள வச்சி கரன்சி நோட்டுக்களை எண்ணுவாங்களாம். அப்பறம், கிரேக்கர்கள்,ரோமானியர்கள் இவங்கள்லாம் அவர்கள் வேலை பார்க்கும் அலுவலக முத்திரைகளை மோதிரத்தில் பதித்து அணிந்தார்களாம். எது எப்டியோப்பா, மோதிரங்கள் Black Metalஆகவோ, Silver Metal ஆகவோ கைகளில் போட்டு கொண்டால் இந்த ட்ரென்டுக்கு நல்லா ஃபேன்ஸியா இருக்கும்.

Monday, February 8, 2010

ஒக்க‌ நிமிஷ‌ம் அட்டென்ஷ‌ன் ப்ளீஸ் !

எல்லாரும் ஒக்க‌ ஒக்க‌ நிமிஷ‌ம் அண்ணாந்து பாருங்க‌. Especially பெண்க‌ள் பார்த்துட்டீங்க‌ளா? ஓ.கே. இப்போ உங்க‌ வீட்டு slabல‌ நூலாம்ப‌டையா இருக்குல்ல‌. அதை முதல்ல‌ சுத்த‌ம் ப‌ண்ணிருங்க‌. ஏன்னா, வீடு சுத்த‌மா இருந்தால் தான் பெண்க‌ள் Pregnant ஆக‌ முடியும் அப்டின்னு ஒரு புது ஆராய்ச்சி சொல்லுது. வீட்ல‌ இருக்கிற‌ எல‌க்ட்ரானிக்ஸ் பொருள்க‌ள், துணிக‌ள், விரிப்பு, பிளாஸ்டிக் பொருட்க‌ள் இதிலெல்லாம் தூசி இருந்துச்சுன்னா, மூச்சுக்காற்று மூலமா, பெண்ணோட‌ ர‌த்தத்தில் க‌ல‌ந்து ஆகிற‌ வாய்ப்பையும் கொற‌ச்சிரும் அப்டின்னு சொல்றாங்க‌. அதனால‌ வீடு குப்பையா இருந்துச்சுன்னா, இதுக்காகவாவ‌து சுத்த‌ம் ப‌ண்ணிடுங்க‌. ஏற்கென‌வே நெற‌ய‌ பிள்ளைகுட்டிக‌ள் இருக்கு, இதில‌ வேற‌ நான் எதுக்கு வீட்டை சுத்த‌மா வைக்க‌னும் அப்டின்னுல்லாம் யாரும் கேக்காதீங்க‌. எல்லாருமே வீட்டை சுத்த‌மா வச்சிகோங்க‌. என்னைக்காவ‌து நான் உங்க‌ வீட்டுக்கு வ‌ந்து செக் ப‌ண்ணுவேன்.

Friday, February 5, 2010

ச‌ம்ம‌ர் க‌ட் ஃபேஷ‌ன் ஆர‌ம்பிச்சாச்சு !


ரொம்ப‌ நாளா என‌க்கு ஆண்க‌ள‌ பார்த்தா ரொம்ப‌ பொறாமையா இருக்கும். வேற‌ ஒன்னும் இல்ல‌, பெண்க‌ள் த‌லைக்கு குளிச்சா நீள‌மான‌ முடிய‌ காய‌ வைக்கிற‌துக்கு ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்கு, அதுவும் வெளியே கிள‌ம்பிற‌ப்போ த‌லைய‌ சீவி, பின்னி, அப்ப‌ப்பா, எவ்ளோ வேலை, ஆனா, ஆண்க‌ளுக்கு சோ சிம்பிள், த‌லைய‌ சீவாம‌ கூட‌ சில‌ ஆண்க‌ள் வெளியே கிள‌ம்பி போயிருவாங்க. ஓ.கே. மார்க‌ழி மாச‌ குளிர் இன்னும் கொஞ்ச‌ நாள்தான். அப்ற‌ம் சுள்னு வெயில் அடிக்க‌ போகுது. அத‌னால‌, நெற‌ய‌ ஆண்க‌ள் எப்டின்னாலும் ச‌ம்ம‌ர் க‌ட் வைக்க‌ ஆர‌ம்பிச்சிருவீங்க‌. இருந்தாலும் இப்போ இந்த‌ ச‌ம்ம‌ர்க‌ட் தான் ஃபேஷ‌னாம். அமிதாப் ப‌ச்ச‌ன் கூட‌ பா ப‌ட‌த்தில‌ இந்த மாதிரிதான் ஹேர் க‌ட் ப‌ண்ணியிருப்பாராம். இந்த‌ மாதிரி முடிய‌ ஒட்ட‌ வெட்டினா, ஆண்க‌ள் ந‌ல்ல‌ போல்டா கான்ஃபிட‌ன்டா காட்டுதாம். பெண்க‌ளுக்கு இந்த‌ மாதிரி ஹேர் க‌ட் ப‌ண்ணியிருக்கிற‌ ஆண்க‌ளை பிடிக்குமாம். & இன்னொரு விஷ‌ய‌ம் உங்க‌ த‌லை கோழி முட்டை மாதிரி உருண்டையா இருந்தால் ம‌ட்டுமே இந்த‌ ஹேர் ஸ்டைல் உங்க‌ளுக்கு ந‌ல்லா இருக்கும். த‌லை flat ஆ இருக்கிறவ‌ங்க‌ளுக்கு இந்த‌ ஹேர் ஸ்டைல் வேண்டாம் அப்டின்னு ஆண்க‌ள் ச‌முதாய‌த்த‌ நான் கேட்டுக்கிறேன்பா

Monday, February 1, 2010

இர‌வு நேர‌ பேருந்து ப‌ய‌ண‌ம்


போன‌ வார‌ம் ஆபீஸ்ல‌ இருந்து வீட்டுக்கு போக‌ தாம‌தம் ஆயிட்டு. பேருந்தில் ப‌டிக்க‌ட்டில் உட்கார்ந்து இருந்த‌ ஒரு ந‌ப‌ர் ஒரே நேர‌த்தில் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்து இருந்த‌ பெண்ணிட‌மும், அவ‌ளோட‌ அம்மாவிட‌மும் சில்மிஷ‌ம் செய்தான். ஆனால் அவ‌ர்க‌ள் இருவ‌ரும் வெளியே சொல்ல‌ ப‌ய‌ந்து "ஆண்க‌ள் பின்னால் நிற்க‌ வேண்டிய‌து தானே" என்று கேட்க‌, ஒரு அப்பாவி பெரிய‌வ‌ர் 'அப்போ நீ கார்ல‌ வ‌ர‌ வேண்டிய‌து தானே? என்று ந‌ட‌ந்த‌ விஷய‌ம் தெரியாம‌ல் கேட்க‌, பேருந்தில் எல்லாரும் அந்த‌ ஆளைத்தான் த‌ப்பாக‌ நினைத்த‌ன‌ர். (நானும் அப்படித்தான் நினைத்தேன்). க‌டைசியில் பேருந்தை விட்டு இற‌ங்கும் போது தான் அந்த‌ அம்மா கிட்டத்தட்ட‌ 1 1/2 ம‌ணி நேர‌ம் பொறுத்து கொண்டிருந்த‌ விஷய‌த்தை போட்டு உடைத்த‌து. என்ன‌ ஒரு பொறுமை? தேவையில்லாத‌ ப‌ய‌ம் தான் இத‌ற்கு கார‌ண‌ம். பெண்க‌ள் எப்போ தைர்ய‌மா இருக்காங்க‌ளோ, அன்னைக்கு தான் இந்த‌ சில்மிஷ‌வாதிக‌ள் திருந்துவார்க‌ள் என்று தோன்றுகிற‌து


என்னோட‌ முத‌ல் க‌விதை:

இர‌வு நேர‌ பேருந்து ப‌ய‌ண‌ம்

இரவு நேர‌ம்

பேருந்தில் திர‌ளான‌ கூட்ட‌ம்

ப‌டிக்க‌ட்டில் ஒரு ந‌ப‌ர்

இருக்கையில் ஒரு பெண்ணை கையால் செய்கிற‌ சில்மிஷ‌ங்க‌ள்

பெண்ணுக்கு அதிர்ந்து கூட‌ பேச‌ முடியாத‌ இறுக்க‌மான‌ சூழல்

விஷ‌ய‌ம் வெளியே தெரிந்தால் என்ன‌ ஆகுமோ என்ற‌ ப‌ய‌ம்,

பெண்ணின் முக‌த்தில்..

இறுதியில் நின்று கொண்டிருக்கும் ம‌ற்றொரு ந‌ப‌ர்

விஷ‌ய‌த்தை அப்ப‌ட்ட‌மாக‌ உடைத்தார்..

கிடைத்த சுத‌ந்திர‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் ஏன் த‌ய‌க்க‌ம்?

இவ்வ‌ள‌வு நேர‌ம் மௌன‌ம் காத்த‌து ஏன்

பெண்ணே! வெளியே வா ...

க‌ட்டுக்க‌ளை விட்டு வெளியே வா!

Wednesday, January 27, 2010

ஆண்க‌ள் பெண்க‌ளின் மேக் அப் பொருட்க‌ளை எடுக்கிறார்க‌ள் ‍‍‍‍‍‍....ப‌ர‌ப‌ர‌ப்பு குற்ற‌ச்சாட்டு..

காலைல‌ கெள‌ம்பிற‌ நேர‌ம் பார்த்து சீப்பை காண‌ல‌, ப‌வுட‌ர காண‌ல‌ அப்டின்னா செம‌யா டென்ஷ‌னா இருக்கும்ல‌ , ஆனால், பெண்க‌ளே, இனிமேல் இந்த‌ மாதிரி மாய்ச‌ரைச‌ர், லிப்ஸ்டிக், சீப்பு இதெல்லாம் காண‌ல‌ன்னா, உட‌னே உங்க‌ க‌ண‌வ‌ர்ட‌ போய் கேளுங்க‌. ஏன்னா, இப்போல்லாம் நெற‌ய‌ ஆண்க‌ள் அவங்க‌ ம‌னைவியோட‌ மேக் அப் பொருள்க‌ளை அவ‌ங்க‌ளுக்கு தெரியாம‌ல் எடுத்து ப‌ய‌ன்ப‌டுத்த‌றாங்க‌ அப்டின்னு கிட்ட‌த்தட்ட‌ 2000 ஆண்க‌ள்ட‌ ல‌ண்ட‌ன்ல‌ ஆராய்ச்சி ப‌ண்ணி க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. நெறய‌ ஆண்க‌ள் தெரியாம எடுத்திருக்காங்க‌ளாம். சில‌ ஆண்க‌ள் ம‌னைவிட்ட‌ சொல்லிட்டு, ம‌னைவிக்கு தெரிஞ்சு மேக் அப் போட‌றாங்க‌ளாம். சிலர் தெரியாம எடுக்கிற‌ப்போ பார்த்து ல‌ப‌ஞு ம‌னைவிகிட்ட‌ பிடிப‌ட்டிருக்காங்க‌ளாம். இந்த‌ மாதிரி ஆண்க‌ள் பெண்க‌ள்ட‌ இருந்து என்ன‌ மேக் அப் பொருள்க‌ள்லாம் எடுத்தாங்க‌ன்னு அத‌யெல்லாம் கூட‌ ஆராய்ச்சில‌ க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌ளாம். அது என்ன‌ என்ன‌ பொருள்க‌ள் தெரியுமா?1)ம‌ஸ்கரா2)லிப்ஸ்டிக்3)மாய்ச‌ரைச‌ர்4)லிப் க்ளாஸ்5)ஹேர் ஸ்டைல் ப‌ண்ற‌ பொருட்க‌ள்6)ஃப‌வுன்டேஷ‌ன்7)ஃபேஸ் மாஸ்க்8)ஹேர் ட்ரைய‌ர்இதெல்லாம் ஆண்க‌ள் அவ‌ங்க‌ ம‌னைவிகிட்ட‌ இருந்து தெரியாம‌ல் எடுத்து ப‌ய‌ன்ப‌டுத்த‌றாங்க‌ளாம். இத‌ வாசிக்கிற‌ப்ப‌வே நெற‌ய‌ ஆண்க‌ள் க‌ள்ளி எப்டி இவ்ளோ க‌ரெக்டா சொல்ற‌ அப்டின்னு கேக்க‌லாம். என்ன‌ ப‌ண்ற‌து கொஞ்ச‌ம் புத்திசாலியா ப‌டைக்க‌ சொல்லி எங்க‌ அம்மா வேண்டின‌த்துக்கு போய் இவ்ளோ புத்திசாலியா க‌ட‌வுள் என்னைய‌ ப‌டைப்பார்னு நான் கொஞ்சம் கூட‌ எதிர்பார்க்க‌லை.(ஓ.கே. கூல் .. கூல்....)

Saturday, January 23, 2010

நல்ல வேளை வெங்காயம் தப்பிச்சிச்சு !


போடா வெங்காயம், இந்த மாதிரி நம்மட்ட சேட்டை பண்றவங்களை நெறய நேரம் திட்டியிருப்போம். ஓ.கே. கிட்டத்த‌ட்ட 3500 வருஷங்களுக்கு முன்னால இருந்தே இருக்கிற இந்த வெங்காயத்த இனிமேல் மதிப்பில்லாமல் கூப்பிடக்கூடாது. Mr. வெங்காயம் அப்டின்னு தான் கூப்பிடனும். முந்தி காலத்தில் எல்லாம் எகிப்து மக்கள் வெங்காயத்த சாமியா நினைச்சு கும்பிட்டாங்களாம். இது கூட பரவாயில்ல, நம்மள்லாம் சத்தியமா இனிமேல் இப்டி பண்ணமாட்டேன் அப்டின்னு சொல்லனும்னா, 2 கையயும் சேர்த்து சத்யம் பண்ணுவோம். ஆனால், முந்தி காலத்தில எகிப்தில தலைவர்கள்லாம் அவங்க ஆபீஸ்ல உறுதிமொழி எடுக்கிறப்போ, அவங்களோட வலது கைய வெங்காயம் மேல வச்சு தான் உறுதிமொழி எடுப்பாங்களாம். ஆனால், நம்மளோட அரசியல் தலைவர்கள் வெங்காயம் மேல வச்சி இந்த மாதிரி சத்தியம் பண்ணினா, சத்தியம் பண்றப்பவே வெங்காயம் அழுகிருமே !( நல்ல வேளை வெங்காயம் தப்பிச்சிச்சு)

Wednesday, January 20, 2010

ஃபேஷ‌ன் டுடே ....


தாடி வ‌ச்ச‌ கேடி அப்டின்னு யாராவ‌து திட்டினா கூட‌ ப‌ர‌வாயில்ல‌, இனிமேல் தாடி வ‌ச்சிக்கிற‌து ரொம்ப‌ ரொம்ப‌ முக்கிய‌ம். ஒ.கே. தாடி வ‌ச்சிக்க‌லாம், ஆனா எப்டில்லாம் தாடி வைக்க‌லாம் அப்டின்னா, ஆண் ம‌க்க‌ளே, உங்க‌ளோட‌ முக‌ம் எப்ப‌டி இருக்கோ, அதுக்கேத்தாப்ல‌ தான் தாடி ப‌த்தி நீங்க‌ ஒரு முடிவு எடுக்க‌னும். அ) உங்க‌ளோட‌ முக‌ம் நீள‌மா இருந்துச்சுன்னா, க‌ன்ன‌த்தில‌ ரெண்டு சைட்ல‌யும் அட‌ர்த்தியாவும், நாடி ப‌க்க‌த்தில‌ கொஞ்சோண்டும் வ‌ச்சிக்கிட்டா, முகம் நீள‌மா இருக்ற‌து தெரியாதுஆ) உங்க‌ முக‌ம் வ‌ட்ட‌மா இருந்துச்சுன்னா, நாடில‌ கொஞ்ச‌ம் நீள‌மாவும், க‌ன்ன‌த்தில‌ ரெண்டு சைட்ல‌யும் குறுகுறுன்னு இருக்கும்ல‌, அவ்ளோ ஷார்ட்டா ப‌ட்டும் படாமலும் தாடி வ‌ச்சிக்கிட்டா ஒரு ஜென்டில் ஆன‌ லுக் வ‌ந்திரும். இது தான் இப்போதைக்கு ஆண்க‌ளுக்கு ப்யூட்டி டிப்ஸ்...

ஆண்க‌ளே ! ரெடி ஸ்டெடி கோ !

இன்னைக்கு காலைல‌ முகூர்த்த‌ நாளா இருக்குமோ அப்டின்னு ப‌ய‌ந்து, காலையிலேயே சீக்கிர‌மே கிள‌ம்பி வ‌ந்தால், ந‌ல்ல‌ வேளை இன்னிக்கு ப‌ஸ்ல‌ அவ்ள‌வா கூட்ட‌ம் இல்ல‌. ஓ.கே. முகூர்த்த‌ம் அப்டின்னு சொல்லிட்டு க‌ல்யாண‌த்த‌ ப‌த்தி பேசாம‌ இருப்போமா? ந‌ம்ம‌ ஊர்ல‌ல்லாம் பொன்னு பார்க்க‌ வ‌ர்ற‌ப்போ, ஆட‌ சொல்லுவாங்க‌, பாட‌ சொல்லுவாங்க‌. என்ன‌னாலும் மாப்பிள்ளைங்க‌ ம‌ட்டும் இதில‌ எஸ்கேப் ஆயிர்றாங்க‌ள்ல‌. ஆனால் சிவ‌காசில‌ இருக்கிற‌ ஆண்க‌ள்லாம் ரொம்ப‌ பாவ‌ம்.சிவ‌காசில‌, கிச்ச‌நாய‌க்க‌ன்ப‌ட்டின்னு ஒரு ஊர்ல‌ இப்போ கூட‌ ஒரு ப‌ழக்க‌ம் இருக்கு. அந்த‌ கால‌த்தில‌ இந்த‌ ஊர்ல‌ கிராம‌த்தில‌ ந‌டுல‌ 60 கிலோல‌ ஒரு க‌ல் & 90 கிலோ எடை இருக்கிற‌ இன்னொரு க‌ல்லையும் வ‌ச்சிருக்காங்க‌. ஆண்க‌ள் இந்த‌ இள‌வ‌ட்ட‌ கல்லை தூக்கியே ஆக‌னுமாம். இந்த‌ க‌ல்லை தூக்க‌ முடியாத‌ ஆண்க‌ளுக்கு ஊர்கார‌ங்க‌ பொன்னு கொடுக்க‌ மாட்டாங்க‌ளாம். ஓ.கே. இப்போ இந்த‌ கிராம‌த்தில‌ என்ன‌ மாதிரி இந்த‌ இள‌வ‌ட்ட‌ க‌ல்ல‌ ப‌ய‌ன்ப‌டுத்துறாங்க‌ன்னா, இந்த‌ ஊர்ல‌ திரும‌ண‌ம் செய்யிற‌ ஆண்க‌ள், திரும‌ண‌ம் முடிச்சு பெண் வீட்டுக்கு ம‌றுவீடு வ‌ர்ற‌ப்போ இந்த‌ இளவ‌ட்ட‌ க‌ல்லை தூக்க‌னுமாம். அப்டி தூக்க‌ முடியாட்டா 300 ரூபாய் வ‌ரை அப‌ராத‌ம் க‌ட்ட‌னுமாம். 300 ரூபாய்ல‌ பெரிய‌வ‌ங்க‌ளுக்கு வெற்றிலை, பாக்கு, சின்ன‌ ப‌ச‌ங்க‌ளுக்கு இனிப்புல்லாம் வாங்கி குடுக்க‌னுமாம். எல்லா ஆண்க‌ளுக்கும், எல்லா ஊருக்கும் இந்த‌ மாதிரி ஏதாவ‌து ஒரு டெஸ்ட் வ‌ச்சா ந‌ல்லா இருக்கும்ல‌!

Tuesday, January 19, 2010

ஃபேஷ‌ன் டுடே ....


இன்னைல‌ இருந்து முடிஞ்ச‌ அள‌வுக்கு பேஷ‌ன் விஷய‌ங்க‌ளை சொல்ல‌லாம்னு ஒரு முடிவு ப‌ண்ணிருக்கேன். ஹேன்ட் பேக்ஸ் வ‌ச்சிக்கிற‌தில‌ புதுசா எத‌ பேஷ‌ன்னு சொல்றாங்க‌ன்னா, ந‌ம்ம‌ளோட‌ ட்ரெஸ்ஸுக்கு மேட்சா கோல்ட் நெக்லெஸ், ட‌ய‌ம‌ண்ட் இய‌ர் ரிங்ஸ் இதெல்லாம் போட‌ற‌த‌ விட‌, ந‌ம்ம‌ ஹேன்ட் பேக் அழகா இருந்தாலே ஓர‌ள‌வுக்கு ந‌ம்ம‌ டீஸென்டா தெரிய‌லாம். இப்போ நான் என்ன‌ சொல்ல‌ வ‌ர்றேன்னா, குட்டியோண்டு கைப்பிடி இருக்கிற‌ ஒரு குட்டி ஹேன்ட் பேக்ல‌ க‌ல், பாசி, சீகுவென்ஸ் வ‌ச்சி வ‌ந்திருக்கிற‌ ஹேன்ட் பேக் தான் இப்போ லேட்ட‌ஸ்ட் ட்ரென்ட். ந‌ம்ம‌ வேலைக்கு போற‌ அவ‌ச‌ர‌த்தில‌ அழ‌கால்லாம் ட்ரெஸ் ப‌ண்ண‌ டைம் இல்ல‌ன்னு சொல்ற‌ அம்ம‌ணிக‌ள், இந்த‌ மாதிரி ஹேன்ட் பேக் அழகா வ‌ச்சிருந்தாலே பாதி மேட்ட‌ர் முடிஞ்சுச்சு. அதனால‌, இனி க‌டைக்கு போற‌ப்போ இந்த மாதிரி வொர்க் வ‌ச்சிருக்கிற‌ ஹேன்ட் பேக் எங்கே இருக்குன்னு தேடுங்க‌ மக்க‌ளே !

பெப்ப‌ர் ஸ்ப்ரே வேணுமா பெப்ப‌ர் ஸ்ப்ரே !


மிள‌கு அப்டின்னாலே ந‌ம்ம‌ளுக்கு தெரிஞ்ச‌ வ‌ரைக்கும், ஆம்ப்ளேட் டேஸ்டா இருக்க‌னும்னா ஆம்ப்ளேட் மேல‌ போடுவாங்க‌, ஆனா ஆம்ப்ளேட் மேல‌ போடாம‌ ஆம்பிளைங்க‌ மேல‌ போட‌றாங்க‌ளாம். இது வேற‌ எங்கேயும் இல்ல‌. த‌மிழ் நாட்டில‌, அதுவும் சென்னைல‌ தான் இந்த மாதிரில்லாம் ந‌ட‌க்குது. மேட்ட‌ர் என்ன‌ன்னா, அமெரிக்கால‌ வ‌ழிப்ப‌றி கொள்ளை ரொம்ப‌ ந‌ட‌க்கும்கிற‌த‌னால‌, இந்த மாதிரி ஆளுங்க‌கிட்ட‌ இருந்து த‌ப்பிக்க‌னும்கிற‌துக்காக‌, பொது மக்க‌ளுக்கு பெப்ப‌ர் ஸ்ப்ரேல்லாம் குடுத்திருக்காங்க‌. ஆனா, இப்போ சென்னைல‌ பெப்ப‌ர் ஸ்ப்ரேய‌ எதுக்கெல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்திருக்காங்க‌ன்னா, ஈவ் டீசிங், திருட‌ர்க‌ள் இவ‌ங்க‌கிட்ட‌ இருந்துல்லாம் த‌ப்பிக்க‌ற‌துக்காக‌ பெண்க‌ளுக்கு ம‌ட்டும் குடுக்கிறாங்க‌. அத‌னால் வேலைக்கு போற‌ பெண்க‌ள், வீட்ல‌ த‌னியா இருக்கிற‌ பெண்க‌ள், வ‌ய‌சான‌வ‌ங்க‌ இவ‌ங்க‌ள்லாம் இனிமேல் பெப்ப‌ர் ஸ்ப்ரே வ‌ச்சிருந்தா தைர்ய‌மா இருக்க‌லாம் அப்டின்னு சொல்றாங்க‌. பெண்க‌ள் இந்த‌ பெப்ப‌ர் ஸ்ப்ரேய‌ ஹேன்ட் பேக்ல‌ ஏற்கென‌வே சீப்பு, ப‌வுட‌ர், லிப்ஸ்டிக்லாம் வைக்கிற மாதிரி பெப்பர் ஸ்ப்ரேயயும் வ‌ச்சிக்கிட்டு ப‌ந்தாவா போக‌லாம். 20 த‌ட‌வை ஒரு பெப்ப‌ர் ஸ்ப்ரேய‌ பய‌ன்ப‌டுத்த முடியுமாம் & இதோட‌ விலை அப்டின்னு பார்த்தீங்க‌ன்னா 500 ரூபாய்தானாம். இந்த‌ பெப்ப‌ர் ஸ்ப்ரே வெளி மார்க்கெட்ல‌ கிடைக்காது. காவ‌ல் துறையால‌ ம‌ட்டும் தான் குடுக்க‌ப்ப‌டுதாம். இந்த‌ பெப்ப‌ர் ஸ்ப்ரேய‌ ந‌ம்ம‌ளை கிண்ட‌ல் ப‌ண்ற‌வ‌ங்க‌ மேல‌ அடிச்சிட்டா அந்த‌ ஆளுக்கு 2 ம‌ணி நேர‌ம் அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர‌ முடியாதாம். அதுக்குள்ளே அவ‌ச‌ர‌ போலீஸுக்கு 100க்கு போன் ப‌ண்ணினால் மாமியார் வீட்டுக்கு அள்ளிட்டு போயிருவாங்க‌ளாம். பெப்ப‌ர் ஸ்ப்ரே யாருக்குல்லாம் வேணுமோ அவ‌ங்க‌ள்லாம் க‌மெண்ட் ப‌ண்ணுங்க‌ப்பா. பெப்ப‌ர் ஸ்ப்ரே வேண்டாம்னு சொல்ற‌வ‌ங்க‌ எதுக்கு வேண்டாம் அப்டின்னு கமெண்ட் ப‌ண்ணுங்க‌. பெப்ப‌ர் ஸ்ப்ரே வேணுமா பெப்ப‌ர் ஸ்ப்ரே?

Friday, January 8, 2010

அம்மான்னா சும்மாவா !

அம்மான்னா சும்மாவா
சும்மா சும்மா அம்மாவா

நோ நோ நோ டென்ஷ‌ன், இந்த‌ அம்மா ப‌ஞ்ச்லாம் எதுக்குன்னா, அதில‌ ஒரு பெரிய‌ மேட்ட‌ர் இருக்கு. நெற‌ய‌ பெண்க‌ள் க‌ல்யாண‌ம் ஆயிட்டா அழகு போயிரும், ந‌ம்ம‌ நென‌ச்ச‌ மாதிரி ந‌ட‌க்க‌ முடியாது, சுத‌ந்திர‌ம்லாம் ப‌றி போயிரும் அப்டில்லாம் நென‌க்கிறாங்க‌. ஆனா, ல‌ண்ட‌ன்கார‌ங்க‌ என்ன‌ சொல்றாங்க‌ன்னா, க‌ல்யாண‌ம்லாம் ரொம்ப‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். க‌ல்யாண‌ம் ஆகி, ஒரு குழந்தைக்கு தாய் ஆகிற‌ப்போ தான், அந்த‌ பெண்ணோட‌ ந‌ட்பு வ‌ட்ட‌ம் பெரிசாகும். ஏன்னா, அவ‌ங்க‌ வ‌ய‌சில‌ இருக்கிற‌ அம்மா & தோழிக‌ள் கூட‌ நெற‌ய‌ பேசுவாங்க‌ அப்டின்னு நிருபிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தா சொல்றாங்க‌. அத‌னால‌ ஒரு குழ‌ந்தை பிற‌ந்த‌ பிற‌கு ஒரு பெண்ணுக்கு கிட்ட‌த்த‌ட்ட‌ 8 புது ஃப்ர‌ண்ட்ஸ் கிடைக்கிறாங்க‌ளாம். பெண்க‌ள் இனிமேல் இதையெல்லாம் நினைவில் கொள்வார்க‌ளாக‌ !

Tuesday, January 5, 2010

முடி உதிர்ற‌து நிக்க‌னுமா:

முடி உதிர்ற‌து நிக்க‌னுமா:ஒவ்வொரு நாளும் கிட்ட‌த்த‌ட்ட 50 முடில‌ இருந்து 100 வ‌ரை உதிர்ந்துச்சுன்னா, அது ஒன்னும் பிர‌ச்சினை இல்ல‌. இருந்தாலும் முடி உதிர்ற‌துக்கு வீட்டில் என்ன‌ மாதிரி சிகிச்சை எடுக்க‌லாம்னா,
1. நல்ல‌ சுத்த‌மா இருக்கிற‌ தேங்காய் எண்ணெயை ஒரு ட‌ம்ள‌ர் எடுத்து, மித‌மான‌ சூட்டில‌ காய்ச்ச‌னும். அந்த‌ சூடான‌ எண்ணெய்ல‌ 2 கைப்பிடி அள‌வு க‌றிவேப்பிலையை போட்டு, க‌ருவேப்பிலையோட‌ ச‌ட‌ச‌ட‌ப்பு அட‌ங்கின‌ பிற‌கு எண்ணெயை ஆற‌ வ‌ச்சு பாட்டில்ல‌ ஊத்தி வைச்சிருங்க‌.2. பெரிய‌ நெல்லிக்காய், க‌றிவேப்பிலை, ரெண்டும் சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் சாறு எடுத்துகோங்க‌. முற்றின‌ தேங்காய் பால் 2 ட‌ம்ள‌ர் எடுத்துகோங்க‌. மூன‌யும் அடுப்பில‌ வ‌ச்சு ந‌ல்லா காய்ச்சிகோங்க‌. எண்ணெய் ப‌க்குவ‌ம் வ‌ந்த‌ அப்ற‌மா அடுப்பில‌ இருந்து இற‌க்கி ந‌ல்லா ஆற‌ வ‌ச்சு உப‌யோகிக்க‌லாம்.
இந்த‌ ரெண்டில ஏதாவ‌து ஒன்ன‌ ரெடி ப‌ண்ணிகிட்டு த‌லைமுடியோட‌ வேர்க்கால்க‌ள்ல‌ ப‌டுற‌ மாதிரி ந‌ல்லா ம‌சாஜ் செஞ்சு, 1/2 ம‌ணி நேர‌ம் க‌ழிச்சு, முடியை அலசினா, முடி உதிர்ற‌து நிக்கும். முத‌ல் எண்ணெய‌ விட‌ ரெண்டாவ‌து ரொம்ப‌ ரொம்ப‌ ப‌வ‌ர்ஃபுல் !

Friday, January 1, 2010

ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்துக்கு ஒரு க‌ன‌வு.........


இப்போல்லாம் எல்லா ப‌ச‌ங்க‌ளுக்குமே நூடில்ஸ், பிஸ்ஸா, ப‌ர்க‌ர் இந்த‌ மாதிரி தான் சாப்பிட பிடிக்குது. திருநெல்வேலி புது ஸ்டான்டுக்கு வெளியே சாய‌ங்கால‌ம் 6 ம‌ணி ஆச்சுன்னா, ப‌ஸ்ல போற‌ப்போ, ஒரு விஷ‌ய‌த்தை பார்க்க‌லாம். என்ன‌ன்னா, ஒரு வ‌ண்டில‌ பிடிச்சிட்டு வ‌ந்த மீனை அப்டி ஃப்ரெஷ்ஷா வித்துகிட்டு இருப்பாங்க‌. அதுக்கு அடுத்து, இன்னொரு வ‌ண்டில அப்டி அதே ஃப்ரெஷ் மீனை பொரிச்சு சுட‌ சுட‌ வித்துகிட்டு இருப்பாங்க‌. பஸ்ல‌ அந்த‌ இட‌த்தை க்ராஸ் ப‌ண்ற‌ப்போ மீனை பொரிக்கிற‌ வாச‌ம், அதுவும் சாய‌ங்கால‌ம் சாப்ட‌ற‌துக்கு ரொம்ப‌ ஆசையாத்தான் இருக்கும். இதுக்காக‌வே அங்கே செம‌ கூட்ட‌மா இருக்கும். இந்த‌ ஃபாஸ்ட் ஃபுட் இப்போ ம‌ட்டும்னு இல்ல‌. தொல் பொருள் ஆராய்ச்சியாள‌ர்க‌ள் என்ன‌ சொல்றாங்க‌ன்னா, ப‌ழைய‌ கால‌த்தில‌ கிரேக்க‌ நாட்டுல‌, அவ‌ங்க‌ளுக்கு வெளியே சாப்ட‌ற‌து ரொம்ப‌ ஜாலியா இருக்குமாம். ந‌ம்மளுக்கும் கூட‌ வெளியே போய் சாப்பிட‌ற‌து ஜாலியாத்தான் இருக்கு. ஆனால் முந்தி மாதிரி இல்ல‌. தூத்துக்குடில‌ ஒரு ஹோட்ட‌ல்ல‌3 த‌ந்தூரி ரொட்டி, ப‌னீர் ப‌ட்ட‌ர் ம‌சாலா குடும்ப‌த்தோட‌ போய் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் ஆயிருது. மாச‌த்துக்கு ஒரு த‌ட‌வை கூட‌ வெளியே போய் சாப்பிட‌ற‌து ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்துக்கு ஒரு க‌ன‌வு மாதிரி இருக்கு. விலைவாசியும் ஏறிக் கொண்டே போகுது. இது எங்கே போய் முடியுமோ!