Sunday, October 16, 2016

நேராக உட்கார்வது அவசியம் !!!!



நாம் சரியான முறையில் உட்கார்வது அவசியம். நீங்கள் எவ்வாறு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா ? நீங்கள் ஆபிஸ் சேரில் எவ்வாறு உட்கார்ந்து எழுதுகிறீர்கள் , டைனிங் டேபிளில் எவ்வாறு காய்கறி வெட்டுகிறீர்கள் , பேருந்துக்கு உட்கார்ந்து இருக்கும் போது எவ்வாறு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கவனித்தது உண்டா ?

எப்போதும் சரியான முறையில் உட்கார்வது என்பது உடல் நலத்திற்கு நல்லது. வளைந்து உட்கார்வது உடம்பிற்கு ஸ்ட்ரெஸ்ஸையும், அசதியையும் கொடுக்கும். இதனால் உடம்பில் சில அங்கங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

நல்ல நிலையில் உட்கார்வது எலும்புகளுக்கும், தசைகளுக்கும் நல்லது. உடலுறுப்புகளை இந்த சிறிய முயற்சியினால் நன்றாக வைத்திருக்க முடிகிறது.

பெரிய பெரிய ஓட்டல்களில் தலைப்பாகை அணிந்துள்ள வாட்சுமேன் நேராக நின்று கொண்டு கதவை திறப்பதை நீங்கள் ஓட்டலுக்கு செல்லும் போது பார்த்து இருப்பீர்கள். அவர் உடலை வளைத்துக் கொள்ளாமல் மணிக்கணக்காக நிற்கிறார். அதனால் அவர் சோர்வு அடைவதில்லை.

நல்ல முறையில் உட்கார்ந்திருப்பது மன அழுத்ததையும் ஏற்படுத்தாது. பெரும்பாலானோர் இவ்வாறு நல்ல முறையில் உட்கார்வதற்கு சோம்பல் படுவார்கள்.

ஒரு சர்வேயின்படி '75% மக்கள் சரியான முறையில் உட்கார்வதில்லை ' என தெரிய வந்துள்ளது. நவீன எந்திர உலகில் ரோலிங் சேர், குஷன் இருக்கைகள் உள்ள தியேட்டர்கள் என நாம் நல்ல நிலையில் உட்கார்வதே இல்லை. அனால் ஒழுங்கான முறையில் உட்காராமல் இருப்பதால், நமது முதுகுத்தண்டின் அமைப்பு பாதிக்கப்படும். இது கால் மூட்டுக்களை பாதிக்கும். ஆர்த்ரைட்டிஸ், முதுகுவலி போன்றவை ஏற்படலாம்.

ஒரு நீண்ட கண்ணாடியில், நீங்கள் உட்கார்ந்து இருக்கும் முறையை பார்க்கவும். பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையும் தெரிந்து கொள்ளவும். முதுகுப்பகுதியம், கழுத்தும் நேராக இருக்கும்படி, தலையை நிமிர்த்தி உட்காரவோ.

எனவே இனி நீங்களும் நேராக அமர பழகி கொள்ளவும்.

- - க்ருஹ ஷோபா ஜூன் 2015 இதழில் இருந்து