Wednesday, July 10, 2013

மங்கையர் மலர் - ஜூலை 2013(புத்தகத்தில் படித்ததில் பிடித்தது)

டேபிள்  மேனர்ஸ்
சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எக்ஸ்சிக்யூட்டிவ் செஃப்பாக பணிபுரியும் பட்டெல் சொல்லித்தரும் சில டேபிள மேனர்ஸ்
*எந்த பெரிய ஹோட்டலுக்கு போனாலும் டேபிளை முன்கூட்டியே ரிசர்வ் செய்து விட்டு போகவும
*ஏதாவது வித்தியாசமான ஸ்பெஷல் உணவை ஆர்டர் செய்வதாக இருந்தால் அது அன்றைக்கு கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளவும்
*சாப்பிடும் மேஜையின் மீது முழங்கைகளை ஊன்றகூடாது.
ஸ்பூன், ஃபோர்க், தம்ளர்களை உருட்டி விளையாடக்கூடாது
*டவலை தொடையின் மீது விரித்து கொள்ளலாம். அல்லது காலரில் 'டக்' செய்து கொள்ளலாம்.
*நாம் சாப்பிடும் சப்தமும் பேசும் ஒலியும் அடுத்த டேபிளுக்கு கேட்காத வண்ணம் நாகரிகமாக இருக்க வேண்டும்
ஸ்பூன்களை 'X' வடிவில் வைத்தால் 'சாப்பிட்டு முடிச்சாச்சு ' என்று அர்த்தம்
*ஃபிங்கர் பௌல் என்ற பெயரில் தரப்படும் வெந்நீர் குவளை, விரல் நுனிகளை நாசூக்காக நனைக்க மட்டுமே, கை முழுக்க தேய்த்து கழுவ நீங்கள் குழாயை தான் பயன்படுத்தனும்.
*பில்லில் 10% டிப்ஸ் வைப்பது நார்மலான விஷயம். சில பேர் சம்பந்தப்பட்ட செஃப்பை அழைத்து பாராட்டித்தருவதும் உண்டு.