Friday, November 20, 2009

திரும‌ண‌த்திற்கு பின் தேவையா?


இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் க‌ல்யாண‌ம் ஆனாலும் ப‌ர‌வாயில்ல‌, க‌ல்யாண‌ம் ஆகாட்டாலும் ப‌ர‌வாயில்ல. காத‌ல் ப‌த்திக்குது. முந்தி கால‌த்திலெல்லாம் பார்த்தோம்னா, ராஜாக்க‌ள் ப‌டை எடுத்துட்டு வ‌ர்ற‌ப்போ நாட்டில‌ ரொம்ப‌ அழ‌காக‌ இருக்கிற‌ பெண்க‌ளை க‌வ‌ர்ந்துகிட்டு போய், அந்த‌புர‌த்தோட‌ எண்ணிக்கையை கூட்ற‌தையே ஒரு வேலையா வ‌ச்சிருந்திருக்காங்க‌. இதுல‌ கூட‌ ஒரு நாட்டு ராஜாவுக்கும், இன்னொரு நாட்டு ராஜாவுக்கும் நீயா? நானான்னு போட்டி போடுவாங்க‌ளாம். ஆனாலும் அந்த‌ கால‌த்து ராஜாக்கள் செய்ற‌து த‌ப்பா இருந்தாலும், ஒரு விஷ‌ய‌த்தில‌ ம‌ட்டும் ரொம்ப‌ பெர்ஃபெக்டா இருந்திருக்காங்க‌. அதாவ‌து க‌ல்யாண‌ம் ஆன‌ பொன்னுங்க‌ள் திரும்பி கூட‌ பார்க்க‌ மாட்டாங்களாம். அத‌னால் பெண்ணுக்கு க‌ல்யாண‌ம் ஆகி விட்டால் தாலி போட்ருப்பாங்க‌ளாம். இதை பார்த்து ராஜாக்க‌ள் உஷாராக‌ இருப்பாங்க‌ளாம். க‌ல்யாண‌ம் ஆகாவிட்டால் ந‌வ‌னாலி அப்டின்னு ஒரு ச‌ர‌டை 7 வ‌ய‌திலில் இருந்தே பெண்க‌ள் க‌ழுத்தில் அணிந்திருப்பாங்க‌ளாம். க‌ல்யாண‌த்த‌ப்போ தான் இந்த‌ ந‌வ‌னாலியை கழ‌ட்டி விட்டு தாலி அணிந்து கொள்வார்க‌ளாம். அதுவும் இந்த‌ ப‌ழ‌க்கம் கார்காத்தார் ச‌மூக‌த்தில் இன்றும் புழ‌க்க‌த்தில் உள்ள‌து என்ப‌தை இன்று என்னுடைய‌ நிக‌ழ்ச்சியில் ஒரு அழைப்பாள‌ர் கூறினார். இந்த‌ மாதிரி ஒரு அடையாள‌ம் இன்றும் தேவைப்ப‌டுகிற‌து ச‌மூக‌த்தின் வ‌க்கிர‌ க‌ண்க‌ளில் இருந்து த‌ப்பிக்க‌. மாட‌ர்ன் ச‌முதாய‌த்தில் ந‌ம்ம‌ளும் மாட‌ர்னாக‌ இருப்போமே என்று தாலி இல்லாம‌ல் த‌மிழ் நாட்டில் உல‌வ‌ முடிய‌வில்லை. இது தான் நித‌ர்ச‌ன‌ம். க‌ல்யாண‌ம் ஆச்சு, க‌ல்யாண‌ம் ஆக‌லை அப்டின்னு எதுவுமே இப்போல்லாம் க‌ண்டுக்க‌ மாட்டேங்கிறாங்க‌. ம‌ன‌ம் போன‌ போக்கில் ந‌ட‌க்கும், ம‌ன‌சாட்சியே இல்லாம‌ல் த‌ட‌ம் மாறும் திரும‌ண‌ம் ஆன‌வர்க‌ளை பார்க்கும் போது ம‌னசுக்கு ரொம்ப‌ க‌ஷ்ட‌மாக‌ இருக்கிற‌து. வெறுப்பாக‌ இருக்கிற‌து. என்றைக்கோ ம‌ண்ணுக்கு போக‌ப் போகும் உடலுக்காக‌ குடும்ப‌ம், ம‌னைவி, குழந்தைக‌ளை எப்ப‌டி ஆண்க‌ள் ம‌ற‌ந்து போகிறார்க‌ள்?
மாற்றான் ம‌னை க‌வ‌ர்த‌ல் என்ற‌ விஷ‌ய‌த்தை நெற‌ய‌ ச‌ங்ககால‌ நூல்க‌ளில் பாத்திருக்கோம். இந்த‌ விஷ‌ய‌த்தில் 18 ச‌தவீத‌ம் ஆண்க‌ளும், 11 ச‌த‌வீத‌ம் பெண்க‌ளும் க‌ல்யாண‌ம் ஆன‌ பிற‌கும் இன்னொரு துணையை தேட‌றாங்க‌ அப்டின்னு ஒரு ஆய்வ‌றிக்கையில‌ சொல்லியிருக்காங்க‌. இந்த‌ சூழ்நிலைக்கு கார‌ண‌ம் ந‌ம்ம‌ ம‌ன‌சு தான். த‌னி ம‌னித‌ ஒழுக்க‌ம் க‌ண்டிப்பா ந‌ம்ம‌ எல்லாருக்குமே வேணும் ‍- க‌ல்யாண‌ம் ஆன‌ பிற‌கும், க‌ல்யாண‌ம் ஆவ‌த‌ற்கு முன்பும். ஒரு பெண்ணிட‌மோ, ஒரு ஆணிட‌மோ பேசுற‌ப்போ எப்போ லேசா ந‌ம்ம‌ ம‌ன‌சில‌ ஒரு ஆசை துளிர் விட‌ ஆர‌ம்பிக்குதோ, அவ‌ங்க‌ என்ன‌ நெனச்சாலும் ‍‍‍ப‌ர‌வாயில்ல‌. ந‌ம்ம‌ளுக்கு திரும‌ண‌ம் ஆயிருச்சுன்னா, அந்த‌ உற‌வை ந‌ம்ம‌ அப்டியே நிறுத்திக்கிற‌து மூல‌மா, ந‌ம்ம‌ இந்த‌ மாதிரி ஒரு சூழ்நிலை வ‌ராம‌ல் பார்த்துக்க‌லாம். ந‌ம்ம‌ளுக்கு ந‌ம்ம‌ தான் வேலி போட‌னும். இதையெல்லாம் உண‌ராம‌ல் ஏன் திரும‌ண‌ம் ஆன பெண்க‌ள்/ஆண்க‌ள் த‌ட‌ம் மாறுகிறார்க‌ள்?இந்த‌ த‌டுமாற்ற‌த்துக்கு யார் கார‌ண‌ம்/எது கார‌ண‌ம்? உங்க‌ள் கருத்துக்க‌ளை இங்கே ப‌திவு செய்யுங்க‌ள்