Saturday, January 22, 2011

செய்திக‌ள் யோசிப்ப‌து க‌ல்யாணி ‍‍(22.01.11)

* உங்க‌ வீட்டில‌ முருங்கை ம‌ர‌ம் இருக்கா? அப்போ நீங்க‌ பெரிய்ய்ய்ய்....ய‌ ப‌ண‌க்கார‌ங்க‌ ஆயிர‌லாம் அப்ப‌டின்னு நான் அடிச்சு சொல்றேன். ஏன்னா, ஒரு முருங்கைக்காய் விலை இன்னைக்கு நில‌வ‌ர‌ப்படி ஒரு காய் 26 ரூபாயாம். அம்மாடியோவ் ! ரொம்ப‌ அநியாய‌மா இருக்குல்ல‌..


* உங்க‌ வீட்டில‌ எங்கேயாவ‌து ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்ல‌ கூரை போட்டுருக்கீங்க‌ளா?ஆஸ்பெஸ்டாஸ் உட‌ல் ந‌ல‌த்துக்கு இல்லை அப்டின்னு ஒரு பொது ந‌ல‌ அமைப்பு உச்ச‌ நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்த‌து. அந்த‌ வ‌ழ‌க்கில் நேற்று உச்ச‌ நீதிம‌ன்ற‌த்தின‌ தீர்ப்பு என்ன‌ன்னா இந்த‌ விஷய‌த்தில் உற்ப‌த்தியை நிறுத்த‌ சொல்லி ம‌றுப்பு வ‌ழ‌ங்க‌ முடியாது என்று தீர்ப்பு வ‌ழங்கியுள்ள‌து. என்ன‌ ஒரு பொறுப்புள்ள‌ தீர்ப்பு... இருந்தாலும் இது உட‌ல் ந‌ல‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம்ங்ற‌த‌னால‌ ந‌ம்ம‌ தான், ந‌ம்ம‌ வீட்டுக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வேண்டுமா, வேண்டாமான்னு முடிவு ப‌ண்ண‌னு, ரைட்டா?