Tuesday, October 27, 2009

சாம்பார் என்ற‌ பெய‌ர் சாம்பாருக்கு எப்ப‌டி வ‌ந்த‌து?


சாம்பார் என்ற‌ பெய‌ர் சாம்பாருக்கு எப்ப‌டி வ‌ந்த‌து?

நெற‌ய‌ வீடுக‌ளில் தின‌மும் சாம்பார் வ‌ச்சே கொல்லுவாங்க‌. நெஜமாவே சாம்பாருக்கு பேர் வ‌ந்த‌துக்கு கார‌ண‌ம் சாம்பாஜி எனும் ஒருத்த‌ர். சாம்பாஜிக்கும், சாம்பாருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் அப்டின்னா,ம‌ராட்டிய‌ அர‌ச‌ர் ச‌த்ர‌ப‌தி சிவாஜியின் ம‌க‌ன் தான் சாம்பாஜி. ம‌ராட்டிய‌ர்க‌ள் அம்டி அப்டின்ற குழம்பை தான் முத‌ல்ல சாப்டுகிட்டு இருந்தாங்க‌. புளிக்கு ப‌திலாக‌ கோக்கும் அப்டின்ற‌ ஒரு ப‌ழத்தை ப‌ய‌ன்ப‌டுத்தினாங்க‌. அப்ற‌மா, அந்த‌ கோக்கும் கிடைக்காம‌ல் ரொம்ப‌ த‌ட்டுப்பாடாக‌ ஆன‌தால் , புளியை ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பிச்சாங்க‌. புளியை க‌ரைச்சு, துவ‌ர‌ம்ப‌ருப்பு, காய்க‌றி இதெல்லாம் போட்டு குழம்பு வ‌ச்சாங்க‌. இந்த‌ குழ‌ம்பை அர‌ச‌வைக்கு விருந்தாளியாக‌ வ‌ந்த‌ சாம்பாஜிக்கு முத‌ல்ல‌ குடுத்தாங்க‌. சாம்பாஜி முத‌லில் சாப்பிட்ட‌தால் சாம்பாருக்கு சாம்பார் அப்டின்னு பெய‌ர் வ‌ந்த‌து.

10 comments:

  1. ம்ம்

    நம்புற மாதிரிதான் இருக்கு

    நன்றி தகவலுக்கு...

    ReplyDelete
  2. இன்னுமா இந்த ஊரு நம்புது ?

    ReplyDelete
  3. பல தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள். எல்லாமே - புதுசா இருக்கு. - எதுவும் பீலா கிடையாதே மேடம்?

    ReplyDelete
  4. பு்து செய்திங்க.. அப்ப சாம்பார் நம்மூருது இல்லையா? நார்த் ல எல்லாரும் சாம்பார் சட்னி ந்னு சவுத் புகழ் பாடறாங்களேஎ:)

    pLease remove word verification

    ReplyDelete
  5. அட!!!!!!
    புதிய தகவலாக இருக்கிறதே...

    ReplyDelete
  6. யம்மா... அதுக்காக இப்படியா மா அடிச்சி விடறது??? இதுல வால் பையன் வேற "நல்ல தகவல்" னு சொல்றாரு... இபோதாவது சொல்லுங்க... சும்மா ஒரு டூப்பு தானே விடீங்க???

    ReplyDelete
  7. இது நிஜமான விஷயம் தான். இந்த மாதிரி அரிய தகவல்களை சேகரிப்பதில் எனக்கு அதீத ஆர்வம் உள்ளது. இது போன்று இன்னும் பல தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். இத்தகைய தகவல்கள் தொடரும். நான் சொல்வதெல்லாம் நிஜம். உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்பவாவது நம்புறீங்களாப்பா !

    ReplyDelete
  8. what ever you are telling are taken from some other books which may not be taken as a proof.

    i have seen many tamil books "per kaaranangal".

    But most of them do not have any truth in it

    ReplyDelete