Saturday, August 1, 2009

இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு போடாதீங்க‌ த‌டா:

இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு போடாதீங்க‌ த‌டா:
குழந்தைங்க‌ளுக்கு இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளை த‌ர்ற‌துக்கு த‌டா போட‌ற‌ பெற்றோரா நீங்க‌? குழந்தைங்க‌ளுக்கு இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளை கொடுத்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று ப்ரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.5 வயதில் இருந்து 10 வயது வரை உள்ள குழ்ந்தைகளுக்கு பெரியவர்களை விட 2 மடங்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறதாம். குளுக்கோஸ் உட்கொள்ளும் குழ்ந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதனால, இனிமேல் இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு போடாதீங்க‌ தடா !

தோல் பள பள என்று இருக்க வேண்டுமா?

தோல் பள பள என்று இருக்க வேண்டுமா?
உங்கள் தோல் மட்டும் சொரசொர என்று இருக்கிறது. ஸாஃப்ட் ஆக இல்லையே என்று ஃபீல் பண்றீங்களா? நாம் சாப்பாட்டை சமைத்து சாப்பிடுவதால், சாப்பாட்டில் இருக்கிற 'ஃப்லோரின்' சத்து போய் விடுகிறது. அதனால் என்ன பண்ணுங்க, பச்சை காய்கறி, பழங்கள்,ஆட்டுப்பால், வெண்ணெய் இதெல்லாம் சாப்பாட்டில் நிறைய சேர்த்து கொண்டால் தோல் பள பள என்று இருக்கும்.

அறிவாளியாக‌ உத‌வும் மீன் :

ஹெல்த் டிப்ஸ் :
அறிவாளியாக‌ உத‌வும் மீன் :
ஒரு பெரிய அறிவாளி ஆக வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே இருக்கும். அந்த ஆசையில் வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு, அது, இது என்று வெண்டைக்காய் நம்ம கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகி கொண்டு இருந்தது. இப்பொழுது ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா,15 வயதுக்கு மேல் இருப்பவர்கள் நிறைய மீன் சாப்பிட்டால் அறிவு வளரும் என்று கண்டுபிடிச்சிருக்காங்க. அறிவாளி ஆகனும்னு நினைப்பவர்கள் இனிமேல் மீனை மிஸ் பண்ணிராதீங்க!