Monday, August 5, 2013

டூ மினிட்ஸ் ரெசிபீஸ்


1) சௌசௌ ரெய்தா :-
சௌசௌ(பெங்களூர் கத்திரி) ஒன்றை தோல் சீவி பொடியாக நறுக்கி , ஆவியில் வேக வைத்து , சிறிய இஞ்சித்துண்டு, ஒரு பச்சை மிளகாய் , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும் .சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து , அரைத்த விழுதில் கொட்டு தயிர் கலந்து பரிமாறவும் ..

சௌசௌவை வேக வைக்காமல் ... இஞ்சி, பச்சை மிளகாயுடன் சேர்த்து, எண்ணெய்  விட்டு லேசாக வதக்கிசெய்தால் வாசனையாக இருக்கும் ..

2) ஸ்வீட் பொட்டேட்டோ  கீர் 

அரைலிட்டர் பாலை நன்றாக காய்ச்சி ஆறவிடவும் 100 கிராம் சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, அரை  கப் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் காய்ச்சிய பால், புட் கலர் சேர்த்ஹு அருந்தவும்.
கூடுதல் ருசிக்காக 2 டேபிள்ஸ்பூன் இனிப்பில்லாத கோவா சேர்க்கலாம் 

3) தனியா துவையல் :-
தனியா 50 கிராம் , கடலை பருப்பு உளுந்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய - 8, இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, சிறிய எலுமிச்சை அளவு புலி, தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டவும் . 
இது உப்புமா, இட்லி , தோசைக்கு தொட்டு சாப்பிட்ட சூப்பராக இருக்கும்.
ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலை கடைசியாக வறுத்து சேர்த்து அரைத்தால்  டேஸ்ட் கூடும்...