Monday, May 3, 2010

ஆராய்ச்சிக‌ள் சொன்ன‌ விஷய‌ங்க‌ள் - II ‍:



*எல்லாரும் 8 ம‌ணி நேர‌ம் தூங்கினா ந‌ல்ல‌துன்னு சொல்வாங்க‌. 100 வ‌ய‌சுக்கு மேல‌ உள்ளவ‌ங்க‌கிட்ட‌ ச‌ர்வே ப‌ண்ணிய‌தில், அவ‌ங்க‌ 10 ம‌ணி நேர‌ம் தூங்குவ‌தாக‌ சொல்லியிருக்காங்க‌. 100 வ‌ய‌சுக்கு மேல‌ வாழ்னும்னா, தினமும் இர‌வு 10 ம‌ணி நேர‌ம் தூங்க‌னும் அப்டின்னு ல‌ண்ட‌ன்ல‌ ஒரு ப‌ல்க‌லைக்க‌ழக‌ ஆய்வு சொல்லுது.அப்போ வேலைக்கு போக‌ வேண்டாமா?

*இனிமேல் க‌ல்லீர‌ல்ல‌ பிர‌ச்சினை இருந்துச்சுன்னா, திக்கா இருக்கிற‌ சாக்லேட் சாப்டுங்க‌ன்னு எழுதி குடுக்க‌ போறாங்க‌. என்ன‌, டார்க் சாக்லேட்ஸ் சாப்டா க‌ல்லீர‌ல் பிர‌ச்சினை போயே போயிருமாம் ‍‍
இதுவும் நானா சொல்ல‌லை. ஒரு ஆராய்ச்சி சொல்லுதுப்பா !

*உடம்பை குறைக்க‌னும்னு நெனைக்கிற‌வ‌ங்க‌ ந‌ல்லா குற‌ட்டை விட்டு தூங்குங்க‌. ஏன்னா குற‌ட்டை விடற‌த‌னால‌, நெறய‌ க‌லோரிக‌ள் குறையுதாம். பின்குறிப்பு: ஒல்லியா இருக்கிற‌வ‌ங்க‌ குற‌ட்டை விட்டால் நான் பொறுப்பு கிடையாது.

*முடி அட‌ர்த்தியா வ‌ள‌ர‌னும்னு ஆசையா இருந்தால் ஜோஜோபா ப‌ழத்தில் இருந்து எடுக்கிற‌ எண்ணெய்ல‌ கிடைக்கிற‌ ஷாம்பூக்க‌ளை போட்டு, முடியை ந‌ல்லா ம‌சாஜ் செஞ்சா, கூந்தல் அட‌ர்த்தியாகும்.