Friday, December 11, 2009

ப்ளேபாய்ஸ்ட‌ உஷாரா இருந்துகோங்க‌ப்பா !


ஆண்க‌ள்லாம் இந்த‌ மேட்ட‌ர‌ மிஸ் ப‌ண்ணீராதீங்க‌. உட‌னே உங்க‌ கையில் 2வ‌து & 4வ‌து விர‌லை பாருங்க‌. விர‌ல்களோட‌ அள‌வை வ‌ச்சு ஒரு ஆணோட‌ குண‌த்தை சொல்லிர‌லாம் அப்டின்னு லேட்ட‌ஸ்ட் ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது. ஆணோட‌ விர‌ல்க‌ள்ல‌, 4ஆவ‌து விர‌ல் 2வ‌து விர‌லை விட‌ பெரிசா இருந்துச்சுன்னா ஆள் ச‌ரியான‌ ப்ளே பாயாம். ஆண்க‌ளுக்கு டெஸ்டோஸ்டீரோன் என்ற‌ ஹார்மோன் நெற‌ய‌ இருந்துச்சுன்னா, 2வ‌து விர‌லை விட 4ஆவ‌து விர‌ல் கொஞ்ச‌ம் நீள‌மா வ‌ள‌ருமாம். 4ஆவ‌து விர‌ல் பெரிசா இருக்ற‌ ஆண்க‌ள், பெண்க‌ள் விஷய‌த்தில‌ கொஞ்ச‌ம் அப்டி இப்டித்தான் இருப்பாங்க‌ அப்டின்னு ஆராய்ச்சியாள‌ர்க‌ள் சொல்றாங்க‌. ஒகே. இந்த‌ ப்ளேபாய்ஸ் எப்டிப‌ட்ட‌வ‌ங்க‌ அப்டின்னா, முதல்ல‌ வ‌ழிஞ்சுட்டு வ‌ந்து பேச‌ மாட்டாங்க‌. முத‌ல் ச‌ந்திப்பில‌ க‌ண்டுக்காம‌ ரொம்ப‌ அமைதியா இருப்பாங்க‌. ஆஹா, இவ்ளோ ந‌ல்ல‌வ‌ரான்னு ந‌ம்ம‌ நெனைப்போம். ந‌ம்ம‌ ம‌னசில‌ ந‌ல்ல‌ அபிப்ராய‌ம் வ‌ந்த‌ உட‌னே, ஈசியா பேசி மட‌க்கிருவாங்க‌. முத‌ல்ல‌ பாக்கிற‌ப்போ மொபைல் ந‌ம்பர் கேப்பாங்க‌. அப்ற‌ம் மெசெஜ் வ‌ரும். அப்ற‌ம் அந்த‌ மெசெஜ்ல‌ ஹ‌னி, பேபி, ஸ்வீட்டி, டிய‌ர் அப்டின்னு மெதுவா மெதுவா செல்ல‌மான‌ வார்த்தைக‌ள் வ‌ரும். அப்ற‌மா எங்கே மீட் ப‌ண்ண‌லாம்னு கேப்பாங்க‌. நெஜ‌மான‌ காத‌லா இருக்காது. pick up., drop, escape...பெண்க‌ள் ப்ளேபாய்ஸ்ட‌ உஷாரா இருந்துகோங்க‌ப்பா !

21 comments:

  1. ஏங்க..இப்படி எங்களை பத்தி எல்லா உண்மையையும் புட்டுபுட்டு வைச்சிட்டீங்களே!!!
    ஆண்கள் சார்பா இதை நான் மென்மையாக..ஸாரி..வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  2. ஹலோ மேடம் இடது கையா ? இல்ல வலது கையா ?

    அப்புறம் இன்னொரு டவுட் கட்டை விரல் பக்கம் இருந்து வரனுமா ?

    இல்ல சுண்டு விரல் பக்கம் இருந்து வரனுமா ?

    விளக்கவும்

    ReplyDelete
  3. //ந‌ம்ம‌ ம‌னசில‌ ந‌ல்ல‌ அபிப்ராய‌ம் வ‌ந்த‌ உட‌னே, ஈசியா பேசி மட‌க்கிருவாங்க‌//

    ந‌ல்ல‌ அபிப்ராய‌ம் வ‌ர‌துக்கு எவ்வ‌ள‌ க‌ஷ்ட‌ப‌ட‌னும் தெரியுமா?

    ReplyDelete
  4. என்னமா ஆராய்ச்சி பண்ணியிருக்காங்கப்பா!!!

    ஆனா, இந்த விரல் கவுன்டிங் எப்படி ஆரம்பிக்கறது...கட்டை விரல் ஆர் சுண்டு விரல்?

    ReplyDelete
  5. ஏன் மேடம் இப்படி அநியாயம் பன்றிங்க...
    இப்படி எதையாவது சொல்லி குடும்பத்துல குழப்பமாக போகுது..
    ஆனா படிச்சிட்டு என் விரலை மாத்தி மாத்தி பாத்தது என்னவோ உண்மைதான்..
    இப்படி திடிர்னு குழப்புன்ன என்னதான் செய்றது...

    ReplyDelete
  6. ந‌ன்றி ! அன்புட‌ன் ம‌லிக்காவுக்கு ந‌ன்றி !

    ReplyDelete
  7. ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌க்குமார் !

    ReplyDelete
  8. ப்ரியா ந‌ன்றி ! சுண்டு விரல் 2வ‌து விரல் & மோதிர‌ விர‌ல் 4வ‌து விர‌ல்

    ReplyDelete
  9. ந‌ன்றி பூங்குன்ற‌ன் இதை ரொம்ப‌ சீரிய‌ஸா எடுத்துக்காதீங்க‌ ! ஏன்னா இதை நானா சொல்லல. ஆராய்ச்சியில் க‌ண்டுபிடிச்ச‌ விஷ‌ய‌ம் இது

    ReplyDelete
  10. ந‌ன்றி வாசிக்க‌ம‌ட்டும் !எந்த‌ கையைன்னாலும் பார்க்க‌லாம். சுண்டு விரல் 2வ‌து விரல் & மோதிர‌ விர‌ல் 4வ‌து விர‌ல்

    ReplyDelete
  11. ந‌ன்றி க‌ரிசல்கார‌ன் !

    ReplyDelete
  12. ப்ரியா & க‌ம‌லேஷ் ந‌ன்றிங்கோ !

    ReplyDelete
  13. எந்த கையைப் பார்த்தாலும் அந்த விரல் நீளமாத் தான் இருக்கு.

    ReplyDelete
  14. ஆஹா என்ன ஓர் ஆராய்ச்சி.. நானும் விரல்களை பார்த்தேன்... 4வது விரல் நீளமா தான் இருக்கு... ஆனா நீங்க சொல்லுவது போல ஏதும் நடக்கவில்லையேன்னு யோசிக்கிறேன்..

    நட்புடன்
    ஆரி

    ReplyDelete
  15. இந்த ஆராய்ச்சியெல்லாம் யாருங்க பண்ணுனது? யாரோ கையுறை உற்பத்தி பண்ணுறவங்களோட வியாபார தந்திரமாயிருக்குமோ? வேண்ணா பாருங்க, இதைப் படிச்சவங்க இனிமேல் க்ளவுஸ் போட்டுக்கிட்டுத் தான் சுத்தப்போறாங்க! (எங்கே கிடைக்குதுண்ணு விசாரிக்கணும்!)

    ReplyDelete
  16. நானும் கொஞ்ச‌ நாளாக‌ ஆண்க‌ளை பார்க்கிறப்போ அவ‌ங்க‌ விர‌ல்க‌ளை ப‌ற்றித்தான் கேட்கிறேன்.

    ReplyDelete
  17. //சுண்டு விரல் 2வ‌து//
    சுண்டு விரலா? சுட்டு விரலா(ஆட்காட்டி விரலா?)

    ReplyDelete
  18. ஆட்காட்டி விரல் 2வ‌து விரல் Correct?

    ReplyDelete
  19. nalla irukku unga result

    ReplyDelete