Friday, April 30, 2010

சுறா பார்க்க‌ போற‌வ‌ங்க‌ காதில‌ பூவா?


தமிழ்ல‌ இருக்கிற‌ சான்ஸை எல்லாம் விட்டுட்டு ஹிந்தி ப‌டங்க‌ள்ல‌ ந‌டிக்க‌ப் போன‌ அசினுக்கு அங்கே நெற‌ய‌ ஹிந்தி ந‌டிக‌ர்க‌ள் அசினோட‌ விய‌ர்வை ரொம்ப‌ ஸ்மெல் அடிக்குது. அத‌னால அசின் கூட‌ ந‌டிக்க‌ மா‌ட்டேன் அப்டின்னு சொன்ன‌தா பேச்சு அடி ப‌ட்டுச்சு.இருந்தாலும் அசினுக்கு இவ்ளோ சிக்கல் வ‌ர‌க்கூடாது. . போன‌ வார‌ம் ந‌டிகை அசின் காவ‌ல்கார‌ன் ப‌ட‌ சூட்டிங்க்ல‌ இருந்த‌ப்போ ஒரு க‌தை ந‌ட‌ந்திருக்கு. ஹீரோ விஜ‌ய்ட்ட‌ போய் என‌க்கு ரொம்ப‌ போர் அடிக்கு. ஏதாவ‌து பார்ட்டி வைக்க‌லாமான்னு கேட்டிருக்காங்க‌ அம்ம‌ணி. உட‌னே அவ‌ரும் ஒகேன்னு சொல்லியிருக்கார். ஆனா பார்ட்டிக்கு வ‌ர்ற‌ எல்லாரும் ஒரு காதில பூ வச்சிட்டு வ‌ர‌னும் அப்டின்னு ரூல் போட்டிருக்காங்க‌ அசின். அதிலயும் ஆண்க‌ள் இட‌து காதில‌யும், பெண்க‌ள் வ‌ல‌து காதில‌யும் பூவை வ‌ச்சிட்டு வ‌ர‌னும் அப்டின்னு அடுத்த‌ ரூல் வேற‌. ஆனால், கூத்து என்ன‌ன்னா பார்ட்டிக்கு வ‌ந்த‌ அத்த‌னை பேரும் காதில‌ பூ வ‌ச்சிக்கிட்டு வ‌ந்தாங்க‌ளாம். (நடிக‌ர் விஜ‌யும் தான்). செத்து செத்து விளையாடுற‌ மாதிரி அசின் காதில‌ பூ வ‌ச்சி வ‌ச்சி விளையாண்டு இருக்காங்க‌. இந்த‌ பார்ட்டியில‌ எவ்ளோ விஷ‌ய‌ம் இருந்தாலும் எல்லா மீடியாக்க‌ளும் இப்போ அத‌யெல்லாம் ப‌த்தி பேசாம‌, இந்த‌ பூ விளையாட்ட‌ ப‌த்தி தான் பேச‌றாங்க‌ளாம். பொய் சொல்ற‌துக்கு காதில‌ பூ வைக்கிற‌துன்னு எந்த‌ அர்த்த‌த்தில‌ யார் சொல்லிட்டு போன‌துன்னு தெரிய‌ல. அடுத்த‌வ‌ங்க‌ காதில‌ பூ வைக்கிற‌த‌ பொய் சொல்ற‌துன்னு சொல்றோம். அப்போ அடுத்த‌வ‌ங்க‌ த‌லையில‌ பூ வைக்கிற‌த‌ என்ன‌ன்னு சொல்ற‌து? ஆனால் சன் பிக்ச‌ர்சூக்கு அடிமையாகி விட்ட‌ விஜ‌ய் ப‌ட‌ங்க‌ளும் ர‌சிக‌ர்க‌ள் காதுல‌ பூ வைக்க‌ தானே செய்யுது.
பின் குறிப்பு: சுறா பட‌ம் பார்க்க‌ போற‌வ‌ங்க‌ காதில‌ பூ வைத்துக் கொண்டு போக‌வும்.....

Sunday, April 25, 2010

நொந்து நொறுங்கி உள்ள‌ தாமிர‌ப‌ர‌ணி பால‌த்தின் கோல‌ம்:

சென்ற‌ வார‌ம் அலுவ‌ல‌க‌ம் போய்விட்டு வ‌ர்ற‌ப்போ, சாய‌ங்கால‌ம் சீக்கிர‌மே கிள‌ம்பியும், வ‌ல்ல‌நாடு தாமிர‌ப‌ர‌ணி பால‌ம் ப‌க்க‌த்தில் ஏற்ப‌ட்ட‌ டிராபிக் ஜாமால் பாலம் பக்க‌மே ஒரு ம‌ணி நேர‌ம் பேருந்து நின்ற‌து. வீட்டிற்கு போக‌ ஒரு ம‌ணி நேர‌ம் தாம‌த‌ம் ஆனால் பர‌வாயில்லை. வீட்டிற்கு உயிரோடு போவோமா என்ற‌ கேள்வியே எல்லாருடைய‌ ம‌ன‌திலும் இருந்த‌து. இந்த‌ போக்கு இன்று நேற்று அல்ல‌. க‌ட‌ந்த ஒரு வ‌ருட‌மாக‌வே ப‌ய‌ணிக‌ளை ரொம்ப‌ பாதித்து வ‌ருகிற‌து. தூத்துக்குடியிலிருந்து நெல்லை நோக்கி வ‌ந்த‌ ம‌ண‌ல் ஏற்றி வ‌ந்த‌ ஒரு லாரியும், தூத்துக்குடி நோக்கி நாங்க‌ள் சென்று கொண்டிருந்த பேருந்தும் ந‌டு பால‌த்தில் சிக்கி கொண்ட‌ன‌. இந்த‌ தாமிர‌ப‌ர‌ணி பால‌ம் மிக‌ குறுகலான‌ பால‌ம். ஒரு பேருந்து ம‌ட்டுமே ஒரு நேர‌த்தில் போக‌ முடியும். எதிர் ப‌க்க‌த்தில் இருந்து எந்த‌ வாக‌ன‌மும் வ‌ர‌ முடியாது.அத‌னால், எதிர்ப‌க்க‌த்திலிருந்து வ‌ரும் வாக‌ன‌ங்க‌ள் ஒரு 2 நிமிட‌ங்க‌ள் பொறுத்தால், பிர‌ச்சினை இல்லாம‌ல் டிராபிக் க்ளிய‌ர் ஆகி விடும். ஆனால் பொறுமைய‌ற்ற‌ ஓட்டுன‌ர்க‌ளால் லாரியும் மூவ் ப‌ண்ண‌ முடியாது. பேருந்தையும் ஒரு இன்ச் கூட‌ ந‌க‌ர்த்த‌ முடியாது. அப்ப‌டி ஒரு நிலைமை. பேருந்தின் வாச‌லும்,ஏற்கென‌வே உடைந்து மிக‌ மோச‌மாக‌ உள்ள‌ பால‌த்தின் கைப்பிடிச்சுவ‌ரும் உர‌சிக்கொண்டு இருந்த‌து. பேருந்தை ந‌க‌ர்த்த‌ முடியாத‌ நிலையில் ப‌ய‌ணிக‌ளாவ‌து இற‌ங்கி ந‌ட‌ந்து போக‌லாமென்றால்,பேருந்தின் ஒரே ஒரு வாச‌லும் இப்ப‌டி சிக்க‌லில் மாட்டிக்கொண்ட‌து. ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் வ‌ந்து போட்டோ, வீடியோ என்று எடுத்து த‌ள்ளினர். 1/2 ம‌ணி நேர‌ம் க‌ழித்து போலீஸ் வ‌ந்து ஓட்டுன‌ர்களுக்கு இடையிலான‌ சண்டையை தீர்த்து வைத்து பின்ன‌ர் பேருந்து கிள‌ம்பிய‌ பிற‌கு தான் உயிரே வ‌ந்த‌து. 'என‌க்கென்ன‌, அப்டி ஒரு இடி இடிச்சு ப‌ஸ்ஸை த‌ள்ளி விட்டா அவ்ளோ தான்‍‍'‍‍‍....இது லாரியின் ஓட்டுன‌ர் சொன்ன‌ வார்த்தைக‌ள் ,ஒவ்வொரு நேர‌மும் பால‌த்தை க‌ட‌க்கும் போது நினைத்தாலே பயமாக‌ இருக்கிற‌து.சும்மா முக்குக்கு ஒரு சிக்னல்ல‌ நிக்க‌ விட‌ற‌ டிராபிக் போலீஸை இந்த‌ ஆபத்தான‌ பால‌த்தில‌ நிற்க‌ விட‌லாம்ல‌. முக்கிய‌மான் வி.ஐ.பி(அர‌சியல்வாதி) வ‌ந்தால்தான் இங்கே டிராபிக் போலீஸை நிற்க‌ விடுவாங்க‌ளாம். அப்போ ந‌ம்ம‌ உயிர் என்ன‌ செல்லாக்காசா? பேருந்து பால‌த்தின் கீழ் உள்ள‌ ஆற்றில் க‌விழ்ந்து விழுந்த பிறகு ஐயோ அம்மானு எடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை இப்போவே எடுத்தா நெற‌ய‌ உயிர்க‌ள் காப்பாற்ற‌ படுமே?