பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Wednesday, November 2, 2011
புதிர் விளையாட்டு 2
காலை வணக்கம்....
தூங்கி எந்திரிச்ச உடனேயே கடமையே கண்ணாக முதல்ல புதிர் கேள்வியைத்தான் போடுறேன். இன்னைக்கு புதிர் கேள்விக்கு போவோமா......
1)ஒரு பயங்கரமான காடு. இந்த காட்டுக்குள்ளே ஒரு பாழடைந்த வீடு இருக்கு. இந்த வீட்டில் ஊர்ல உள்ள எல்லா எலியும் இந்த வீட்டுக்குள்ளே படையெடுத்து ரொம்ப தொல்லை பண்ணுது. ஆனால் இந்த வீட்டில் ஏகப்பட்ட பூனைகளை வேற வைத்திருக்காங்க. இரு ந்தாலும் ஒரு எலி கூட பூனையை பார்த்து பயப்பட மாட்டேங்குது. ஏன்?
2)எப்பவுமே நம்ம துவைத்து துணியை காய போடறப்போ துணி கீழே விழக்கூடாதுன்னு துணிக்கு க்ளிப் போடுவோம்ல? அதே மாதிரி துணியை காயப்போடட்டு ராணி துணிக்கு க்ளிப் போடறாங்க. ஆனால் மறு நாள் வந்து பார்க்கிறப்போ எல்லா க்ளிப்பும் கீழே விழுந்து கிடக்கு. ஆனால் இவங்களோட பக்கத்து வீட்டு மாலா ரொம்ப பந்தா பண்ணுவாங்களாம், ஏன்னா, அவங்க வைத்த க்ளிப் மட்டும் அதே இடத்திலேயே இருக்குதாம். எப்படி?
ட்ரை பண்ணுங்க.
மீண்டும் இன்று மாலை ஹெல்த் நியூஸூடன் சந்திப்போமா?
தெரிந்த உணவு தெரியாத விஷயம் :
என்னடா இது, அவள்லாம் தூள் திவ்யா மாதிரி இருக்கா, நம்ம மட்டும் டல் திவ்யா மாதிரி இருக்கோமே, என்னத்த சாப்டாலும் ம்ஹூம், ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குதே அப்டின்னு கவலைப்படறீங்களா?
விட்டமின் A இருக்கிற உணவுகளை நல்லா சாப்பிட்டால் தோல் பளபளன்னு இருக்குமாம். முடி நல்லா வளருமாம், ரொம்ப முக்கியமான விஷயம் தலையில் பொடுகுல்லாம் காணாமல் போயிருமாம். இந்த விட்டமின் A எதிலேல்லாம் இருக்கு அப்டின்னா கேரட், அன்னாசிப்பழம், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, பசலைகீரை, தக்காளி, பால், சீஸ், தயிர், சிக்கன், மீன், முட்டை இந்த மாதிரி எல்லாம் நீங்க சாப்பிட்டுகிட்டு வந்தீங்கன்னா, உங்களோட தோல் பளபளன்னு ஆயிருமாம். ட்ரை பண்ணி பாருங்க......
Labels:
கேரட்,
சிக்கன்,
சீஸ்,
தக்காளி,
தயிர்,
தோல்,
பசலைகீரை,
பால்,
விட்டமின் A
புதிர் விளையாட்டு
எல்லாருக்கும் வணக்கம்....
ரொம்ப நாளாயிட்டு..ப்ளாக் பக்கமே வரமுடியலை. அநேகமா இன்னைல இருந்து தினமும் பதிவு போட்டிருவேன்னு நினைக்கிறேன். முடிவே பண்ணிட்டேன் தினமும் எப்படியாவது ஒரு பதிவை போட்டுட்டுதான் அடுத்த வேலை அப்டின்னு...
இனிமேல் தகவல்களோடு எப்படியும் ரெண்டு புதிர்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த புதிர்களுக்கு உங்கள் பதில்களை நீங்க போடலாம்....
புதிர் விளையாட்டு :
1)என்கிட்ட ரெண்டு ரூபாய் தாள்கள் இருக்கு. அதை கூட்டினால் 150ரூபாய் வரும். ஆனால்,அதில் ஒன்று 50 ரூபாய் தாள் இல்லை. அப்டின்னா என்கிட்ட இருக்கிறது என்னென்ன ரூபாய் தாள்கள் இருக்கு?
2)4 பேர் மொத்தம் 18 மெழுகுவர்த்திகளை வாங்கி அவர்களுக்குள் பிரிச்சிக்கிறாங்க.
அ) அபிகிட்ட 18 மெழுகுவர்த்திகள்ல 2 பங்கு இருக்கு.
ஆ) ஆனந்த்கிட்ட அபியை விட ரெண்டு மடங்கு அதிகமா இருந்துச்சு
இ) சார்லிகிட்ட ஆனந்தை விட 2 மடங்கு அதிகமா இருந்துச்சு
ஈ) டேவிட்கிட்ட அபியை விட 2 மெழுகுவர்த்தி கூடுதலா இருந்துச்சு.
ஒவ்வொருத்தர்கிட்டேயும் எத்தனை மெழுகுவர்த்தி இருக்கு?
இந்த புதிர் கேள்விகளுக்கு பதில் ட்ரை பண்ணி என்ஜாய் பண்ணுங்க......
நாளைக்கு சந்திக்கலாமா?
Subscribe to:
Posts (Atom)