போன வாரம் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போக தாமதம் ஆயிட்டு. பேருந்தில் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்த ஒரு நபர் ஒரே நேரத்தில் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்ணிடமும், அவளோட அம்மாவிடமும் சில்மிஷம் செய்தான். ஆனால் அவர்கள் இருவரும் வெளியே சொல்ல பயந்து "ஆண்கள் பின்னால் நிற்க வேண்டியது தானே" என்று கேட்க, ஒரு அப்பாவி பெரியவர் 'அப்போ நீ கார்ல வர வேண்டியது தானே? என்று நடந்த விஷயம் தெரியாமல் கேட்க, பேருந்தில் எல்லாரும் அந்த ஆளைத்தான் தப்பாக நினைத்தனர். (நானும் அப்படித்தான் நினைத்தேன்). கடைசியில் பேருந்தை விட்டு இறங்கும் போது தான் அந்த அம்மா கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரம் பொறுத்து கொண்டிருந்த விஷயத்தை போட்டு உடைத்தது. என்ன ஒரு பொறுமை? தேவையில்லாத பயம் தான் இதற்கு காரணம். பெண்கள் எப்போ தைர்யமா இருக்காங்களோ, அன்னைக்கு தான் இந்த சில்மிஷவாதிகள் திருந்துவார்கள் என்று தோன்றுகிறது
என்னோட முதல் கவிதை:
இரவு நேர பேருந்து பயணம்
இரவு நேரம்
பேருந்தில் திரளான கூட்டம்
படிக்கட்டில் ஒரு நபர்
இருக்கையில் ஒரு பெண்ணை கையால் செய்கிற சில்மிஷங்கள்
பெண்ணுக்கு அதிர்ந்து கூட பேச முடியாத இறுக்கமான சூழல்
விஷயம் வெளியே தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம்,
பெண்ணின் முகத்தில்..
இறுதியில் நின்று கொண்டிருக்கும் மற்றொரு நபர்
விஷயத்தை அப்பட்டமாக உடைத்தார்..
கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்துவதில் ஏன் தயக்கம்?
இவ்வளவு நேரம் மௌனம் காத்தது ஏன்
பெண்ணே! வெளியே வா ...
கட்டுக்களை விட்டு வெளியே வா!