Tuesday, December 1, 2009

க‌மல் சினிமாவில் நாய‌க‌ன் ம‌ட்டும் அல்ல‌.. நிஜ‌மான நாய‌க‌ன் (நிஜ‌ ஹீரோ).......


இன்று உலக எய்ட்ஸ் தினம். எச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பெற்றால்தான் பிள்ளையா? என்ற ஒரு மாத கால பிரசார இயக்கத்தை `பாபுலேஷன் சர்வீசஸ் இன்டர்நேஷனல் என்ற அரசு சார்பற்ற அமைப்பும், ஹலோ எப்.எம். நிறுவனமும் இணைந்து இன்று தொடங்குகின்றன.
இந்த ஒரு மாத காலத்தில், ஹலோ எப்.எம்.மில், எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயின் தீமைகளைப் பற்றி நேயர்களுக்கு எடுத்துரைக்கப்படும். அத்துடன், எச்.ஐ.வி-எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போல கருதி, உதவ முன்வருமாறு பிரசாரம் செய்யப்படும்.
ஒரு குழந்தைக்கு ரூ.750 நன்கொடை அளிக்குமாறு நேயர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். நேயர்கள் அளிக்கும் ரூ.750 நன்கொடையை வைத்து, அந்த குழந்தையின் பெயரில் சுகாதார காப்பீடு எடுக்கப்படும். இது அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு பயன்படும்.
இந்த பிரசார இயக்கத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி- எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.. இன்றைக்கு காலை ஹ‌லோ எப்.எம்.மில் கம‌ல‌ஹாச‌ன் அவ‌ர்க‌ளுட‌ன் நேர்முக‌ம் ஒலிப‌ர‌ப்பாகிய‌து. அதில் எய்ட்ஸால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குழந்தைக‌ளுக்கு ஒரு இல்ல‌ம் அமைத்து செய‌ல்ப‌டுத்தி வ‌ரும் ஒருவ‌ருட‌ன் க‌ம‌ல் பேசிய‌து ரொம்ப‌ உண‌ர்வு பூர்வ‌மாக‌ இருந்த‌து. அந்த‌ நிறுவ‌ன‌ர் எய்ட்ஸால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குழந்தைக‌ளை பைக்கில் வைத்து வெளி இட‌ங்க‌ளுக்கு அழைத்து போவ‌தாக‌வும், தன‌து த‌ந்தை போல‌ உண‌ர்வு அந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஏற்ப‌டுவ‌த‌ற்காக‌ அவ்வாறு செய்வ‌தாக‌வும் கூறினார்.. உட‌னே க‌ம‌லும் அப்ப‌டி ஏதாவ‌து குழந்தைக‌ளை வெளியில் கூட்டிட்டுபோகும் வேலை இருந்தால் எனக்கும் சொல்லுங்க‌ள் நானும் வ‌ருகிறேன் என்று சொன்னார். ஏற்கென‌வே என‌க்கு க‌மலை ரொம்ப‌ ரொம்ப‌ பிடிக்கும். நான் ப‌ன்னிர‌ண்டாம் வ‌குப்பில் ப‌டிக்கும் போது தேவ‌ர் ம‌க‌ன் ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌து. க‌ம‌லின் ஆளுய‌ர‌ க‌ட் அவுட்சை என் அறையின் சுவ‌ர்க‌ளில் ஒட்டி வைத்திருக்கும் அள‌வுக்கு க‌ம‌லை என‌க்கு பிடிக்கும். என் த‌ம்பி ர‌ஜினி ர‌சிக‌ன். அத‌னால், என‌க்கும் என் த‌ம்பிக்கும் க‌ம‌ல், ர‌ஜினி பெய‌ரை சொல்லி ரொம்ப‌ அடிபிடு ச‌ண்டை ந‌ட‌க்கும். கம‌ல் செய்யும் ச‌மூக‌ சேவை என‌க்கு க‌ம‌ல‌ஹாச‌ன் மேல் இன்னும் இன்னும் ம‌திப்பை கூட்டியுள்ள‌து.