பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Wednesday, January 27, 2010
ஆண்கள் பெண்களின் மேக் அப் பொருட்களை எடுக்கிறார்கள் ....பரபரப்பு குற்றச்சாட்டு..
காலைல கெளம்பிற நேரம் பார்த்து சீப்பை காணல, பவுடர காணல அப்டின்னா செமயா டென்ஷனா இருக்கும்ல , ஆனால், பெண்களே, இனிமேல் இந்த மாதிரி மாய்சரைசர், லிப்ஸ்டிக், சீப்பு இதெல்லாம் காணலன்னா, உடனே உங்க கணவர்ட போய் கேளுங்க. ஏன்னா, இப்போல்லாம் நெறய ஆண்கள் அவங்க மனைவியோட மேக் அப் பொருள்களை அவங்களுக்கு தெரியாமல் எடுத்து பயன்படுத்தறாங்க அப்டின்னு கிட்டத்தட்ட 2000 ஆண்கள்ட லண்டன்ல ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க. நெறய ஆண்கள் தெரியாம எடுத்திருக்காங்களாம். சில ஆண்கள் மனைவிட்ட சொல்லிட்டு, மனைவிக்கு தெரிஞ்சு மேக் அப் போடறாங்களாம். சிலர் தெரியாம எடுக்கிறப்போ பார்த்து லபஞு மனைவிகிட்ட பிடிபட்டிருக்காங்களாம். இந்த மாதிரி ஆண்கள் பெண்கள்ட இருந்து என்ன மேக் அப் பொருள்கள்லாம் எடுத்தாங்கன்னு அதயெல்லாம் கூட ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்காங்களாம். அது என்ன என்ன பொருள்கள் தெரியுமா?1)மஸ்கரா2)லிப்ஸ்டிக்3)மாய்சரைசர்4)லிப் க்ளாஸ்5)ஹேர் ஸ்டைல் பண்ற பொருட்கள்6)ஃபவுன்டேஷன்7)ஃபேஸ் மாஸ்க்8)ஹேர் ட்ரையர்இதெல்லாம் ஆண்கள் அவங்க மனைவிகிட்ட இருந்து தெரியாமல் எடுத்து பயன்படுத்தறாங்களாம். இத வாசிக்கிறப்பவே நெறய ஆண்கள் கள்ளி எப்டி இவ்ளோ கரெக்டா சொல்ற அப்டின்னு கேக்கலாம். என்ன பண்றது கொஞ்சம் புத்திசாலியா படைக்க சொல்லி எங்க அம்மா வேண்டினத்துக்கு போய் இவ்ளோ புத்திசாலியா கடவுள் என்னைய படைப்பார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.(ஓ.கே. கூல் .. கூல்....)
Subscribe to:
Post Comments (Atom)
//கொஞ்சம் புத்திசாலியா படைக்க சொல்லி எங்க அம்மா வேண்டினத்துக்கு போய் இவ்ளோ புத்திசாலியா கடவுள் என்னைய படைப்பார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.//
ReplyDeleteஅகில உலக புத்திசாலி கல்யாணி.....
இதுக்கெல்லாமா ஆராய்ச்சி நடத்துறாய்ங்க...? என்னாது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?
ReplyDelete