Sunday, May 16, 2010

குழந்தைக‌ளோட‌ ச‌ந்தோஷ‌த்தில‌ 10% கோவிந்தா, கோவிந்தா..


சில‌ வீடுக‌ள்ல‌ அப்பா,அம்மா 2 பேரும் ரொம்ப‌ உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்டு ப‌திலுக்கு ப‌தில் பேசிகிட்டே இருப்பாங்க‌. இப்போல்லாம் இது எந்த‌ ரேஞ்சுக்கு வ‌ந்துட்டு அப்டின்னா, போடா, போடி அப்டின்னு க‌ந்தசாமி ப‌ட‌பாட்டில‌ வ‌ர்ற‌ மாதிரி வாயில் வ‌ந்த‌தெல்லாம் மாத்தி மாத்தி திட்டிக்கிறாங்க‌. இது எல்லாத்த‌யும், யார் பெத்த‌ பிள்ளையோங்கிற‌ மாதிரி பாவ‌ம் போல‌ பிள்ளைங்க‌ உக்காந்து பார்த்துக்கிட்டே இருப்பாங்க‌. இப்போ நெற‌ய‌ வீடுக‌ள்ல‌ "அப்பா, அம்மாகிட்டே பேசுங்க‌","அம்மா, அப்பாகிட்டே பேசுங்க‌" ..இப்டில்லாம் சொல்லி பெற்றோரை ச‌மாதான‌ப்ப‌டுத்தி வைக்கிறாங்க‌ ப‌ச‌ங்க‌. ஆஹா, ந‌ம்ம‌ பிள்ளை ந‌ல்லா பொறுப்பா இருக்கிறானே/இருக்கிறாளே அப்டின்னு இப்போ தோணுனாலும், பெற்றோர் ச‌ண்டை போட‌ற‌த‌னால‌, குழந்தைக‌ளோட‌ ச‌ந்தோஷ‌த்தில‌ 10% குறையுதுன்னு சொல்றாங்க‌. அதனால‌, உங்க‌ ச‌ண்டைக்காக‌ உங்க‌ குழந்தைக‌ளை ச‌மாதானப்புறாவாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தாதீங்க‌ மக்க‌ளே !

1 comment:

  1. குழந்தைகளின் சந்தோஷ சதவிதம் குறைவதை, விட குழந்தைகள்
    பெற்றோர்களின் விக்னஸ்யை சரியாக புரிந்து கொள்கிறது

    ReplyDelete