Friday, March 12, 2010

பிச்சைக்கார‌ங்க‌ நிலை எப்போ மாறும் த‌மிழ்நாட்டில்?


ந‌மீதா வீட்டு நாய்குட்டி பேர் ப்ரூஸ். இந்த‌ நாய்குட்டி ஒரு நாள் சாப்பிடாட்டா கூட‌ ந‌மீதா ஒரே டென்ஷ‌ன் ஆயிருவாங்க‌ளாம். நாய் தாய் மாதிரி(அவ‌ங்க‌ளுக்கு)ஒபாமா வீட்டு நாய்குட்டி பேர் போ. அவ‌ர் நாய்குட்டிய‌ போ அப்டின்னு கூப்டா நாய் போகுமா வ‌ருமா? இந்த‌ மாதிரி ச‌ந்தேக‌ங்க‌ள் இருந்தாலும் 2 நாளைக்கு முன்னால‌ நாங்க‌ எங்க‌ அலுவ‌ல‌க‌த்துக்கு ப‌க்க‌த்தில‌ இருக்கிற‌ அர‌ச‌ன் பேக்க‌ரிக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட‌ ஃப்ர‌ண்ட்ஸா சேர்ந்து போனோம். அப்போ 1 பெண் ரொம்ப‌ திட‌காத்திர‌மா இருந்தாள். அம்மா பிச்சை போடுங்க‌ம்மா அப்டின்னு கேட்டுகிட்டு எங்க‌ளை விடாம‌ல் துர‌த்தி கொண்டு வந்தாள். உட‌னே த‌ம‌ய‌ந்தி ' நல்லாயிருக்கேல்ல‌, உழைச்சு சாப்பிடு அப்டின்னு சொன்ன‌ உட‌னே அவ‌ள் போய் விட்டாள். நாங்க‌ திரும்பி வ‌ர்றப்போ இன்னொரு பெண் எங்க‌ளை விடாம‌ல் ஒட்டி ஒட்டி , எங்க‌ளை தொட்டு தொட்டு பிச்சை கேட்டாள். அவ‌ங்க‌ளோட‌ டெக்னிக் என்ன‌ன்னா இந்த‌ மாதிரி ப்ர‌ண்ட்ஸ் கூட‌ ந‌ம்ம‌ போகும் போது கேட்டால் ந‌ம்ம‌ளுக்கு அது ஒரு ப்ரெஸ்டிஜ் மேட்ட‌ர் ..எப்டியாவ‌து ரூபாய் குடுத்திருவோம்னு நினைக்கிறாங்க‌. அதனால், நான் உட‌னே அந்த‌ பிச்சை கேட்டு கொண்டிருந்த‌ பெண்ணிடம் 'ஒரு ரெண்டு ரூபாய் இருந்தா தாம்மா.. என் கையில பைசா இல்லைன்னு சொன்ன‌ உட‌னே அந்த‌ பெண் ப‌ற‌ந்தே போய் விட்டாள். என்ன‌ தான் பிச்சைக்கார‌ங்க‌ள் ஒழிக்க‌னும்னு அர‌சாங்க‌ம் சொன்னாலும் இன்னும் ஒரு ந‌ட‌வடிக்கை எடுத்த‌ பாடில்லை. சில‌ பிச்சைக்கார‌ங்க‌ நான் ஏறுற‌ பேருந்து கிட்ட‌ நின்னு தாய் நீ நல்லா இருப்பே அப்டின்னு சொல்லி பிச்சை கேப்பாங்க‌. ந‌ம்ம‌ குடுக்காட்டா நீ ந‌ல்லா இருக்க‌மாட்டேன்னு ந‌ம்ம‌ பேருந்தில‌ ஏறின‌ பிற‌கு வ‌ந்து சொல்லிட்டு போவாங்க‌. இந்த‌ க‌ல்ச்ச‌ர் ந‌ம்ம‌ நாட்டில‌ எப்போ ஒழியும்?

3 comments:

  1. தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சி பீடத்துக்கு வந்தபின் பிச்சைக்காரர்களை ஒழிக்கணும்ன்னு திட்டம் போட்டார்.அவரது இத்தனை வருட அரசியலுக்குப் பிறகும் இயலாது போன சிலவற்றில் பிச்சைக்காரர்களும் ஒன்று.வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

    ReplyDelete
  2. நீங்கள் உங்களது வாழ்வில் நடந்த அனுபவங்களை சொல்வதில் தவறே இல்லை.
    ஆனால் ஒட்டுமொத்தமாக பிச்சைக்காரர்கள் என்று Generalize செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

    இவர்களைப் போல் ஒரு கூட்டத்தை வைத்து இன்னொரு கூட்டம் சம்பாதிக்கிறது, நான் கடவுள் படத்தில வர மாதிரி. அது படந்தான என்று சொல்லிவிட வேண்டாம். உண்மையிலேயே அப்படியொரு Networking நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை
    இந்த ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளை திக்கற்ற நிலைக்கு தள்ளியது ஒரு வகையில் அவர்களது குடும்பமும் தான், அரசாங்கமும் தான்..

    ReplyDelete
  3. நன்றி ...
    வாழ்த்துகள்

    ReplyDelete