
என்னைய பொறுத்த வரை வளையல் போடறத விட பிரேஸ்லெட் போடறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், சிலர் கையில் நெறய கண்ணாடி வளையல்கள் ட்ரெஸ்ஸுக்கு மேட்சா போட்ருப்பாங்க. இந்த வளையல் போடறதில கூட ஒரு விஷயம் இருக்கு, வளையல் போடறதனால, அந்த பெண்ணோட கணவருக்கு அதிர்ஷ்டமும், பாதுகாப்பும் தேடி வருமாம். ஒரு பெண்ணோட கண்ணாடி வளையல்கள் உடைஞ்சுச்சுன்னா, அந்த பெண்ணோட கணவருக்கு ஏதோ ஆபத்துன்னு சொல்றாங்க. இதத்தான், எக்கச்சக்க படங்கள்ல காமிக்கறாங்களே, அதனால நல்லா தெரியும்...
கண்ணாடி வளையல்களை யாருக்காவது பரிசு குடுக்கிறப்போ, அதிலயும் ஏகப்பட்ட விஷயம் இருக்காம். Green and white கலர் வளையல்களை புதுசா காலேஜ் போற பெண்களுக்கு வாங்கி பரிசா குடுக்கலாமாம். ஏன்னா, கலர் நல்லா அதிர்ஷ்டத்தை குடுக்குமாம். அப்றமா, நேர்முகத்தேர்வுக்கு போறவங்களுக்கும் Green and orange colour வளையல்கள் வாங்கி குடுங்க. ஏன்னா, Orange is for success.
ஆனால், ஒரே ஒரு விஷயம், இப்போல்லாம் எல்லாருமே கை நெறய கண்ணாடி வளையல் போடறதனால, யாரு பிள்ளைத்தாச்சி, யாரு பிள்ளைப்பூச்சின்னு தெரிய மாட்டேங்குப்பா. இது தெரியாமல், Busலல்லாம், பிள்ளைத்தாச்சின்னு தப்பா நினைச்சு எந்திரிச்சு இடம் குடுக்க வேண்டியிருக்குல்ல.
அட!இப்படி ஒரு விஷயம் இருக்கா?
ReplyDeleteநன்றி அருணா !
ReplyDeleteபிள்ளைத்தாச்சின்னு தப்பா நினைச்சு எந்திரிச்சு இடம் குடுக்க வேண்டியிருக்குல்ல//
ReplyDeleteஅட அந்த பழக்கம் இன்னும் இருக்கா? முகத்தை வேற பக்கம் திருப்பிக்கறவங்களை தான் நான் பார்க்கிறேன்.
நன்றி ரூபினா ! அத்தி பூத்தது போல இன்னும் சிலர் இருக்கிறாங்க!அதனால தான் அப்பப்போ என்னைக்காவது நம்ம ஊர்ல கொஞ்சம் மழை பெய்யுது.
ReplyDelete