சென்ற வாரம் அலுவலகம் போய்விட்டு வர்றப்போ, சாயங்காலம் சீக்கிரமே கிளம்பியும், வல்லநாடு தாமிரபரணி பாலம் பக்கத்தில் ஏற்பட்ட டிராபிக் ஜாமால் பாலம் பக்கமே ஒரு மணி நேரம் பேருந்து நின்றது. வீட்டிற்கு போக ஒரு மணி நேரம் தாமதம் ஆனால் பரவாயில்லை. வீட்டிற்கு உயிரோடு போவோமா என்ற கேள்வியே எல்லாருடைய மனதிலும் இருந்தது. இந்த போக்கு இன்று நேற்று அல்ல. கடந்த ஒரு வருடமாகவே பயணிகளை ரொம்ப பாதித்து வருகிறது. தூத்துக்குடியிலிருந்து நெல்லை நோக்கி வந்த மணல் ஏற்றி வந்த ஒரு லாரியும், தூத்துக்குடி நோக்கி நாங்கள் சென்று கொண்டிருந்த பேருந்தும் நடு பாலத்தில் சிக்கி கொண்டன. இந்த தாமிரபரணி பாலம் மிக குறுகலான பாலம். ஒரு பேருந்து மட்டுமே ஒரு நேரத்தில் போக முடியும். எதிர் பக்கத்தில் இருந்து எந்த வாகனமும் வர முடியாது.அதனால், எதிர்பக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் ஒரு 2 நிமிடங்கள் பொறுத்தால், பிரச்சினை இல்லாமல் டிராபிக் க்ளியர் ஆகி விடும். ஆனால் பொறுமையற்ற ஓட்டுனர்களால் லாரியும் மூவ் பண்ண முடியாது. பேருந்தையும் ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாது. அப்படி ஒரு நிலைமை. பேருந்தின் வாசலும்,ஏற்கெனவே உடைந்து மிக மோசமாக உள்ள பாலத்தின் கைப்பிடிச்சுவரும் உரசிக்கொண்டு இருந்தது. பேருந்தை நகர்த்த முடியாத நிலையில் பயணிகளாவது இறங்கி நடந்து போகலாமென்றால்,பேருந்தின் ஒரே ஒரு வாசலும் இப்படி சிக்கலில் மாட்டிக்கொண்டது. பத்திரிக்கையாளர்கள் வந்து போட்டோ, வீடியோ என்று எடுத்து தள்ளினர். 1/2 மணி நேரம் கழித்து போலீஸ் வந்து ஓட்டுனர்களுக்கு இடையிலான சண்டையை தீர்த்து வைத்து பின்னர் பேருந்து கிளம்பிய பிறகு தான் உயிரே வந்தது. 'எனக்கென்ன, அப்டி ஒரு இடி இடிச்சு பஸ்ஸை தள்ளி விட்டா அவ்ளோ தான்'....இது லாரியின் ஓட்டுனர் சொன்ன வார்த்தைகள் ,ஒவ்வொரு நேரமும் பாலத்தை கடக்கும் போது நினைத்தாலே பயமாக இருக்கிறது.சும்மா முக்குக்கு ஒரு சிக்னல்ல நிக்க விடற டிராபிக் போலீஸை இந்த ஆபத்தான பாலத்தில நிற்க விடலாம்ல. முக்கியமான் வி.ஐ.பி(அரசியல்வாதி) வந்தால்தான் இங்கே டிராபிக் போலீஸை நிற்க விடுவாங்களாம். அப்போ நம்ம உயிர் என்ன செல்லாக்காசா? பேருந்து பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விழுந்த பிறகு ஐயோ அம்மானு எடுக்கும் நடவடிக்கைகளை இப்போவே எடுத்தா நெறய உயிர்கள் காப்பாற்ற படுமே?
அட ...நம்மூரு பாலம் ..!! படத்தை கொஞ்சம் பெரிசா போட்ருக்கலாமே....
ReplyDeleteஎங்களை போல் வெளிநாட்டில் அகதியாய் வாழ்பவரெல்லாம் அதை பார்த்து சந்தோஷபடுவோமே...
இதே போலத்தான் ஸ்ரீவைகுண்டம் பாலமும்....
அரசுதான் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிறைய நல்ல கேள்விகள். பதில் கிடைக்குமா? தெரியாது. தாமிரபரணியில் தண்ணீரும், மணலும் இன்னும் இருக்கிறதா?
ReplyDeleteஸ்ரீ....
1000 வயது யாருக்கு?
ReplyDeleteபாலத்துக்கா? இல்லை ப்ரிட்டிஷ்காரங்களுக்கா?
இல்லே தாமிரபரணிக்கா?
கண்ணா, உங்களுக்காக பிரத்யேகமா தாமிரபரணி போட்டோ போட்டாச்சு!
ReplyDeleteshri,
ReplyDeleteபெயருக்கு கொஞ்சம் தண்ணீர் ! நிறைய மணல் இருக்கும் பரிதாப நிலையில் இந்த தாமிரபரணி ஆறு இருக்கிறது !
துளசி கோபால்!
ReplyDeleteஇந்த பாலத்தை ஆங்கிலேயர் கட்டி ஆயிரம் வருடம் ஆகிறது. பாலத்துக்குத் தான் ஆயிரம் வயது. இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் எல்லாம் நொந்து நுடுல்சாகி இப்பவோ எப்பவோ எனும் நிலையில் பாலம். பாலத்தின் தரையும் உடைந்து குழி குழியாக இருக்கும். அரசியல்வாதிகள் வரும் அன்றைக்கு தார் ஊற்றி குழியை மூடி விடுவார்கள். எவ்ளோ சூப்பரா ஐடியா பண்றாங்க. கட்டப்பட்டு கொண்டிருந்த மாற்றுப்பாலம் பாதி வேலையில் நிப்பாட்டப்பட்டு ஒரு வருடம் ஆகிறது ...