Monday, November 28, 2011

புதிர் விளையாட்டு :


1)மூன்று எழுத்துள்ள வார்த்தை இது ...
முதல் இரண்டு எழுத்துக்கள் நிறைய என்ற பொருளை குறிக்கும்...
முதல் எழுத்தையும் மூன்றாவது எழுத்தையும் சேர்த்துடீங்கன்னா உங்களுக்கும் எனக்கும் சண்டை வந்துரும் அப்டின்னா அந்த மூன்று எழுத்து வார்த்தை எது?

2) 4 அப்பாக்கள் ,4 தாத்தாக்கள், 4 மகன்கள் இவங்கள்லாம் ஒரு டேபிளை சுற்றி நின்னுகிட்டு இருக்காங்க. இவங்க எல்லோருமே உட்காரணும் அப்படின்னா இவங்களுக்கு கொறஞ்சது எத்தனை Chairs போடணும்?

ட்ரை பண்ணி பாருங்க ....

Friday, November 25, 2011

புதிர் விளையாட்டு :


1) ஒரு அம்மாவுக்கு பூஜா ன்னு ஒரு பொன்னும், ராஜா, காஜா 2 பசங்களும் இருக்காங்க.
பூஜா அவளோட வயதை கண்டுபிடிக்க ரெண்டு க்ளுஸ் கொடுக்கிறாள்.
"என்னோட வயசையும், ராஜா வயசையும் கூட்டினால் 32 வரும்.
என்னோட வயசையும் , காஜா வயசையும் கூட்டினால் 29 வரும் அப்படின்னா 3 பேரோட வயசையும் கண்டுபிடிங்க"ன்னு சொல்கிறாள். இவங்க மூன்று பேர் வயதும் என்ன என்ன?

2) சிவப்பு பை ஒன்னு இருக்கு
அதுக்குள்ளே எண்ணமுடியாத தங்க காசுகள்
கொட்டி கிடக்கு
அது எது?
ட்ரை பண்ணி பாருங்க......

Thursday, November 24, 2011

புதிர் விளையாட்டு...


1) முத்துகிருஷ்ண‌னும், அரிகிருஷ்ண‌னும் ந‌ண்ப‌ர்க‌ள். இர‌ண்டு பேரும் ஒரு ஹோட்ட‌லுக்கு போறாங்க‌. முத்துகிருஷ்ணன் முழுக்கோழியையும் ஒரே மூச்சில் சாப்பிட்டிருவார். அரிகிருஷ்ண‌னால் அரை கோழிக்கு மேல் சாப்பிட‌ முடியாது. இப்ப‌டி இருக்கிற‌ப்போ இந்த‌ க‌டையில் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் சேர்ந்து 1 1/2 நாளில் 1 1/2 கோழி சாப்பிட்டால் முத்துகிருஷ்ண‌ன் த‌னியாக‌ 30 நாளில் எத்த‌னை கோழிக‌ள் சாப்பிட்டிருப்பார்?


2) கோட்டைக்குள்ளே
3 பேர் போறாங்க‌
உள்ளே க‌த்தியின்றி, ஆயுத‌ம்இன்றி
யுத்த‌ம் ந‌ட‌க்குது
ர‌த்த‌ம் கொட்டுது. அது என்ன‌?

ட்ரை பண்னி பாருங்க....

Wednesday, November 23, 2011

புதிர் விளையாட்டு...

1) இந்த‌ உலோக‌த்தின் பெய‌ரில் ஆறு எழுத்துக்க‌ள் இருக்கும்
க‌டைசி மூன்று எழுத்துக்க‌ள்
ஒரு கொடிய‌ பிராணியின் பெய‌ர்.
இந்த‌ உலோக‌த்தின் பெய‌ர் என்ன‌?


2) இவ‌ள் இல்லை என்றால் வியாபார‌மும் இல்லை.
ச‌ரியான தீர்ப்பு சொல்வாள்
நீதிப‌தியும் இல்லை. இவ‌ள் யார்?

ட்ரை ப‌ண்ணி பாருங்க‌.....

Tuesday, November 22, 2011

புதிர் விளையாட்டு :

1) ஒரு ஆள் நேர்முக‌த்தேர்வுக்கு போறார். முத‌லாளி அவ‌ர்கிட்ட‌ ஒரு கேள்வி கேக்கிறார். அந்த‌ கேள்விக்கு ப‌தில் க‌ரெக்டா சொன்னால் தான் வேலை கிடைக்கும். என்னோட‌ பைய‌னோட‌ வ‌ய‌தை, அவ‌னுக்கு எத்த‌னை வ‌ய‌சோ, அதை வைத்து வகுத்தாலு அதே ந‌ம்ப‌ர் தான் ப‌திலாக‌ வ‌ரும். அதே மாதிரி அவ‌னோட‌ வ‌ய‌தை அந்த‌ ந‌ம்ப‌ரால் பெருக்கினாலும் அதே ந‌ம்ப‌ர் தான் வ‌ரும். என்னோட‌ பைய‌னோட‌ வ‌ய‌து என்ன‌ன்னு கேக்கிறார். அந்த‌ பைய‌னோட‌ வ‌ய‌து என்ன‌?

2))விழித்துக்கொண்டிருக்கும்போதே
அடித்துக்கொண்டிருப்பான்
ஆனால்
இவ‌ன் எவ்வ‌ள‌வு அடித்தாலும்
வ‌லிக்க‌வே வ‌லிக்காது.
அவ‌ன் யார்?
ட்ரை ப‌ண்ணி பாருங்க‌....

Monday, November 21, 2011

புதிர் விளையாட்டு

1) கூரை வீடு ஒன்னு
அதைப்பிரிச்சா ஓட்டு வீடு ஒன்னு
அதுக்குள்ளே ஒரு வெள்ளை மாளிகை
அந்த‌ வெள்ளை மாளிகைக்குள்ளே ஒரு குள‌ம்.
அது எது ?
2) 7 ந‌ண்ப‌ர்க‌ள் இருக்காங்க‌. 7 பேரும் சேர்ந்து நின்னு போட்டோ எடுக்க‌ இவ‌ங்க‌ளுக்கு பிடிக்க‌லை. ஆனால், இவ‌ங்க‌ளுக்கு ஒரு ஆசை. இந்த‌ ஏழு பேருல‌யுமே ஒவ்வொருத்த‌ரும் இன்னொருத்த‌ர் கூட‌ நின்னு போட்டோ எடுத்து அந்த‌ போட்டோ காபீஸ் எல்லோர்கிட்ட‌யும் இருக்க‌னும் அப்டின்னு முடிவு ப‌ண்றாங்க‌. இந்த‌ மாதிரி இந்த‌ ஏழு பேருமே ரெண்டு ரெண்டு பேரா நின்னு போட்டோ எடுத்தாங்க‌ன்னா ஒவ்வொருத்த‌ர்கிட்டேயும் எத்த‌னை போட்டோக்க‌ள் இருக்கும்?

ட்ரை ப‌ண்ணி பாருங்க‌....

Friday, November 18, 2011

புதிர் விளையாட்டு


1) ப‌ட‌ப‌ட‌க்கும் ப‌ட்டாம்பூச்சி
பிளாக் அண்ட் ஒயிட் ப‌ட்டாம்பூச்சி
உங்க‌கிட்ட‌ இருக்கு,
ஆனால் உங்க‌ளால் பார்க்க‌ முடியாத‌ ப‌ட்டாம்பூச்சி. அது எது?

2) இன்னைக்கு காலையில் என்னோட‌ ப்ர‌ண்ட் எனக்கு ஒரு குறுந்த‌க‌வ‌ல் அனுப்பி இருந்தாள். அதில் ஆங்கில எழுத்துக்க‌ள் A to Z எல்லா எழுத்துக்க‌ளுமே இருந்த‌ன், ஒரே ஒரு எழுத்தைத் த‌விர‌(U) என்ற‌ எழுத்தைத்த‌விர‌. இது மூல‌மாக‌ ம‌றைமுக‌மாக‌ என்னோட‌ ப்ர‌ண்ட் என‌க்கு தெரிவிக்க‌ விரும்பிய‌ வாக்கிய‌ம் எது?

ட்ரை ப‌ண்ணி பாருங்க‌.....

Wednesday, November 16, 2011

புதிர் விளையாட்டு :



1) ஒற்றைக்காலில் வ‌ருவான்
போவான்
ஆனால் இப்போல்லாம் இர‌ண்டுகாலிலும் வ‌ருகிறான்
போகிறான். இவ‌ன் யார்?

2) ஒரு வீட்டில் அப்பா த‌ன‌து 5 ம‌க‌ன்க‌ளுக்கும் சேர்த்து ஆயிர‌ம் ரூபாயை கொடுத்து விட்டு,
5 பேரையும் பிரித்துகொள்ளுமாறு கூறுகிறார். ஒவ்வொருத்த‌ரும் அடுத்த‌ த‌ம்பியை விட‌
20 ரூபாய் கூட‌ வைத்துக்கொள்ளுமாறு பிரித்தால் க‌டைசி த‌ம்பி கையில் எவ்வ‌ள‌வு
ரூபாய் இருக்கும்?

Try ப‌ண்ணி பாருங்க‌ ......

Friday, November 11, 2011

புதிர் விளையாட்டு :



1)வீடு இர‌ண்டு
விடுதி ப‌தினாலு
ஆடும் பெண்க‌ள் எழுப‌து
ஆட்டி வைப்போர் இர‌ண்டு பேர். அது என்ன‌?

2)ஒரு தோட்ட‌த்தில் ம‌யில்க‌ளும், முய‌ல்க‌ளும் இருக்கின்ற‌ன. அந்த‌ தோட்ட‌த்துக்கு போன‌
ஒருத்த‌ர் அந்த‌ கால்க‌ளை எண்ணி மொத்த‌ம் இருநூறு கால்க‌ள் இருக்குன்னு சொல்றார்
அப்டின்னா அங்கே மொத்த‌ம் எத்த‌னை ம‌யில்க‌ள், எத்த‌னை முய‌ல்கள் இருந்திருக்கு?


ட்ரை ப‌ண்ணி பாருங்க‌....

Monday, November 7, 2011

புதிர் விளையாட்டு


1)ஒரு மேஜையின் மேல் 17 ஈக்க‌ள் இருந்த‌ன‌. அவ‌ற்றில் 12 ஈக்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டால் மீதி எத்த‌னை ஈக்க‌ள் இருக்கும்?

2)தொட்டால் பிடித்துக்கொள்ளும், ஆனால் ப‌சைய‌ல்ல‌
விட்டால் வேலை செய்யும், ஆனால் எந்திர‌ம் அல்ல‌. அது எது?

ட்ரை ப‌ண்ணி பாருங்க‌....

Friday, November 4, 2011

புதிர் விளையாட்டு - 3


1)ஒருத்த‌ருக்கு க‌டுமையான‌ ஒரு நோய் இருக்கு. அவ‌ர் பிழைக்க‌னும்னா
தின‌மும் 4 கி.மீ ந‌டக்க‌னும் அப்ப‌டின்னு டாக்ட‌ர் சொல்றார். ஆனால்
இவ‌ர் அவ‌ர் வீட்டில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிற‌ கோயிலுக்கு
போயிட்டு வ‌ர்றார். இருந்தாலும் பிழைச்சிர்றார். எப்ப‌டி?

2) அழுக்காக‌ அழுக்காக‌
நான் வெள்ளையாக இருப்பேன்
சுத்த‌மாக‌ சுத்த‌மாக‌
நான் க‌ருப்பாக‌ இருப்பேன். நான் யார்?

ட்ரை ப‌ண்ணுங்க‌.....

Wednesday, November 2, 2011

புதிர் விளையாட்டு 2


காலை வ‌ண‌க்க‌ம்....

தூங்கி எந்திரிச்ச‌ உட‌னேயே க‌ட‌மையே க‌ண்ணாக‌ முத‌ல்ல‌ புதிர் கேள்வியைத்தான் போடுறேன். இன்னைக்கு புதிர் கேள்விக்கு போவோமா......

1)ஒரு ப‌ய‌ங்க‌ர‌மான‌ காடு. இந்த காட்டுக்குள்ளே ஒரு பாழ‌டைந்த‌ வீடு இருக்கு. இந்த‌ வீட்டில் ஊர்ல‌ உள்ள‌ எல்லா எலியும் இந்த‌ வீட்டுக்குள்ளே ப‌டையெடுத்து ரொம்ப‌ தொல்லை ப‌ண்ணுது. ஆனால் இந்த‌ வீட்டில் ஏக‌ப்ப‌ட்ட‌ பூனைக‌ளை வேற‌ வைத்திருக்காங்க‌. இரு ந்தாலும் ஒரு எலி கூட‌ பூனையை பார்த்து ப‌ய‌ப்ப‌ட‌ மாட்டேங்குது. ஏன்?

2)எப்ப‌வுமே ந‌ம்ம‌ துவைத்து துணியை காய‌ போட‌ற‌ப்போ துணி கீழே விழ‌க்கூடாதுன்னு துணிக்கு க்ளிப் போடுவோம்ல‌? அதே மாதிரி துணியை காய‌ப்போட‌ட்டு ராணி துணிக்கு க்ளிப் போட‌றாங்க‌. ஆனால் ம‌று நாள் வ‌ந்து பார்க்கிற‌ப்போ எல்லா க்ளிப்பும் கீழே விழுந்து கிட‌க்கு. ஆனால் இவ‌ங்க‌ளோட‌ ப‌க்க‌த்து வீட்டு மாலா ரொம்ப‌ ப‌ந்தா ப‌ண்ணுவாங்க‌ளாம், ஏன்னா, அவ‌ங்க வைத்த‌ க்ளிப் ம‌ட்டும் அதே இட‌த்திலேயே இருக்குதாம். எப்ப‌டி?

ட்ரை ப‌ண்ணுங்க‌.

மீண்டும் இன்று மாலை ஹெல்த் நியூஸூட‌ன் ச‌ந்திப்போமா?

தெரிந்த‌ உண‌வு தெரியாத‌ விஷ‌ய‌ம் :




என்ன‌டா இது, அவ‌ள்லாம் தூள் திவ்யா மாதிரி இருக்கா, ந‌ம்ம‌ ம‌ட்டும் ட‌ல் திவ்யா மாதிரி இருக்கோமே, என்ன‌த்த‌ சாப்டாலும் ம்ஹூம், ஒர்க் அவுட் ஆக‌ மாட்டேங்குதே அப்டின்னு க‌வ‌லைப்ப‌ட‌றீங்க‌ளா?


விட்ட‌மின் A இருக்கிற‌ உண‌வுக‌ளை ந‌ல்லா சாப்பிட்டால் தோல் ப‌ள‌ப‌ள‌ன்னு இருக்குமாம். முடி ந‌ல்லா வ‌ள‌ருமாம், ரொம்ப‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம் த‌லையில் பொடுகுல்லாம் காணாம‌ல் போயிருமாம். இந்த‌ விட்ட‌மின் A எதிலேல்லாம் இருக்கு அப்டின்னா கேர‌ட், அன்னாசிப்ப‌ழ‌ம், மாம்ப‌ழ‌ம், ஸ்ட்ராபெர்ரி, ப‌ச‌லைகீரை, த‌க்காளி, பால், சீஸ், த‌யிர், சிக்க‌ன், மீன், முட்டை இந்த‌ மாதிரி எல்லாம் நீங்க‌ சாப்பிட்டுகிட்டு வ‌ந்தீங்க‌ன்னா, உங்க‌ளோட‌ தோல் ப‌ள‌ப‌ள‌ன்னு ஆயிருமாம். ட்ரை ப‌ண்ணி பாருங்க‌......

புதிர் விளையாட்டு


எல்லாருக்கும் வ‌ண‌க்க‌ம்....

ரொம்ப‌ நாளாயிட்டு..ப்ளாக் ப‌க்க‌மே வ‌ர‌முடிய‌லை. அநேக‌மா இன்னைல‌ இருந்து தின‌மும் ப‌திவு போட்டிருவேன்னு நினைக்கிறேன். முடிவே ப‌ண்ணிட்டேன் தின‌மும் எப்ப‌டியாவ‌து ஒரு ப‌திவை போட்டுட்டுதான் அடுத்த‌ வேலை அப்டின்னு...

இனிமேல் த‌க‌வ‌ல்க‌ளோடு எப்ப‌டியும் ரெண்டு புதிர்க‌ள் க‌ண்டிப்பாக‌ இருக்கும். இந்த‌ புதிர்க‌ளுக்கு உங்க‌ள் ப‌தில்க‌ளை நீங்க‌ போட‌லாம்....

புதிர் விளையாட்டு :

1)என்கிட்ட‌ ரெண்டு ரூபாய் தாள்க‌ள் இருக்கு. அதை கூட்டினால் 150ரூபாய் வ‌ரும். ஆனால்,அதில் ஒன்று 50 ரூபாய் தாள் இல்லை. அப்டின்னா என்கிட்ட‌ இருக்கிற‌து என்னென்ன‌ ரூபாய் தாள்க‌ள் இருக்கு?

2)4 பேர் மொத்த‌ம் 18 மெழுகுவ‌ர்த்திக‌ளை வாங்கி அவ‌ர்க‌ளுக்குள் பிரிச்சிக்கிறாங்க‌.
அ) அபிகிட்ட‌ 18 மெழுகுவ‌ர்த்திக‌ள்ல‌ 2 ப‌ங்கு இருக்கு.
ஆ) ஆன‌ந்த்கிட்ட‌ அபியை விட‌ ரெண்டு ம‌ட‌ங்கு அதிக‌மா இருந்துச்சு
இ) சார்லிகிட்ட‌ ஆன‌ந்தை விட‌ 2 ம‌ட‌ங்கு அதிக‌மா இருந்துச்சு
ஈ) டேவிட்கிட்ட‌ அபியை விட‌ 2 மெழுகுவ‌ர்த்தி கூடுத‌லா இருந்துச்சு.
ஒவ்வொருத்த‌ர்கிட்டேயும் எத்த‌னை மெழுகுவ‌ர்த்தி இருக்கு?

இந்த‌ புதிர் கேள்விக‌ளுக்கு ப‌தில் ட்ரை பண்ணி என்ஜாய் ப‌ண்ணுங்க‌......
நாளைக்கு ச‌ந்திக்க‌லாமா?