பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Saturday, December 19, 2009
கண்டுபிடிச்சிட்டாங்கய்யா !கண்டுபிடிச்சிட்டாங்க
கசப்பா யாராவது ஏதாவது குடுக்க வந்தாங்கன்னா, காத தூரம் ஓடி போயிருவோம். இதுக்கெல்லாம் யார் காரணம்னு யோசிச்சு பார்த்தா, நம்ம குட்டி பிள்ளையா இருக்றப்போ சங்கில வச்சு இஞ்சிய வாயில ஊத்திட்டு, அப்றமா கொஞ்சோண்டு சீனிய வாய்ல அள்ளி போடுவாங்களே, அந்த பார்டிஸ் தான், சாரி பாட்டிஸ் தான். ஆனா, கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் இந்த நாடுகள்லல்லாம் கசப்பா இருக்கிற காய்கறிகள எல்லாம், கொஞ்சோண்டு உப்பு, ஆலிவ் எண்ணெய் இதெல்லாம் சேர்த்து சமைச்சு சாப்டுறதனால கசப்பாவே இருக்காதாம். அவங்க என்ன சொல்றாங்கன்னா, கசப்பா இருக்கிற காய்கள்ல 'பைட்டோ நியூட்ரியன்ஸ்' நெறய இருக்குதாம். அதனால, நெறய பாகற்காய சாப்டா இதய நோய் எட்டி கூட பார்க்காதாம். அப்றம் இன்னொரு விஷயம், இதுவரைக்கும் இளநரை ஏன் வருது அப்டின்னு குப்புற படுத்துட்டு எத்தனை நாள் யோசிச்சிருப்பீங்க, இதுக்கும் கசப்பு சுவை தான் காரணம் அப்டின்னு இப்போ ஒரு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க. அதாவது நம்ம முடியோட வேர்க்கால்களோட அடியில கசப்பு சுவை இருக்குதாம். அந்த கசப்பு சுவை குறையறதனால தான் முடி நரைக்க ஆரம்பிக்குதாம். கண்டுபிடிச்சிட்டாங்கய்யா !கண்டுபிடிச்சிட்டாங்க
Thursday, December 17, 2009
கனவு காணுங்கள்...கலாம் சொன்னது
இன்னைக்கு காலைல பஸ்ல உலக நாயகன் கமல் நடிச்ச காக்கி சட்டை படத்தை பூம் டிவில போட்டாங்க. இப்போ புதுசா தமிழ் நாடு அரசு பஸ்கள்ல நெட்வொர்க் மூலமா பூம் டிவி ஒடுறதனால ஒரே நேரத்தில எல்லா கே.டி.சி. பஸ்கள்ல ஒரே படம் தான் ஓடும். அதனால், நம்ம எல்லா ஊர்லயுமே கே.டி.சி. பஸ்கள்ல காக்கி சட்டை படம் தான் ஒடியிருக்கும். இந்த படத்தில கமலோட பெரிய கனவு போலீஸ் ஆகனும் அப்டிங்கிறது தான். அதனால, அம்பிகா கமல் போலீஸ் ஆகனும்கிறதுக்காக, கமல் போலீஸ் ஆறதுக்கு முன்னாலயே கமலுக்கு போலீஸ் ட்ரெஸ் தைச்சு கொடுக்றதிலிருந்து, கமல் போலீஸ் ட்ரெஸ்ல ஓவியமா வரைஞ்சு வைக்கிற வரை, கமலோட கனவு நெஜமாக்கிறதில ரொம்பவே உதவி செய்ற மாதிரி காட்சிகள்லாம் வரும். நம்ம ஊர்லல்லாம் பார்த்தீங்கன்னா, நெறய போட்டி தேர்வுகள்ல தேர்ச்சி பெற்று, பெரிய வேலைக்கு போற பெண்கள் எல்லாருமே என்னோட இந்த கனவு நெறைவேறுறதுக்கு என்னோட கணவன் தான் காரணம்னு சொல்வாங்க. அதே மாதிரி வாழ்க்கையில எப்டியாவது கார் வாங்கனும்னு கணவனுக்கு ஆசையா இருந்தா, மனைவி எப்டியாவது நகையை அடகு வைச்சாவது கணவனோட கனவை நிறைவேத்திருவாங்க. இப்போ அமெரிக்கால என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா, இந்த மாதிரி கணவனோட கனவை மனைவி நிஜமாக்கினாலும், மனைவியோட கனவை கணவன் நிஜமாக்கினாலும், கணவன், மனைவி இடையே அன்பு கூடுவதோடு. வாழ்க்கைத்தரமும் உயரும் அப்டின்னு கண்டுபிடிச்சிருக்காங்க. ஒ.கே. அப்றம் என்ன வேலை, பார்டனரோட கனவு என்னது அப்டின்னு கேட்டுட்டு தான் மறுவேலை !
Wednesday, December 16, 2009
பெண்களுக்கு வேலையா? வீடா? எது பெட்டர்?
எல்லாருக்குமே வேலைக்கு போகாம வீட்டுக்கு சம்பளம் வந்தா நல்லா இருக்கும்ல. நெறய பேர் வெளில சும்மா உழைச்சாதான் உடம்புக்கு நல்லதுன்னு கதை விட்டாலும், சம்பளம் வீட்டுக்கு வந்தா எல்லாருக்குமே சும்மா இருக்கனும்னு தான் ஆசையா இருக்கும். இங்கிலாந்தில கிட்டத்தட்ட 1500 ஆண்கள்ட உங்களுக்கு எப்டிப்பட்ட மனைவிய பிடிக்கும் அப்டின்னு கேட்டதுக்கு , நெறய பேர் என்ன சொல்லிருக்காங்கன்ன, வேலைக்கு போகாமல் வீட்லயே இருந்து சமைச்சு போட்டு, குடும்பத்தை கவனிக்கிற பெண்ணை தான் பிடிக்கும் அப்டின்னு சொன்னாங்களாம். ஒ.கே. இங்கிலாந்து விஷயம்லாம் இருக்கட்டும். நீங்க என்ன சொல்றீங்க? வேலைக்கு போற பெண்கள ஆண்களுக்கு பிடிக்குமா? வீட்ல இருக்கிற பெண்களை பிடிக்குமா? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன் !
Labels:
ஆண்களுக்கு,
இங்கிலாந்து,
சம்பளம்,
பெண்ணை
Tuesday, December 15, 2009
முன்னோர(குரங்குகளை) நம்ம மறக்கவே கூடாது ....
2 சிம்பன்ஸி குரங்குகள் சண்டை போடறப்போ என்ன பண்ணும்னா, சண்டை முடிஞ்ச உடனே, அந்த 2 குரங்குகளும் முத்தம் குடுத்து, கட்டியணைச்சிக்குமாம். அவங்களாவே, இதுக்கு ஒரு அர்த்தம் வச்சிருக்காங்களாம். சண்டை முடிஞ்சிட்டு, இனிமேல் நம்ம நண்பர்களா இருப்போம் அப்டின்னு அதுங்க 2ம் புரிஞ்சுக்குமாம். ஒ.கே. கணவனும் மனைவியும் சண்டை போடாதீங்க அப்டின்னு நான் சொன்னாலும் கூட நீங்க அப்பப்போ சண்டை போடத்தான் செய்வீங்க. ஒ.கே. பரவால்ல. சண்டை முடிஞ்ச உடனே, நீங்களும் இந்த சிம்பன்ஸி குரங்கு மேட்டர ஃஃபாலோ பண்ணுங்கப்பா. நேரா மேட்டருக்கு வராம இப்டி இதுக்குல்லாம் போய் இந்த சிம்பன்ஸி மேட்டர்லாம் வேணுமா அப்டின்னா, என்ன தான் இருந்தாலும் நம்மளோட முன்னோர(குரங்குகளை) நம்ம மறக்கவே கூடாது அப்டிங்கிறதில நான் ரொம்ப உறுதியா இருக்கேன். ரொம்ப ரொம்ப ஓவரா இருக்குல்ல. ஒகே கூல் கூல்
ஹனிமூன்ங்கிற வார்த்தை எப்டி வந்துச்சு அப்டின்னு யோசிச்சு பார்த்தீங்களா?
எல்லாருமே திருமணம் முடிஞ்ச உடனே, அவசர அவசரமா ஹனிமூனுக்கு போயிருவாங்க. யாராவது ஒருத்தராவது இந்த ஹனிமூன்ங்கிற வார்த்தை எப்டி வந்துச்சு அப்டின்னு யோசிச்சு பார்த்தீங்களா? ஆனால், நான் இதைப் பற்றி மக்களுக்கு எப்படியாவது சொல்லியே ஆகனும் அப்டின்ற நல்ல நோக்கத்தில கண்டுபிடிச்சிட்டேன். இந்த ஹனிமூன் அப்டிங்ற வார்த்தை எப்டி வந்துச்சுன்னா, டியூட்டன் அப்டிங்ற இன மக்கள் என்ன பண்ணுவாங்கன்னா, கல்யாணத்துக்கு அப்றமா, கணவனும், மனைவியும் சேர்ந்து ஒரே கிண்ணத்தில் ஒன்னா தேன குடிப்பாங்களாம். இது ஒரு நாள், 2 நாள்னா கூட பரவால்ல. ஒரு மாசம் வரை, கணவனும், மனைவியும் சேர்ந்து தேன் குடிப்பாங்களாம். ஆங்கிலேயர்கள்லாம் இந்த விஷயத்த பார்த்துட்டு 'ஹனி மந்த்' அப்டின்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அப்றம் அது ஹனிமூன் அப்டிங்கிற வார்த்தை ஆகி விட்டது. தீபாவளி கொண்டாடுறப்போ பட்டி மன்றத்தில இருந்து ஆரம்பிச்சு எல்லா செய்தித்தாள்கள்லயும் நரகாசுரனை கொன்றதால தான் தீபாவளி கொண்டாடறாங்கன்னு பப்ளிசிட்டி பண்ற நம்ம ஆளுங்க, ஹனிமூன்ங்கிற வார்த்தை எப்டி வந்துச்சு அப்டின்னு பப்ளிசிட்டி பண்ணாததனால நம்ம ஆளுங்க ஹனிமூனுக்கு அர்த்தம் தெரியாமலேயே ஹனிமூன் போறாங்களே ! இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது?
Monday, December 14, 2009
என்ன முடிவு எடுக்க போறீங்க?
இன்னைலருந்து நான் ஒரு முடிவுக்கு வந்துருக்கேன். எப்போ பார்த்தாலும் சிரிச்சிகிட்டே இருக்கனும், அப்றமா புருவங்கள உயர்த்திதான் யாரன்னாலும் பார்க்கனும் அப்டின்னு, நெனச்சிருக்கேன். இதனால என்ன ஆகப்போகுதுன்னு எனக்கு தெரியல. தெருவில போறவங்கள்லாம் யார் பெத்த பிள்ளையோ, இப்படி சிரிச்சிகிட்டே போகுது அப்டின்னு நெனைக்க போறாங்கன்னு நெனைக்றேன். விஷயம் என்னன்னா, ஆண்களை பெண்கள் பார்க்கிறப்போ, ஆண்கள் கோபமா இருக்கிறவங்க மாதிரியே பெண்களுக்கு தெரியுமாம். ஆனால், பெண்களை பார்க்கிறப்போ அவங்க சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுமாம். ஏன்னு தெரியுமா? ஸ்மைலீஸ்ங்ற பொம்மை படங்களை பார்த்திருப்பீங்க. நம்மளோட செல்போன்ல மெசெஜ் அடிக்றப்போ இன்செர்ட் ஸ்மைலீஸ் அப்டிங்ற ஆப்ஷன குடுக்கிறப்போ நெறய ஸ்மைலீஸ் படங்கள் வரும். அதில் கோபமா இருக்றப்போ ஒரு ஸ்மைலீய அனுப்புவோம்ல, அந்த ஸ்மைலீல பார்த்தீங்கன்னா, அதோட புருவங்கள் கீழே சுருக்கி இருக்கிற மாதிரி இருக்கும் & உதடுகள் இறுக்கமா வச்சிருக்கிற மாதிரி இருக்கும். இறுக்கமான உதடுகள், கீழ் நோக்கி சுருக்கி இருக்கிற புருவங்கள் இது தான் நம்ம கோபமா இருக்கோம்னு மத்தவங்களுக்கு சொல்ற அறிகுறிகள். ஆண்கள் பெரும்பாலும் முகத்தை இப்படித்தான் வச்சிருக்காங்களாம். பெண்கள் இதுக்கு நேர்மாறாக சிரிக்கிற மாதிரி உதடுகளும், கொஞ்சம் புருவத்தை உயர்த்தியும் வச்சிருக்கிற மாதிரியும் இருக்குமாம். அதனால பெண்கள பார்க்கிறப்போ softஆ இருக்கிற மாதிரி இருப்பாங்களாம். ஒ.கே. மேட்டர் தெரிஞ்சிட்டில்ல. இனிமேல், நம்ம எல்லோருமே, எல்லோருக்குமே சாதுவா தெரியனும்னா, புருவத்தை உயர்த்தி வச்சிகோங்க, உதடுகளை டைட்டா வச்சிக்காம், கொஞ்சம் தளர்வா வச்சிகோங்க
Friday, December 11, 2009
ப்ளேபாய்ஸ்ட உஷாரா இருந்துகோங்கப்பா !
ஆண்கள்லாம் இந்த மேட்டர மிஸ் பண்ணீராதீங்க. உடனே உங்க கையில் 2வது & 4வது விரலை பாருங்க. விரல்களோட அளவை வச்சு ஒரு ஆணோட குணத்தை சொல்லிரலாம் அப்டின்னு லேட்டஸ்ட் ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது. ஆணோட விரல்கள்ல, 4ஆவது விரல் 2வது விரலை விட பெரிசா இருந்துச்சுன்னா ஆள் சரியான ப்ளே பாயாம். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் நெறய இருந்துச்சுன்னா, 2வது விரலை விட 4ஆவது விரல் கொஞ்சம் நீளமா வளருமாம். 4ஆவது விரல் பெரிசா இருக்ற ஆண்கள், பெண்கள் விஷயத்தில கொஞ்சம் அப்டி இப்டித்தான் இருப்பாங்க அப்டின்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. ஒகே. இந்த ப்ளேபாய்ஸ் எப்டிபட்டவங்க அப்டின்னா, முதல்ல வழிஞ்சுட்டு வந்து பேச மாட்டாங்க. முதல் சந்திப்பில கண்டுக்காம ரொம்ப அமைதியா இருப்பாங்க. ஆஹா, இவ்ளோ நல்லவரான்னு நம்ம நெனைப்போம். நம்ம மனசில நல்ல அபிப்ராயம் வந்த உடனே, ஈசியா பேசி மடக்கிருவாங்க. முதல்ல பாக்கிறப்போ மொபைல் நம்பர் கேப்பாங்க. அப்றம் மெசெஜ் வரும். அப்றம் அந்த மெசெஜ்ல ஹனி, பேபி, ஸ்வீட்டி, டியர் அப்டின்னு மெதுவா மெதுவா செல்லமான வார்த்தைகள் வரும். அப்றமா எங்கே மீட் பண்ணலாம்னு கேப்பாங்க. நெஜமான காதலா இருக்காது. pick up., drop, escape...பெண்கள் ப்ளேபாய்ஸ்ட உஷாரா இருந்துகோங்கப்பா !
Labels:
ஆண்கள்லாம்,
டியர்,
டெஸ்டோஸ்டீரோன்,
பேபி,
ப்ளேபாய்ஸ்,
ஸ்வீட்டி,
ஹனி
ஒன்னு கூட நடக்க மாட்டேங்குதே? என்ன பண்றது?
சில விஷயங்கள் நடப்பது ரொம்ப அபூர்வமாக இருக்கும். சான்ஸே இல்ல அப்டின்னு சொல்லலாம். அடிதடி இல்லாமல் வரிசையா குழாயடில தண்ணீ பிடிக்ற காட்சி, ரேஷன் கடையில அமைதியா க்யூவில நின்னு பொருட்கள் வாங்கிற காட்சி & இன்க்ரிமேன்ட் ஆனவுடன் உன் சம்பளம் எவ்வளவு என்ற கேட்காமல் இருக்கும் சக ஊழியர்கள், பக்கத்து வீட்டில் மாணவர்கள் படிக்கும் போது வானொலியின் ஒலி அளவை குறைத்து வைத்து கேட்பது, நம்ம வீட்டு குப்பையை பக்கத்து வீட்டு வாசலில் அதிகாலையிலேயே போட்டுட்டு கமுக்கமா இல்லாத நல்லவங்க, கடைகள்ல பாலித்தின் பாக்கெட்டுக்கு பதிலா பேப்பர் பையில் போட்டு கொடுக்கும் கடைக்காரங்க, இப்படி சொல்லிகிட்டே போகலாம். இந்த மாதிரி நம்ம ஊர்ல அபூர்வமா நடக்கனும்னு நெறய விஷயங்கள் ஆசைப்படறோம். ஆனால் இதில ஒன்னு கூட நடக்க மாட்டேங்குதே? என்ன பண்றது?
Labels:
குழாயடில,
க்யூவில,
சக ஊழியர்கள்,
வானொலியின்
இடுப்பால எவ்ளோ கடுப்பு?
இடுப்போட அளவு கூடிகிட்டே போச்சுன்னா, நம்மளோட வாழ்நாள் குறைஞ்சிகிட்டே போகும்னு ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்காங்களாம். என்னடா இது தெனமும் இப்படி ஏதாவது ஒன்ன கண்டுபிடிச்சிகிட்டே இருப்பாங்களா தெரியல. லண்டன்ல இருக்கிற மருத்துவர்கள்லாம் சேர்ந்து உடம்பு பருமன் ஆனால் என்னென்ன பாதிப்புக்கள் இருக்கும்னு ஆராய்ச்சி பண்ணிணாங்களாம். இடுப்போட அளவு 88செ.மீ அதாவது 35 இஞ்சுக்கு அதிகமா இருந்தால் ஆயுள்காலம் ரொம்ப குறைவுன்னும், இஞ்சி இடுப்பழகியா இருந்தா, ரொம்ப வருஷம் உயிரோட இருக்கலாம்னும் கண்டுபிடிச்சிருக்காங்களாம். ஏன்னா, கல்லீரலுக்கு ரொம்ப ரொம்ப பக்கத்தில இருக்கிறது இடுப்பு பகுதி தான். அதனால தான், இடுப்புல இருக்கிற கொழுப்பு சத்தால கல்லீரலுக்கு பாதிப்பு வரலாம். அதனால் தான் ஆயுள் குறையிற ஆபத்துன்னு சொல்றாங்க. இடுப்பால எவ்ளோ கடுப்பு?
Labels:
ஆயுள்,
ஆராய்ச்சி,
இடுப்போட,
உடம்பு பருமன்,
கல்லீரலுக்கு,
கொழுப்பு
Thursday, December 10, 2009
தலைக்கு பின்னால ஒளிவட்டம் இருக்குதா?
தெய்வீக தன்மை இருக்கிற மனிதர்களை சுத்தி, ஒளிவட்டத்த எல்லாருமே பாத்திருப்போம். அதே மாதிரி நம்ம உடம்பை சுத்தியும் ஒரு ஒளிவட்டம் இருந்துகிட்டே இருக்கும். கொஞ்சம் சுத்தி சுத்தி பாருங்க ! உங்களை சுத்தி ஒளிவட்டம் தெரியலாம். ஆனால், அந்த ஒளிவட்டத்த பார்க்கிற சக்தி நம்மளுக்கு இல்லீயாம். அந்த ஒளிவட்டத்த 'kryllionphotography''ங்கிற வித்தியாசமான கேமிராவ வச்சு படம் பிடிச்சிருக்காங்களாம். அந்த ஒளிவட்டத்தோட கலர் மற்றும் அதோட ஷக்தி மாறிகிட்டே இருக்குமாம். நம்ம உடம்பில ஏதாவது நோய் வந்துச்சுன்னா, இந்த ஒளிவட்டத்தோட கலர் மாறிருமாம். எனக்கு கூட தலைக்கு பின்னால ஒளிவட்டம் தெரியுதுன்னு நெறய பேர் சொல்றாங்க. ஆனா, இனிமேல் அதை பார்க்கிறதுக்கு முயற்சி பண்ணனும் !
Labels:
kryllionphotography,
ஒளிவட்டம்,
கலர்,
கேமிரா
உடம்பு எடை கூடிகிட்டே போகுதுன்னே கவலைபட்டுகிட்டே இருக்கீங்களா?
என்னன்னே தெரியல? சாப்டாம இருந்தாலும் கூட உடம்பு எடை கூடிகிட்டே போகுதுன்னே கவலைபட்டுகிட்டே இருக்கீங்களா? கவலையேபடாதீங்க. சூயிங்கம் சாப்டா போதும், உடல் எடை குறைஞ்சிரும்னு அமெரிக்கால இருக்கிற லிவர்பூல் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சில்லாம் பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க. அவங்க ஆராய்ச்சி பண்றதுக்காக, 60 பேர தொடர்ந்து 4 நாட்கள் உட்படுத்தியிருந்தாங்களாம். இவங்களுக்குல்லாம் சூயிங்கம் கொடுத்து பார்த்தப்போ, அவங்களால் சாயங்காலம் சாப்பிட முடியலியாம். இதனால, அடுத்த 4 நாட்கள்ல அவங்களோட உடம்பு எடை சரசரன்னு குறைஞ்சிடுச்சாம். இதனால, சகலமானவங்களுக்கும், இவங்க என்ன அறிவிச்சிருக்காங்கன்னா, தொடர்ந்து நொறுக்கு தீனி சாப்டுறவங்க சூயிங்கம் சாப்டா வெயிட்ட ஈசியா குறைக்கலாம்...
Wednesday, December 9, 2009
அழகா இருக்கனும்னா வீட்டு வேலை!
உலகத்திலேயே நார்வே மற்றும் ஸ்வீடன் நாட்டுலல்லாம் ஆண்கள் அழகாக இருக்காங்களாம். இது எப்படி சாத்தியம் அப்டின்னு பாக்கிறப்போ என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா, அந்த நாட்டிலெல்லாம் பெண்கள் வீட்ல வேலை செய்ய மாட்டாங்களாம். ஆண்கள் தான் வேலை செய்றாங்களாம். வீட்ல சமையல் பண்றது, பாத்திரம் கழுவுறது இதெல்லாம் கௌரவ குறைச்சல் கிடையாது அப்டின்னு அந்த நாட்டுக்காரங்க சொல்றாங்க. அழகா இருக்கனும்னா வீட்டு வேலை செய்யனுமாம்? ஐயோ ஐயோ ஒரே காமெடிதான் போங்க !
Tuesday, December 8, 2009
நோ நோ டென்ஷன் !
ஒரு சின்ன விஷயத்துக்கு கூட, பல்லை நற நறன்னு கடிச்சு டென்ஷன் ஆகிறீங்களா? எந்த பிரச்சினையையும் சமாளிக்க தெரியாம அடிக்கடி கத்துறீங்களா? சாப்பாட்டில உப்பு குறைவா இருந்தா எரிச்சல் எரிச்சலா வருதா? எல்லா கேள்விகளுக்கும் ஆமாம்பா ஆமா அப்டின்னு சொல்றீங்கன்னு வச்சிக்கோங்களேன், 'ஹார்ட் அட்டாக்'ல மாட்டுற அபாயம் இருக்கு அப்டின்னு டாக்டர்ஸ்லாம் சொல்றாங்க. கோபப்படுறவங்களுக்கு 'அட்ரீனல் சுரப்பி' ரொம்ப வேலை செய்றதனால, இதயத்தில பிரச்சினை வந்துருமாம். போக்குவரத்து நெரிசல்ல மாட்டுறப்போ எரிச்சல்படுறது, அடிக்கடி உச் உச்னு சொல்றது, ஆட்டோ கட்டணம் நெறய கேக்கிறப்போ கடுப்பாறது, மனைவிட்ட சண்டை போடறப்ப கண் சிவக்கிறது, ஆபீஸ்ல பாஸ் ஏதாவது சொல்லிட்டா புலம்பறது இந்த மாதிரில்லாம் பண்ணனும் போல வந்துச்சுன்னாலும், மாத்திகோங்க, உங்களை நீங்க மாத்திகோங்க. அவனை மாத்த சொல், நான் மாத்துறேன் அப்டின்னாலும் தயவுசெய்து நாயகன் பட டயலாக் மாதிரி பேச ட்ரை பண்ணாதீங்க. டென்ஷன் வராம பாத்துகிட்டா இதயத்துக்கும் நல்லது. இதயத்தில் இருக்கிறவங்களுக்கும் நல்லது.
தக்காளி காயா இல்லாட்டா பழமா?
தக்காளி காயா இல்லாட்டா பழமா? நெறய பேர் இதே மாதிரி யோசிச்சிருப்போம். நம்ம அமெரிக்காகாரங்களுக்கும் இதே சந்தேகம் வந்திருக்கு. சந்தேகத்த தீர்க்காமல் நாங்க தூங்க மாட்டோம் அப்டின்னு ஒரு தீர்க்கமான முடிவோட, நீதிமன்றத்தில தக்காளி மேல ஒரு வழக்கு போட்டுட்டாங்களாம். தக்காளிக்கு கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைய முடியுமா என்ன? கடைசில 1893ஆவது வருஷம், அமெரிக்க உச்ச நீதி மன்றம் தக்காளி ஒரு காய்தான் அப்டின்னு தீர்ப்பை குடுத்துட்டாங்களாம்பா.இதிலிருந்து என்ன சொல்ல வர்றேன்னா, தக்காளி பழமான்னு இனிமேல் நம்ம யாருக்கும் சந்தேகமே வரக்கூடாது
Wednesday, December 2, 2009
நல்ல வேளை, நம்ம நாட்டில இப்டில்லாம் இல்ல, அப்பாடா.....
நம்ம ஊர்லல்லாம், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டிகிட்டு போனால் தான் ட்ராபிக் போலீஸ் பிடிச்சுக்குவாங்க. ஆனால், க்ரீஸ் நாட்டில் ட்ராபிக் போலீஸ் லைசென்ஸ் இல்லாட்டா கூட விட்ருவாங்க. ஆனால், குளிக்காமல் யாராவது கார் ஒட்டிகிட்டு போனால் அவ்ளோதான், செமயா மாட்டிக்குவாங்க. க்ரீஸ் நாட்டில் சுத்தத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. யாராவது 'நேராயிட்டு, சாயங்காலம் வந்து குளிச்சிக்கலாம்'னு போனால் செம மாட்டுதான். இந்த மாதிரி குளிக்காமல் போறப்போ 'கப்பு' அடிச்சாலோ இல்லாட்டா அயர்ன் பண்ணாமல் கசங்கின ட்ரெஸ் போட்டுகிட்டு போனாலோ அவ்ளோதான், அவங்களோட லைசென்ஸ ட்ராபிக் போலீஸ் பிடுங்கிகிட்டு போயிருவாங்களாம். அப்றமா, நீதிமன்றத்தில் ஃஃபைன்லாம் கட்டிதான் லைசென்ஸ வாங்கனுமாம். இது என்னடா அநியாயமா இருக்கு. குளிக்கிற விஷயத்தில் கூட சுதந்திரம் இல்லீயே அப்டின்னு குமுறிகிட்டு இருக்காங்களாம். நல்ல வேளை, நம்ம நாட்டில இப்டில்லாம் இல்ல, அப்பாடா.....
Tuesday, December 1, 2009
கமல் சினிமாவில் நாயகன் மட்டும் அல்ல.. நிஜமான நாயகன் (நிஜ ஹீரோ).......
இன்று உலக எய்ட்ஸ் தினம். எச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பெற்றால்தான் பிள்ளையா? என்ற ஒரு மாத கால பிரசார இயக்கத்தை `பாபுலேஷன் சர்வீசஸ் இன்டர்நேஷனல் என்ற அரசு சார்பற்ற அமைப்பும், ஹலோ எப்.எம். நிறுவனமும் இணைந்து இன்று தொடங்குகின்றன.
இந்த ஒரு மாத காலத்தில், ஹலோ எப்.எம்.மில், எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயின் தீமைகளைப் பற்றி நேயர்களுக்கு எடுத்துரைக்கப்படும். அத்துடன், எச்.ஐ.வி-எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போல கருதி, உதவ முன்வருமாறு பிரசாரம் செய்யப்படும்.
ஒரு குழந்தைக்கு ரூ.750 நன்கொடை அளிக்குமாறு நேயர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். நேயர்கள் அளிக்கும் ரூ.750 நன்கொடையை வைத்து, அந்த குழந்தையின் பெயரில் சுகாதார காப்பீடு எடுக்கப்படும். இது அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு பயன்படும்.
இந்த பிரசார இயக்கத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி- எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.. இன்றைக்கு காலை ஹலோ எப்.எம்.மில் கமலஹாசன் அவர்களுடன் நேர்முகம் ஒலிபரப்பாகியது. அதில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு இல்லம் அமைத்து செயல்படுத்தி வரும் ஒருவருடன் கமல் பேசியது ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது. அந்த நிறுவனர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பைக்கில் வைத்து வெளி இடங்களுக்கு அழைத்து போவதாகவும், தனது தந்தை போல உணர்வு அந்த குழந்தைகளுக்கு ஏற்படுவதற்காக அவ்வாறு செய்வதாகவும் கூறினார்.. உடனே கமலும் அப்படி ஏதாவது குழந்தைகளை வெளியில் கூட்டிட்டுபோகும் வேலை இருந்தால் எனக்கும் சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்று சொன்னார். ஏற்கெனவே எனக்கு கமலை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் போது தேவர் மகன் படம் வெளிவந்தது. கமலின் ஆளுயர கட் அவுட்சை என் அறையின் சுவர்களில் ஒட்டி வைத்திருக்கும் அளவுக்கு கமலை எனக்கு பிடிக்கும். என் தம்பி ரஜினி ரசிகன். அதனால், எனக்கும் என் தம்பிக்கும் கமல், ரஜினி பெயரை சொல்லி ரொம்ப அடிபிடு சண்டை நடக்கும். கமல் செய்யும் சமூக சேவை எனக்கு கமலஹாசன் மேல் இன்னும் இன்னும் மதிப்பை கூட்டியுள்ளது.
இந்த ஒரு மாத காலத்தில், ஹலோ எப்.எம்.மில், எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயின் தீமைகளைப் பற்றி நேயர்களுக்கு எடுத்துரைக்கப்படும். அத்துடன், எச்.ஐ.வி-எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போல கருதி, உதவ முன்வருமாறு பிரசாரம் செய்யப்படும்.
ஒரு குழந்தைக்கு ரூ.750 நன்கொடை அளிக்குமாறு நேயர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். நேயர்கள் அளிக்கும் ரூ.750 நன்கொடையை வைத்து, அந்த குழந்தையின் பெயரில் சுகாதார காப்பீடு எடுக்கப்படும். இது அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு பயன்படும்.
இந்த பிரசார இயக்கத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி- எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.. இன்றைக்கு காலை ஹலோ எப்.எம்.மில் கமலஹாசன் அவர்களுடன் நேர்முகம் ஒலிபரப்பாகியது. அதில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு இல்லம் அமைத்து செயல்படுத்தி வரும் ஒருவருடன் கமல் பேசியது ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது. அந்த நிறுவனர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பைக்கில் வைத்து வெளி இடங்களுக்கு அழைத்து போவதாகவும், தனது தந்தை போல உணர்வு அந்த குழந்தைகளுக்கு ஏற்படுவதற்காக அவ்வாறு செய்வதாகவும் கூறினார்.. உடனே கமலும் அப்படி ஏதாவது குழந்தைகளை வெளியில் கூட்டிட்டுபோகும் வேலை இருந்தால் எனக்கும் சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்று சொன்னார். ஏற்கெனவே எனக்கு கமலை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் போது தேவர் மகன் படம் வெளிவந்தது. கமலின் ஆளுயர கட் அவுட்சை என் அறையின் சுவர்களில் ஒட்டி வைத்திருக்கும் அளவுக்கு கமலை எனக்கு பிடிக்கும். என் தம்பி ரஜினி ரசிகன். அதனால், எனக்கும் என் தம்பிக்கும் கமல், ரஜினி பெயரை சொல்லி ரொம்ப அடிபிடு சண்டை நடக்கும். கமல் செய்யும் சமூக சேவை எனக்கு கமலஹாசன் மேல் இன்னும் இன்னும் மதிப்பை கூட்டியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)