Monday, March 16, 2015

சாக்லேட்


குழந்தைப்பருவத்தில் இருந்தே சாக்லேட்னா அவ்ளோத்துக்கு பிடிக்கும். அதுவும் வெளிநாட்டில் இருந்து யாராவது சாக்லேட் வாங்கிட்டு வந்தாங்கன்னா என்னவோ அந்த டேஸ்ட் ரொம்ப பிடிக்கும். ஆனால் நம்ம ஊரில் இம்போர்ட்டட்  சாக்லேட் வாங்கினால் ரொம்ப காஸ்ட்லியாக இருக்கிறதே என தோன்றும். ஊட்டியில் ஹோம் மேட் சாக்லேட் ரொம்ப பேமஸ்னு சொல்வாங்க. ஊட்டி போறவங்க கண்டிப்பா ஹோம் மேட் சாக்லேட் வாங்காமல் ஊருக்கு கிளம்ப மாட்டாங்க.. அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சிக்காக சாதனைப்பெண்கள் இன்டர்வியூ செய்யும் போது, சாக்லேட் பிசினஸ், ஹோம் பேக்கரி வைத்திருக்கிறேன் என்று சொல்றப்போ எப்படியாவது இதுவும் நம்ம பண்றோம் அப்டின்னு அடிக்கடி யோசித்திருக்கிறேன். சரி வீட்டில் சாக்லேட் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.  என்னுடைய முதல் முயற்சியே சக்சஸ் .. சாக்லேட் வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருள்கள்:-

பட்டர்  - 1/4 டம்ளர்
சீனி    -  1  டம்ளர்
தண்ணீர்  -  1/2 டம்ளர்
கோகோ பவுடர்  - 5 டேபிள்ஸ்பூன்
மில்க் பவுடர்  - 1 1/4 டம்ளர்

செய்முறை :-


கோகோ பவுடரையும், மில்க் பவுடரையும் நன்றாக கலந்து கொள்ளவும்


தண்ணீரில் சீனி சேர்த்து ஒற்றை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்
இறக்குவதற்கு முன்னர் பட்டரை சீனிப்பாகில் சேர்த்து சிம்மில் வைத்து பொங்கிய உடன் இறக்கவும்

கோகோ பவுடர், மில்க் பவுடர் கலவையை எடுத்து, இந்த சீனிப்பாகில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மிக்ஸ் செய்து வைக்கவும்.. இந்த மிக்ஸ்ஐ பட்டர் தடவிய ஒரு தட்டில் ஊற்றி ஒரு 15 நிமிடம் ப்ரிட்ஜ்ல் வைக்கவும். 

வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சரில் ஒரு 15 நிமிடங்கள் வரை வைத்து எடுத்து பின், குக்கீஸ் கட்டர் வைத்து விரும்பிய வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.

கடைகளில் குக்கீஸ் கட்டர் 8 shapes ஒரு boxல் இருக்கும். வெறும் 20 ருபாய் தான். Heart shape, round shape, flower shape  என 8 வடிவங்களில் கிடைக்கும். இந்த குக்கீஸ் கட்டர் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். வாங்கி வைத்துக்கொண்டால் சாக்லேட் செய்ய வசதியாக இருக்கும்,.சாக்லேட் ரெடி.. விரும்பினால் ஏதாவது சாக்லேட் பேப்பரில் சுற்றி அழகாக மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.






Friday, March 13, 2015

உருளைக்கிழங்கு – கார்ன் கிரேவி

ஒவ்வொரு நாளும் காலை நேரம் வந்துட்டாலே இன்னைக்கு என்ன சமையல் பண்றதுஙகிற யோசனை – சமையல்ன்னா நாங்கள்லாம் யாரோ சொல்லி வச்சிருக்கிறத காபி அடிக்க மாட்டோம்... எல்லாம் புதுசு புதுசா பண்ணனும். சமையலில் புகுத்து ஆராய்ச்சி பண்றது .. சக்ஸசா வந்தா வெளியே நாலு பேர்கிட்ட சொல்லுவோம். இல்லாட்டா அடக்கமா யார்கிட்டயும் சொல்ல மாட்டோம். அந்த மாதிரி தான் இன்னைக்கு சமையலில் உருளைக்கிழங்கு – கார்ன் கிரேவி சக்ஸசா வந்துச்சா ..அதனால் நம்ம ப்ளாக்ல போடலாமே அப்டின்னு ஒரு எண்ணம்..
தேவையான பொருள்கள்:-
உருளைக்கிழங்கு – 3(துண்டு துண்டாக கட் செய்யவும்)
பேபி கார்ன் – 2(துண்டு துண்டாக கட் செய்யவும்)
ஸ்வீட் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
செஸ்வான் சாஸ் – 1/2  டீஸ்பூன்
மிளகாய் வற்றல் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய்– தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
செய்முறை :-
பேபி கார்ன் , உருளைக்கிழங்கை தனியாக அவித்து தோல் உரித்து வைக்கவும் .
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து, உருளைக்கிழங்கு, பேபி கார்ன் சேர்த்து வதக்கவும்.உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் , வற்றல் தூள, உப்பு, ஸ்வீட் சில்லி சாஸ்,செஸ்வான் சாஸ் சேர்த்து வதக்கி , சிம்மில் ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்கவும். சூப்பரான உருளைக்கிழங்கு கார்ன் கிரேவி ரெடி


Thursday, March 12, 2015

செஸ்வான் காலிப்ளவர் கிரேவி


காலிப்ளவர் வாங்கியாச்சு.  எப்பவும் செய்யற மாதிரி இல்லாமல் ஏதாவது வித்தியாசமா ட்ரை பண்ணலாமேன்னு தோன்றியது.  போன வாரம் செஸ்வான் சாஸ் வாங்கி ப்ரிட்ஜ்ல் இருந்தது நினைவிற்கு வந்தது. ஏதோ ஒரு ஐடியா செஸ்வான் காலிப்ளவர் கிரேவி செய்து பார்க்கலாமனு செய்ய ஆரம்பித்தால் இவ்ளோ சூப்பரா வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.  இந்த ரெசிபியை டேஸ்ட் பண்ணிட்டு எல்லாரும் ஹோட்டல் டேஸ்ட் இருக்குப்பா... சூப்பரா இருக்குன்னு Certtificate கொடுத்திருக்காங்க.
தேவையான பொருள்கள் :-
1) பெல்லாரி வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
2) குடை மிளகாய் – 1/4 (பொடியாக நறுக்கியது)
3) தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
4) இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
5) சிக்கன் 65 பவுடர் – 1/2 டீஸ்பூன்
6) உப்பு – தேவையான அளவு
7) மஞ்சள் பொடி – தேவையான அளவு
8) எண்ணெய் – பொறிக்க, வதக்க தேவையான அளவு
9) எலுமிச்சம்பழம் - பாதி 
செய்முறை:-
1 காலிப்ளவரை வென்னீரில் உப்பு, மஞ்சள் போட்டு அரை மணி நேரம் கழித்து எடுத்து உதிர்த்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி , காலிப்ளவரை பொறித்து எடுக்கவும்.
மற்றொரு கடையில் எண்ணெய் விட்டு, வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
குடைமிளகாய் , தக்காளி ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
உப்பு, சிக்கன் 65 பவுடர், செஸ்வான் சாஸ் சேர்த்து வதக்கவும்
இப்போது பொறித்து வைத்துள்ள காலிப்ளவரை வதக்கி வைத்துள்ள மசாலாவுடன் சேர்க்கவும்.

இறக்குவதற்கு முன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிண்டி இறக்கவும்.  சூப்பரான காலிப்ளவர் க்ரேவி ரெடி... சாதம், இட்லி, சப்பாத்திக்கு நல்ல ஒரு சைட் டிஷ்.

Wednesday, May 14, 2014

எலுமிச்சம் பழம்னா சும்மாவா?

வெயில் நல்லா சுள்னு அடிக்க ஆரம்பிச்சிட்டு.  ஏதாவது கூல்ஆ ஜூஸ் குடிக்கலாம், இல்லாட்டா பழங்கள் சாப்பிடலாம் அப்டின்னு பார்த்தல், பழங்களோட விலை எல்லாம் சும்மா எகிறிகிட்டு இருக்கு. அதனால ஏழைக்கேத்த எள்ளுருண்டை அப்படின்னா
ரொம்ப ரொம்ப சீப் ஆ கிடைக்கிற எலுமிச்சம்பழம் மட்டும் தான். எலுமிச்சம் பழம் விலை கம்மி அப்டின்றதனால அதை யாருமே துச்சமா நினைச்சிர கூடாது.  இப்போ சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவிகிட்டு இருக்குதாம். எந்த காய்ச்சலா இருந்தாலும் சரி, லெமன் வாட்டர  குடிச்சா காய்ச்சல், ஜலதோஷம், காலரா, மலேரியா இந்த மாதிரி எல்லாமே சரி ஆகி விடுமாம்.  ஏன்னா எலுமிச்சம் பழ ஜூஸுக்கு ரத்தத்தை சுத்தம் பண்ணுற ஷக்தி இருக்குதாம். அது மட்டும் இல்ல.. எலும்பு சமபந்தமான  நோய்கள், ரத்த அழுத்தம், சுவாசிப்பதில் ஏதும் பிரச்சினைகள் , ஆஸ்துமாவால் கஷ்டப்படறவங்க எலுமிச்சம்பழ ஜூஸ் குடிச்சிக்கிட்டு வந்தால் இந்த பிரசசினைகள்லாம் சரி ஆகி விடுமாம்.  முக்கியமா உடம்பு எடை குறைக்கனும் அப்படின்னு ஆசைப்படறவங்க லெமன் ஜூஸ் கூட  வெதுவெதுப்பான நீர் , சிறிது தேன் சேர்த்து குடிச்சிக்கிட்டு வந்தால் உடம்பு எடை சரசரன்னு குறைஞ்சிகிட்டே வருமாம். முயற்சி செஞ்சு பாருங்க...

Thursday, May 8, 2014

சாப்பிட்டது செமிக்காம அலைபவர்களுக்கு :-

ரொம்ப ஓவரா பேசுறவங்களை சாப்பிட்டது செமிக்காம அலையற போல அப்படின்னு நம்ம மக்கள்லாம் காலம் காலமா, தொன்று தொட்டு சொல்லிக்கிட்டு இருக்காங்கள்ல? Actuallஆ நம்ம சாப்பிடுற சாப்பாட்டை நல்லா செமிக்க வைக்கிறதுக்காக தான், நம்மளோட வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம்னு ஒன்னு சுரக்குது. ஆனால் நல்ல காரமா, Oilல பொரிச்ச சாப்பாட்டை எல்லாம் சாப்பிடறப்போ, இந்த அமிலம் எக்கசக்கமா சுரக்குமாம். இந்த அமிலம் ரொம்ப சுரக்க ஆரம்பிக்கிறப்போ தான் நம்மளுக்கு பசிக்க ஆரம்பிக்குமாம்.  அப்படி பசிக்கிறப்போ சரியா சாப்பிடாம் பசியோட சுத்திகிட்டு இருந்தோம் அப்டின்னா, இந்த அமிலம் வயிறு, குடல், பின்குடல் இப்படி பலப்பல விஷயங்களை டேமேஜ் பண்றதால தான் நம்மளுக்கு அல்சர் மாதிரி நோய்கள்லாம் வருதாம். விஷயம் தெரிஞ்சுட்டுல்ல? இனிமேலாவது டைமுக்கு சாப்பிட்டுருங்கப்பா.... 

Tuesday, May 6, 2014

விடுகதைகள்

இந்த விடுகதைகளுக்கு விடைகள் தெரிந்தால் முயற்சிக்கலாமே..

1) பூ பூத்தால் காய்க்காது.. காய்த்தால் பூக்காது. அது எது?

2) சமைக்க முடியாத மீன் கூட்டம் எட்டாத உயரத்தில் . அது எது?

3) ஊசி நுழையாத காட்டுக்குள்ளே ஈசியா போறான் கருப்பு துரை. அவன் யார்?

4) நான் உஙக அம்மா கூட இருக்கேன்
    நான் உஙக அக்கா கூட இருக்கேன்
   நான் உஙக அண்ணா கூட இருக்கேன்
   நான் உஙக அப்பா கூட இருக்கேன்
   உஙக அண்ணி  கூடயும் நான்  இருக்கேன். நான் யார்?
5) உதிர்ந்தால் ஒடி போயிடுவான்
   காற்றடிச்சா பறந்து போயிடுவான்
   வெயில் பட்டால் உலர்ந்திடுவான்
   அவன் யார்?

நோ டென்ஷன்..

சிலருக்கு எதுக்கெடுத்தாலும் பயங்கர கோபம் வரும், செமயா டென்ஷன் வரும். ஆனா ரொம்ப டென்ஷன் ஆறவங்களுக்கு மன அழுத்தம் தேடி தேடி வரும் அப்டின்னு ஆயுர்வேதத்தில் சொல்லி இருக்காங்க.  அப்படி மன அழுத்தம் கூடிகிட்டே இருந்துச்சு அப்டின்னா உடம்புல இருக்கிற ஹார்மோன்கள் ரொம்ப ரொம்ப பாதிக்கப்படும். அப்பறமா நோய் எதிர்ப்பு சக்தி குறையும், அல்சர் வரும், சோரியாசிஸ் அப்டின்ற தோல் நோய் கூட மன அழுத்தத்தால் தான் வருதுன்னு சொல்றாங்க.  அதனால ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க.. டென்ஷன் அப்டியே எகிற ஆரம்பிக்கிறப்பவே, கூல் கூல்னு மன்சை கன்ட்ரோல் பண்ணுங்க. அப்படி இல்லாட்டா தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்ச் ஜூஸ் குடிச்சா மன அழுத்தத்தை உண்டு பண்ணுற ஹார்மோனை அது கன்ட்ரோல் பண்ணும் அப்படின்னு ஒரு அமெரிக்க ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்காங்க.  அதுவும் இல்லாட்டா தினமும் ஒரே ஒரு நெல்லிக்காய் வாங்கி சாப்பிடுங்க. ஏன்னா ஒரு நெல்லிக்காய்ல, ஆரஞ்சு பழத்தை விட இரண்டு மடங்கு விட்டமின் சி நெறைய இருக்குதுன்னு சொல்றாங்க. அதனால டென்ஷன் பார்டீஸ் இந்த விஷய்ங்கள் எல்லாம் நோட் பண்ணிகோங்க ..ஓகேயா?