Thursday, March 12, 2015

செஸ்வான் காலிப்ளவர் கிரேவி


காலிப்ளவர் வாங்கியாச்சு.  எப்பவும் செய்யற மாதிரி இல்லாமல் ஏதாவது வித்தியாசமா ட்ரை பண்ணலாமேன்னு தோன்றியது.  போன வாரம் செஸ்வான் சாஸ் வாங்கி ப்ரிட்ஜ்ல் இருந்தது நினைவிற்கு வந்தது. ஏதோ ஒரு ஐடியா செஸ்வான் காலிப்ளவர் கிரேவி செய்து பார்க்கலாமனு செய்ய ஆரம்பித்தால் இவ்ளோ சூப்பரா வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.  இந்த ரெசிபியை டேஸ்ட் பண்ணிட்டு எல்லாரும் ஹோட்டல் டேஸ்ட் இருக்குப்பா... சூப்பரா இருக்குன்னு Certtificate கொடுத்திருக்காங்க.
தேவையான பொருள்கள் :-
1) பெல்லாரி வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
2) குடை மிளகாய் – 1/4 (பொடியாக நறுக்கியது)
3) தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
4) இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
5) சிக்கன் 65 பவுடர் – 1/2 டீஸ்பூன்
6) உப்பு – தேவையான அளவு
7) மஞ்சள் பொடி – தேவையான அளவு
8) எண்ணெய் – பொறிக்க, வதக்க தேவையான அளவு
9) எலுமிச்சம்பழம் - பாதி 
செய்முறை:-
1 காலிப்ளவரை வென்னீரில் உப்பு, மஞ்சள் போட்டு அரை மணி நேரம் கழித்து எடுத்து உதிர்த்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி , காலிப்ளவரை பொறித்து எடுக்கவும்.
மற்றொரு கடையில் எண்ணெய் விட்டு, வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
குடைமிளகாய் , தக்காளி ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
உப்பு, சிக்கன் 65 பவுடர், செஸ்வான் சாஸ் சேர்த்து வதக்கவும்
இப்போது பொறித்து வைத்துள்ள காலிப்ளவரை வதக்கி வைத்துள்ள மசாலாவுடன் சேர்க்கவும்.

இறக்குவதற்கு முன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிண்டி இறக்கவும்.  சூப்பரான காலிப்ளவர் க்ரேவி ரெடி... சாதம், இட்லி, சப்பாத்திக்கு நல்ல ஒரு சைட் டிஷ்.

No comments:

Post a Comment