Monday, May 3, 2021

ஆலம்பட்டியான் கருப்பட்டி காபி.....

 நம்ம வீட்டுல இருக்கிற பெரியவங்க இன்னிக்கும் திடகாத்திரமா இருக்காங்கன்னா - நாங்கல்லாம் உங்களை மாதிரி இல்ல காலைல எந்திரிச்ச உடனே கருப்பட்டி காபி தான் அப்டின்னு சொல்வாங்க. இப்போல்லாம் டல்கோனா, கேப்பசினா-ன்னு உலகம் மாடர்னா போய்கிட்டு இருக்கு. நம்மல்லாம் கருப்பட்டி காபிக்கு எங்கே போறதுன்னு யோசிக்கிறீங்கல்ல? அதுக்கென்ன? வீட்டுல போட்டு குடிக்கலாம்னா, நல்ல கருப்பட்டி கிடைக்கணுமே, பதநீருக்கு பதிலா சர்க்கரை தண்ணிய சேர்த்து தான் கருப்பட்டி செய்றாங்கன்னு சொல்றத கேட்டு, கொஞ்ச நஞ்சம் இருந்த கருப்பட்டி காபி ஆசையும் காத்துல காணாம போயிரும். இந்த தேவையை புரிஞ்சிகிட்டு தான்  சென்னைல பல இடங்கள்லயும் ஆலம்பட்டியான் கருப்பட்டி காப்பின்னு ஒரிஜினல் கருப்பட்டி காப்பிய ஒரு BRAND-ஆக கொண்டு வந்திருக்காங்க. 


இந்த கருப்பட்டி காபியோட தரத்துக்காகவே, மக்கள் பல மைல் தொலைவை  கடந்து கருப்பட்டி காபியை தேடி வரும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்..இந்த கருப்பட்டி காபியில் இனிப்பிற்காக கருப்பட்டி, நாட்டு சர்க்கரை சேர்க்கிறாங்க. ஒரு ஆரோக்கியமான பானம் இப்படி மிக குறைந்த விலையில் யாராலயுமே சொல்ல முடியாது..இங்கே நீங்க போறப்போ நீங்க 15 / 20 ரூபாயில் காபி / டீ குடிக்கலாம். 


கருப்பட்டி பல்வேறு விதங்கள்ல உடலுக்கு நல்லது. உடலில் இரத்த சிகப்பணுக்கள், இரும்பு சத்தை அதிகரிக்க உதவும். அது மட்டும் அல்ல. திருநெல்வேலின்னாலே நமக்கு அல்வா தான் நினைவுக்கு வரும். இந்த அல்வாவிற்காக திருநெல்வேலி போய் சாப்பிட முடியுமா என்ன? திருநெல்வேலி அல்வா பிரியர்களுக்காக திருநெல்வேலி அல்வாவும் இங்கே விற்பனை செய்யப்படுது. சாயங்காலம் ஆனா போதும், இங்கே தனியா பெஞ்ச் போட்டு கருப்பட்டி இனிப்பு பணியாரம் மற்றும் கார பணியாரம் சுடசுட விற்பனை களை கட்டும்.


தனியா ஆலம்பட்டியான் அல்வா கடையும் இந்த கடையை ஒட்டி இருக்குது. இங்கே திருநெல்வேலி அல்வால இருந்து ஆரம்பித்து, கருப்பட்டி பர்பி மற்றும் பல்வேறு வகையான இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுது. அதுலயும் ஜூஸியாக இருக்கும் கருப்பட்டி ஜாங்கிரியின் சுவை அலாதி தான். சாப்பிட்டா சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம். நேரம் கிடைத்தால் இந்த கடைய VISIT பண்ணி பாருங்களேன்.


No comments:

Post a Comment