Friday, January 8, 2010

அம்மான்னா சும்மாவா !

அம்மான்னா சும்மாவா
சும்மா சும்மா அம்மாவா

நோ நோ நோ டென்ஷ‌ன், இந்த‌ அம்மா ப‌ஞ்ச்லாம் எதுக்குன்னா, அதில‌ ஒரு பெரிய‌ மேட்ட‌ர் இருக்கு. நெற‌ய‌ பெண்க‌ள் க‌ல்யாண‌ம் ஆயிட்டா அழகு போயிரும், ந‌ம்ம‌ நென‌ச்ச‌ மாதிரி ந‌ட‌க்க‌ முடியாது, சுத‌ந்திர‌ம்லாம் ப‌றி போயிரும் அப்டில்லாம் நென‌க்கிறாங்க‌. ஆனா, ல‌ண்ட‌ன்கார‌ங்க‌ என்ன‌ சொல்றாங்க‌ன்னா, க‌ல்யாண‌ம்லாம் ரொம்ப‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். க‌ல்யாண‌ம் ஆகி, ஒரு குழந்தைக்கு தாய் ஆகிற‌ப்போ தான், அந்த‌ பெண்ணோட‌ ந‌ட்பு வ‌ட்ட‌ம் பெரிசாகும். ஏன்னா, அவ‌ங்க‌ வ‌ய‌சில‌ இருக்கிற‌ அம்மா & தோழிக‌ள் கூட‌ நெற‌ய‌ பேசுவாங்க‌ அப்டின்னு நிருபிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தா சொல்றாங்க‌. அத‌னால‌ ஒரு குழ‌ந்தை பிற‌ந்த‌ பிற‌கு ஒரு பெண்ணுக்கு கிட்ட‌த்த‌ட்ட‌ 8 புது ஃப்ர‌ண்ட்ஸ் கிடைக்கிறாங்க‌ளாம். பெண்க‌ள் இனிமேல் இதையெல்லாம் நினைவில் கொள்வார்க‌ளாக‌ !

Tuesday, January 5, 2010

முடி உதிர்ற‌து நிக்க‌னுமா:

முடி உதிர்ற‌து நிக்க‌னுமா:ஒவ்வொரு நாளும் கிட்ட‌த்த‌ட்ட 50 முடில‌ இருந்து 100 வ‌ரை உதிர்ந்துச்சுன்னா, அது ஒன்னும் பிர‌ச்சினை இல்ல‌. இருந்தாலும் முடி உதிர்ற‌துக்கு வீட்டில் என்ன‌ மாதிரி சிகிச்சை எடுக்க‌லாம்னா,
1. நல்ல‌ சுத்த‌மா இருக்கிற‌ தேங்காய் எண்ணெயை ஒரு ட‌ம்ள‌ர் எடுத்து, மித‌மான‌ சூட்டில‌ காய்ச்ச‌னும். அந்த‌ சூடான‌ எண்ணெய்ல‌ 2 கைப்பிடி அள‌வு க‌றிவேப்பிலையை போட்டு, க‌ருவேப்பிலையோட‌ ச‌ட‌ச‌ட‌ப்பு அட‌ங்கின‌ பிற‌கு எண்ணெயை ஆற‌ வ‌ச்சு பாட்டில்ல‌ ஊத்தி வைச்சிருங்க‌.2. பெரிய‌ நெல்லிக்காய், க‌றிவேப்பிலை, ரெண்டும் சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் சாறு எடுத்துகோங்க‌. முற்றின‌ தேங்காய் பால் 2 ட‌ம்ள‌ர் எடுத்துகோங்க‌. மூன‌யும் அடுப்பில‌ வ‌ச்சு ந‌ல்லா காய்ச்சிகோங்க‌. எண்ணெய் ப‌க்குவ‌ம் வ‌ந்த‌ அப்ற‌மா அடுப்பில‌ இருந்து இற‌க்கி ந‌ல்லா ஆற‌ வ‌ச்சு உப‌யோகிக்க‌லாம்.
இந்த‌ ரெண்டில ஏதாவ‌து ஒன்ன‌ ரெடி ப‌ண்ணிகிட்டு த‌லைமுடியோட‌ வேர்க்கால்க‌ள்ல‌ ப‌டுற‌ மாதிரி ந‌ல்லா ம‌சாஜ் செஞ்சு, 1/2 ம‌ணி நேர‌ம் க‌ழிச்சு, முடியை அலசினா, முடி உதிர்ற‌து நிக்கும். முத‌ல் எண்ணெய‌ விட‌ ரெண்டாவ‌து ரொம்ப‌ ரொம்ப‌ ப‌வ‌ர்ஃபுல் !

Friday, January 1, 2010

ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்துக்கு ஒரு க‌ன‌வு.........


இப்போல்லாம் எல்லா ப‌ச‌ங்க‌ளுக்குமே நூடில்ஸ், பிஸ்ஸா, ப‌ர்க‌ர் இந்த‌ மாதிரி தான் சாப்பிட பிடிக்குது. திருநெல்வேலி புது ஸ்டான்டுக்கு வெளியே சாய‌ங்கால‌ம் 6 ம‌ணி ஆச்சுன்னா, ப‌ஸ்ல போற‌ப்போ, ஒரு விஷ‌ய‌த்தை பார்க்க‌லாம். என்ன‌ன்னா, ஒரு வ‌ண்டில‌ பிடிச்சிட்டு வ‌ந்த மீனை அப்டி ஃப்ரெஷ்ஷா வித்துகிட்டு இருப்பாங்க‌. அதுக்கு அடுத்து, இன்னொரு வ‌ண்டில அப்டி அதே ஃப்ரெஷ் மீனை பொரிச்சு சுட‌ சுட‌ வித்துகிட்டு இருப்பாங்க‌. பஸ்ல‌ அந்த‌ இட‌த்தை க்ராஸ் ப‌ண்ற‌ப்போ மீனை பொரிக்கிற‌ வாச‌ம், அதுவும் சாய‌ங்கால‌ம் சாப்ட‌ற‌துக்கு ரொம்ப‌ ஆசையாத்தான் இருக்கும். இதுக்காக‌வே அங்கே செம‌ கூட்ட‌மா இருக்கும். இந்த‌ ஃபாஸ்ட் ஃபுட் இப்போ ம‌ட்டும்னு இல்ல‌. தொல் பொருள் ஆராய்ச்சியாள‌ர்க‌ள் என்ன‌ சொல்றாங்க‌ன்னா, ப‌ழைய‌ கால‌த்தில‌ கிரேக்க‌ நாட்டுல‌, அவ‌ங்க‌ளுக்கு வெளியே சாப்ட‌ற‌து ரொம்ப‌ ஜாலியா இருக்குமாம். ந‌ம்மளுக்கும் கூட‌ வெளியே போய் சாப்பிட‌ற‌து ஜாலியாத்தான் இருக்கு. ஆனால் முந்தி மாதிரி இல்ல‌. தூத்துக்குடில‌ ஒரு ஹோட்ட‌ல்ல‌3 த‌ந்தூரி ரொட்டி, ப‌னீர் ப‌ட்ட‌ர் ம‌சாலா குடும்ப‌த்தோட‌ போய் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் ஆயிருது. மாச‌த்துக்கு ஒரு த‌ட‌வை கூட‌ வெளியே போய் சாப்பிட‌ற‌து ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்துக்கு ஒரு க‌ன‌வு மாதிரி இருக்கு. விலைவாசியும் ஏறிக் கொண்டே போகுது. இது எங்கே போய் முடியுமோ!

Saturday, December 19, 2009

கண்டுபிடிச்சிட்டாங்க‌ய்யா !கண்டுபிடிச்சிட்டாங்க‌

க‌ச‌ப்பா யாராவ‌து ஏதாவ‌து குடுக்க‌ வ‌ந்தாங்க‌ன்னா, காத‌ தூர‌ம் ஓடி போயிருவோம். இதுக்கெல்லாம் யார் கார‌ண‌ம்னு யோசிச்சு பார்த்தா, ந‌ம்ம‌ குட்டி பிள்ளையா இருக்ற‌ப்போ சங்கில‌ வ‌ச்சு இஞ்சிய‌ வாயில‌ ஊத்திட்டு, அப்ற‌மா கொஞ்சோண்டு சீனிய‌ வாய்ல‌ அள்ளி போடுவாங்க‌ளே, அந்த பார்டிஸ் தான், சாரி பாட்டிஸ் தான். ஆனா, கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் இந்த‌ நாடுக‌ள்ல‌ல்லாம் க‌ச‌ப்பா இருக்கிற‌ காய்க‌றிக‌ள‌ எல்லாம், கொஞ்சோண்டு உப்பு, ஆலிவ் எண்ணெய் இதெல்லாம் சேர்த்து ச‌மைச்சு சாப்டுற‌த‌னால‌ க‌ச‌ப்பாவே இருக்காதாம். அவ‌ங்க‌ என்ன‌ சொல்றாங்க‌ன்னா, க‌ச‌ப்பா இருக்கிற‌ காய்க‌ள்ல‌ 'பைட்டோ நியூட்ரிய‌ன்ஸ்' நெற‌ய‌ இருக்குதாம். அத‌னால‌, நெறய‌ பாக‌ற்காய‌ சாப்டா இத‌ய‌ நோய் எட்டி கூட‌ பார்க்காதாம். அப்ற‌ம் இன்னொரு விஷ‌ய‌ம், இதுவ‌ரைக்கும் இள‌ந‌ரை ஏன் வருது அப்டின்னு குப்புற‌ ப‌டுத்துட்டு எத்த‌னை நாள் யோசிச்சிருப்பீங்க‌, இதுக்கும் க‌ச‌ப்பு சுவை தான் கார‌ண‌ம் அப்டின்னு இப்போ ஒரு ஆராய்ச்சி ப‌ண்ணி க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. அதாவ‌து ந‌ம்ம‌ முடியோட‌ வேர்க்கால்க‌ளோட‌ அடியில‌ க‌ச‌ப்பு சுவை இருக்குதாம். அந்த க‌ச‌ப்பு சுவை குறைய‌ற‌த‌னால‌ தான் முடி ந‌ரைக்க‌ ஆர‌ம்பிக்குதாம். கண்டுபிடிச்சிட்டாங்க‌ய்யா !கண்டுபிடிச்சிட்டாங்க‌

Thursday, December 17, 2009

க‌னவு காணுங்க‌ள்‍‍‍‍‍‍...க‌லாம் சொன்னது


இன்னைக்கு காலைல‌ ப‌ஸ்ல‌ உல‌க‌ நாய‌க‌ன் க‌ம‌ல் ந‌டிச்ச‌ காக்கி ச‌ட்டை ப‌ட‌த்தை பூம் டிவில‌ போட்டாங்க‌. இப்போ புதுசா த‌மிழ் நாடு அர‌சு ப‌ஸ்க‌ள்ல‌ நெட்வொர்க் மூல‌மா பூம் டிவி ஒடுற‌தனால ஒரே நேர‌த்தில‌ எல்லா கே.டி.சி. ப‌ஸ்க‌ள்ல‌ ஒரே ப‌ட‌ம் தான் ஓடும். அத‌னால், ந‌ம்ம‌ எல்லா ஊர்ல‌யுமே கே.டி.சி. ப‌ஸ்க‌ள்ல‌ காக்கி ச‌ட்டை பட‌ம் தான் ஒடியிருக்கும். இந்த‌ ப‌ட‌த்தில‌ க‌ம‌லோட‌ பெரிய‌ க‌ன‌வு போலீஸ் ஆக‌னும் அப்டிங்கிற‌து தான். அதனால‌, அம்பிகா க‌மல் போலீஸ் ஆக‌னும்கிற‌துக்காக‌, க‌மல் போலீஸ் ஆற‌துக்கு முன்னால‌யே க‌ம‌லுக்கு போலீஸ் ட்ரெஸ் தைச்சு கொடுக்ற‌திலிருந்து, க‌ம‌ல் போலீஸ் ட்ரெஸ்ல‌ ஓவிய‌மா வ‌ரைஞ்சு வைக்கிற‌ வ‌ரை, க‌ம‌லோட‌ க‌ன‌வு நெஜமாக்கிற‌தில‌ ரொம்ப‌வே உத‌வி செய்ற‌ மாதிரி காட்சிக‌ள்லாம் வ‌ரும். ந‌ம்ம‌ ஊர்லல்லாம் பார்த்தீங்க‌ன்னா, நெற‌ய‌ போட்டி தேர்வுகள்ல‌ தேர்ச்சி பெற்று, பெரிய‌ வேலைக்கு போற‌ பெண்க‌ள் எல்லாருமே என்னோட‌ இந்த‌ க‌ன‌வு நெறைவேறுற‌துக்கு என்னோட‌ க‌ண‌வ‌ன் தான் கார‌ண‌ம்னு சொல்வாங்க‌. அதே மாதிரி வாழ்க்கையில‌ எப்டியாவ‌து கார் வாங்க‌னும்னு க‌ண‌வ‌னுக்கு ஆசையா இருந்தா, ம‌னைவி எப்டியாவ‌து ந‌கையை அட‌கு வைச்சாவ‌து க‌ண‌வ‌னோட‌ க‌ன‌வை நிறைவேத்திருவாங்க‌. இப்போ அமெரிக்கால‌ என்ன க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌ன்னா, இந்த‌ மாதிரி க‌ண‌வ‌னோட‌ க‌ன‌வை ம‌னைவி நிஜ‌மாக்கினாலும், ம‌னைவியோட‌ க‌ன‌வை க‌ண‌வ‌ன் நிஜ‌மாக்கினாலும், க‌ண‌வ‌ன், ம‌னைவி இடையே அன்பு கூடுவ‌தோடு. வாழ்க்கைத்த‌ர‌மும் உய‌ரும் அப்டின்னு க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. ஒ.கே. அப்ற‌ம் என்ன‌ வேலை, பார்ட‌ன‌ரோட‌ க‌ன‌வு என்ன‌து அப்டின்னு கேட்டுட்டு தான் ம‌றுவேலை !

Wednesday, December 16, 2009

பெண்க‌ளுக்கு வேலையா? வீடா? எது பெட்ட‌ர்?


எல்லாருக்குமே வேலைக்கு போகாம வீட்டுக்கு ச‌ம்ப‌ள‌ம் வ‌ந்தா ந‌ல்லா இருக்கும்ல‌. நெற‌ய‌ பேர் வெளில‌ சும்மா உழைச்சாதான் உட‌ம்புக்கு ந‌ல்ல‌துன்னு க‌தை விட்டாலும், ச‌ம்ப‌ள‌ம் வீட்டுக்கு வ‌ந்தா எல்லாருக்குமே சும்மா இருக்க‌னும்னு தான் ஆசையா இருக்கும். இங்கிலாந்தில‌ கிட்ட‌த்தட்ட‌ 1500 ஆண்க‌ள்ட‌ உங்க‌ளுக்கு எப்டிப்ப‌ட்ட‌ ம‌னைவிய‌ பிடிக்கும் அப்டின்னு கேட்ட‌துக்கு , நெற‌ய‌ பேர் என்ன சொல்லிருக்காங்க‌ன்ன‌, வேலைக்கு போகாம‌ல் வீட்ல‌யே இருந்து ச‌மைச்சு போட்டு, குடும்ப‌த்தை க‌வ‌னிக்கிற‌ பெண்ணை தான் பிடிக்கும் அப்டின்னு சொன்னாங்க‌ளாம். ஒ.கே. இங்கிலாந்து விஷய‌ம்லாம் இருக்க‌ட்டும். நீங்க‌ என்ன‌ சொல்றீங்க‌? வேலைக்கு போற‌ பெண்க‌ள ஆண்க‌ளுக்கு பிடிக்குமா? வீட்ல‌ இருக்கிற‌ பெண்க‌ளை பிடிக்குமா? உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்யுங்க‌ளேன் !

Tuesday, December 15, 2009

முன்னோர‌(குர‌ங்குக‌ளை) ந‌ம்ம‌ ம‌ற‌க்க‌வே கூடாது ....


2 சிம்ப‌ன்ஸி குர‌ங்குக‌ள் சண்டை போட‌ற‌ப்போ என்ன‌ ப‌ண்ணும்னா, ச‌ண்டை முடிஞ்ச‌ உட‌னே, அந்த‌ 2 குர‌ங்குக‌ளும் முத்த‌ம் குடுத்து, க‌ட்டிய‌ணைச்சிக்குமாம். அவ‌ங்க‌ளாவே, இதுக்கு ஒரு அர்த்த‌ம் வ‌ச்சிருக்காங்க‌ளாம். ச‌ண்டை முடிஞ்சிட்டு, இனிமேல் ந‌ம்ம‌ ந‌ண்ப‌ர்க‌ளா இருப்போம் அப்டின்னு அதுங்க‌ 2ம் புரிஞ்சுக்குமாம். ஒ.கே. க‌ண‌வ‌னும் ம‌னைவியும் ச‌ண்டை போடாதீங்க‌ ‍ அப்டின்னு நான் சொன்னாலும் கூட‌ நீங்க‌ அப்ப‌ப்போ ச‌ண்டை போட‌த்தான் செய்வீங்க‌. ஒ.கே. பர‌வால்ல‌. சண்டை முடிஞ்ச‌ உட‌னே, நீங்க‌ளும் இந்த‌ சிம்ப‌ன்ஸி குர‌ங்கு மேட்ட‌ர‌ ஃஃபாலோ ப‌ண்ணுங்க‌ப்பா. நேரா மேட்ட‌ருக்கு வ‌ராம‌ இப்டி இதுக்குல்லாம் போய் இந்த‌ சிம்ப‌ன்ஸி மேட்ட‌ர்லாம் வேணுமா அப்டின்னா, என்ன‌ தான் இருந்தாலும் ந‌ம்ம‌ளோட‌ முன்னோர‌(குர‌ங்குக‌ளை) ந‌ம்ம‌ ம‌ற‌க்க‌வே கூடாது அப்டிங்கிற‌தில‌ நான் ரொம்ப‌ உறுதியா இருக்கேன். ரொம்ப‌ ரொம்ப‌ ஓவ‌ரா இருக்குல்ல‌. ஒகே கூல் கூல்