Thursday, April 21, 2011

ப‌ழ‌சுக்கு என்னைக்குமே ம‌வுசுதான்.....


ந‌ம்ம‌ நாட்டிலேயே ரொம்ப‌ வெயில் அடிக்கிற‌ இட‌ம் எது தெரியுமா? நிச்ச‌ய‌மா ந‌ம்ம‌ ஊர் இல்ல‌. ஒரிஸாவில் இருக்கிற‌ அங்குல் மாவ‌ட்ட‌த்தில் தால்ச‌ர் அப்டிங்கிற‌ ஊர்ல‌ வ‌ந்து 50 டிகிரி செல்சிய‌ஸ்ல‌ செம‌யா வெயில் அடிக்குதாம். அத‌னால‌ அந்த‌ ஊர்ல‌ ம‌க்க‌ள்லாம் காலைல‌ 11 ம‌ணில‌ இருந்து சாய‌ங்கால‌ம் நால‌ரை ம‌ணி வ‌ரை கோடி ரூபாய் குடுத்தா கூட‌ வெளியே வ‌ர‌வே மாட்டாங்க‌ளாம். இந்த‌ வெயில் நேர‌த்தில் 3 நேர‌முமே 'ப‌காலா' அப்டின்ற‌த‌ தான் இவ‌ங்க‌ சாப்பிடுவாங்க‌ளாம். what is this ப‌காலா? பேர் புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்க‌ள்ல‌... வேற‌ ஒன்னும் இல்ல. ந‌ம்ம‌ ஊர் ப‌ழைய‌ சோறுதாம்பா. இந்த‌ ப‌ழைய‌ சோறை வ‌டிச்சு த‌ண்ணீர் ஊற்றி ஊற‌ வைத்து, அடுத்த‌ நாள் வெங்காய‌ம், மிள‌காய் சேர்த்து சாப்பிட்டால் ' அது தான் ப‌காலாவாம்'. இந்த‌ சோறை மூன்று நேர‌மும் சாப்பிட்டால் ம‌ட்டும் தான் அவ‌ங்களால‌, இந்த‌ வெயில்ல‌ தாக்கு பிடிக்க‌ முடியுமாம். சாதார‌ண ஹோட்ட‌ல்க‌ளில் போய் ப‌காலாவை வாங்கினால் ஒரு ப்ளேட் 50 ரூபாயாம், உய‌ர்ர‌க‌ ஹோட்ட‌ல்க‌ளில் ஒரு ப்ளேட் 500 ரூபாயாம். ப‌ழ‌சுக்கு எப்ப‌வுமே ம‌வுசுதான் அப்டிங்ற‌து இதில‌ இருந்து தெரியுதுல்ல‌....

சுடிதாரோட‌ ஃப்ளாஷ்பேக் இதுதான்


சுடிதாருக்கு துணி எடுத்து, அதை க‌ரெக்டா தைக்க‌ கொடுத்து அழ‌கா போட்டுட்டு போவோம். ஆனால் சில‌ர் ந‌ம்மளை பார்த்து 'பைஜாமா போட்டுட்டு திரியிறா பாரு அப்ப‌டின்னு சொல்வாங்க‌ பாருங்க‌, அது தான் ம‌ன‌சுக்கு ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்கும். இந்த‌ தொள‌தொள‌ன்னு இருக்கிற‌ பைஜாமாவை பெர்ஷியாக்கார‌ங்க‌ளும், இந்தியாக்கார‌ங்க‌ளும் தான் க‌ண்டுபிடிச்சாங்க‌ளாம். அப்போல்லாம் ஐரோப்பிய‌ர்க‌ள் ப‌க‌ல் நேர‌த்தில் என்ன‌ ட்ரெஸ் போட்ருப்பாங்க‌ளோ, அதே ட்ரெஸ்ஸோட‌யே தூங்கிருவாங்க‌ளாம். ந‌ம்ம‌ ஊர்ல‌யும் காலையில‌ இருந்து நைட‌ வ‌ரை நைட்டிய‌ தான் போட்டுக்கிறாங்க‌. இருந்தாலும் முத‌ல்ல‌ இந்த‌ பைஜாமாவை க‌ண்டுபிடிச்ச‌ உட‌னே நைட் போட‌ற‌துக்காக‌ மட்டும் தான் க‌ண்டுபிடிச்சாங்க‌ளாம். அதுவும், ஆண்க‌ளும், சிறுவ‌ர்க‌ளும் தான் முதல்ல‌ பைஜாமா போட்டாங்க‌ளாம். அப்ற‌மா, பெண்க‌ளும், சிறுமிக‌ளும் இந்த‌ ட்ரெஸ் ந‌ம்ம‌ளுக்கும் வ‌ச‌தியா இருக்குமோன்னு போட்டு பார்க்க‌ ஆர‌ம்பிச்சாங்க‌ளாம். அப்போ ஆர‌ம்பிச்ச‌துதான் இந்த‌ சுடிதார். சுடிதார் போட‌ற‌ எல்லாரும் இந்த‌ க‌தையை தெரிஞ்சிக்க‌னும் அப்டின்னு ஒரு ந‌ல்ல‌ எண்ண‌த்தில‌ தான் இந்த‌ ப‌திவை போட‌றேன்பா.....

இதுக்குத்தானா அது...


ந‌மீதாவுக்கு த‌மிழ்ல‌ பிடிச்ச‌ வார்த்தை 'ம‌ச்சான்ஸ்'. த‌மிழில் எவ்வ‌ள‌வு வார்த்தைக‌ள் இருந்தாலும், உங்க‌ளுக்கு 'ம‌ச்சான்ஸ்'ங்கிற‌ வார்த்தை ஏன் இவ்வ‌ள‌வு பிடிச்சிருக்குன்னு கேட்டால் இதுக்கு பின்னால‌ பெரிய‌ ஃப்ளாஷ் பேக் இருக்கு அப்ப‌டின்னு சொல்றாங்க‌ ந‌மீதா. ந‌டிக‌ர் தில‌க‌ம் சிவாஜி அவ‌ரோட‌ ர‌சிக‌ர்க‌ளை 'பிள்ளைக‌ளே' அப்ப‌டின்னு செல்ல‌மா கூப்பிடுவாராம். அதே மாதிரி சூப்ப‌ர்ஸ்டார் 'க‌ண்ணா' அப்ப‌டின்னு சொல்வார். இதே மாதிரி என‌க்குன்னு ஒரு அடையாள‌ம் வேணும்கிற‌துக்காக‌த்தான் என்னோட‌ ர‌சிக‌ர்க‌ள் 'ம‌ச்சான்ஸ்'னு கூப்பிட‌றாங்க‌ அப்டின்னு சொல்லி இருக்காங்க‌.

ந‌டிக‌ர் விக்ர‌முக்கு ந‌ல்ல நெருக்க‌மான‌ ந‌ண்ப‌ர்க‌ளைத்த‌விர‌, வேறு யாராவ‌து அவ‌ரை 'கென்னி' என்று கூப்பிட்டால் அவ‌ருக்கு சுத்த‌மாக‌ பிடிக்காதாம்.

தேவ‌ர் ஃபிலிம்ஸ் அதிப‌ர் தேவ‌ர் எல்லோரையும், அது ஆணாக‌ இருந்தாலும் ச‌ரி, பெண்ணாக‌ இருந்தாலும் ச‌ரி 'முருகா' அப்டின்னு தான் கூப்பிடுவாராம். ஏன்னா, அவ‌ருக்கு த‌மிழ்ல‌ பிடிச்ச‌ வார்த்தை 'முருகா'

Saturday, January 22, 2011

செய்திக‌ள் யோசிப்ப‌து க‌ல்யாணி ‍‍(22.01.11)

* உங்க‌ வீட்டில‌ முருங்கை ம‌ர‌ம் இருக்கா? அப்போ நீங்க‌ பெரிய்ய்ய்ய்....ய‌ ப‌ண‌க்கார‌ங்க‌ ஆயிர‌லாம் அப்ப‌டின்னு நான் அடிச்சு சொல்றேன். ஏன்னா, ஒரு முருங்கைக்காய் விலை இன்னைக்கு நில‌வ‌ர‌ப்படி ஒரு காய் 26 ரூபாயாம். அம்மாடியோவ் ! ரொம்ப‌ அநியாய‌மா இருக்குல்ல‌..


* உங்க‌ வீட்டில‌ எங்கேயாவ‌து ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்ல‌ கூரை போட்டுருக்கீங்க‌ளா?ஆஸ்பெஸ்டாஸ் உட‌ல் ந‌ல‌த்துக்கு இல்லை அப்டின்னு ஒரு பொது ந‌ல‌ அமைப்பு உச்ச‌ நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்த‌து. அந்த‌ வ‌ழ‌க்கில் நேற்று உச்ச‌ நீதிம‌ன்ற‌த்தின‌ தீர்ப்பு என்ன‌ன்னா இந்த‌ விஷய‌த்தில் உற்ப‌த்தியை நிறுத்த‌ சொல்லி ம‌றுப்பு வ‌ழ‌ங்க‌ முடியாது என்று தீர்ப்பு வ‌ழங்கியுள்ள‌து. என்ன‌ ஒரு பொறுப்புள்ள‌ தீர்ப்பு... இருந்தாலும் இது உட‌ல் ந‌ல‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம்ங்ற‌த‌னால‌ ந‌ம்ம‌ தான், ந‌ம்ம‌ வீட்டுக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வேண்டுமா, வேண்டாமான்னு முடிவு ப‌ண்ண‌னு, ரைட்டா?

Thursday, December 16, 2010

கொஞ்சம் மூளையை கசக்குங்க

ரொம்ப‌ நாள் க‌ழிச்சு ப்ளாக்கில‌ எழுத‌றேன். புதிர் போட‌லாம்னு ஒரு ஆசை. தெரிஞ்ச‌வ‌ங்க‌ ப‌தில் க‌மென்ட் அடிங்கோ....

1.ஒரு அம்மா மோர் வியாபார‌ம் செஞ்சிகிட்டு இருக்காங்க‌. அவ‌ங்க‌ 3 ரூபாய்க்கு மோர் வாங்கி, அதை 2 ரூபாய்க்கு விற்று ல‌ட்சாதிப‌தி ஆயிர்றாங்க‌.
ஆனால் இன்னொரு அம்மா 3 ரூபாய்க்கு மோர் வாங்கி, அதை 4 ரூபாய்க்கு விற்றும் அவங்க‌ளால‌ குடும்ப‌ செல‌வுக்கு கூட‌ ச‌ரியா ச‌ம்பாதிக்க‌ முடிய‌லை. ஏன் இப்டில்லாம் ந‌ட‌க்குது?

2.என் ஃப்ர‌ண்டுக்கு பிடிக்காத‌ ப‌ச்சைக‌ல‌ர் ச‌ட்டை
என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு...
என‌க்கு பிடிச்ச‌ சிக‌ப்பு க‌ல‌ர் ச‌ட்டை
என் ஃப்ர‌ண்டுக்கு பிடிக்க‌லை. ஏன்?

Saturday, July 10, 2010

ஹெல்மெட் போட்டால் 50 ரூபாய்.....


நீங்க‌ வண்டி ஓட்டிகிட்டு போற‌ப்போ, ஒழுங்கா ஹெல்மெட் போட்டுகிட்டு போறீங்க‌ளா? நீங்க‌ ம‌ட்டும் திண்டுக்க‌ல்லில் இருந்தீங்க‌ன்னு வ‌ச்சிகோங்க‌ளேன், அழ‌கா உங்க‌ கையில் ஐம்ப‌து ரூபாய் கிடைச்சிருக்கும். ஏன்னா, திண்டுக்க‌ல் எஸ்.பி. முத்துசாமி ஹெல்மேட் போட்டுகிட்டு போற‌வ‌ங்க‌ளுக்கு, அவ‌ரோட‌ சொந்த‌ செல‌வில‌ ஐம்ப‌து ரூபாய் ப‌ரிசா கொடுக்கிறாராம். இத‌னால‌ அங்கே ஹெல்மெட் போட‌ற‌வ‌ங்க‌ எண்ணிக்கை கூடிடுச்சாம். எப்டில்லாம் ந‌ம்ம‌ ம‌க்க‌ளை வ‌ழிக்கு கொண்டு வ‌ர‌ வேண்டியிருக்கு,எல்லாம் நேர‌ம் தான். பைசான்னா ஆன்னு வாய‌த்திற‌க்கிறாங்க‌ள்ல‌. ஆனால், முத்துசாமிக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம். ந‌ல்ல‌ ம‌னுச‌ன் தான். ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள்லாம் ப‌ண்றார்ல‌. ஆனா ஒரு சாமி, 2 சாமி, 3 சாமி, 4 சாமி, 5 சாமி, 6 சாமி, இந்த‌ முத்துசாமி எஸ்.பி. மாதிரி காவ‌ல்துறை அதிகாரிக‌ள் இப்ப‌டி வ‌ழில‌ கொண்டு போனால், ம‌க்க‌ள் எல்லாத்தையுமே ச‌ரியா ப‌ண்ணுவாங்க‌ளோ? ஒட்டு போட‌ற‌துக்கு கையில‌ துட்டு, ஹெல்மெட் போட‌ற‌துக்கு துட்டு. இன்னும் எது எதுக்குல்லாம் துட்டு குடுத்தா ஒழுங்கா வேலை ந‌ட‌க்கும்னு தெரிய‌லீயே.. ச‌ரி 4 பேருக்கு ந‌ல்ல‌து ந‌ட‌க்கும்னா எதுவுமே த‌ப்பு இல்ல‌..

Sunday, May 16, 2010

குழந்தைக‌ளோட‌ ச‌ந்தோஷ‌த்தில‌ 10% கோவிந்தா, கோவிந்தா..


சில‌ வீடுக‌ள்ல‌ அப்பா,அம்மா 2 பேரும் ரொம்ப‌ உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்டு ப‌திலுக்கு ப‌தில் பேசிகிட்டே இருப்பாங்க‌. இப்போல்லாம் இது எந்த‌ ரேஞ்சுக்கு வ‌ந்துட்டு அப்டின்னா, போடா, போடி அப்டின்னு க‌ந்தசாமி ப‌ட‌பாட்டில‌ வ‌ர்ற‌ மாதிரி வாயில் வ‌ந்த‌தெல்லாம் மாத்தி மாத்தி திட்டிக்கிறாங்க‌. இது எல்லாத்த‌யும், யார் பெத்த‌ பிள்ளையோங்கிற‌ மாதிரி பாவ‌ம் போல‌ பிள்ளைங்க‌ உக்காந்து பார்த்துக்கிட்டே இருப்பாங்க‌. இப்போ நெற‌ய‌ வீடுக‌ள்ல‌ "அப்பா, அம்மாகிட்டே பேசுங்க‌","அம்மா, அப்பாகிட்டே பேசுங்க‌" ..இப்டில்லாம் சொல்லி பெற்றோரை ச‌மாதான‌ப்ப‌டுத்தி வைக்கிறாங்க‌ ப‌ச‌ங்க‌. ஆஹா, ந‌ம்ம‌ பிள்ளை ந‌ல்லா பொறுப்பா இருக்கிறானே/இருக்கிறாளே அப்டின்னு இப்போ தோணுனாலும், பெற்றோர் ச‌ண்டை போட‌ற‌த‌னால‌, குழந்தைக‌ளோட‌ ச‌ந்தோஷ‌த்தில‌ 10% குறையுதுன்னு சொல்றாங்க‌. அதனால‌, உங்க‌ ச‌ண்டைக்காக‌ உங்க‌ குழந்தைக‌ளை ச‌மாதானப்புறாவாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தாதீங்க‌ மக்க‌ளே !