Thursday, April 21, 2011

ப‌ழ‌சுக்கு என்னைக்குமே ம‌வுசுதான்.....


ந‌ம்ம‌ நாட்டிலேயே ரொம்ப‌ வெயில் அடிக்கிற‌ இட‌ம் எது தெரியுமா? நிச்ச‌ய‌மா ந‌ம்ம‌ ஊர் இல்ல‌. ஒரிஸாவில் இருக்கிற‌ அங்குல் மாவ‌ட்ட‌த்தில் தால்ச‌ர் அப்டிங்கிற‌ ஊர்ல‌ வ‌ந்து 50 டிகிரி செல்சிய‌ஸ்ல‌ செம‌யா வெயில் அடிக்குதாம். அத‌னால‌ அந்த‌ ஊர்ல‌ ம‌க்க‌ள்லாம் காலைல‌ 11 ம‌ணில‌ இருந்து சாய‌ங்கால‌ம் நால‌ரை ம‌ணி வ‌ரை கோடி ரூபாய் குடுத்தா கூட‌ வெளியே வ‌ர‌வே மாட்டாங்க‌ளாம். இந்த‌ வெயில் நேர‌த்தில் 3 நேர‌முமே 'ப‌காலா' அப்டின்ற‌த‌ தான் இவ‌ங்க‌ சாப்பிடுவாங்க‌ளாம். what is this ப‌காலா? பேர் புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்க‌ள்ல‌... வேற‌ ஒன்னும் இல்ல. ந‌ம்ம‌ ஊர் ப‌ழைய‌ சோறுதாம்பா. இந்த‌ ப‌ழைய‌ சோறை வ‌டிச்சு த‌ண்ணீர் ஊற்றி ஊற‌ வைத்து, அடுத்த‌ நாள் வெங்காய‌ம், மிள‌காய் சேர்த்து சாப்பிட்டால் ' அது தான் ப‌காலாவாம்'. இந்த‌ சோறை மூன்று நேர‌மும் சாப்பிட்டால் ம‌ட்டும் தான் அவ‌ங்களால‌, இந்த‌ வெயில்ல‌ தாக்கு பிடிக்க‌ முடியுமாம். சாதார‌ண ஹோட்ட‌ல்க‌ளில் போய் ப‌காலாவை வாங்கினால் ஒரு ப்ளேட் 50 ரூபாயாம், உய‌ர்ர‌க‌ ஹோட்ட‌ல்க‌ளில் ஒரு ப்ளேட் 500 ரூபாயாம். ப‌ழ‌சுக்கு எப்ப‌வுமே ம‌வுசுதான் அப்டிங்ற‌து இதில‌ இருந்து தெரியுதுல்ல‌....

No comments:

Post a Comment