எல்லாரும் ஒக்க ஒக்க நிமிஷம் அண்ணாந்து பாருங்க. Especially பெண்கள் பார்த்துட்டீங்களா? ஓ.கே. இப்போ உங்க வீட்டு slabல நூலாம்படையா இருக்குல்ல. அதை முதல்ல சுத்தம் பண்ணிருங்க. ஏன்னா, வீடு சுத்தமா இருந்தால் தான் பெண்கள் Pregnant ஆக முடியும் அப்டின்னு ஒரு புது ஆராய்ச்சி சொல்லுது. வீட்ல இருக்கிற எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், துணிகள், விரிப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் இதிலெல்லாம் தூசி இருந்துச்சுன்னா, மூச்சுக்காற்று மூலமா, பெண்ணோட ரத்தத்தில் கலந்து ஆகிற வாய்ப்பையும் கொறச்சிரும் அப்டின்னு சொல்றாங்க. அதனால வீடு குப்பையா இருந்துச்சுன்னா, இதுக்காகவாவது சுத்தம் பண்ணிடுங்க. ஏற்கெனவே நெறய பிள்ளைகுட்டிகள் இருக்கு, இதில வேற நான் எதுக்கு வீட்டை சுத்தமா வைக்கனும் அப்டின்னுல்லாம் யாரும் கேக்காதீங்க. எல்லாருமே வீட்டை சுத்தமா வச்சிகோங்க. என்னைக்காவது நான் உங்க வீட்டுக்கு வந்து செக் பண்ணுவேன்.
பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Monday, February 8, 2010
ஒக்க நிமிஷம் அட்டென்ஷன் ப்ளீஸ் !
எல்லாரும் ஒக்க ஒக்க நிமிஷம் அண்ணாந்து பாருங்க. Especially பெண்கள் பார்த்துட்டீங்களா? ஓ.கே. இப்போ உங்க வீட்டு slabல நூலாம்படையா இருக்குல்ல. அதை முதல்ல சுத்தம் பண்ணிருங்க. ஏன்னா, வீடு சுத்தமா இருந்தால் தான் பெண்கள் Pregnant ஆக முடியும் அப்டின்னு ஒரு புது ஆராய்ச்சி சொல்லுது. வீட்ல இருக்கிற எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், துணிகள், விரிப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் இதிலெல்லாம் தூசி இருந்துச்சுன்னா, மூச்சுக்காற்று மூலமா, பெண்ணோட ரத்தத்தில் கலந்து ஆகிற வாய்ப்பையும் கொறச்சிரும் அப்டின்னு சொல்றாங்க. அதனால வீடு குப்பையா இருந்துச்சுன்னா, இதுக்காகவாவது சுத்தம் பண்ணிடுங்க. ஏற்கெனவே நெறய பிள்ளைகுட்டிகள் இருக்கு, இதில வேற நான் எதுக்கு வீட்டை சுத்தமா வைக்கனும் அப்டின்னுல்லாம் யாரும் கேக்காதீங்க. எல்லாருமே வீட்டை சுத்தமா வச்சிகோங்க. என்னைக்காவது நான் உங்க வீட்டுக்கு வந்து செக் பண்ணுவேன்.
Friday, February 5, 2010
சம்மர் கட் ஃபேஷன் ஆரம்பிச்சாச்சு !

ரொம்ப நாளா எனக்கு ஆண்கள பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கும். வேற ஒன்னும் இல்ல, பெண்கள் தலைக்கு குளிச்சா நீளமான முடிய காய வைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, அதுவும் வெளியே கிளம்பிறப்போ தலைய சீவி, பின்னி, அப்பப்பா, எவ்ளோ வேலை, ஆனா, ஆண்களுக்கு சோ சிம்பிள், தலைய சீவாம கூட சில ஆண்கள் வெளியே கிளம்பி போயிருவாங்க. ஓ.கே. மார்கழி மாச குளிர் இன்னும் கொஞ்ச நாள்தான். அப்றம் சுள்னு வெயில் அடிக்க போகுது. அதனால, நெறய ஆண்கள் எப்டின்னாலும் சம்மர் கட் வைக்க ஆரம்பிச்சிருவீங்க. இருந்தாலும் இப்போ இந்த சம்மர்கட் தான் ஃபேஷனாம். அமிதாப் பச்சன் கூட பா படத்தில இந்த மாதிரிதான் ஹேர் கட் பண்ணியிருப்பாராம். இந்த மாதிரி முடிய ஒட்ட வெட்டினா, ஆண்கள் நல்ல போல்டா கான்ஃபிடன்டா காட்டுதாம். பெண்களுக்கு இந்த மாதிரி ஹேர் கட் பண்ணியிருக்கிற ஆண்களை பிடிக்குமாம். & இன்னொரு விஷயம் உங்க தலை கோழி முட்டை மாதிரி உருண்டையா இருந்தால் மட்டுமே இந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு நல்லா இருக்கும். தலை flat ஆ இருக்கிறவங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் வேண்டாம் அப்டின்னு ஆண்கள் சமுதாயத்த நான் கேட்டுக்கிறேன்பா
Monday, February 1, 2010
இரவு நேர பேருந்து பயணம்

போன வாரம் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போக தாமதம் ஆயிட்டு. பேருந்தில் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்த ஒரு நபர் ஒரே நேரத்தில் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்ணிடமும், அவளோட அம்மாவிடமும் சில்மிஷம் செய்தான். ஆனால் அவர்கள் இருவரும் வெளியே சொல்ல பயந்து "ஆண்கள் பின்னால் நிற்க வேண்டியது தானே" என்று கேட்க, ஒரு அப்பாவி பெரியவர் 'அப்போ நீ கார்ல வர வேண்டியது தானே? என்று நடந்த விஷயம் தெரியாமல் கேட்க, பேருந்தில் எல்லாரும் அந்த ஆளைத்தான் தப்பாக நினைத்தனர். (நானும் அப்படித்தான் நினைத்தேன்). கடைசியில் பேருந்தை விட்டு இறங்கும் போது தான் அந்த அம்மா கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரம் பொறுத்து கொண்டிருந்த விஷயத்தை போட்டு உடைத்தது. என்ன ஒரு பொறுமை? தேவையில்லாத பயம் தான் இதற்கு காரணம். பெண்கள் எப்போ தைர்யமா இருக்காங்களோ, அன்னைக்கு தான் இந்த சில்மிஷவாதிகள் திருந்துவார்கள் என்று தோன்றுகிறது
என்னோட முதல் கவிதை:
இரவு நேர பேருந்து பயணம்
இரவு நேரம்
பேருந்தில் திரளான கூட்டம்
படிக்கட்டில் ஒரு நபர்
இருக்கையில் ஒரு பெண்ணை கையால் செய்கிற சில்மிஷங்கள்
பெண்ணுக்கு அதிர்ந்து கூட பேச முடியாத இறுக்கமான சூழல்
விஷயம் வெளியே தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம்,
பெண்ணின் முகத்தில்..
இறுதியில் நின்று கொண்டிருக்கும் மற்றொரு நபர்
விஷயத்தை அப்பட்டமாக உடைத்தார்..
கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்துவதில் ஏன் தயக்கம்?
இவ்வளவு நேரம் மௌனம் காத்தது ஏன்
பெண்ணே! வெளியே வா ...
கட்டுக்களை விட்டு வெளியே வா!
Wednesday, January 27, 2010
ஆண்கள் பெண்களின் மேக் அப் பொருட்களை எடுக்கிறார்கள் ....பரபரப்பு குற்றச்சாட்டு..
காலைல கெளம்பிற நேரம் பார்த்து சீப்பை காணல, பவுடர காணல அப்டின்னா செமயா டென்ஷனா இருக்கும்ல , ஆனால், பெண்களே, இனிமேல் இந்த மாதிரி மாய்சரைசர், லிப்ஸ்டிக், சீப்பு இதெல்லாம் காணலன்னா, உடனே உங்க கணவர்ட போய் கேளுங்க. ஏன்னா, இப்போல்லாம் நெறய ஆண்கள் அவங்க மனைவியோட மேக் அப் பொருள்களை அவங்களுக்கு தெரியாமல் எடுத்து பயன்படுத்தறாங்க அப்டின்னு கிட்டத்தட்ட 2000 ஆண்கள்ட லண்டன்ல ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க. நெறய ஆண்கள் தெரியாம எடுத்திருக்காங்களாம். சில ஆண்கள் மனைவிட்ட சொல்லிட்டு, மனைவிக்கு தெரிஞ்சு மேக் அப் போடறாங்களாம். சிலர் தெரியாம எடுக்கிறப்போ பார்த்து லபஞு மனைவிகிட்ட பிடிபட்டிருக்காங்களாம். இந்த மாதிரி ஆண்கள் பெண்கள்ட இருந்து என்ன மேக் அப் பொருள்கள்லாம் எடுத்தாங்கன்னு அதயெல்லாம் கூட ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்காங்களாம். அது என்ன என்ன பொருள்கள் தெரியுமா?1)மஸ்கரா2)லிப்ஸ்டிக்3)மாய்சரைசர்4)லிப் க்ளாஸ்5)ஹேர் ஸ்டைல் பண்ற பொருட்கள்6)ஃபவுன்டேஷன்7)ஃபேஸ் மாஸ்க்8)ஹேர் ட்ரையர்இதெல்லாம் ஆண்கள் அவங்க மனைவிகிட்ட இருந்து தெரியாமல் எடுத்து பயன்படுத்தறாங்களாம். இத வாசிக்கிறப்பவே நெறய ஆண்கள் கள்ளி எப்டி இவ்ளோ கரெக்டா சொல்ற அப்டின்னு கேக்கலாம். என்ன பண்றது கொஞ்சம் புத்திசாலியா படைக்க சொல்லி எங்க அம்மா வேண்டினத்துக்கு போய் இவ்ளோ புத்திசாலியா கடவுள் என்னைய படைப்பார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.(ஓ.கே. கூல் .. கூல்....)
Saturday, January 23, 2010
நல்ல வேளை வெங்காயம் தப்பிச்சிச்சு !

போடா வெங்காயம், இந்த மாதிரி நம்மட்ட சேட்டை பண்றவங்களை நெறய நேரம் திட்டியிருப்போம். ஓ.கே. கிட்டத்தட்ட 3500 வருஷங்களுக்கு முன்னால இருந்தே இருக்கிற இந்த வெங்காயத்த இனிமேல் மதிப்பில்லாமல் கூப்பிடக்கூடாது. Mr. வெங்காயம் அப்டின்னு தான் கூப்பிடனும். முந்தி காலத்தில் எல்லாம் எகிப்து மக்கள் வெங்காயத்த சாமியா நினைச்சு கும்பிட்டாங்களாம். இது கூட பரவாயில்ல, நம்மள்லாம் சத்தியமா இனிமேல் இப்டி பண்ணமாட்டேன் அப்டின்னு சொல்லனும்னா, 2 கையயும் சேர்த்து சத்யம் பண்ணுவோம். ஆனால், முந்தி காலத்தில எகிப்தில தலைவர்கள்லாம் அவங்க ஆபீஸ்ல உறுதிமொழி எடுக்கிறப்போ, அவங்களோட வலது கைய வெங்காயம் மேல வச்சு தான் உறுதிமொழி எடுப்பாங்களாம். ஆனால், நம்மளோட அரசியல் தலைவர்கள் வெங்காயம் மேல வச்சி இந்த மாதிரி சத்தியம் பண்ணினா, சத்தியம் பண்றப்பவே வெங்காயம் அழுகிருமே !( நல்ல வேளை வெங்காயம் தப்பிச்சிச்சு)
Wednesday, January 20, 2010
ஃபேஷன் டுடே ....

தாடி வச்ச கேடி அப்டின்னு யாராவது திட்டினா கூட பரவாயில்ல, இனிமேல் தாடி வச்சிக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். ஒ.கே. தாடி வச்சிக்கலாம், ஆனா எப்டில்லாம் தாடி வைக்கலாம் அப்டின்னா, ஆண் மக்களே, உங்களோட முகம் எப்படி இருக்கோ, அதுக்கேத்தாப்ல தான் தாடி பத்தி நீங்க ஒரு முடிவு எடுக்கனும். அ) உங்களோட முகம் நீளமா இருந்துச்சுன்னா, கன்னத்தில ரெண்டு சைட்லயும் அடர்த்தியாவும், நாடி பக்கத்தில கொஞ்சோண்டும் வச்சிக்கிட்டா, முகம் நீளமா இருக்றது தெரியாதுஆ) உங்க முகம் வட்டமா இருந்துச்சுன்னா, நாடில கொஞ்சம் நீளமாவும், கன்னத்தில ரெண்டு சைட்லயும் குறுகுறுன்னு இருக்கும்ல, அவ்ளோ ஷார்ட்டா பட்டும் படாமலும் தாடி வச்சிக்கிட்டா ஒரு ஜென்டில் ஆன லுக் வந்திரும். இது தான் இப்போதைக்கு ஆண்களுக்கு ப்யூட்டி டிப்ஸ்...
ஆண்களே ! ரெடி ஸ்டெடி கோ !
இன்னைக்கு காலைல முகூர்த்த நாளா இருக்குமோ அப்டின்னு பயந்து, காலையிலேயே சீக்கிரமே கிளம்பி
வந்தால், நல்ல வேளை இன்னிக்கு பஸ்ல அவ்ளவா கூட்டம் இல்ல. ஓ.கே. முகூர்த்தம் அப்டின்னு சொல்லிட்டு கல்யாணத்த பத்தி பேசாம இருப்போமா? நம்ம ஊர்லல்லாம் பொன்னு பார்க்க வர்றப்போ, ஆட சொல்லுவாங்க, பாட சொல்லுவாங்க. என்னனாலும் மாப்பிள்ளைங்க மட்டும் இதில எஸ்கேப் ஆயிர்றாங்கள்ல. ஆனால் சிவகாசில இருக்கிற ஆண்கள்லாம் ரொம்ப பாவம்.சிவகாசில, கிச்சநாயக்கன்பட்டின்னு ஒரு ஊர்ல இப்போ கூட ஒரு பழக்கம் இருக்கு. அந்த காலத்தில இந்த ஊர்ல கிராமத்தில நடுல 60 கிலோல ஒரு கல் & 90 கிலோ எடை இருக்கிற இன்னொரு கல்லையும் வச்சிருக்காங்க. ஆண்கள் இந்த இளவட்ட கல்லை தூக்கியே ஆகனுமாம். இந்த கல்லை தூக்க முடியாத ஆண்களுக்கு ஊர்காரங்க பொன்னு கொடுக்க மாட்டாங்களாம். ஓ.கே. இப்போ இந்த கிராமத்தில என்ன மாதிரி இந்த இளவட்ட கல்ல பயன்படுத்துறாங்கன்னா, இந்த ஊர்ல திருமணம் செய்யிற ஆண்கள், திருமணம் முடிச்சு பெண் வீட்டுக்கு மறுவீடு வர்றப்போ இந்த இளவட்ட கல்லை தூக்கனுமாம். அப்டி தூக்க முடியாட்டா 300 ரூபாய் வரை அபராதம் கட்டனுமாம். 300 ரூபாய்ல பெரியவங்களுக்கு வெற்றிலை, பாக்கு, சின்ன பசங்களுக்கு இனிப்புல்லாம் வாங்கி குடுக்கனுமாம். எல்லா ஆண்களுக்கும், எல்லா ஊருக்கும் இந்த மாதிரி ஏதாவது ஒரு டெஸ்ட் வச்சா நல்லா இருக்கும்ல!

Labels:
ஆண்கள்,
இளவட்ட கல்,
திருமணம்,
மறுவீடு
Subscribe to:
Posts (Atom)