பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Monday, May 30, 2011
இன்று ஒரு தகவல் : (படித்ததில் பிடித்தது):-
இன்று ஒரு தகவல் : (படித்ததில் பிடித்தது) : -
அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு ஒரு சிக்கலான கெடுபிடி உண்டு. பதவியில் இருக்கும் வரை அவர்கள் சொந்தமாக செல்போன் வைத்திருக்ககூடாது. அரசு கொடுக்கும் செல்போனைத்தான் பயன்படுத்த வேண்டும். அதிபர் பேசும் பேச்சு அனைத்தையும் பாதுகாப்பு அதிகாரிகள் பதிவு செய்வார்கள். ஆனால் இந்த விதியை மீறி எப்போதும் செல்லும் கையுமாக திரிபவர் அதிபர் ஒபாமா தான்.
பில்கிளின்ட்டன், அமெரிக்க அதிபராக இருந்தபோது தனது சொந்த செல்போனில் இருந்து இரண்டு முறை மட்டுமே இமெயில் அனுப்பினார். புஷ் ஜனவரி 2011 ஆம் ஆண்டு தனது சொந்த செல்போனில் இருந்து ஒரே ஒரு முறை மட்டுமே இமெயில் அனுப்பினார். இவை எல்லாவற்றையுமே பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர். புஷ்சிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்துவிட்டனர். "பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டதால் எனது சொந்த வாழ்க்கை பறி போய் விட்டது" என்று வருத்தத்தோடு பேட்டி கொடுத்தார் புஷ்.
ஆனால் இந்த கெடுபிடி எல்லாம் ஒபாமாவிடம் பலிக்கவில்லை. ஒபாமா ஓர் இமெயில் அடிமை. கையில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது. அவருக்கு மிகவும் பிடித்தமான பிளாக்பெர்ரி மொபைலை அதிபர் மாளிகையிலும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் " இன்னும் நான் எனது பிளாக்பெர்ரியை என்னுடன் வைத்திருக்கிறேன். பாதுகாப்பு அதிகாரிகள் என் பெர்சனல் விஷயத்தில் தலையிட்டு என் செல்போனை பிடுங்க பார்க்கின்றனர். நான் அதை அனுமதிக்க மாட்டேன்" என்றார்.
அமெரிக்க நடிகை ஸ்கார்லட் உடன் மொபைல் சாட் செய்வது ஒபாமா வழக்கம். "பெர்சனல் செல்போன் வைத்திருப்பது உலகச் செய்திகளை நேரடியாக தெரிந்து கொள்ளவும் மக்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கிறது" என்கிறார் அவர்.
ஒபாமாவுக்கு மை ஸ்பேஸ் என்னும் சமூக வலைதளத்தில் ஒருமில்லியனுக்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர். பேஸ் புக்கில் மட்டும் 37 லட்சம் ஆதரவாளர்கள் ஒபாமாவுடன் தொடர்பில் இருக்கின்றனர். ஒருமுறை ஒபாமா விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது கை தவறி அவரது செல்போன் கீழே விழுந்து விட்டது. அதை பாதுகாப்பு அதிகாரிகள் குனிந்து எடுக்கும் முன், குபீரென புலிப்பாய்ச்சலில் பாய்ந்து எடுத்தார் ஒபாமா. அந்த அளவுக்கு செல்போனும் கையுமாகவே இருக்கிறார் ஒபாமா.
Source : Dinathanthi news paper
Labels:
அமெரிக்க ஜனாதிபதி,
ஒபாமா,
கிளிண்டன்,
செல்போன்,
புஷ்
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல தகவல்களுக்கு வாழ்துக்கள்.
ReplyDelete