இன்று ஒரு தகவல் :(படிச்சதில் பிடிச்சது)
தினமும் நம்ம யாருக்காவது எஸ்.எம்.எஸ் அனுப்பிகிட்டே தான் இருக்கோம். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ்ஸை கண்டுபிடிச்சது யார்ன்னு எப்பவாவது, யாராவது யோசிச்சி பார்த்திருக்கீங்களா?
நானும் யோசிக்கலை. இன்னைக்கு காலைல தினத்தந்தி பேப்பர்ல பார்த்துட்டு, நாலு பேருக்கு நல்லது நடக்கனும்னா எதுன்னாலும் செய்யலாம்ல, அதனால அந்த மேட்டரை அப்படியே பிளாக்ல போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
எப்பவுமே எதிலயுமே முன்னிலைல இருக்கனும் அப்டிங்கிறதுதான் அமெரிக்காகாரங்களோட எண்ணம். அப்படி இருக்கிறப்போ செல்போனை விட்டு வைப்பாங்களா? உலக அளவில் செல்போனை அதிகம் பயன்படுத்துறவங்க அப்டின்ற பெருமை இப்போ அமெரிக்காகாரங்க வசம் இருக்கு.
சராசரியா ஒரு அமெரிக்கர் மூன்றுக்கும் மேற்பட்ட செல்போனை பயன்படுத்துறாங்களாம். பரம
ஏழையாக இருந்தாலும் அதிகபட்சமா 18 மாதங்கள் தான் ஒரு செல்போனை பயன்படுத்துறாங்களாம். அதுக்கு அப்பறமா பழைய செல்போனை குப்பை தொட்டியில் வீசி எறியறாங்க அப்படின்னு ஒரு அமெரிக்க சர்வே சொல்லுது.
ஒரு வருஷத்துக்கு மேலாக செல்போனை உபயோகிக்கிறப்போ அந்த செல்போன்ல இருக்கிற கேட்மியம், லெட், பெரிலியம் இந்த மாதிரி கெமிக்கலால நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையிரல் இதெல்லாம் பாதிக்கப்படுதாம். இதுக்காகத்தான் அமெரிக்கால அடிக்கடி செல்போனை மாத்திக்கிட்டே இருக்காங்களாம்.
தற்போதைய நிலவரப்படி 250 ஆயிரம் டன் எடை கொண்ட 55 கோடி செல்போன்கள் குப்பைத்தொட்டிக்கு வர காத்திருக்குதாம். இவ்வளவுல்லாம் தெரிஞ்ச அப்பறமும் கூட நம்ம செல்போனை தூர போடுவோமா என்ன?
அதெல்லாம் சரி. எஸ்.எம்.எஸ். முதல்ல அனுப்புனது யார்னு பார்த்தீங்கன்னா, 1973ல் முதன் முறையா செல்போனை உபயோகப்படுத்தினவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 1992ஆவது வருஷம் தான் எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகப்படுத்தப்பட்டுச்சாம். நீல்டேவொர்த் இவர் தான் அவரோட ப்ரண்டுக்கு முதல் எஸ்.எம்.எஸ். அனுப்பிருக்கார். "மேரி கிறிஸ்துமஸ்" அப்டிங்கிறதுதான் உலகத்திலேயே முதல் எஸ்.எம்.எஸ். இது 1992ஆவது வருஷம் டிசம்பர் மாசம் 24ஆம் தேதி அனுப்பப்பட்டுச்சாம்.
ஒ.கே. இவர் தான் எஸ்.எம்.எஸ். அனுப்பறதில நம்மளுக்கு முன்னோடி, இவரை மறக்கக் கூடாது. ஓ.கே.யா?

நல்ல தகவல்... அருமையான நடை.. வாழ்த்துக்கள்
ReplyDeletemadam one change it was not on dec 24 . but it was dec 3 in 1992
ReplyDelete