Sunday, November 19, 2017

80'ஸ் ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

பட்டின பிரவேசம் படத்தில், வான் நிலா நிலா அல்ல பாடல் எழுதும் போது நடந்த ஒரு சுவாரசியமான விஷயம் 

M.S.விஸ்வநாதனிடம் கவிஞர் கண்ணதாசன் "விசு! எங்கே அந்த டியூனை வாசி!’ என சொல்ல, விஸ்வநாதன்  ‘லா...லல்லா..லல்லா...’ என்று ட்யூனை பாடிக்காட்ட, கண்ணைமூடிக்கொண்டு சில வினாடிகள் சிந்தித்த கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள்வந்து கொட்டின. ‘வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா...’ பாட்டு வரிகள் தொடர்ந்தன. முதல் சில வரிகள்மட்டுமில்லை. அடுத்தடுத்த வரிகளும் கூட ‘லா’ வில்தான் முடிந்தன.
அடுத்து கவிஞரைக் கிண்டலடிக்கும் நோக்கத்தோடு, ‘எல்லா லா வும்சொல்லிட்டீங்க. இன்னும் நாலே நாலு ‘லா’தான் பாக்கி’ என்றார் M.S.விஸ்வநாதன். ‘என்னடாசொல்லறே?’ என்றார் கவிஞர் ஒன்றும் புரியாமல். ‘புரியலையா? ஃபாதர் -இன்-லா, மதர் -இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லான்னு இன்னும் நாலே நாலு‘லா’தான் உங்க பாட்டுல வரல!’ என்று  M.S.விஸ்வநாதன் சொன்னதும், கவிஞர் பலமாகச் சிரித்துவிட்டார்.                         

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா 
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா 
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் 
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா


வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..




No comments:

Post a Comment