பாலுமகேந்திரா எடுத்த மலையாளப் படமான ‘ஓளங்க’ளில் (அலைகள்) இடம்பெற்றுப் பிரபலமடைந்தது இந்தப் பாடல். ‘தும்பி வா’ பாடலின் மெட்டு இளையராஜாவின் புகழ்பெற்ற மெட்டுகளில் ஒன்று . இந்தப் பாடல் வெளியான அதே ஆண்டு தமிழில் வெளியான ‘ஆட்டோ ராஜா’ என்ற விஜயகாந்த் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலும்,இந்த 'தும்பி வா' பாடலும் ஒரே மெட்டுதான். இளையராஜாவின் மெட்டுகளிலேயே, பல மொழிகளில் அதிக முறை பயன்படுத்த மெட்டு இதுவாகத்தான் இருக்கும். காப்பி ராகத்தில் அமைந்த இந்த மெட்டுதான், இளையராஜாவுக்கும் தன் இசையில் மிகவும் பிடித்த மெட்டுகளில் ஒன்று. என எங்கேயோ அவர் பகிர்ந்ததாக ஞாபகம்.
படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
கையென்றே செங்காந்தள் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்…..
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..ஆ…
கொஞ்சத்தான்..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்…..
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்...ஆ
மெய் தொட்டும்..ஆ
சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயனம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
கையென்றே செங்காந்தள் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்…..
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..ஆ…
கொஞ்சத்தான்..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்…..
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்...ஆ
மெய் தொட்டும்..ஆ
சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயனம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
No comments:
Post a Comment