Tuesday, May 6, 2014

விடுகதைகள்

இந்த விடுகதைகளுக்கு விடைகள் தெரிந்தால் முயற்சிக்கலாமே..

1) பூ பூத்தால் காய்க்காது.. காய்த்தால் பூக்காது. அது எது?

2) சமைக்க முடியாத மீன் கூட்டம் எட்டாத உயரத்தில் . அது எது?

3) ஊசி நுழையாத காட்டுக்குள்ளே ஈசியா போறான் கருப்பு துரை. அவன் யார்?

4) நான் உஙக அம்மா கூட இருக்கேன்
    நான் உஙக அக்கா கூட இருக்கேன்
   நான் உஙக அண்ணா கூட இருக்கேன்
   நான் உஙக அப்பா கூட இருக்கேன்
   உஙக அண்ணி  கூடயும் நான்  இருக்கேன். நான் யார்?
5) உதிர்ந்தால் ஒடி போயிடுவான்
   காற்றடிச்சா பறந்து போயிடுவான்
   வெயில் பட்டால் உலர்ந்திடுவான்
   அவன் யார்?

நோ டென்ஷன்..

சிலருக்கு எதுக்கெடுத்தாலும் பயங்கர கோபம் வரும், செமயா டென்ஷன் வரும். ஆனா ரொம்ப டென்ஷன் ஆறவங்களுக்கு மன அழுத்தம் தேடி தேடி வரும் அப்டின்னு ஆயுர்வேதத்தில் சொல்லி இருக்காங்க.  அப்படி மன அழுத்தம் கூடிகிட்டே இருந்துச்சு அப்டின்னா உடம்புல இருக்கிற ஹார்மோன்கள் ரொம்ப ரொம்ப பாதிக்கப்படும். அப்பறமா நோய் எதிர்ப்பு சக்தி குறையும், அல்சர் வரும், சோரியாசிஸ் அப்டின்ற தோல் நோய் கூட மன அழுத்தத்தால் தான் வருதுன்னு சொல்றாங்க.  அதனால ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க.. டென்ஷன் அப்டியே எகிற ஆரம்பிக்கிறப்பவே, கூல் கூல்னு மன்சை கன்ட்ரோல் பண்ணுங்க. அப்படி இல்லாட்டா தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்ச் ஜூஸ் குடிச்சா மன அழுத்தத்தை உண்டு பண்ணுற ஹார்மோனை அது கன்ட்ரோல் பண்ணும் அப்படின்னு ஒரு அமெரிக்க ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்காங்க.  அதுவும் இல்லாட்டா தினமும் ஒரே ஒரு நெல்லிக்காய் வாங்கி சாப்பிடுங்க. ஏன்னா ஒரு நெல்லிக்காய்ல, ஆரஞ்சு பழத்தை விட இரண்டு மடங்கு விட்டமின் சி நெறைய இருக்குதுன்னு சொல்றாங்க. அதனால டென்ஷன் பார்டீஸ் இந்த விஷய்ங்கள் எல்லாம் நோட் பண்ணிகோங்க ..ஓகேயா?

Friday, November 15, 2013

உலகின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்டுகளில் ஒருவரான அம்பிகா

உலகின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்டுகளில் ஒருவரான அம்பிகா பிள்ளை.  கேரளாவில் கொல்லம் தான் அம்பிகா பிள்ளையுடைய பிறந்த இடம். சிறு வயதிலேயே திருமணம் நடந்து பலப்பல பிரச்சினைகளால் விவாகரத்தை சந்திக்க நேர்ந்தது.  ஒரு பெண் குழந்தையுடன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியது.  கையில் குழந்தையுடன் கேரளாவை விட்டு டெல்லிக்கு செல்ல நேர்ந்தது.  ஒரு அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்த அம்பிகா பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்திற்கான அறிகுறி தென்பட்டது.  " நிச்சயம் ஒரு நாள் இதே கேரளாவிற்கு வருவேன். ஆனால் ஜெயித்து விட்டு வருவேன்னு சொல்லிட்டு போன அம்பிகா கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு அப்பறமா இப்போ கேரளாவிற்கு வந்திருக்காங்க வாழ்க்கையில் ஜெயித்து விட்டு".  ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், தீபிகா படுகோன், பிபாஷா பாசு..அத்தனை பேருக்கும் அம்பிகா தான் ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் மேக்கப் ஆர்டிஸ்ட்.  சச்சினுக்கு கூட இவங்க மேக்கப் போட்டு விட்ருகாங்களாம்...(சச்சின் மேக்கப்லாம் கூட போடுவாரான்னுலாம் கேட்கக்கூடாது)....

To know more about her:-

Plz visit her website :- http://www.ambikapillai.com/about-us

Saturday, September 7, 2013

இல்லத்துக்குள் முடங்காத அரசிகள் :-

வெற்றியைத் தந்த கனிவும் பொறுமையும்!

வெளிநாட்டில் தங்கிப் படித்த என் மகனைப் பார்க்க ஃபிளைட் டிக்கெட் புக் செய்வதற்குப் போனேன். அதற்காக டிராவல் ஏஜென்ஸியில் அரை மணிநேரம் காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புதான், இன்று என்னை டிராவல் ஏஜென்ட்டாக்கி இருக்கிறது�� என்கிற சரோஜினி நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி. கணவர், குழந்தைகள் என வீடே உலகமாக இருந்தவர், மாதம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பிசினஸ் வுமனாக மாறியது சக்ஸஸ் ஸ்டோரிதானே. அதை அவரே சொல்கிறார்...
 சென்னையின் தென்கோடியில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் பேர் சொன்னாலே தெரிகிற அளவுக்கு பிரபலமாக இருக்கிறார் சரோஜினி. �வீட்டில் ஒரு கம்ப்யூட்டரை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமா?� என்ற நம் கேள்விக்கு புன்னகையை பதிலாகத் தந்துவிட்டு பேசினார் சரோஜினி.��என் சொந்த ஊர் மதுரை. திருமணத்துக்குப் பின்னாலதான் சென்னை எனக்கு அறிமுகம். என் கணவர் வக்கீல்ங்கறதால அவருக்கு நிறைய லெட்டர்கள், டாக்குமென்ட்கள் டைப் செய்து தர்ற வேலை இருந்தது. அவருக்கு உதவியா இருக்கறதுக்காக எங்க வீட்டு பக்கத்துல இருந்த கோத்தாரி அகாடமியில் செக்ரட்டரி கோர்ஸ் படித்தேன்.
அதே அகாடமியில் வேலையும் செய்தேன். என் பொண்ணு பிறந்ததும் அவளுக்காக வேலையை விட்டேன். அடுத்து பையன் பிறந்தான். அவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போனதும் வீட்ல சும்மாதானே இருக்கோம்னு ஜெர்மன், இந்தி மொழிகளைக் கத்துக்கிட்டேன். எல்.ஐ.சி ஏஜென்ட் ஆனேன். அதோடு ஒரு தனியார் நிறுவனத்துல ஏஜென்சி எடுத்து அவங்களோட தயாரிப்புகளை விற்றேன். அதுல ஓரளவுக்கு லாபம் வந்தது. மத்தவங்களோட துணை இல்லாம என்னால சாதிக்க முடியும்னு அப்பதான் தோணுச்சு. அந்த நேரம் பார்த்து நாங்க வேற ஏரியாவுக்கு குடிபோனோம். என்னோட பழைய வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திக்கமுடியாத நிலையில், புதுசா வந்த ஏரியாவில நிறைய பேரை நண்பர்களாக்கினேன்.
ஆனா முன்ன இருந்த அளவுக்கு பிசினஸ்ல லாபம் இல்லை. இதுக்கு இடையில பசங்களும் ஸ்கூல் படிப்பை முடிச்சு காலேஜ்ல சேர்ந்தாங்க�� என்றவருக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது, முதலில் விவரித்த காத்திருப்பு சம்பவம்.
��ஆஸ்திரேலியாவில படிச்சிட்டிருந்த என் பையனைப் பார்க்கறதுக்காக டிக்கெட் புக் பண்ண நானும் என் பொண்ணும் ஒரு டிராவல் ஏஜென்ஸிக்கு போனோம். கிடத்தட்ட அரை மணிநேரம் அங்கே இருந்தேன். அப்போ அங்க டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கவனிக்கற சந்தர்ப்பம் கிடைச்சுது. வீட்டுக்கு வந்த பிறகும் அந்த விஷயங்களே மனசுல ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஏற்கனவே என் கணவருக்கு டெல்லி, மும்பை, மதுரைனு பல ஊர்களுக்கு டிக்கெட் புக் செய்த அனுபவமும் எனக்கு இருந்ததால நாமே டிக்கெட் புக்கிங் மற்றும் ஃபாரின் டூர் ஏஜென்சி தொடங்கலாமேன்னு தோணுச்சு. ஆஸ்திரேலியாவுல இருந்து திரும்பினதுமே என் எண்ணத்தை கணவரிடம் சொன்னேன். அவரும் உற்சாகப்படுத்த, உடனே டூர்ஸ் மற்றும் டிக்கெட்டிங் தொடர்பான 3 மாத ஐ.ஏ.டி.ஏ (மிகிஜிகி) படிப்பில் சேர்ந்தேன். முதல்நாள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த மாணவர்கள் அனைவருமே -21 வயதுக்குள் இருந்தனர்.
எனக்கு அப்போ 44 வயது. என் மகன் வயதுள்ளவர்களோடு சேர்ந்து படிக்க மிகவும் கூச்சமாகவும் சற்று பயமாகவும் இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக படித்து அந்த வகுப்பின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன். முதலில் ஒரு டிராவல் ஏஜென்ட்டுக்கு சப் ஏஜென்ட்டாகப் பணியைத் தொடங்கினேன். முதலில் யாருக்கு டிக்கெட் புக் செய்து தொழிலைத் தொடங்குவது என யோசித்தேன். எங்களோட ஃபிரெண்ட்ஸையே வாடிக்கையாளர்களாக மாற்றினேன்�� என்றவர், ஆரம்பத்தில் பல சரிவுகளைச் சந்தித்திருக்கிறார்.

��2008-ல் முதல் வெளிநாட்டு சுற்றுலா திட்டத்தைத் தொடங்கினேன். அந்த 8 நாட்கள் சீனா சுற்றுலா திட்டம் ஓரளவுக்கு லாபம் தந்தது. தொட்டதுமே லாபம் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்த ஆண்டே 9 நாட்கள் கொண்ட சீனா சுற்றுலா மற்றும் 7 நாட்கள் ஜப்பான் சுற்றுலா இரண்டையும் நடத்தினேன். சீனா சுற்றுலாவுக்காக டிக்கெட் புக் பண்ணும்போது எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான கட்டணத்தை உயர்த்தியது. ஏற்கனவே கட்டணம் நிர்ணயித்து பயணிகளிடம் வசூலித்துவிட்டதால், அவர்களிடம் மேலும் பணம் கேட்ட முடியாத சூழ்நிலை. நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதால் கட்டண உயர்வை நாங்களே ஏற்றுக்கொண்டோம். இதனால் கிட்டத்தட்ட 60,000 ரூபாய் நஷ்டம். ஆனால் அப்போது கிடைத்த நல்ல பெயரால் எங்கள் நட்பு வட்டத்தைத் தாண்டி வியாபார எல்லை விரிவடையத் துவங்கியது. தொடர்ந்து சிங்கப்பூர், -மலேசியா, எகிப்து, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு பலரை டூர் அழைத்துச் சென்றோம். எகிப்து சுற்றுலா திட்டத்துக்குப் பிறகு ஐரோப்பா சுற்றுலா டூர் ஒன்றை ஏற்பாடு செய்தோம். அதற்காக ஐரோப்பா ஏஜென்ட்டுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தினோம். அப்போது ஐஸ்லாந்து எரிமலை வெடித்ததால் ஐரோப்பா முழுவதும் புகை மண்டலமானது.
அதனால் பலர் ஐரோப்பா சுற்றுலாவுக்கு வர மறுக்க, அந்தத் திட்டத்தை கைவிட வேண்டியதாகி விட்டது. ஆனால் எங்கள் ஐரோப்பா ஏஜென்ட், முன்பணத்தை திரும்பத் தரவே இல்லை. அதையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.
இதுபோன்ற பண விவகாரங்களை விடவும் சுற்றுலா பயணிகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாகத் திரும்பக் கூட்டி வருவதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. திட்டமிட்ட சுற்றுலா என்பதால் உள்ளூர் சுற்றுலா ஏஜென்ட்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அன்பாகவும், பொறுமையாகவும் ஹேண்டில் செய்ய வேண்டும். சிலர் காலையில் தங்களது இஷ்டத்துக்கு எழுந்திருப்பார்கள். சிலர் ஒரு இடத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வேறு சிலர் உணவு விஷயத்தில் சற்று கறாராக இருப்பார்கள். இப்படி அனைவரையும் சமாளித்து அந்தக் குழுவை வழிநடத்தும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக சுற்றுலாவை அனுபவித்தால்தான் அடுத்தமுறையும் தேடி வருவார்கள். அதனால் கனிவும் பொறுமையும் எப்போதும் எங்களிடம் இருக்கும்.
தவிர அனைத்து விஷயங்களையும் வீட்டில் அமர்ந்தபடியே இன்டர்நெட் மூலம் முடித்துவிடுவதால் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள முடிகிறது. மாறாத புன்னகையும் கனிவும்தான் எங்களின் வெற்றிக்குக் காரணம்�� என்கிற சரோஜினி, டூர் சம்பந்தமான போன் விசாரிப்புகளுக்கு பொறுமையான வார்த்தைகளில் பதில் சொல்லியபடியே நமக்கு விடை தருகிறார். 
& ஸ்ரீஹரி

முதல்நாள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த மாணவர்கள் அனைவருமே -21 வயதுக்குள் இருந்தனர். எனக்கு அப்போ 44 வயது. என் மகன் வயதுள்ளவர்களோடு சேர்ந்து படிக்க மிகவும் கூச்சமாகவும் சற்று பயமாகவும் இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக படித்து அந்த வகுப்பின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன். முதலில் ஒரு டிராவல் ஏஜென்ட்டுக்கு சப் ஏஜென்ட்டாகப் பணியைத் தொடங்கினேன். முதலில் யாருக்கு டிக்கெட் புக் செய்து தொழிலைத் தொடங்குவது என யோசித்தேன். எங்களோட ஃபிரெண்ட்ஸையே வாடிக்கையாளர்களாக மாற்றினேன்�� என்றவர், ஆரம்பத்தில் பல சரிவுகளைச் சந்தித்திருக்கிறார்.

��2008-ல் முதல் வெளிநாட்டு சுற்றுலா திட்டத்தைத் தொடங்கினேன். அந்த 8 நாட்கள் சீனா சுற்றுலா திட்டம் ஓரளவுக்கு லாபம் தந்தது. தொட்டதுமே லாபம் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்த ஆண்டே 9 நாட்கள் கொண்ட சீனா சுற்றுலா மற்றும் 7 நாட்கள் ஜப்பான் சுற்றுலா இரண்டையும் நடத்தினேன். சீனா சுற்றுலாவுக்காக டிக்கெட் புக் பண்ணும்போது எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான கட்டணத்தை உயர்த்தியது. ஏற்கனவே கட்டணம் நிர்ணயித்து பயணிகளிடம் வசூலித்துவிட்டதால், அவர்களிடம் மேலும் பணம் கேட்ட முடியாத சூழ்நிலை. நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதால் கட்டண உயர்வை நாங்களே ஏற்றுக்கொண்டோம். இதனால் கிட்டத்தட்ட 60,000 ரூபாய் நஷ்டம். ஆனால் அப்போது கிடைத்த நல்ல பெயரால் எங்கள் நட்பு வட்டத்தைத் தாண்டி வியாபார எல்லை விரிவடையத் துவங்கியது. தொடர்ந்து சிங்கப்பூர், -மலேசியா, எகிப்து, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு பலரை டூர் அழைத்துச் சென்றோம். எகிப்து சுற்றுலா திட்டத்துக்குப் பிறகு ஐரோப்பா சுற்றுலா டூர் ஒன்றை ஏற்பாடு செய்தோம். அதற்காக ஐரோப்பா ஏஜென்ட்டுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தினோம். அப்போது ஐஸ்லாந்து எரிமலை வெடித்ததால் ஐரோப்பா முழுவதும் புகை மண்டலமானது.
அதனால் பலர் ஐரோப்பா சுற்றுலாவுக்கு வர மறுக்க, அந்தத் திட்டத்தை கைவிட வேண்டியதாகி விட்டது. ஆனால் எங்கள் ஐரோப்பா ஏஜென்ட், முன்பணத்தை திரும்பத் தரவே இல்லை. அதையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.
இதுபோன்ற பண விவகாரங்களை விடவும் சுற்றுலா பயணிகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாகத் திரும்பக் கூட்டி வருவதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. திட்டமிட்ட சுற்றுலா என்பதால் உள்ளூர் சுற்றுலா ஏஜென்ட்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அன்பாகவும், பொறுமையாகவும் ஹேண்டில் செய்ய வேண்டும். சிலர் காலையில் தங்களது இஷ்டத்துக்கு எழுந்திருப்பார்கள். சிலர் ஒரு இடத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வேறு சிலர் உணவு விஷயத்தில் சற்று கறாராக இருப்பார்கள். இப்படி அனைவரையும் சமாளித்து அந்தக் குழுவை வழிநடத்தும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக சுற்றுலாவை அனுபவித்தால்தான் அடுத்தமுறையும் தேடி வருவார்கள். அதனால் கனிவும் பொறுமையும் எப்போதும் எங்களிடம் இருக்கும்.
தவிர அனைத்து விஷயங்களையும் வீட்டில் அமர்ந்தபடியே இன்டர்நெட் மூலம் முடித்துவிடுவதால் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள முடிகிறது. மாறாத புன்னகையும் கனிவும்தான் எங்களின் வெற்றிக்குக் காரணம்�� என்கிற சரோஜினி, டூர் சம்பந்தமான போன் விசாரிப்புகளுக்கு பொறுமையான வார்த்தைகளில் பதில் சொல்லியபடியே நமக்கு விடை தருகிறார்.  

Monday, August 5, 2013

டூ மினிட்ஸ் ரெசிபீஸ்

1) சௌசௌ ரெய்தா :-
சௌசௌ(பெங்களூர் கத்திரி) ஒன்றை தோல் சீவி பொடியாக நறுக்கி , ஆவியில் வேக வைத்து , சிறிய இஞ்சித்துண்டு, ஒரு பச்சை மிளகாய் , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும் .சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து , அரைத்த விழுதில் கொட்டு தயிர் கலந்து பரிமாறவும் ..

சௌசௌவை வேக வைக்காமல் ... இஞ்சி, பச்சை மிளகாயுடன் சேர்த்து, எண்ணெய்  விட்டு லேசாக வதக்கிசெய்தால் வாசனையாக இருக்கும் ..

2) ஸ்வீட் பொட்டேட்டோ  கீர் 

அரைலிட்டர் பாலை நன்றாக காய்ச்சி ஆறவிடவும் 100 கிராம் சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, அரை  கப் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் காய்ச்சிய பால், புட் கலர் சேர்த்ஹு அருந்தவும்.
கூடுதல் ருசிக்காக 2 டேபிள்ஸ்பூன் இனிப்பில்லாத கோவா சேர்க்கலாம் 

3) தனியா துவையல் :-
தனியா 50 கிராம் , கடலை பருப்பு உளுந்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய - 8, இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, சிறிய எலுமிச்சை அளவு புலி, தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டவும் . 
இது உப்புமா, இட்லி , தோசைக்கு தொட்டு சாப்பிட்ட சூப்பராக இருக்கும்.
ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலை கடைசியாக வறுத்து சேர்த்து அரைத்தால்  டேஸ்ட் கூடும்...

Monday, July 22, 2013

படித்ததில் ரசித்தது :-

வழுக்கையை மறைத்த அரசர்:-

ஜூலியஸ் சீசர் கிமு 44ஆம் ஆண்டில் மார்ச் 15ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.  அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள், அவர் தலை வழுக்கையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்  இந்த வழுக்கை இரகசியத்தை தம் இறுதிக்காலம் வரை 'விக்'கின் உதவியால் மறைத்து வைத்திருந்தார் சீசர் !

திருமணம் பற்றீ சிந்திக்காத விஞஞானி !
உலகத்தை மாற்றிய முதல் நூறு மனிதர்களுள் இரண்டாவது மனிதராய் இடம் பெற்றவர் ஸர்  ஐசக் நியுட்டன் தான். நியூட்டன் இறக்கும்வரை அறிவியல் ஆராய்ச்சியிலேயே இருந்ததால் செக்ஸ் பற்றிய உணர்வே இவருக்கு எழவில்லையாம். அதைப்பற்றி சிந்திக்கவும் நேரமில்லாததால் நியூட்டன் திருமணம் செய்து கொள்ளவில்லை .

இந்த டிப்ஸ் நல்லா இருக்கு:-

தேளின் மீது சாராயத்தை ஊற்றினால் தேளுக்கு வெறி ஏற்பட்டு அந்த வெறியில் தன்னை தானே கொட்டிக்கொண்டு இறந்து விடும். 

டிபன் (TIFFEN) என்ற வார்த்தையை முதன்முதலாக இங்கிலாந்தின் வடபகுதியில் உள்ள மக்கள் ஒரு கொச்சை சொல்லாக பயன்படுத்தி வந்தனர்  அதன் பொருள் கொஞ்சமாவது மது அருந்துங்கள் என்பதாகும்.  இந்தியாவில் எளிய சிற்றுண்டிக்கு டிபன் என்று சொல்கிறோம்.  

Thursday, July 18, 2013

Facebook Thathuvams:-

Facebook Thathuvam:-

நமக்கு வர்ற wife வெள்ளையா இருக்காளாங்றது முக்கியம் இல்ல மச்சி
அவ தொல்லையா  இருக்கக்கூடாது. அது தான் முக்கியம்...