Sunday, November 19, 2017

80'ஸ் ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

பட்டின பிரவேசம் படத்தில், வான் நிலா நிலா அல்ல பாடல் எழுதும் போது நடந்த ஒரு சுவாரசியமான விஷயம் 

M.S.விஸ்வநாதனிடம் கவிஞர் கண்ணதாசன் "விசு! எங்கே அந்த டியூனை வாசி!’ என சொல்ல, விஸ்வநாதன்  ‘லா...லல்லா..லல்லா...’ என்று ட்யூனை பாடிக்காட்ட, கண்ணைமூடிக்கொண்டு சில வினாடிகள் சிந்தித்த கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள்வந்து கொட்டின. ‘வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா...’ பாட்டு வரிகள் தொடர்ந்தன. முதல் சில வரிகள்மட்டுமில்லை. அடுத்தடுத்த வரிகளும் கூட ‘லா’ வில்தான் முடிந்தன.
அடுத்து கவிஞரைக் கிண்டலடிக்கும் நோக்கத்தோடு, ‘எல்லா லா வும்சொல்லிட்டீங்க. இன்னும் நாலே நாலு ‘லா’தான் பாக்கி’ என்றார் M.S.விஸ்வநாதன். ‘என்னடாசொல்லறே?’ என்றார் கவிஞர் ஒன்றும் புரியாமல். ‘புரியலையா? ஃபாதர் -இன்-லா, மதர் -இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லான்னு இன்னும் நாலே நாலு‘லா’தான் உங்க பாட்டுல வரல!’ என்று  M.S.விஸ்வநாதன் சொன்னதும், கவிஞர் பலமாகச் சிரித்துவிட்டார்.                         

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா 
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா 
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் 
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா


வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..




80'ஸ் ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

மௌன ராகம் படத்தில் நிலாவே வா பாடலை எஸ்.பி.பி. பாடும் போது, மணிரத்னம், இளையராஜா ஆகியோர் ஸ்டுடியோவில் இல்லாததால் என்ன விதமான சூழலில் பாடல்  படமாக்கப்படும் என தெரியாமலேயே பாடியிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னர் இந்த பாடலை திரையில் பார்த்து விட்டு, "இது சோகப்பாடலா என்னிடம் சொல்லவே இல்லையே" என கூறினாராம் அவர். 



நிலாவே வா .. 
செல்லாதே வா ..

என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா .. 
செல்லாதே வா ..

காவேரியா கானல் நீரா - 
பெண்மை என்ன உண்மை ? 

முள்வேலியா - முல்லைப்பூவா .
சொல்லு - கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும்சிறு்சி பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை 
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..

நிலாவே வா .. 
செல்லாதே வா ..

பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட 
சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

நிலாவே வா .. 
செல்லாதே வா ..

என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா .. 
செல்லாதே வா ..
என்னாளும் உன் பொன்வானம் நான்

Saturday, November 18, 2017

80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும் 



1987-ல்  இளையராஜா இசையில் வெளிவந்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், செண்பகமே செண்பகமே பாடல் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார் பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 12,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் இவர். 

படம் : எங்க ஊரு பாட்டுகாரன்
பாடல் : செண்பகமே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, மனோ

பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகம்

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்துப் பார்த்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து பார்த்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் வந்து தொட்டு
பாடப்போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே

பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்

மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன!
பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பற்றிப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு 
உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 

தென்பொதிகை சந்தனமே

80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்



செந்தூரப்பூவே பாடலின், பாடல் தொடங்கும் போது, சூரியன் அஸ்தமிக்கும் பின்னணியில் ஸ்ரீதேவியை ‘Slow motionல்’ ஓடவிட்டு, படம் பிடித்திருப்பார்கள்.
அந்தக் காலத்தில் ‘ஸ்லோ மோஷன்’ காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவிற்கு அந்தப் படத்தின் பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை. அதனால், ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி, படம் பிடித்திருப்பார்கள். நமக்கு, ‘ஸ்லோ மோஷனில்’ ஸ்ரீதேவி ஓடுவது போலத் தெரியும். இந்தத் தகவலை கமலே மேடை ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 
படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)
தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
என்ன இனிக்கிது அந்த நினைவிதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)
நீலக்கருங்குயிலே தென்னஞ் சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)


80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

பாலுமகேந்திரா எடுத்த மலையாளப் படமான ‘ஓளங்க’ளில் (அலைகள்) இடம்பெற்றுப்  பிரபலமடைந்தது இந்தப் பாடல்.   ‘தும்பி வா’ பாடலின் மெட்டு இளையராஜாவின் புகழ்பெற்ற மெட்டுகளில் ஒன்று . இந்தப் பாடல் வெளியான அதே ஆண்டு தமிழில் வெளியான ‘ஆட்டோ ராஜா’ என்ற விஜயகாந்த் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலும்,இந்த 'தும்பி வா' பாடலும் ஒரே மெட்டுதான். இளையராஜாவின் மெட்டுகளிலேயே, பல மொழிகளில் அதிக முறை பயன்படுத்த மெட்டு இதுவாகத்தான் இருக்கும். காப்பி ராகத்தில் அமைந்த இந்த மெட்டுதான், இளையராஜாவுக்கும் தன் இசையில் மிகவும் பிடித்த மெட்டுகளில் ஒன்று. என எங்கேயோ அவர் பகிர்ந்ததாக ஞாபகம்.


படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி

சங்கத்தில் பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது 
சந்தத்தில் மாறாத நடையோடு என் 
முன்னே யார் வந்தது 
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது

கையென்றே செங்காந்தள் மலரை 
நீ சொன்னால் நான் நம்பவோ 
கால் என்றே செவ்வாழை இணைகளை 
நீ சொன்னால் நான் நம்பி விடவோ 
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் 
காலத்தால் மூவாத உயர் தமிழ் 
சங்கத்தில்….. 

அந்திப்போர் காணாத இளமை 
ஆடட்டும் என் கைகளில் 
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் 
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை 
கொஞ்சம் தா..ஆ… 
கொஞ்சத்தான்..ஆ.. 
கண்ணுக்குள் என்னென்ன நளினம் 
காலத்தால் மூவாத உயர் தமிழ் 
சங்கத்தில்….. 

ஆடை ஏன் உன் மேனி அழகை 
ஆதிக்கம் செய்கின்றது 
நாளைக்கே ஆனந்த விடுதலை 
காணட்டும் காணாத உறவில் 
கை தொட்டும்...ஆ 
மெய் தொட்டும்..ஆ 
சாமத்தில் தூங்காத விழியின் 
சந்திப்பில் என்னென்ன நயனம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது