Monday, May 30, 2011

இன்று ஒரு த‌க‌வ‌ல் : ‍(ப‌டித்த‌தில் பிடித்த‌து):-

இன்று ஒரு த‌க‌வ‌ல் : ‍(ப‌டித்த‌தில் பிடித்த‌து) : -

அமெரிக்க‌ ஜ‌னாதிப‌திக‌ளுக்கு ஒரு சிக்க‌லான‌ கெடுபிடி உண்டு. ப‌தவியில் இருக்கும் வ‌ரை அவ‌ர்க‌ள் சொந்த‌மாக‌ செல்போன் வைத்திருக்க‌கூடாது. அர‌சு கொடுக்கும் செல்போனைத்தான் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும். அதிப‌ர் பேசும் பேச்சு அனைத்தையும் பாதுகாப்பு அதிகாரிக‌ள் ப‌திவு செய்வார்க‌ள். ஆனால் இந்த‌ விதியை மீறி எப்போதும் செல்லும் கையுமாக‌ திரிப‌வ‌ர் அதிப‌ர் ஒபாமா தான்.

பில்கிளின்ட்ட‌ன், அமெரிக்க‌ அதிபராக‌ இருந்த‌போது த‌ன‌து சொந்த‌ செல்போனில் இருந்து இர‌ண்டு முறை ம‌ட்டுமே இ‍மெயில் அனுப்பினார். புஷ் ஜ‌ன‌வ‌ரி 2011 ஆம் ஆண்டு த‌ன‌து சொந்த‌ செல்போனில் இருந்து ஒரே ஒரு முறை மட்டுமே இ‍மெயில் அனுப்பினார். இவை எல்லாவ‌ற்றையுமே பாதுகாப்பு அதிகாரிக‌ள் க‌ண்டுபிடித்து விட்ட‌ன‌ர். புஷ்சிட‌ம் இருந்து செல்போனை ப‌றிமுத‌ல் செய்துவிட்ட‌ன‌ர். "பொது வாழ்க்கைக்கு வ‌ந்துவிட்ட‌தால் என‌து சொந்த‌ வாழ்க்கை ப‌றி போய் விட்ட‌து" என்று வ‌ருத்த‌த்தோடு பேட்டி கொடுத்தார் புஷ்.

ஆனால் இந்த‌ கெடுபிடி எல்லாம் ஒபாமாவிட‌ம் ப‌லிக்க‌வில்லை. ஒபாமா ஓர் இமெயில் அடிமை. கையில் செல்போன் இல்லாம‌ல் இருக்க‌ முடியாது. அவ‌ருக்கு மிக‌வும் பிடித்த‌மான‌ பிளாக்பெர்ரி மொபைலை அதிப‌ர் மாளிகையிலும் தொட‌ர்ந்து ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகிறார். த‌னியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த‌ பேட்டியில் " இன்னும் நான் என‌து பிளாக்பெர்ரியை என்னுட‌ன் வைத்திருக்கிறேன். பாதுகாப்பு அதிகாரிக‌ள் என் பெர்ச‌ன‌ல் விஷ‌ய‌த்தில் த‌லையிட்டு என் செல்போனை பிடுங்க‌ பார்க்கின்ற‌ன‌ர். நான் அதை அனும‌திக்க‌ மாட்டேன்" என்றார்.

அமெரிக்க‌ ந‌டிகை ஸ்கார்ல‌ட் உட‌ன் மொபைல் சாட் செய்வ‌து ஒபாமா வ‌ழ‌க்க‌ம். "பெர்ச‌ன‌ல் செல்போன் வைத்திருப்ப‌து உல‌க‌ச் செய்திக‌ளை நேர‌டியாக‌ தெரிந்து கொள்ள‌வும் ம‌க்க‌ளுட‌ன் எளிதில் தொட‌ர்பு கொள்ள‌வும் வ‌ச‌தியாக‌ இருக்கிற‌து" என்கிறார் அவ‌ர்.

ஒபாமாவுக்கு மை ஸ்பேஸ் என்னும் சமூக‌ வ‌லைத‌ள‌த்தில் ஒருமில்லிய‌னுக்கும் மேற்பட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் உள்ள‌ன‌ர். பேஸ் புக்கில் ம‌ட்டும் 37 ல‌ட்ச‌ம் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ஒபாமாவுட‌ன் தொட‌ர்பில் இருக்கின்ற‌ன‌ர். ஒருமுறை ஒபாமா விமான‌ நிலைய‌த்தில் ந‌ட‌ந்து சென்று கொண்டிருந்த‌ போது கை த‌வ‌றி அவ‌ரது செல்போன் கீழே விழுந்து விட்ட‌து. அதை பாதுகாப்பு அதிகாரிக‌ள் குனிந்து எடுக்கும் முன், குபீரென‌ புலிப்பாய்ச்ச‌லில் பாய்ந்து எடுத்தார் ஒபாமா. அந்த‌ அள‌வுக்கு செல்போனும் கையுமாக‌வே இருக்கிறார் ஒபாமா.

Source : Dinathanthi news paper

Friday, May 20, 2011

இன்று ஒரு த‌க‌வ‌ல் :‍(ப‌டிச்ச‌தில் பிடிச்ச‌து)

இன்று ஒரு த‌க‌வ‌ல் :‍(ப‌டிச்ச‌தில் பிடிச்ச‌து)
தின‌மும் ந‌ம்ம‌ யாருக்காவ‌து எஸ்.எம்.எஸ் அனுப்பிகிட்டே தான் இருக்கோம். ஆனால் இந்த‌ எஸ்.எம்.எஸ்ஸை க‌ண்டுபிடிச்ச‌து யார்ன்னு எப்பவாவ‌து, யாராவ‌து யோசிச்சி பார்த்திருக்கீங்க‌ளா?
நானும் யோசிக்க‌லை. இன்னைக்கு காலைல‌ தின‌த்த‌ந்தி பேப்ப‌ர்ல பார்த்துட்டு, நாலு பேருக்கு ந‌ல்ல‌து ந‌டக்க‌னும்னா எதுன்னாலும் செய்ய‌லாம்ல‌, அத‌னால அந்த‌ மேட்ட‌ரை அப்ப‌டியே பிளாக்ல‌ போடலாம்னு முடிவு ப‌ண்ணிட்டேன்.

எப்ப‌வுமே எதில‌யுமே முன்னிலைல‌ இருக்க‌னும் அப்டிங்கிற‌துதான் அமெரிக்காகார‌ங்க‌ளோட‌ எண்ண‌ம். அப்ப‌டி இருக்கிற‌ப்போ செல்போனை விட்டு வைப்பாங்க‌ளா? உல‌க‌ அள‌வில் செல்போனை அதிக‌ம் ப‌ய‌ன்ப‌டுத்துற‌வ‌ங்க‌ அப்டின்ற‌ பெருமை இப்போ அமெரிக்காகார‌ங்க‌ வ‌ச‌ம் இருக்கு.

ச‌ராச‌ரியா ஒரு அமெரிக்க‌ர் மூன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ செல்போனை ப‌ய‌ன்ப‌டுத்துறாங்க‌ளாம். ப‌ர‌ம‌
ஏழையாக‌ இருந்தாலும் அதிக‌ப‌ட்ச‌மா 18 மாத‌ங்க‌ள் தான் ஒரு செல்போனை ப‌ய‌ன்ப‌டுத்துறாங்க‌ளாம். அதுக்கு அப்ப‌ற‌மா ப‌ழைய‌ செல்போனை குப்பை தொட்டியில் வீசி எறிய‌றாங்க‌ அப்ப‌டின்னு ஒரு அமெரிக்க‌ ச‌ர்வே சொல்லுது.

ஒரு வ‌ருஷ‌த்துக்கு மேலாக‌ செல்போனை உப‌யோகிக்கிற‌ப்போ அந்த‌ செல்போன்ல‌ இருக்கிற‌ கேட்மிய‌ம், லெட், பெரிலிய‌ம் இந்த‌ மாதிரி கெமிக்க‌லால‌ நோய் எதிர்ப்பு ச‌க்தி, ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌ம், மூளை, ஈர‌ல், நுரையிர‌ல் இதெல்லாம் பாதிக்க‌ப்ப‌டுதாம். இதுக்காக‌த்தான் அமெரிக்கால‌ அடிக்க‌டி செல்போனை மாத்திக்கிட்டே இருக்காங்க‌ளாம்.

த‌ற்போதைய‌ நில‌வ‌ர‌ப்ப‌டி 250 ஆயிர‌ம் ட‌ன் எடை கொண்ட‌ 55 கோடி செல்போன்க‌ள் குப்பைத்தொட்டிக்கு வ‌ர‌ காத்திருக்குதாம். இவ்வ‌ள‌வுல்லாம் தெரிஞ்ச‌ அப்ப‌ற‌மும் கூட‌ ந‌ம்ம‌ செல்போனை தூர‌ போடுவோமா என்ன‌?

அதெல்லாம் ச‌ரி. எஸ்.எம்.எஸ். முத‌ல்ல‌ அனுப்புன‌து யார்னு பார்த்தீங்க‌ன்னா, 1973ல் முத‌ன் முறையா செல்போனை உப‌யோக‌ப்ப‌டுத்தின‌வ‌ர் டாக்ட‌ர் மார்ட்டின் கூப்ப‌ர். 1992ஆவ‌து வ‌ருஷ‌ம் தான் எஸ்.எம்.எஸ். வ‌ச‌தி அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுச்சாம். நீல்டேவொர்த் ‍ இவ‌ர் தான் அவ‌ரோட‌ ப்ர‌ண்டுக்கு முத‌ல் எஸ்.எம்.எஸ். அனுப்பிருக்கார். "மேரி கிறிஸ்தும‌ஸ்" அப்டிங்கிற‌துதான் உல‌க‌த்திலேயே முத‌ல் எஸ்.எம்.எஸ். இது 1992ஆவ‌து வ‌ருஷ‌ம் டிச‌ம்ப‌ர் மாச‌ம் 24ஆம் தேதி அனுப்ப‌ப்ப‌ட்டுச்சாம்.

ஒ.கே. இவர் தான் எஸ்.எம்.எஸ். அனுப்ப‌ற‌தில‌ ந‌ம்ம‌ளுக்கு முன்னோடி, இவ‌ரை ம‌ற‌க்க‌க் கூடாது. ஓ.கே.யா?