பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)
Thursday, April 21, 2011
பழசுக்கு என்னைக்குமே மவுசுதான்.....
நம்ம நாட்டிலேயே ரொம்ப வெயில் அடிக்கிற இடம் எது தெரியுமா? நிச்சயமா நம்ம ஊர் இல்ல. ஒரிஸாவில் இருக்கிற அங்குல் மாவட்டத்தில் தால்சர் அப்டிங்கிற ஊர்ல வந்து 50 டிகிரி செல்சியஸ்ல செமயா வெயில் அடிக்குதாம். அதனால அந்த ஊர்ல மக்கள்லாம் காலைல 11 மணில இருந்து சாயங்காலம் நாலரை மணி வரை கோடி ரூபாய் குடுத்தா கூட வெளியே வரவே மாட்டாங்களாம். இந்த வெயில் நேரத்தில் 3 நேரமுமே 'பகாலா' அப்டின்றத தான் இவங்க சாப்பிடுவாங்களாம். what is this பகாலா? பேர் புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்கள்ல... வேற ஒன்னும் இல்ல. நம்ம ஊர் பழைய சோறுதாம்பா. இந்த பழைய சோறை வடிச்சு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, அடுத்த நாள் வெங்காயம், மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் ' அது தான் பகாலாவாம்'. இந்த சோறை மூன்று நேரமும் சாப்பிட்டால் மட்டும் தான் அவங்களால, இந்த வெயில்ல தாக்கு பிடிக்க முடியுமாம். சாதாரண ஹோட்டல்களில் போய் பகாலாவை வாங்கினால் ஒரு ப்ளேட் 50 ரூபாயாம், உயர்ரக ஹோட்டல்களில் ஒரு ப்ளேட் 500 ரூபாயாம். பழசுக்கு எப்பவுமே மவுசுதான் அப்டிங்றது இதில இருந்து தெரியுதுல்ல....
சுடிதாரோட ஃப்ளாஷ்பேக் இதுதான்
சுடிதாருக்கு துணி எடுத்து, அதை கரெக்டா தைக்க கொடுத்து அழகா போட்டுட்டு போவோம். ஆனால் சிலர் நம்மளை பார்த்து 'பைஜாமா போட்டுட்டு திரியிறா பாரு அப்படின்னு சொல்வாங்க பாருங்க, அது தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். இந்த தொளதொளன்னு இருக்கிற பைஜாமாவை பெர்ஷியாக்காரங்களும், இந்தியாக்காரங்களும் தான் கண்டுபிடிச்சாங்களாம். அப்போல்லாம் ஐரோப்பியர்கள் பகல் நேரத்தில் என்ன ட்ரெஸ் போட்ருப்பாங்களோ, அதே ட்ரெஸ்ஸோடயே தூங்கிருவாங்களாம். நம்ம ஊர்லயும் காலையில இருந்து நைட வரை நைட்டிய தான் போட்டுக்கிறாங்க. இருந்தாலும் முதல்ல இந்த பைஜாமாவை கண்டுபிடிச்ச உடனே நைட் போடறதுக்காக மட்டும் தான் கண்டுபிடிச்சாங்களாம். அதுவும், ஆண்களும், சிறுவர்களும் தான் முதல்ல பைஜாமா போட்டாங்களாம். அப்றமா, பெண்களும், சிறுமிகளும் இந்த ட்ரெஸ் நம்மளுக்கும் வசதியா இருக்குமோன்னு போட்டு பார்க்க ஆரம்பிச்சாங்களாம். அப்போ ஆரம்பிச்சதுதான் இந்த சுடிதார். சுடிதார் போடற எல்லாரும் இந்த கதையை தெரிஞ்சிக்கனும் அப்டின்னு ஒரு நல்ல எண்ணத்தில தான் இந்த பதிவை போடறேன்பா.....
இதுக்குத்தானா அது...
நமீதாவுக்கு தமிழ்ல பிடிச்ச வார்த்தை 'மச்சான்ஸ்'. தமிழில் எவ்வளவு வார்த்தைகள் இருந்தாலும், உங்களுக்கு 'மச்சான்ஸ்'ங்கிற வார்த்தை ஏன் இவ்வளவு பிடிச்சிருக்குன்னு கேட்டால் இதுக்கு பின்னால பெரிய ஃப்ளாஷ் பேக் இருக்கு அப்படின்னு சொல்றாங்க நமீதா. நடிகர் திலகம் சிவாஜி அவரோட ரசிகர்களை 'பிள்ளைகளே' அப்படின்னு செல்லமா கூப்பிடுவாராம். அதே மாதிரி சூப்பர்ஸ்டார் 'கண்ணா' அப்படின்னு சொல்வார். இதே மாதிரி எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும்கிறதுக்காகத்தான் என்னோட ரசிகர்கள் 'மச்சான்ஸ்'னு கூப்பிடறாங்க அப்டின்னு சொல்லி இருக்காங்க.
நடிகர் விக்ரமுக்கு நல்ல நெருக்கமான நண்பர்களைத்தவிர, வேறு யாராவது அவரை 'கென்னி' என்று கூப்பிட்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காதாம்.
தேவர் ஃபிலிம்ஸ் அதிபர் தேவர் எல்லோரையும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி 'முருகா' அப்டின்னு தான் கூப்பிடுவாராம். ஏன்னா, அவருக்கு தமிழ்ல பிடிச்ச வார்த்தை 'முருகா'
Subscribe to:
Posts (Atom)