Sunday, October 1, 2017

டிப்ஸ் டிப்ஸ்

டிப்ஸ் டிப்ஸ்

காரக்குழம்பில் காரம் அதிகமாகி விட்டதா ?
வறுத்த வேர்க்கடலை பருப்பை பொடி செய்து , கார குழம்பில் கலந்து விட்டால் காரம் குறைந்து சுவையான குழம்பாகி விடும்.

தவாவில் பிசுக்கு போகவில்லையா ?
சூடான தயிர் அல்லது சூடான மோரை தவாவில் ஊற்றி, ஆறியபின் தேய்த்து கழுவ, தவா பளபளவென இருக்கும்.

ஆரஞ்சு டீ வேண்டுமா ?
டீ தயாரித்ததும் அதில் ஓரிரு ஆரஞ்சு பழ சுளைகளை போட்டால் டீ மணமும் சுவையும் கொள்ளை கொள்ளும்.

ஜீரணத்தை தூண்டும் சப்பாத்தி:-
கோதுமை மாவில் சப்பாத்தி செய்யும் போது, நாலு கரண்டி மோருடன், சிறிது மிளகு, சீராக பொடிகளை சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும்.

ரவையை மாத்துங்க :-
அரிசி, உப்புமா, பிடிகொழுக்கட்டை செய்யும் போது, அரிசி ரவைக்கு பதிலாக கோதுமை ரவையை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து உபயோகித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாகும்.

அரைத்த மாவு தோசை :-
அரைத்த மாவு தோசை செய்யும் போது அதில் சிறிது மோர்விட்டு மாவை கரைப்பது வழக்கம். மோர் இல்லாத சமயத்தில் எலுமிச்சை சாறை விட்டு சுவை சேர்க்கலாம். அதுவும் இல்லாத சமயத்தில் தக்காளியையும், பச்சை மிளகாயையும் சுவைக்கேற்ப அரைத்து விட்டு மாவை கரைத்தால் அலாதி ருசி.

சாத கட்லட் :-
வெஜிடபிள் கட்லட் செய்யும் போது கைப்பிடி அளவு சாதத்தை நன்கு மசித்து சேர்த்து கட்லட் செய்தால், கட்லட் மிருதுவாக இருப்பதோடு அளவும் கூடுதலாக இருக்கும்.

இன்ஸ்டன்ட் சூப் :-
காய்கறிகளை வேக வைத்த நீரை கொட்டி விடாமல் மிளகு, சீரக பொடிகளுடன் அரை டீஸ்பூன் வெண்ணெய், தேவையான உப்பு சேர்ந்தால் சூப்பரான சூப் ரெடி ..

பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துவிட்டு, கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு பதினைந்து நிமிடம் மூடி வைத்தால் பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவும் செய்யாது. ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் இருக்கும்.

வெங்காயம் நறுக்கிய அரிவாள்மனை அல்லது கத்தியில் ஒரு வெற்றிலையை எடுத்து கசக்கி தேய்த்தால் வாடை போய் விடும்.

பனங்கிழங்கு கிடைக்கும் போது, சுவையான சத்து கஞ்சி மாவு தயார் செய்து வைத்து கொள்ளலாம். குச்சி கிழங்கை தோல் நீக்கி, வில்லைகளாக்கி உலர்த்தி சிறிது ஏலக்காய் சேர்த்து மிக்சியில் பவுடராக்கி கொள்ளவும். அந்த மாவில் கஞ்சி தயாரித்து பால் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான, சுவையான மணமான கஞ்சி இது.

பீட்ரூட் தோல்களை கனகாம்பரம் பூச்செடிக்கு உரமாக போட்டால், பூக்கள் ஊதா நிறம் கலந்த சிவப்புடன் அழகாக பூக்கும்.

No comments:

Post a Comment