Wednesday, January 18, 2012

புதிர் விளையாட்டு :



ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவே முடியலை. செம வேலை. அதனால் சில பல நாட்களுக்கு அப்பறமா 2 புதிர்கள் ...

1)ஒரு ராஜா அவரோட சேனாதிபதிகிட்ட நூறு ரூபாயை கொடுத்து , படைக்கு தேவையான குதிரை, கழுதை, யானை எல்லாம் வாங்கிட்டு வர சொல்றார். ஒரே ஒரு கண்டிஷன், 100 ரூபாய்க்கு 100 உருப்படி வாங்கிட்டு வரணும் அப்டின்றது தான். 1 யானை 5 ரூபாய் , 1 குதிரை 75 பைசா , 1 கழுதை 25 பைசா , எத்தனை வாங்கி இருப்பார்?

2) நேற்று நான் ஒரு பழக்கடைக்கு போயிருந்தேனா, அங்கே ஒரு போர்டுல பழங்களோட விலையை எழுதி வச்சிருந்தாங்க.
ஆரஞ்சு - 12 ரூபாய்
அன்னாசி - 12 ரூபாய்
திராட்சை - 12 ரூபாய்
இது எதோ ஒரு லாஜிக்ல , எதோ ஒரு அடிப்படையில் பழங்களின் விலையை பிக்ஸ் பண்ணி இருக்காங்க. அதே அடிப்படையில் பார்க்கிறப்போ மாம்பழம் எவ்வளவுன்னு அந்த போர்டுல போட்டிருக்கும்? (இது கணக்கு இல்லை, ஆனால் கணக்கு மாதிரி)

ட்ரை பண்ணி பாருங்க...

Tuesday, December 20, 2011

புதிர் விளையாட்டு :


1) முதல் எழுத்தை தூக்கிட்டா மறைக்கும்
நடு எழுத்தை தூக்கிட்டா குரைக்கும்
கடைசி எழுத்தை தூக்கிட்டா குதிக்கும்
இந்த 3 எழுத்துக்களும் ஒன்று சேர்ந்தால்
விலங்கு வேகமாக ஓட ஆரம்பிச்சிரும்.
விலங்கோட பெயர் என்ன?
2)) ஒரு மீனோட நீளம் 18 செ.மீ. அதோட தலை எவ்வளவு நீளமோ, அதில் பாதி அளவுக்கு அதோட வாலோட நீளம் இருக்குது. மொத்தத்தில், அந்த மீனோட உடம்போட அளவு என்னன்னா, தலையோட நீளமும், வாலோட நீளத்தையும் சேர்க்கனும். இப்போ மீனோட தலையோட நீளம் என்ன?

ட்ரை பண்ணி பாருங்க.....

Friday, December 2, 2011

புதிர் விளையாட்டு :


1) ராதா வீட்டு போன் நம்பரில், முதல் 3 இலக்கங்களை கூட்டீனீங்கண்ணா 10 வரும். அதே மாதிரி 3 ஆவது நம்பரையும் , 4 ஆவது நம்பரையும் கூட்டினாலும் 10 வரும். 3 ஆவது, 4ஆவது, 5 ஆவது எண்களை கூட்டினாலும் 10 வரும். முதலாவது நம்பரையும் , 6 ஆவது நம்பரையும் கூட்டினாலும் 10 வரும். ரெண்டாவது, மூணாவது, ஆறாவது எண்களை கூட்டி னாலும் 10 வரும் . ஆனால் 3 ஆவது நம்பரையும், 5ஆவது நம்பரையும் கூடினால் மட்டும் 2 வரும். ராதாவின் ஆறு இலக்க தொலைபேசி நம்பர் என்ன?


2) அதிகாலையில் அக்கா விதைத்த முத்துக்களை பொறுக்குவார் யாரும் இல்லை. அது எது?

ட்ரை பண்ணி பாருங்க..

Monday, November 28, 2011

புதிர் விளையாட்டு :


1)மூன்று எழுத்துள்ள வார்த்தை இது ...
முதல் இரண்டு எழுத்துக்கள் நிறைய என்ற பொருளை குறிக்கும்...
முதல் எழுத்தையும் மூன்றாவது எழுத்தையும் சேர்த்துடீங்கன்னா உங்களுக்கும் எனக்கும் சண்டை வந்துரும் அப்டின்னா அந்த மூன்று எழுத்து வார்த்தை எது?

2) 4 அப்பாக்கள் ,4 தாத்தாக்கள், 4 மகன்கள் இவங்கள்லாம் ஒரு டேபிளை சுற்றி நின்னுகிட்டு இருக்காங்க. இவங்க எல்லோருமே உட்காரணும் அப்படின்னா இவங்களுக்கு கொறஞ்சது எத்தனை Chairs போடணும்?

ட்ரை பண்ணி பாருங்க ....

Friday, November 25, 2011

புதிர் விளையாட்டு :


1) ஒரு அம்மாவுக்கு பூஜா ன்னு ஒரு பொன்னும், ராஜா, காஜா 2 பசங்களும் இருக்காங்க.
பூஜா அவளோட வயதை கண்டுபிடிக்க ரெண்டு க்ளுஸ் கொடுக்கிறாள்.
"என்னோட வயசையும், ராஜா வயசையும் கூட்டினால் 32 வரும்.
என்னோட வயசையும் , காஜா வயசையும் கூட்டினால் 29 வரும் அப்படின்னா 3 பேரோட வயசையும் கண்டுபிடிங்க"ன்னு சொல்கிறாள். இவங்க மூன்று பேர் வயதும் என்ன என்ன?

2) சிவப்பு பை ஒன்னு இருக்கு
அதுக்குள்ளே எண்ணமுடியாத தங்க காசுகள்
கொட்டி கிடக்கு
அது எது?
ட்ரை பண்ணி பாருங்க......

Thursday, November 24, 2011

புதிர் விளையாட்டு...


1) முத்துகிருஷ்ண‌னும், அரிகிருஷ்ண‌னும் ந‌ண்ப‌ர்க‌ள். இர‌ண்டு பேரும் ஒரு ஹோட்ட‌லுக்கு போறாங்க‌. முத்துகிருஷ்ணன் முழுக்கோழியையும் ஒரே மூச்சில் சாப்பிட்டிருவார். அரிகிருஷ்ண‌னால் அரை கோழிக்கு மேல் சாப்பிட‌ முடியாது. இப்ப‌டி இருக்கிற‌ப்போ இந்த‌ க‌டையில் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் சேர்ந்து 1 1/2 நாளில் 1 1/2 கோழி சாப்பிட்டால் முத்துகிருஷ்ண‌ன் த‌னியாக‌ 30 நாளில் எத்த‌னை கோழிக‌ள் சாப்பிட்டிருப்பார்?


2) கோட்டைக்குள்ளே
3 பேர் போறாங்க‌
உள்ளே க‌த்தியின்றி, ஆயுத‌ம்இன்றி
யுத்த‌ம் ந‌ட‌க்குது
ர‌த்த‌ம் கொட்டுது. அது என்ன‌?

ட்ரை பண்னி பாருங்க....

Wednesday, November 23, 2011

புதிர் விளையாட்டு...

1) இந்த‌ உலோக‌த்தின் பெய‌ரில் ஆறு எழுத்துக்க‌ள் இருக்கும்
க‌டைசி மூன்று எழுத்துக்க‌ள்
ஒரு கொடிய‌ பிராணியின் பெய‌ர்.
இந்த‌ உலோக‌த்தின் பெய‌ர் என்ன‌?


2) இவ‌ள் இல்லை என்றால் வியாபார‌மும் இல்லை.
ச‌ரியான தீர்ப்பு சொல்வாள்
நீதிப‌தியும் இல்லை. இவ‌ள் யார்?

ட்ரை ப‌ண்ணி பாருங்க‌.....